Thursday, December 11, 2008

ராசிப‌ல‌ன் எழுதும்போது கெட்ட‌தை குறைவா,ந‌ல்ல‌தை நிறைவா

இந்த குரு யாருக்கும் புண்ணியமில்லேனு அடிச்சு சொன்னாலும் கேட்க ஆளில்லைங்க .மகரத்துக்கு வர்ர குரு நீசமாவதோடு மே 19 வரை அங்குள்ள ராகுவோட சேர்ந்துக்கறார். குருவ பாலுன்னு வச்சா..ராகு பாலிடால்.பாலும் ,பாலிடாலும் கலந்தா அது பாலா பாலிடாலா? கிரகங்கள் நீசமானால் நற்பலன் குறையும் என்பது விதி. மேலும் கோச்சார பலன் என்றாலே அதன் எஃபெக்ட் 20 சதம்தான் . இதுல குரு மாதிரி இன்னம் 8 கிரகம் இருக்கே. அதிலும் குரு நீசம்.ராகுவோடு சேர்தல் இத்யாதியால் மகர குருவால் யாருக்கும் புண்ணியமில்லை.

அவ‌ர் எழுதினார் இவ‌ர் எழுதினார் என்றால் ஆதித்த‌னாரே சொல்லியுள்ளார் ராசிப‌ல‌ன் எழுதும்போது கெட்ட‌தை குறைவா,ந‌ல்ல‌தை நிறைவா எழுத‌ சொல்லி..அவ‌ங்க‌ எழுத‌ற‌து வியாபார‌ம். நான் எழுதுவ‌து விழிப்புண‌ர்ச்சியூட்ட‌.

மே 19 முத‌ல் ஆக‌ஸ்ட் 16 வ‌ரையுள்ள‌ கும்ப‌ குருவும் அதிசார‌ குரு ஹைப்ரீட் த‌க்காளி மாதிரி . இதை ந‌ம்பி க‌ல்யாண‌ம் க‌ட்டிக்கிட்டு குத்துதே குடையுதே என்ப‌தை விட‌ மீன‌ குரு வ‌ரும்வ‌ரை வெயிட் ப்ளீஸ்..