Showing posts with label narendra modi. Show all posts
Showing posts with label narendra modi. Show all posts

Saturday, July 5, 2014

மோடிக்கு ஒரு ஆன்லைன் ஆப்பு

அண்ணே வணக்கம்ணே !
மோடிய மெசய்யா ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாய்ங்க. ஒரு ராட்சத பலூன் கணக்கா ஊதினாய்ங்க. இப்பமே காத்து இறங்கிக்கிட்டுதான் இருக்கு.
பஞ்சர் பண்ணா எப்படி இருக்கும்னு ரோசிச்சன்.

சமீபத்துல நான் பிரதமரானால்ங்கற டேக் லைனோட பல நிலைச்செய்திகள் போட்டேன்.

அதை எல்லாம் தொகுத்து நண்பர் திருமுருகன் கார்த்திகேயனுக்கு அனுப்ப அவரு இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி அனுப்பினாரு.

அதை அப்படியே நம்ம இங்கிலீஷ் ப்ளாக்ல போட்டு அதனோட லிங்கை மத்திய அரசாங்கத்தோட ஆன்லைன் மனு பைசல் மையத்துக்கு அனுப்பினன்.
அவிக என்னமோ ஒரு ரெஃபரன்ஸ் நெம்பர் மெயில் பண்ணாய்ங்க (ஆட்டோமேட்டட் தான்)  நேத்திக்கு  போது போகாம மனு என்னதான் ஆச்சுன்னு நோண்டினேன்.



பலான ஆஃபீசர் பார்க்கிறாய்ங்க.அவிக டீட்டெய்ல்ஸ் இதுன்னு வந்தது. ஒடனே அந்த கன்செர்ன் ஆஃபீசருக்கும் ஒரு பொட்டலம் அனுப்பிட்டன். (ராமர் கோவில் சுண்டல் மாதிரி)

பார்ப்போம் தப்பித்தவறி அது மோடி டேபிளுக்கு போகனும். (அதுல நிறைய உள் குத்தெல்லாம் இருக்குங்கோ)  அப்பாறம் இருக்கு கூத்து..

இதுவரை நான் பிரதமரானால் நிலை செய்திகளை நீங்க படிக்கலின்னா இங்கே அழுத்தி படிக்கலாம். தமிழ் ஆங்கிலம் ரெண்டுலயும் தந்திருக்கம்.

Friday, January 27, 2012

அடுத்த பிரதமர் ஆரு ? : பகீர் முடிவுகள்



அண்ணே.. வணக்கம்ணே !
சோதிட பதிவை எதிர்பார்த்து வந்திருந்திங்கனா சாரி.. இது இந்தியா டுடே ஆர்க் சர்வே முடிவுகளை பற்றிய பதிவு.

நேரமில்லாததால ஹைலைட்ஸ் மட்டும் இங்கே:

வறுமை ஒழிப்புக்கு பாடுபட கூடிய கட்சி பா.ஜ.க ன்னுட்டு 31 % பேரு நம்பறாய்ங்க. இந்த மேட்டர்ல , காங்கிரஸ் கட்சியை 26% பேர் தான் நம்பறாய்ங்க.( இன்னுமா இந்த சனம் நம்மை நம்பறாய்ங்க: சோனியா)

* சிறந்த பிரதமர் மோடின்னு சொன்னவுக 24 சதம், ராகுலுன்னு சொன்னவுக 17 சதவீதத்துக்கும் குறைவு

* ஒடனே எலக்சன் வந்தா காங்கிரஸ் கட்சிக்கு 110 சீட்டுக்கு மேல வராது.

* பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு 140 க்கும் குறைவான சீட்டுதான் வரும்

* சமாஜ் வாதி (முலாயம்) , பி.எஸ்.பி (மாயா) , அ.தி.மு.க , பி.ஜே.டி ( நவீன் பட்னாயக்) மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்( ஜகன்) போன்ற கட்சிகள் தான் அடுத்த பிரதமரை டிசைட் பண்ணுவாய்ங்க

கொசுறு:
உங்க தொகுதியில ஹசாரே நின்னா ஓட்டு போடுவிகளான்னு கேட்டா 60% பேர் " நிச்சயமா போடுவோம்"னு சொல்லியிருக்காய்ங்க.

ஆனால் ராகுல் நின்னா அவருக்கு ஓட்டு போடுவோம்னு சொன்னவுக 24% தேன்