Sunday, December 7, 2008

திண்ணைப் பேச்சாளனாகிவிட்ட

திருமகள் அருளின்றி திண்ணைப் பேச்சாளனாகிவிட்ட நான் அவள் அருளை வேண்டி சந்தக்கவிதை எழுதியதும், அவள் அருளியதும் ஒரு திருப்பம் என்றால் 1986 முதல் அனுமனையும்,ராமனையும் அழுது தொழுது வந்த நான் திருமகள் என்பவள் யாரோ என்ற பிரமையில் இருந்து வந்தது விதியின் சதி, பின்பொரு நாள் என் மதி வேலை செய்ய ஒரு அனுமன் துதி உதவியது. அது லக்ஷ்மீ ப்ரதாயை ஸ்வாஹா என்பதாகும்.

அந்த ராமனுக்கே லக்ஷ்மியை வழங்கியவன் என் அனுமன். லக்ஷ்மி என்பவள் யார் கனவிலும் நனவிலும் அயறாது நான் தொழும் ராமன் என் தந்தையெனில் லக்ஷ்மி என் அன்னையன்றோ?