Thursday, August 25, 2016

இருமை என்ற இருண்மை

அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:
பல காலத்துக்கு பிறகு  தமிழ் எழுத்தாளர்களின் சராசரி நடையில எழுத ட்ரை பண்ணியிருக்கன்.

நடை எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா "மகிழ்ச்சி"


ஒவ்வொரு வாழ்விலும் இருமை தன்மை -அதாவது இரு வித போக்கு ,இருண்மை -அதாவது ஒரு வித மர்மம் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு யோகியின் சுயசரிதை படித்து கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது முறை. முதல் முறை படிக்கும் போது தெலுங்கில் இத்தனை ஃப்ளூயன்ஸி இருந்திருக்க வாய்ப்பே இல்லை . அடுத்து அது இரவல் புத்தகம் என்பதால் புரட்டி விட்டு திருப்பி கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது .

இந்த முறை படித்த போது இந்த ஆளு நல்லா "விடறான்யா" என்ற எண்ணம் தான் தோன்றியது, காரணம் தர்கமே இல்லாத பல விஷயங்கள்.
இவற்றை  நண்பர் ஒருவரிடம் பட்டியலிட்டு கொண்டிருந்த போது அதில்  சுய சரிதரின்  அப்பாவும் -இவர் தேடியலைந்து பிடித்த குருவும் ஒரே குருவின் சீடர்கள் என்ற கான்செப்ட்டையும் எடுத்து விட்டேன்.

அதற்கு அவர் இதே விஷயம் தன் வாழ்விலும் நடந்ததாய் கூறினார்.  தான் பல்லாண்டுகள் தேடியலைந்து பிடித்து தீட்சை பெற்ற  குருவிடமே தன் தந்தையும் தீட்சை பெற்ற கதை பின்னாளில் தெரிந்தது தான்  விஷயம்.
ஓஷோ போகிற போக்கில் அள்ளி விடும்  விதிகள் மேல் எனக்கு  நம்பிக்கை உண்டு.காரணம் அவை அச்சாக அப்ளை ஆவது தான். அவரது விதிகளுள் ஒன்று "எது உன்னை வெறுப்புக்கு உள்ளாக்குகிறதோ அதுவே உன் சாய்ஸ்/உன் இலக்கு இத்யாதி"

இதில் தூங்காத யோகி ஒருவரை பற்றி வருகிறது .அவர் சொல்வதாய் சரிதம் சொல்லும் விஷயங்கள் இரண்டு .

1.முக்தியை தருவது மலைகள் அல்ல
2.இறைவனை தன்னில் கண்டவன்/காணதுடிப்பவன் புறத்திலும் காணவேண்டும்

மேற்படி விஷயங்களின் அடர்த்தி புரிய வேண்டுமானால் சுய சரிதையில் இருந்து இரண்டு ஃப்ளாஷ் பேக்குகளை சொல்லியாக வேண்டும்.

1.சுயசரிதர் இள வயதிலிருந்தே இமயம் மீது தீராக்காதல் கொண்டவர்.அங்கு தங்கி "தவம்" செய்ய வேண்டும் என்பது அவர் வாழ் நாள் லட்சியம். யுக்தேஸ்வர் என்ற தமது குருவுடன் 6 மாத ஆசிரம வாசம் செய்த பின்னும் அவர் தடுத்த பின்னும் இமய மலைக்கு சென்றாக வேண்டும் என்று கிளம்புகிறார்.

2.தூங்காத யோகியை சந்திக்கும் முன் தாரகேஸ்வர கோவிலில் சிவலிங்கத்தை வணங்க மறுக்கிறார்.

இந்த தூங்கா யோகி எனும் கான்செப்ட் மற்றும் அவர் கூறும் இரண்டு விஷயங்கள் ரெம்பவே டச்சு பண்ணிருச்சுங்கோ.  ஒரு வேளை மேற்படி தூங்கா யோகியின் மறுபிறவி தான் நாமளோங்கற ரேஞ்சுக்கு கற்பனை விங் சிறகடிச்சிங்..

இந்த தியானம் இத்யாதில்லாம் முயற்சிங்கற அளவுல இருக்கே கண்டி -எப்பவோ ஒன்னு ரெண்டு தாட்டி ஒரு ஸ்பார்க் அடிச்சிருக்கே கண்டி நம்ம ரூட் என்னமோ நாம ஜெபம் தான்.அதும்பாட்டுக்கு ஒரு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும்.

ராப்பூரா கண்விழிக்கும் போது "பொளப்பை " நினைச்சா கொஞ்சம் உதறுமே தவிர மத்ததெல்லாம் பக்காவா தான் இருக்கும். (என்ன மறு நாள் வெய்யில் ஏற ஏற கடுக்கும்) இந்த எனர்ஜிக்கு காரணம் நம்ம  நாம ஜெபம் தான்னு ஒரு ஹன்ச்.

இருமை -இருண்மை ரெண்டும் டாலி ஆய்ருச்சா?

இது இந்த யோகியின் சுயசரிதை மேட்டர்லயே இல்லிங்ணா நம்ம வாழ்க்கையில ஆதி முதல் இந்த நொடி வரை ஒர்க் அவுட் ஆயிட்டே இருக்கு .
ரெம்ப டீப்பா போனா சொந்த கதை ஆயிரும் .ஆகவே நாம ஒரு சுய சரிதை எழுதற ரேஞ்சுக்கு வரும்போது பார்த்துக்கலாம்னு அம்பேலாயிர்ரன்.

Wednesday, August 17, 2016

என்ன செய்யலாம் திமுக ?

அண்ணே வணக்கம்ணே !

வெற்றிய தவற விட்டோமே தவிர தோத்துப்போகல,ஜஸ்ட் 23 தான் வித்யாசம் . 1% தான் வித்யாசம்னு கெத்தா போயி அலப்பறை கொடுத்தாய்ங்க.
அந்தம்மா க்ளவரா சட்டசபைக்கு வராமலே செயலகத்துல உட்கார்ந்துக்கிட்டே "தூக்கி வீசிருச்சு"கலைஞர் என்னடான்னா ஆற அமர 22 ஆம் தேதி பொதுக்கூட்டம்ங்கறாரு .

பொதுக்கூட்டத்துக்கு ஆரு வரப்போறா? 90% கட்சிக்காரன் தான் வருவான். இதனால என்ன புண்ணியம்?

1.கலைஞரும் -ஸ்டாலினும் நினைச்சிருந்தா அந்த மவராசிய பேதியாக்கியிருக்கலாம். கலைஞருக்கு இட வசதி மேட்டர்லயே தலைமை செயலக கேட் வாசல்ல போய் தாத்தா உட்கார்ந்து அழிச்சாட்டியம் பண்ணியிருந்தா நேஷ்னல் சேனல்லாம் பதறி அடிச்சு ஓடி வந்திருக்கும்.

2.மாக் பட்ஜெட் போட்டிருக்கலாம். சனங்க மேல பாரம் சுமத்தாம அரசு வருவாயை கூட்டிக்க யோசனைகளை அள்ளி விட்டிருக்கலாம். இந்த காரியத்தை தனி ஒருவனா நானே செய்திருக்கன்.சபா நாயகருக்கு 234 காப்பி அனுப்பி மாமாங்கமாச்சு. இந்த மேட்டரை எல்லாம் தாத்தாவுக்கும் அனுப்பியாச்சு -ஸ்டாலினுக்கும் அனுப்பியாச்சு .கண்டுக்கத்தான் ஆளில்லை

3.சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யனும்னு நேஷ்னல் வைட் நாஸ்தி பண்ணியிருக்கலாம். சுப்ரீம் கோர்ட்ல அவசர மனு போட்டிருக்கலாம். கொய்யால காசில்லன்னா விலகு எங்க செலவுல பண்றம்னு சீன் போட்டிருக்கலாம். ஒன்னும் பண்ணல

4.நமக்கு நாமே டூர்ல ஸ்டாலினுக்கு 4 லட்சம் மனுக்கள் தரப்பட்டதா சொல்றாய்ங்க. எல்லாத்தையும் ஒரு டெம்போல போட்டு த.செயலகம் கொண்டு போய் கொட்டி ரசீது கொடுங்கடான்னு லந்து பண்ணியிருக்கலாம்.

5.செரி தூக்கி விசிட்டாய்ங்க. வேட்டிய உதறிக்கட்டிக்கிட்டு வீட்டுக்கு போயிட்டா ஆச்சா? ஏன் சன் நியூஸ்லயோ -கலைஞர் செய்திகள்ளயோ ஒரு மாடல் அசெம்ப்ளி நடத்தலாமே?

6.சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பை ஒத்தி வச்சானுவளா? இல்லை ஒத்திக்கு விட்டுட்டானுவளா தெரியல. இதுக்கு ஒரு கேசை போட்டு பேதியாக்கியிருக்கலாம்.

7.ஒரு 23 பேர் தான் வித்யாசம்னு வாயால சொல்லிக்கிட்டிருந்தா ஆச்சா? ஒரு 46 பேர் மேல ஃபைல் ரெடி பண்ணி மருவாதியா ராஜினாமா பண்ணனும்.இல்லின்னா மக்கள் மன்றத்துல வைப்போம்னு அனல் காட்டலாம்ல? ஒரு 23 பேராச்சும் பிச்சுக்கிட்டு வந்திருப்பான்ல?

8.சசி கலா புஷ்பா தில்லியில பம்மியிருக்கு . நீ வா தாயி நாங்க செக்யூரிட்டி தர்ரோம்னு ஊருக்குள்ள விட்டிருந்தாலே பித்தம் தலைக்கேறி பாயை பிறாண்டியிருக்கும் அந்தம்மா.

9.பேசிக்கலா சட்டமன்றத்துல திமுக உறுப்பினர்களை அதிமுக தான் ஆப்பரேட் பண்ணியிருக்காய்ங்க. ரேக்கி விட்டு வெளி நடப்பு செய்ய வைக்கிறது முதல் தூக்கி வீசறது வரை .

கலைஞரை வஞ்சா வஞ்சுட்டு போங்கடான்னு "மேட்டரை" மட்டும் பேசியிருக்கனும்.ஸ்டாலினை வஞ்சா வஞ்சுட்டு போங்கடான்னு "மேட்டரை" மட்டும் பேசியிருக்கனும்.

10.இதை விட ஒரு ஹிடன் கேமரா அரேஞ்சு பண்ணி  ஆளுங்கட்சி பவிசை   பதிவு பண்ணி லீக் பண்ணியிருக்கலாம் .

11.அந்த நாள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் எல்லாரும் சஸ்பென்ட் ஆனப்போ ஜெ - பரபரன்னு பேப்பரை திருப்பி ஏத்த இறக்கத்தோட வாசிக்கல. அந்த வேலையை கலைஞர் செய்ய முடியாதா என்ன?

எதிர்கட்சியா இருக்கும் போதே - இந்த ஆட்சியை ஊதித்தள்ளி ஆட்சியை கைப்பத்தற மோமென்ட்லயே இப்படி தூங்கி வழிஞ்சா ..எப்பூடி?

Sunday, July 31, 2016

நூல் விற்பனை : பிடிச்சாதான்காசு‬ ‪பிடிக்காட்டிஅன்புப்பரிசு



இரண்டு முறை அச்சாகி சாதனை படைத்து 3 ஆவது முறையாக ரீ ப்ரிண்ட் ஆகி பட்டையை கிளப்பி வரும் ஜோதிட நூல்கள் -எளிய பேச்சுத்தமிழில்
_______________
தபால் /பேக்கிங் செலவு நிமித்தம் ரூ.50/ மட்டுமே செலுத்துங்கள் . ரூ.400 மதிப்புள்ள கீழ் காணும் 4 நூல்களின் இரண்டு செட்டை பெறுங்கள் !!

ஆற அமர புரட்டுங்கள் .உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் ஒரு செட் நூல்களுக்கான விலையை மட்டும் அனுப்புங்கள். (ரூ.200)

உங்களுக்கு பிடிக்க வில்லையா.. நூல்களுக்காக ஒரே ஒரு பைசா கூட செலுத்த தேவையில்லை .டீலா? நோ டீலா??

நான்கு நூல்களும் ஒவ்வொன்றும் எண்பது பக்கங்கள் - மல்ட்டிக்கலர் ரேப்பர்- ஒரு செட் விலை ரூ.200.ஒரு செட் வாங்குபவர்களுக்கு ஒரு செட் இலவசம்.
______________
‪#‎நூல்1‬
ஜோதிடம்360 .இதுல ஜோதிடத்தின் பேசிக்ஸ் எல்லாத்தையும் கொடுத்திருக்கம்.
இதுகூட முக்கியம் இல்லை .மேற்படி பேசிக்ஸ்ல எது முக்கியம் எது முக்கியமில்லைன்னும் கொடுத்திருக்கம்.
வைத்தியருக்கு காய் கிடக்காது ஜோஸ்யருக்கு நாள் கிடைக்காதுனு ஒரு சொலவடை உண்டு. காரணம் எந்த காயை எடுத்தாலும் இது உஷ்ணம் ,இது சீதம் ,இது வாதம்னுவாரு வைத்தியரு .
இதே போல எந்த ஜாதகத்தை எடுத்தாலும் அந்த கிரகம் செரியில்லை /இந்த பாவம் செரியில்லம்பாரு ஜோசியரு.
இந்த புஸ்தவம் 12 பாவம் - 9 கிரகமும் செரியில்லின்னாலும் மினிமம் கியாரண்டியோட வாழ ஒரு ரூட்டை போட்டு கொடுக்கும் பாஸ் !
‪#‎நூல்2‬
ஜோதிடமும் தாம்பத்யமும்
திருமண பொருத்தம்/தோஷங்கள் /பரிகாரங்கள்னு ஆரம்பிச்சு பலான மேட்டர்லயும் ஜோதிடம் தொடர்பான விஷயங்களை கடை பரப்பியிருக்கம்.
பெண்களை 9 வகையா பிரிச்சு அவிக கல்யாணகுணங்களை படம் வரைஞ்சு பாகங்களை குறிச்சிருக்கம்.
ஜாதகமே இல்லின்னாலும் இந்த 9 கேரக்டரிஸ்டிக்ஸை படிச்சு -வீட்டம்மா எந்த கேட்டகிரின்னு தெரிஞ்சுக்கிட்டு சூதானமா நடந்துக்கலாம் . பரிகாரம் பண்ணிக்கலாம். பூரிக்கட்டை அடியிலருந்து தப்பிக்கலாம்
‪#‎நூல்3‬
ஆண்பெண்வித்யாசங்கள்
சாதாரணமா ஆண் பெண் ஜாதகங்களுக்கிடையில் வித்யாசம்னு பார்த்தா எட்டாமிடம்/நாலாமிடம் தான்.
எட்டு:
ஆண்கள் -ஆயுள் ,பெண்கள்-மாங்கல்யம்
நான்கு :
ஆண்கள்-கல்வி பெண்கள்-கற்பு (?)
ஆனால் நாம மாறி வரும் காலம் கருதி 12 பாவங்களும் அவற்றின் பலனும் ஆண் பெண்கள் விஷயத்தில் எப்படி எல்லாம் மாறியிருக்குன்னு விவரிச்சிருக்கம்.
ஆண்கள் பெண்களையும் /பெண்கள் ஆண்களையும் புரிஞ்சுக்க ஒரு ரூட்டை போட்டு கொடுத்திருக்கம்.
ஆண் பெண்கள் இடையில் புரிதல் இல்லாததாலதான் காதல் /கத்திரிக்காய்ல இருந்து ஈவ் டீசிங்/ டொமஸ்டிக் வயலன்ஸ்
பெட் ரோல் ஊத்தி கொலை வரை போகுதுங்கோ ..
(ஆக்சுவலா இந்த புஸ்தவத்துக்கு ஞானபீட் கொடுக்கனும்)
‪#‎நூல்4‬
பணம் பணம் பணம்
படைப்பின் ஆரம்ப காலத்துக்கே போய் -ஒரு செல் அங்கஜீவியான அமீபாவில் ஆரம்பிச்சு ..
.
வனவாசம், சஞ்சாரம் ,ஸ்திரவாசம்னு விவரிச்சுக்கிட்டே போய்
பணம் எப்படி வந்தது.பணம் எதுக்கு மாற்றா வந்தது? எதுக்கு மாற்றா இருக்கு?
பணம் எப்படி சனத்துக்கு உசுரா ஆரம்பிச்சதுன்னு ஒரு ப்ளூ ப்ரிண்டே கொடுத்திருக்கம்.
சம்பாதிக்கிறவன் சைக்காலஜி /சம்பாதிக்காதவன் சைக்காலஜி ..
சம்பாதிக்க எப்படி ரூட்டை போடலாம் -இப்படி பல மேட்டரை கொடுத்திருக்கம்.
இலவச இணைப்பு:
நாம பணம் சம்பாதிக்கனும்னா நம்மை சுத்தி உள்ளவன் எல்லாமே பண சம்பாதிச்சுக்கிட்டிருக்கனும்.
இதை சாத்தியமாக்க நாம நம்பறது நதிகள் இணைப்பு .இதை பத்தி Sardar IAS, தமிழரிமா ஆகியோர் எழுதிய கட்டுரைகள் .
நதிகள் இணைப்பு சாத்தியமாக என்னெல்லாம் செய்யனுங்கற நம்ம கட்டுரை
ரூபாயின் பிரச்சினை என்ற பாபாசாகேப்பின் ஆராய்ச்சி கட்டுரை சுருக்கம்
மேலதிக விவரங்களுக்கு swamy7867@gmail.com
_____________
எதுக்கு பாஸ் 2 செட்டு?
விரும்பினால் நண்பர்களுக்கு பரிசளிக்கலாம் .அல்லது வீட்ல ஒன்னு ஆஃபீஸ்ல ஒன்னு .
அல்லது ஹால்ல ஒன்னு பெட் ரூம்ல ஒன்னு .எப்பூடி?

Thursday, July 21, 2016

கபாலி -ஒரு மகாபலி

அண்ணே வணக்கம்ணே !
கொய்யால ..ச்சும்மா வேடிக்கை பார்க்கலாம்னு ஓரமா நின்னா தேரை இழுத்து தெருவுல விட்டுர்ரானுங்கப்பு. ஸ்..யப்பா மிடியல .

வேற என்ன கபாலிக்கு நான் பலியான கதைதான்.ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி என்னன்னா படத்துல ரஜினி மட்டும் சொதப்பல .. டைரட்டரும் செமயா சொதப்பியிருக்காரு .

ராத்திரி பூரா சிவராத்திரி . துலாம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி பலன் எழுதிட்டு - பலன் டெக்ஸ்டா தான் வேணம்னு அடம் பிடிச்சு ஒப்புக்க வச்ச க்ளையண்டுக்கு பலன் அனுப்பிட்டு ஆஹா விடிஞ்சுருச்சா இனி தூங்கிர வேண்டியதுதான்னு படுத்தேன். பொறுக்கல !

அம்பதுக்கே ஃபர்ஸ்ட் மார்னிங் ஷோ ஆசைல்லாம் ஒடுங்கி கிடக்கம் நாம .60 வயசு செட்டியாருக்கு இளமை ஊஞ்சலாடுது . நேரம்டா. பாவம் ரஜினி !
ஓவராலா ஒரே வரியில சொல்லனும்னா கவர் பால வச்சு சுவத்துல கோடு கிழிச்சு விளையாடற பசங்களை டெஸ்ட் மேட்சுக்கு அனுப்பினாப்ல.

ரஜினிய பத்தி பெசலா சொல்லனும்னா பழைய ஞாபகத்துல பாட்டி மஞ்ச குளிச்சாளாம் கதைதான்.இந்த படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் கொடுத்த கைக்கு குஷ்டம் தான் வரும் . எம்மாம் ரத்தம்?

கழுத்தறுக்கறதை எல்லாம் கமல் கிட்டருந்து சுட்டாப்ல இருக்கு . தூங்காவனம் த்ரிஷா ஞாபகத்துல மவ கேரக்டர் .

வளரும் கலைஞர்கள் யாரும் இந்த மாதிரி மெகா ப்ராஜக்ட்ல சிக்கவே கூடாது போல. அசிங்கப்பட்டான்டா ஆட்டோக்காரன். நெல்ல நெல்ல வளரும் பயிரை எல்லாம் கழுதை கணக்கா மேஞ்சிருக்கு கபாலி . உ.ம் தினேஷ், மெட்ராஸ் இளவரசன்

ரஜினி படம்னா வில்லங்கமில்லாம எப்பூடி?  தானும் தமிழன்ங்கற நெனப்புல பேசிட்டாப்ல இருக்கு. ஆயிரம் அவதூறு வழக்கு போடலாம் .அந்தளவுக்கு கயிவி கயிவி ஊத்திக்கிறாரு .

அதே போல ஆரோவில் ஆசிரமத்துல எவ்ள பெரிய ரத்தக்களறி? ஏற்கெனவே அது வில்லங்கத்துல சிக்கின ரெத்த பூமி.

ரஜினிய இளமையா காட்டறேனு செம சொதப்பல்.அச்சா லிங்கா தான்.  மிடியல. பொஞ்சாதிய பார்க்கபோற குஜிலில டை போட்ட ரஜினி கொஞ்சம் பரவால்ல.

ரஜினியோட ஃப்ளாஷ்பேக்கை கொடுத்த விதம் இருக்கே ..தூர்தர்ஷன் மலரும் நினைவுகள் ரேஞ்சுல இருக்கு .

நாசர் ஓவர் ஆக்டிங் பார்த்து ஏதோ பாரதிராஜா படம் /கமல் படம் மாதிரி இவர் தான் வில்லனோனு நினைச்சிட்டன். அவ்வ்வ்வ்வ்

ஈரோ செயில்ல இருந்து ரிலீஸ் ஆகறச்ச பறவை பறக்கறதை  காட்டறதை  1980 ல சர்தார் பாப்பாராயுடுலயே பார்த்துட்டம்.

சமீபத்துல நான் போட்ட ஸ்டேட்டஸ் பக்கா . பாட்சாவுல டான் பிறவு  ஆட்டோக்காரன் -பிறவு டான். இதுல டான் -பிறவு செயில் கைதி -மறுபடி டான்.

செத்துட்டானு நினைச்ச பொஞ்சாதிய அத்தீனி வருசத்துக்கு பிறவு சந்திக்கப்போறது தெரிஞ்சு ரஜினி உச்சா போக போயிர்ராரேனு பார்த்தா ஓன்னு  அழுவறாராம்.

ரிஷி மூலம் சோகம்லாம் ரஜினிக்கு ரத்த   மூலம் வந்தா கூட இம்பாசிபிள். டான் கதைதான் ஆனாலும் இழுக்குதேன்னு நினைச்சதும் கொய்யால இது இன்னாடா இழுவை இப்ப பாருடான்னு பொஞ்சாதிய தேடி போற எப்பிசோட்.
க்ளைமேக்ஸ்  கிட்டே தெலுங்கு படம்லாம் பிச்சை எடுக்கனும். ரெண்டு துப்பாக்கி /மிஷின் கன்.. அய்யோ.. வேண்டான்டா சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

ரஞ்சித் அந்த அரசியலை முன்னெடுப்பார் இந்த அரசியலை முன்னெடுப்பாருன்னு பீசிக்கிட்டாய்ங்களே இந்த படத்தோட ஊஊஊஊஊஊஊஊஊ சங்குதான் போல .

பா.ஜ.க அம்பேத்கர் காந்திய ஓன் பண்ண பார்க்கிறதுக்கும் இந்த படத்துல ரஜினி செய்ற வேலைக்கும் எதுனா வித்யாசம் இருக்கா என்ன?
சந்தேகத்துக்கு இடமில்லாம யோகா க்ளாஸ் வேற.போதும் பாஸ் ! இதோட இதை முடிச்சுக்கறேன். இப்பமே ரஜினி ரசிகர்கள்ளாம் செமகடுப்புல இருப்பாய்ங்க..

ரஞ்சித்துக்கு ஷொட்டு:

மாணவர்கள் கையில் அணியும் பேண்டுகளை சுட்டியமை
ரஜினி -மனைவியை சந்திக்கும் காட்சியை ப்ளர்ரா காட்டினது  இப்படி சின்ன சின்னதா நிறைய செய்திருக்காரு .ஆனால் ....................