Friday, May 20, 2011

சரித்திர சாக்கடைக்கெல்லாம்

கணபதியே உனை கை தொழுதேன்
தொழாத நேரம் தான் நான் அழுதேன்
அச்சன் என்றும் பாராதே
அச்சு முறித்தவன் நீ

புல்லெடுத்து சூட்டிவிட்டால்
புரவலனாய் தருபவம் நீ
எருக்க மாலையிட ஏழ்மை கருக்கி
தொலைப்பவன் நீ

புலியென்று அலட்டிடுவர்
வலி வந்தால் அரண்டிடுவர்

எலி மேல் அமர்ந்தவனே அலட்டி தீர்ப்பதற்கும்
அரண்டு தவிப்பதற்கும் நீயன்றோ ஆதி மூலம்

சரித்திர சாக்கடைக்கெல்லாம்
நாயகனே நீயன்றோ  மறுக்கவொண்ணா நதி மூலம்

நான் சொல்ல நினைப்பதெல்லாம்
என் சொல்லில் அடங்கிடவே
அய்யன் நீ அருள் செய்வாய்

மடமை தன் சிரத்தினையே மகேசி மைந்தனே நீ
ஒரு கணத்தில் உடன் கொய்வாய்

நினைவில் - சொல்லில்  நிற்கும்  எண்ணமெல்லாம்
செயலாகி நெருப்பாறாய் ஓடிட ஆணை கொடு

வில் அது விரட்டிட்ட அம்பென ஆக்கிவிடு
வீண் தேக்கம் யாவினையும் இங்குடன் போக்கிவிடு

கணம் ஏவும் சனம் உண்டு- அவர்க்கே
தினம் ஏசும் மனம் உண்டு

கண நாதன் நீயன்றோ கணமெலாம் நின் சேனையன்றோ
தளபதி நின் தாள் பிடித்தேன்.

நீ உண்டென் பின் என்றே தயங்காது வாள் பிடித்தேன்
நின் சேனை எனை தாக்க காவாதிருப்பதுவோ?

தாளிடு தாளிடு தடைகளுக்கே
கந்தன் வேலெடு வேலெடு  விரட்டிடவே