Thursday, August 25, 2016

இருமை என்ற இருண்மை

அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:
பல காலத்துக்கு பிறகு  தமிழ் எழுத்தாளர்களின் சராசரி நடையில எழுத ட்ரை பண்ணியிருக்கன்.

நடை எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா "மகிழ்ச்சி"


ஒவ்வொரு வாழ்விலும் இருமை தன்மை -அதாவது இரு வித போக்கு ,இருண்மை -அதாவது ஒரு வித மர்மம் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு யோகியின் சுயசரிதை படித்து கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது முறை. முதல் முறை படிக்கும் போது தெலுங்கில் இத்தனை ஃப்ளூயன்ஸி இருந்திருக்க வாய்ப்பே இல்லை . அடுத்து அது இரவல் புத்தகம் என்பதால் புரட்டி விட்டு திருப்பி கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது .

இந்த முறை படித்த போது இந்த ஆளு நல்லா "விடறான்யா" என்ற எண்ணம் தான் தோன்றியது, காரணம் தர்கமே இல்லாத பல விஷயங்கள்.
இவற்றை  நண்பர் ஒருவரிடம் பட்டியலிட்டு கொண்டிருந்த போது அதில்  சுய சரிதரின்  அப்பாவும் -இவர் தேடியலைந்து பிடித்த குருவும் ஒரே குருவின் சீடர்கள் என்ற கான்செப்ட்டையும் எடுத்து விட்டேன்.

அதற்கு அவர் இதே விஷயம் தன் வாழ்விலும் நடந்ததாய் கூறினார்.  தான் பல்லாண்டுகள் தேடியலைந்து பிடித்து தீட்சை பெற்ற  குருவிடமே தன் தந்தையும் தீட்சை பெற்ற கதை பின்னாளில் தெரிந்தது தான்  விஷயம்.
ஓஷோ போகிற போக்கில் அள்ளி விடும்  விதிகள் மேல் எனக்கு  நம்பிக்கை உண்டு.காரணம் அவை அச்சாக அப்ளை ஆவது தான். அவரது விதிகளுள் ஒன்று "எது உன்னை வெறுப்புக்கு உள்ளாக்குகிறதோ அதுவே உன் சாய்ஸ்/உன் இலக்கு இத்யாதி"

இதில் தூங்காத யோகி ஒருவரை பற்றி வருகிறது .அவர் சொல்வதாய் சரிதம் சொல்லும் விஷயங்கள் இரண்டு .

1.முக்தியை தருவது மலைகள் அல்ல
2.இறைவனை தன்னில் கண்டவன்/காணதுடிப்பவன் புறத்திலும் காணவேண்டும்

மேற்படி விஷயங்களின் அடர்த்தி புரிய வேண்டுமானால் சுய சரிதையில் இருந்து இரண்டு ஃப்ளாஷ் பேக்குகளை சொல்லியாக வேண்டும்.

1.சுயசரிதர் இள வயதிலிருந்தே இமயம் மீது தீராக்காதல் கொண்டவர்.அங்கு தங்கி "தவம்" செய்ய வேண்டும் என்பது அவர் வாழ் நாள் லட்சியம். யுக்தேஸ்வர் என்ற தமது குருவுடன் 6 மாத ஆசிரம வாசம் செய்த பின்னும் அவர் தடுத்த பின்னும் இமய மலைக்கு சென்றாக வேண்டும் என்று கிளம்புகிறார்.

2.தூங்காத யோகியை சந்திக்கும் முன் தாரகேஸ்வர கோவிலில் சிவலிங்கத்தை வணங்க மறுக்கிறார்.

இந்த தூங்கா யோகி எனும் கான்செப்ட் மற்றும் அவர் கூறும் இரண்டு விஷயங்கள் ரெம்பவே டச்சு பண்ணிருச்சுங்கோ.  ஒரு வேளை மேற்படி தூங்கா யோகியின் மறுபிறவி தான் நாமளோங்கற ரேஞ்சுக்கு கற்பனை விங் சிறகடிச்சிங்..

இந்த தியானம் இத்யாதில்லாம் முயற்சிங்கற அளவுல இருக்கே கண்டி -எப்பவோ ஒன்னு ரெண்டு தாட்டி ஒரு ஸ்பார்க் அடிச்சிருக்கே கண்டி நம்ம ரூட் என்னமோ நாம ஜெபம் தான்.அதும்பாட்டுக்கு ஒரு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும்.

ராப்பூரா கண்விழிக்கும் போது "பொளப்பை " நினைச்சா கொஞ்சம் உதறுமே தவிர மத்ததெல்லாம் பக்காவா தான் இருக்கும். (என்ன மறு நாள் வெய்யில் ஏற ஏற கடுக்கும்) இந்த எனர்ஜிக்கு காரணம் நம்ம  நாம ஜெபம் தான்னு ஒரு ஹன்ச்.

இருமை -இருண்மை ரெண்டும் டாலி ஆய்ருச்சா?

இது இந்த யோகியின் சுயசரிதை மேட்டர்லயே இல்லிங்ணா நம்ம வாழ்க்கையில ஆதி முதல் இந்த நொடி வரை ஒர்க் அவுட் ஆயிட்டே இருக்கு .
ரெம்ப டீப்பா போனா சொந்த கதை ஆயிரும் .ஆகவே நாம ஒரு சுய சரிதை எழுதற ரேஞ்சுக்கு வரும்போது பார்த்துக்கலாம்னு அம்பேலாயிர்ரன்.