Showing posts with label outlook. Show all posts
Showing posts with label outlook. Show all posts

Sunday, January 30, 2011

கமல்ஹாசனும், மணிரத்தினமும் பிராமணரா?

 பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -2 (இறுதிப்பகுதி)


ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்...

கவிதை07க்காக சுகுமார்ஜி...

பிராமண சமுதாய போராட்டங்கள் அரசியலை மையம் கொண்டு இயங்குவதில்லை. இதை பிராமண சமுதாயத்தின் நீண்ட வரலாறு அறியத்தரும். படித்தவரும், பாமரரும் நன்கு அறிவார். ஒரு தவறான நெறியை தந்த பொறுப்பு பிராமணரல்லாத திரை உலகை சார்ந்தவர்களையே சாரும். ஒரு பிராமண சமூகத்தைச்சார்ந்தவர் திரை உலகில் காலடி எடுத்துவைத்தல் நடக்காத காரியம். அதோடு நடிகராகவோ, உதவி இயக்குனராகவோ, கவிஞராகவோ முடியவே முடியாது. முன்னொரு காலத்தில் திரை உலகம், அதில் பிராமணர்கள் இருந்த நிலையில் நல்ல முன்னேற்றமும், நிலையான வளர்ச்சியும் பெற்றது. ஆனால் இப்பொழுது,   பிராமணரல்லாதோரால் சினிமா உலகம் நீர்த்துப்போய்விட்டது.


(ஆனால் பிராமணரான கமல்ஹாசனும், மணிரத்தினமும் நல்ல நிலையில் இருக்கிறார்களே என்று குறிப்பிட்ட பொழுது )
கமல்ஹாசன் ஒரு மாட்டுக்கறி விருப்பன், திராவிட கழகத்தின் கொள்கைகளை வசீகரித்துக்கொண்டவர். மணிரத்தினம் புத்தி கூர்மையான, நல்ல அம்சத்தை தரக்கூடிய இயக்குனர். ஆனால இன்னமும் சிறு பத்திரிக்கைகள் ஒரு வட்டத்திற்குள் இயங்குவதைப்போலவே அவர் திரைப்படங்களும் இருக்கின்றன. இது பிராமணரல்லாதோருக்கு இருக்கும் ஒரு தேக்க நிலை.




தமிழக பிராமண சமுதாயம் அழிவின் நிலையில் இருப்பதாக தோன்றுகிறது. எனக்குத்தெரிந்து இந்த சமுதாயத்தை வழி நடத்திச்செல்ல நல்ல தலைவர்கள் இல்லை. ஜெயேந்திர சரஸ்வதி இந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டார். அவர் மதத்தையும், அரசியலையும் சரிவர புரிந்துகொள்ளாதவர். திரு. சி. ராஜகோபாலாச்சாரி ஒரு அருமையான, பொருத்தமான தலைவர், ஆனால் அவர் நம்மிடையே இல்லை. நமக்குத்தேவையான தலைவரை உருவாக்குவதாக தற்கால கல்வி அமைப்புக்கள் இல்லை. பிராமண சமுதாயம் ஒரு மறுமலர்ச்சியை பெருவதில் வாய்ப்பற்று இருக்கிறது. வழக்கமான பிராமண சமுதாயத்தில் ஒரு சிலரே வேதங்களை கற்று தேர்கின்றனர்.



மடங்கள் வேத பாட வகுப்புக்களை இலவசமாகவே தருகிறது. ஆனால் பயன்பெறுபவர்கள் வெகு சிலரே. புரோகிதம் செய்வதும், வேதங்களின் வழியும் வாழ்க்கைக்கு உதவுவதாக இப்பொழுது இல்லை. நிலத்திற்கும், பண்ணைக்கும் சொந்தக்காரர்களாக பிராமணர்கள் இல்லை. என் மாமன் ஒருவர் நிறைய நிலங்கள் வைத்திருந்தார். ஒவ்வொரு மகளின் திருமணத்தின் போதும் தன் நிலத்தை ஒவ்வொன்றாக விற்றுவந்தார். இப்பொழுது ஒரு மண்ணுமில்லை. எளிய விழாக்கள் சமூக நிலையில் இல்லை, ஆனாலும் திருமணம் எளிமையாக நடக்குமானால் செலவுகளை குறைக்கலாம். இக்காலத்தில் கூட உபநயனம் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுவது சந்தோசமளிக்கிறது. சந்தியாவந்தனம் தினமும் மூன்று முறை பூணூல் அணிந்த பிராமணனால் நடத்தப்படவேண்டும். இப்போழுது எந்த பிராமணன் இதைச் செய்கிறான்? ஒரு பிராமணன் தன் வாழ்நாளில், ஒருநாள், ஒருதடவையாவது சந்தியாவந்தனம் செய்தானானால் அவனுக்கு புண்ணியம் கிடைக்கும். ஆனாலும் ஐம்பது ஆண்டுகளாக உபநயனம் நிகழ்ச்சி நடத்தப்படுவதே நல்லகாரியம்.


மனிதனின் கடமைகளை சரிவர செய்வது முறைப்படுத்துதல் கடினம்தான். இதற்கு உழைப்பையும், பணத்தையும் செலவழிக்க வேண்டிதாக இருக்கும். மனித உயிருக்கு 13ம் நாளில் காரியம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ள கடினமாயிருக்கும்.  என் சகோதரி இறந்த நேரத்தில் தகன கிரியையை நிறுத்தி வைத்திருந்தோம். அந்த நேரத்தில் சடங்குகளைச் செய்ய புரோகிதர் கிடைக்கவில்ல. நாங்களும் இந்த இறுதி சடங்குகளை எப்படி செய்வதென அறியாதிருந்தோம். நான் என் மகனிடம் இபோழுதே “எனக்கு இதெல்லாம் நீ செய்யவேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டேன்.

என் தகப்பனார் இறந்த அந்த நாளை நான் நினைவு கொள்கிறேன். ஆனாலும் எனக்கு ஒரு விசயம் குறித்து வியக்கிறேன்... “ இறந்து போன மனிதர்களின் ஆன்மாக்களை இந்த முட்டாள் உலகிற்கு அழைப்பதின் அர்த்தமென்ன?”

Saturday, January 29, 2011

பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -1

ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்...

கவிதை07க்காக சுகுமார்ஜி...

ழுத்துலகில் புதிய எழுத்தாளராக அவதரித்திருக்கும் அன்பர் எஸ். ஆனந்த்... தமிழ்நாடு பிராமணர்கள் பற்றி தன் மனம்திறந்து செய்திகளை தெரிவிக்கிறார்.  

தமிழக பிராமணர்கள் நீண்ட நெடுங்கால பாதுகாக்கப்பட்ட பாராம்பரியம் கொண்டவர்கள். தற்பொழுதைய காலகட்டத்தில் தங்களை பிரித்தது போல உணர்கிறார்கள். பிராமணர்கள் பொதுவாகவே தங்களை விளம்பரபடுத்துக் கொள்வதில்லை. அதுபோலவே தங்கள் உணர்வுகளை சிலநேரங்களில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். தமிழக பிராமணர்களை அனேகமாக எல்லோருமே கேவலப்படுத்த முனைகிறார்கள். இதற்கு பொதுவான காரணம் தமிழக பிராமணர்கள் போராட்டங்களும், எதிர்விளைவும் செய்ததில்லை. மனம் வருந்ததக்க நிகழ்வுகளால் தமிழக பிராமணர்கள் மேன்மை அழிக்கப்பட்டுவிட்டது. ஆனலும் கூட தமிழக பிராமணர்கள் அமைதி காத்துவருகின்றனர். இப்போதைய நிலைமை 1930 ஆண்டில் தமிழக பிராமணர்களுக்கு நேர்ந்ததாகவே இருக்கிறது.

பிராமணர்களை அழிச்சாட்டியம் செய்யும் குழுக்கள் சில திட்ட வரையறைகளை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே நகரங்களில் வாழும் பிராமணர்கள் மட்டுமில்லாது பலர், புராணகால அடையாளமான குடிமியை எடுத்துவிட்டு, இயல்பான தாடியை அடையாளம் கொண்டுள்ளனர். ஆத்தில் பேசுகிற தமிழை வீட்டில் பேசுவதாக மாற்றிவிட்டனர். அவர்களின் ஆடை காலாச்சாரங்களோடு ஒத்ததாக மாற்றிக்கொண்டனர். அசைவம் அவர்களின் உணவில் பட்டியலிடப்பட்டது. தன் சுற்றுவட்டத்தில் பிராமணர்கள் என்பதற்கான அடையாளத்தை தொலைத்ததின் மூலமாக தொல்லைகளில் இருந்து தங்களை வாழ்வின் பொருட்டு காப்பாற்றிக் கொண்டனர்.


இன்றோ சில பிராமணர்கள் மட்டுமே தங்களின் ஆச்சார மொழிவழி பேசிக்கொண்டிருக்கின்றனர். கிட்டதட்ட ஐம்பது சதவிகித பிராமண மக்கள் தங்கள் அடையாளம் மாறிப்போய் இருக்கின்றனர். துர்பாக்கியமாக யாருமே பிராமணர்களை குறிப்பிட்டு காணும் வகையில் அவர்களின் உடல், மொழி, நடவடிக்கைகள் இருக்கின்றன. இது சிலநேரங்களில் திராவிட பாரம்பரியத்திலிருந்து விலகியதாக உணரப்படுகிறது. சில திராவிட அமைப்புக்கள் பிராமணர்களை வந்தேறிகளாக குறிக்கின்றன. ஆனாலும் கூட திராவிட மொழி பிராமணர்களுக்கு உணவு, உறையுள்ளாக இருக்கிறது.


தமிழ்ச் சங்ககால சிலப்பதிகாரம், ஒரு ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகளால் எழுதப்பெற்றது. கோபம் கொண்ட கண்ணகி இப்படி சபிக்கிறாள் “ இந்த மதுரை நகரம் கொழுந்துவிட்டு எரியட்டும், பிராமணர்களும், பசுக்கள் மட்டும் தப்பி பிழைக்கட்டும்”. இதிலிருந்து தெரிவது பிராமணர்கள் மேலாக ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகள் கொண்டிருந்த மரியாதை. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பிராமணர்கள் நிலைமை மோசமாக இருக்கிறது. பற்பல அரசு வேலைகளில் மட்டுமில்லாது, கடினமான தொழில்களில் கூட தங்களை நிரூபித்து வருகிறார்கள். இயற்கையாக அமைந்த ஒழுக்கமும், ஆச்சார நெறிமுறைகளும் பிராமணர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. பிராமணரல்லாதோர் கிடைத்த நற்பலனை அசைவ உணவுகளாலும், மதுவகை குடிபழக்கத்தினாலும் இழக்கின்றனர். பிராமணரோ அவர்களை காப்பற்றும் சேவையிலிருக்கிறார்கள்.


நான் பிராமண மடங்களை சேராதிருந்தும், மடத்தலைவரின் அன்பை பெற்றிருக்கிறேன். 1951 ல், என் தகப்பனார் இறந்தார். 1954 ம் ஆண்டு, பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், சென்னை தி.நகரில் முகாமிட்டு இருந்தார்.  அந்த நாளில் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி முதன் முதலாக சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கச்சேரி செய்தார். ஆனாலும் பெரியவர் எம்.எஸ். சுப்புலட்சுமியையும், அவர் கணவர் சதாசிவத்தையும் கண்டுகொள்ளவில்லை. என் தாயாரோ, தினமும் வெறும் வயிற்றோடு மடம் சென்று பெரியவரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டார். ஆனால் என் தாயார் கணவனை இழந்த பிறகு,  பெரியவர் என் தாயாருக்கு புனித நீரைக்கூட தந்ததில்லை. பொதுவாக நான் பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மேலாக பக்தி கொண்டவனில்லை. கடைசியாக, நூற்றாண்டு கொண்டாட்டத்தில் என் மகனோடு கலந்து கொண்டபோது தான் சரஸ்வதி சுவாமிகளை பார்த்தேன். அவரோ, எனக்கென்ன? என்பதான நிலையில் இருந்தார். அது பரமாச்சாரியர்களின் குணம்.


அடுத்து ஜெயேந்திரர் பொறுப்பேற்றார். ஆனால் நான் மடத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டேன். சில நேரங்களில் அவர், ஜெயேந்திரர் முட்டாள்தனமாக நடந்துகொண்டார். உபயோகமில்லத செய்திகளை, பிரச்சனையை உருவாக்கும் வார்த்தைகளையும் மக்களிடம் பகிர்ந்தார். ஜெயேந்திரர் கைது செய்யப்படும்போது உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். இது மடத்தின் புகழை நிச்சயம் கெடுக்கும் நிகழ்வு. இது தொடர்பான வழக்கும், வழக்கு நடத்தப்பட்ட முறைகளும், பிராமண சமுதாயத்தை கேவலப்படுத்துவதாகவே அமைந்தது. ஆனாலும் ஜெயேந்திரர் கைது பொருட்டு பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டது நல்ல மாற்றமாக இருந்தது. இதுவே பிராமண சமுதாயத்திற்கு உரமாக இருந்தது.


தொடரும்....