Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Friday, July 22, 2011

ஆண் பெண் வித்யாசம்: 9 ஆம் பாவம்


அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். பாவர்கள் இருந்தா பெட்டர். துஸ்தானாதிபதிகள் இருந்தா பாப்பர்.

மேற்படி 9 ஆம் பாவ காரகத்வத்துல ஆண் பெண்ணுக்கிடையில் நிறைய வித்யாசம் இருக்கு. அட ஒரு டாடி கதைய மட்டும் எடுத்துக்கங்க. 9 ஆம் இடம் சுபபலமா இருந்தாலும் பெண் குழந்தைக்கு /அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு ஆப்புதேன்.

அதே சமயம் 9 ஆமிடம் கெட்டிருந்தாலும் ஆண்குழந்தைக்கு..அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு தூள் தேன். அதுக்கு மிந்தி மனவியல் படி அப்பா -மகள்/அப்பா மகன் உறவை கொஞ்சம் பார்த்துருவம்.

அப்பா - மகள்:

மகள் ? அம்மாவின் நகல். அதாவது இவன் பொஞ்சாதியோட திருத்தப்பட்ட( புதிய தவறுகள் கூட இருக்கலாம்) பதிப்பு. அதனால கொஞ்சம் போல ஆர்வம் அக்கறை ஏற்படுது.

அவன் கொஞ்சமாச்சும் மாத்தி யோசிக்கிற/ தாய் மற்றும் மனைவியால் சுகப்பட்ட பார்ட்டியா இருந்தா பரவால்லை. இவன் இளமையிலருந்து பார்த்த பெண்கள்ள ஒரு சிலராச்சும் இவன் மைண்ட் மேல பாசிட்டிவ் இம்பாக்டை ஏற்படுத்தியிருந்தா பரவால்லை.

இவன் பார்த்த பெண்ணெல்லாம் லோலாயி ,ராட்சசி, குழந்தைய கட்டில் கீழ விட்டு "மிண்ட காரனோட" அஜால் குஜால் பண்ற பொம்பளையா இருந்திருந்தா நாஸ்திதேன்.

பொண்ணு வயசுக்கு வர்ர வரைக்கும் எந்த அப்பனும் அவளை முழுப்பெண்ணா வளர்க்க விரும்பறதில்லை. இவனை இவனே ஏமாத்திக்க அந்த குழந்தைய பாய் கட் பண்ணி -பேண்ட் சட்டை போட்டு வளர்க்கிறான்.

இந்த சுகமான பொய்கள் கூட அவள் வயசுக்கு வந்ததும் பொசுங்கி போயிருது. அந்த பெண் ஒரு சில பிரத்யேக காரணங்களால் அம்மா கூட மூவ் பண்றதையே விரும்பறதும் - பெண்கள் கூட்டத்துல ஐக்கியமாறதும் அப்பன் - மகள் உறவுல ஒரு இடைவெளிய ஏற்படுத்திருது.

மகளை பொருத்தவரை அப்பன் தன் அம்மாக்காரிக்கு தேன் சொந்தம்னு கொஞ்ச காலத்துலயே ஸ்ட்ரைக் ஆயிருது. அம்மாக்காரி அப்பனை எப்படியெல்லாம் ஹேண்டில் பண்றாள்னு ( கோச்சுக்கிறது - திங்காம இருக்கிறது -செருப்படி வாங்கினாலும் - புருசங்காரனை விட்டுக்கொடுக்காம பேசறது) அந்த குழந்தை வாட்ச் பண்ணுது.

கொஞ்ச காலம் அதே ஸ்டைல்ல அப்பனை ஹேண்டில் பண்ணுது. இது அம்மாக்காரிய இர்ரிடேட் பண்ண ஆரம்பிக்குது.

இங்கே அம்மாக்காரி பெண்ணுக்கும் அப்பனுக்கும் இடையில கட்டைய போட ஆரம்பிக்கிறாள் .

" தா..ஒனக்கொன்னும் தெரியாது..பொட்டை புள்ளைய வளர்க்கிற விதம் இது கிடையாது. என் கிட்டே விடு"

"தபர்ரீ .. நீ ஒன்னும் குழந்தை கிடையாது.. ச்சொம்மா சொம்மா அப்பன் மேல உரசிக்கினு "

அந்த குழந்தை அப்பங்காரனை போல தனக்கும் ஒரு "ஆள்"வேணம் /தனக்கே தனக்குன்னு வேணம்னு கனவு காண ஆரம்பிச்சுருது.

இந்த இடத்துல பெண்குழந்தைகளோட சிந்தனை ரெண்டு ரூட்ல பிரியுது. மெச்சூர்ட் மைண்டட் ஃபீமேல் பேபி அம்மாக்காரியோட"பரிதாப நிலையை " "அடிமை வாழ்வை" ஸ்மெல் பண்ணிட்டு தாளி நம்ம அப்பன் மாதிரி பையன் புருசனா வந்தா நம்ம பொயப்பும் அம்மா மாதிரியே விடியும். அதனால கைக்கு அடக்கமா பார்த்துக்கனும். நம்ம பிடிக்குள்ள இருக்கிறவனா பார்க்கனும்னு டிசைட் ஆயிருது.

அன் மெச்சூர்ட் ஃபீமேல் மைண்ட் இன்னொரு அப்பனுக்காகவும் - மெச்சூர்ட் ஃபீமேல் மைண்ட் ஒரு குழந்தைக்காகவும் ஏங்க ஆரம்பிக்குது.


9 ஆமிடம் சுபபலமா இருந்து அப்பங்காரன் எந்த அளவுக்கு ஆதர்ச புருசனா இருந்தா /சவுண்ட் பார்ட்டியா இருந்தா அந்த அளவுக்கு அந்த பெண்குழந்தையோட அடிமைத்தனமும் சாஸ்தியாகுது. இவளுக்கு சிறகு முளைக்க முளைக்க வெட்டப்படுது.

தாளி அந்த இடம் கெட்டு அப்பங்காரன் ஐ.பி கேஸா, குடிகார நாயா, கூத்திக்கள்ளனா இருந்தா அந்த அளவுக்கு அந்த குழந்தைக்கு சிறகு முளைக்கிறது . அம்மா,சொந்தம் பந்தமும் அது சரி அப்பங்காரன் ஜாத்தியா இருந்தா இந்த குழந்தை ஏன் படிய விட்டு இறங்குதுனு சால்ஜாப்பு சொல்வாய்ங்க.

அப்பா -மகன் ரிலேஷனை பத்தி அடுத்த பதிவுல பார்ப்போம்.