Friday, December 5, 2008

பத்திரிக்கை நிருபன் களை கட்டி வைத்து உதைக்க வேண்டும்.

ஆம். கொத்தடிமை மீட்பு, கூலி உயர்வு கேட்டு ஸ்ட்ரைக் பற்றியெல்லாம் பரப்பாக செய்தி அனுப்பும் இவர்கள் தான் உண்மையான கொத்தடிமைகள். இவர்களில் சிலர் நிர்வாகம் உதிர்க்கும் காசுகளை பொறுக்கி, தலைவர்களிடம்,தொழிலதிபர்களிடம் கையேந்தி பிழைக்க கற்றுக்கொண்டிருக்கலாம். இன்னமும் என் போன்ற பிழைக்க தெரியாத ஆசாமிகள் இருக்கிறோமே .. நாங்கள் எப்படி பிழைக்க.சமீபத்தில் தினகரனிடம் தன் முதலிடத்தை அதிகார பூர்வமாக இழந்த தினத்தந்தியில் நான் கடந்த வருடத்துக்கு முந்திய வருடம் ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தேன்.

(த‌யாநிதி மாற‌ன் க‌லைஞ‌ர் த‌க‌ராறில் உண்மையில் லாப‌ப்ப‌ட்ட‌து தின‌த்த‌ந்தி ஒன்றுதான். கட்சி விள‌ம்ப‌ர‌ங்க‌ளுக்கு ஏக‌போக‌ குத்த‌கையாச்சே/ இப்ப‌ மாற‌ன் க‌லைஞ‌ர் ச‌ந்திப்புக்கு பிறகு ச‌ப்பை)


லைன் அக்கவுண்ட் என்ற பெயரில் ஆயிரத்துக்கு குறைவான ஒரு தொகை தரப்பட்டது. மூன்று மாதம் இதிலேயே ஓடியது.

101 ஆவ‌து நாள் என் ம‌ன‌சாட்சியும்,சுய‌ க‌வுர‌வ‌மும் விழித்துக்கொண்ட‌ன‌. அடையாள‌ ச‌ம்ப‌ள‌மாய் ஒரு ரூ.கொடுங்க‌ள் செய்கிறேன். இந்த‌ லைன் அக்க‌வுண்ட் என்னை அவ‌ம‌திக்கிற‌து என்று கூறிவிட்டேன்.

மெட்ராசை கேட்டு(மெட்ராசை கேட்காது உச்சா கூட‌ போக‌ முடியாது..கார‌ண‌ம் இவ‌ர்க‌ள் மேல் மேலிட‌த்துக்கு அத்த‌னை ந‌ம்பிக்கை) ரூ.3 ஆயிர‌ம் க‌ன்வேய‌ன்ஸும்,லைன் அக்க‌வுண்ட் ம‌ற்றும் செய்தி செல‌வுக‌ளையும் த‌ருவ‌தாக‌ கூறினார்க‌ள்.

ம‌று மாத‌ம் க‌ன்வேய‌ன்ஸும் செய்தி செல‌வுக‌ளும் ம‌ட்டும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. லைன் அக்க‌வுண்ட் ப‌ற்றி நானும் கேட்க‌ வில்லை,அவ‌ர்க‌ளும் எதுவும் கூற‌வில்லை. ஒழியுது போ என்று விட்டு விட்டேன். பிற‌கு வேலையை விட்டேன் ..ஏன் விட்டேன்.. ட‌ட்ட‌ டாங்க் அதான் ச‌ஸ்பென்ஸ். தின‌த்த‌ந்தி முக‌மூடியை கிழிக்கிறேன்.. விரைவில் எதிர்பாருங்க‌ள் அடுத்த‌ ப‌திவை..