Monday, November 13, 2017

என் தேசம் என் கனவு : கனவு நனவாக

1986 ஒரு பாடாவதி சினிமா பார்த்து பெண்ணில் அதுவரை காணாத கோணம் கண்டு ஒரு 6 மாசம்னு நினைக்கேன்.. கொஞ்சம் மடியா இருந்தம்.
உலகமே வேற மாதிரி தெரிஞ்சது ..அதுவரை நம்ம கனவெல்லாம் டிக்கி நிறைய கரன்சி வச்சுக்கிட்டு ஒரு கிராமத்துக்கு போய் அதை ஆதர்ச கிராமமா மாத்தறது மட்டும் தேன்..

ஏரியாவுல த.நா காதல் சோடி தஞ்சம். அது தெரிஞ்சு நல்ல குடும்பத்துல பிறந்த நம்ம செட் பசங்களே ஒரு நா ராத்திரின்னு ஸ்கெட்ச் பண்ணதும் ஷாக் ஆயிட்டன்.
எதிர்கால வரலாற்றாசிரியர்கள் குறிச்சு வச்சுக்க வேண்டிய சம்பவம் இது.
இந்த செகண்ட்ல தான் டிசைட் பண்ணேன். கொய்யால இந்த நாட்ல ஒரு பயலும் வேலை இல்லாம இருக்கப்படாது

என்ன வேலை கொடுக்கிறது? இன்னைக்கு மாதிரி உலகமயம்-தாராள மயம்-தனியார் மயம், தனியார் ஜாப் மேளா எல்லாம் கிடையாது.
ஒரே சோர்ஸ் கவர்ன்மென்ட் எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சுதேன்.
இன்னைக்கு அதை எல்லாம் இன்ஃபர்மேஷன் சென்டர் ஆக்கி ப்ரைவேட் கம்பெனிக்கு ஆள் எடுத்து அனுப்பறாய்ங்க

அந்த காலத்துல எம்.எஸ்.உதய மூர்த்தியும் -நதிகள் இணைப்பும் மாஸ் மீடியா மூலம் பரிச்சயம்.
கொய்யால ஆளுக்கு ஒரு மம்முட்டி,கடப்பாரை,கூடை கொடுத்து அனுப்பிர வேண்டியதுதான்னு டிசைட் ஆயிட்டேன்.

986 வாக்குல இன்னைக்கு போல விக்கி பீடியா -கூகுள் எல்லாம் கிடையாது.
ஊருக்குள்ளவே சென்ட்ரல் லைப்ரரி இருந்தது . நதிகள் இணைப்பை பத்தி நிறைய படிக்க முடிஞ்சது .
ஐ மீன் வரலாறு தான். பேசிக்கலா நமக்கு ஜியாக்ரஃபிக்கல் நாலட்ஜ் கிடையாது.
ஆனாலும் நதிகள் இணைப்புங்கற கான்செப்ட் ரெம்ப பிடிச்சிருந்தது .
இதை அமலாக்கனும்னா எம்பிகளை நம்பி ஆட்சி நடத்தற பிரதமரால முடியாதுன்னு மட்டும் உறைச்சது .
ஆகவே நம்ம திட்டத்துல ரெண்டாவது அம்சமா நேரிடை ஜன நாயகத்தை சேர்த்துக்கிட்டேன்.
மொத அம்சம் நதிகள் இணைப்பு ..அவ்வ்வ்

என்.டி.ஆர் முதல்வராவறாரு. தமிழ் நாட்ல எம்.ஜி.ஆர் முதல்வர்.
சென்னைக்கு கிருஷ்ணா நீரை கொடுக்க ஒரு திட்டம் அறிவிக்கிறாரு.
தெலுங்கு கங்கை திட்டம்.
அந்த காலத்துல நம்ம தெலுங்கு ஹெட் லைன் படிக்கிற அளவுக்கு தான் போதும்.ஆனாலும் இந்த நில கையகப்படுத்தல்ல ஏற்பட்ட தாமதங்கள் நல்லா உறைச்சது.
என்னங்கடா இது ? இதுக்கு என்னதான் தீர்வுனு ரோசிக்க ஆரம்பிச்சேன்.

அந்த காலத்துல ரஷ்யா செம சவுண்டு. சூப்பர் குவாலிட்டியோட புஸ்தவங்களை நம்ம நாட்டு லைப்ரரிகளுக்கு அள்ளி விடுவாய்ங்க போல.
அதுல இருந்த கூட்டுறவு பண்ணை விவசாயம் என்னை கவர்ந்தது .
இருக்கிற நூறு ஏக்கரை பாசனம் இல்லாம காய விடறத விட 10 ஏக்கர் கால்வாய் வெட்ட போனாலும் 90 ஏக்கர் சாகுபடிக்கு வந்துருமில்லையா?
ஆனால் இழக்கப்படும் அந்த பத்து ஏக்கர் காரன் நிலை என்ன ஆவறது?
அதுக்கு தேன் நாடு முழுக்க விவசாயிகள் சங்கம் உருவாக்கி - விளை நிலங்களை அந்த சங்கத்துக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில கொடுக்கிறது.
அரசின் உதவி - மேற்பார்வையில் கூட்டுறவு பண்ணை விவசாயம்னு டிசைட் பண்ணேன்.

நேரிடை ஜன நாயகம் - 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம் -விவசாய நிலங்களை விவசாயிகள் சங்கத்துக்கு லீசுக்கு தந்து கூட்டுறவு பண்ணை விவசாயம் எல்லாம் செரி.
பிரதமரா வந்த ஆள் நெல்லவனாவே இருந்து இதை செய்ய முற்பட்டாலும்..
மேற்படி அம்சங்கள் அமலில் இல்லாத காரணத்தால - அதனால் நிலவும் வறுமை நிலையை பயன்படுத்தி சுரண்டி பிழைச்சு அத்தனை காலம் ஆட்டைய போட்டு மூட்டை மூட்டையா கருப்பு பணத்தை சேர்த்து வச்சிருக்கிற பக்கிங்க நல்லது நடக்க விடுவானுவளா?
விடமாட்டானுவளே??
அதுக்கு என்ன பண்ணனும்? தற்போதைய கரன்சி ரத்து. பழைய கரன்சியோட அக்கவுன்டபிலிட்டி -லீகாலிட்டிய நிரூபிச்சு வங்கிகள் மூலமா புதிய கரன்சி பெற ஏற்பாடு .இப்படி அஞ்சாவது அம்சமும் அம்சமா ஃபைனலைஸ் ஆயிருச்சு.

நம்ம திட்டத்துல எதுவுமே புதுசு இல்லை. எல்லாம் எங்கயோ ஒரு இடத்துல -எப்பயோ ஒரு காலத்துல இம்ப்லிமென்ட் ஆன கருமம் தான்.
ஆனால் நம்ம திட்டத்தோட பெசாலிட்டி ஜன நாயக நாட்ல -ஜன நாயக பூர்வமா - ரத்தம் சிந்தாம -புரட்சி வெங்காயம்னு நாசமுத்து போயிராம -யாருக்கும் வலிக்காம -எல்லாத்துக்கும் லாபமா மாத்தக்கூடிய 5 அம்சங்களின் சேர்க்கை .

பென்சிலின் கண்டுபிடிச்ச ஃப்ளமிங் மாதிரி ஒரு ஃபீல். கொய்யால சட்டு புட்டுன்னு சினிமாவுல சேர்ந்து நிறைய பணம் பண்ணி ஒரு ஆல் இண்டியா டூர் போயி மக்கள் ஆதரவை திரட்டி -பிரதமராகி -அரசியல் சாசனத்தை திருத்தி நேரிடை ஜன நாயகம் கொண்டு வந்து .................
இப்படி கனவுகள்.
இந்த கனவுகளோட 1989 லயே சென்னைக்கு படையெடுத்து பயங்கர பல்பு வாங்கி ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.

1991 நவம்பர்,29 ஆம் தேதி காதல்-கலப்பு திருமணம்.
1992 மார்ச்சுக்கெல்லாம் அப்பா கோர்த்துக்கிட்டாரு.
அது வேற கதை .ஆனால் கொய்யால .. அரிசி பருப்பு விலை ,குடக்கூலில்லாம் 3 மாசத்துலயே மரண பயத்தை காட்டிருச்சு பரமா !
___________
கொய்யால நாமளா கல்யாணம் கட்டிட்டம். பொஞ்சாதியா முழுகாம வேற இருக்கா. இதுல பெத்து வளர்த்து ..சென்னையில் செட்டில் ஆகி -நடிகனாகி
இதெல்லாம் நடக்கிற காரிய ...மானு ஆயிருச்சு.
__________
ஆகவே எனக்கே எனக்குன்னு வச்சிருந்த இந்த திட்டத்தை தாய் நாட்டுக்கு அர்ப்பணிக்க முடிவு பண்ணிட்டன்.
__________
அந்த நல்ல எண்ணத்தோட சக்தியா என்ன தெரியல .
ஜன சக்தி ங்கற ஏடு நம்ம திட்டத்தோட முழு வடிவத்தை பப்ளிஷ் பண்ணிருச்சு.

நிறைய படிச்ச ஆளு தேன். சிந்திக்க கூடிய ஆளுதேன். ஆனால் ஒலக ஞானம் ரெம்ப குறைவாச்சே ..
ஜனசக்தியில பப்ளிஷ் ஆனதுமே -ஆஹா .. பத்திக்க போகுது ..
மிஞ்சிப்போனா ஏழெட்டு வருசத்துல இம்ப்லிமென்டே ஆயிரும்னு பிரமை.
அதனாலதேன் நம்ம திட்டத்துக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 னு பேரை வச்சம்.
ஆனா ஒரு ம.........னாவும் நடக்கல.( எப்படி நடக்கும்? ஜனசக்திங்கறது ஒரு கட்சியோட பத்திரிக்கை -ஏதோ சந்தா தாரர்களுக்கு மட்டும் போஸ்ட்ல போகும் போல. நாம சொல்லியிருக்கிற எல்லா அம்சமும் அவியள பொருத்தவரை ரெம்ப ஓல்டு )
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாம நினைச்சது என்ன? ஜனசக்தியை பார்த்து வேற ஏதாச்சும் பத்திரிக்கை காரன் போடுவான். அதை பார்த்து எவனாச்சும் நம்மை பேட்டி எடுப்பான்.
நம்ம வாய் தான் லோக பிரசித்தமாச்சே.. எஸ்கிமோவுக்கே ஃப்ரிட்ஜ் வித்துருவமே .. விடறதில்லனு வெய்ட் பண்றேன். வெய்ட் பண்றேன்.
நத்திங் ஹேப்பனிங்..
அங்கருந்துதான் நம்ம திட்டத்தை தலைவர்களுக்கும் -மீடியாவுக்கு அனுப்பற "நோய் வந்தது "
ஒரு அஞ்சுவருசம் போல ரீட்டெய்லா அனுப்பிக்கிட்டிருந்தம்.
ரெஸ்பான்ட் ஆனவிக பேரை ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் பின்னாடி எழுதிரலாம்.
ட்ரென்ட்ல சொல்லனும்னா ஒரு ட்வீட்ல முடிச்சுரலாம் மத்தபடி ..பெரிய பூஜ்ஜியம்...

1998-2017 தவளை பாய்ச்சல்ல நம்ம முயற்சிகளை இந்த வீடியோவுல சொல்ல ட்ரை பண்ணியிருக்கன்.

நிறைய ஸ்கிப் பண்ணீட்டேன். (உங்க மேல கருணையோட) 


ஆன்லைன் ஜோதிட வகுப்புகள் :45 (கிரக சேர்க்கை) (செவ்+இதரகிரகங்கள்)

டந்த ஞா கிழமை குடும்பத்தோட ஒரு எக்சிபிஷன் போயிருந்தம். வழக்கமா எந்த அக்கேஷனா இருந்தாலும் ஃபோட்டோஸ் எல்லாத்தையும் ஃபேஸ்புக்ல அப்லோட் பண்றது வழக்கம்.

இந்த முறை வீடியோவா கொடுக்கலாமான்னு நினைச்சேன்.

நாம என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா ஃபேமிலி ஃபோட்டோஸை ஜனம் மாங்கு மாங்குனு பார்க்கனு தோனினதும் ட்ராப் ஆயிட்டன்.

படக்குனு ஒரு ஐடியா ஸ்பார்க் ஆச்சு. இந்த ஜோதிட வகுப்புகள்ள சதா சர்வ காலம் நம்ம மொவத்தையே பார்த்து சலிச்சு கிடக்கிற சனம் புதுசா நாலு முவத்தை பார்க்கட்டுமேன்னு தான் இப்படி.

எக்சிபிஷன்ல ஜெயின்ட் வீல் எல்லாம் சுத்தினம். ஜோதிடத்தை க்ளப் பண்ணி செமயா ஒரு வலைப்பதிவும் போட்டிருக்கன்.

அதை படிக்க
http://abubavajothidam.com



Saturday, October 14, 2017

ஜோதிடத்தில் ஜெனட்டிக் ஃபீச்சர்ஸ்







அண்ணே வணக்கம்ணே !

நம்ம வலைப்பூ /வெப்சைட்ல இருந்தே ஒரு ஆயிரம் பக்கம் வரை பீராய்ஞ்சு வச்சுக்கிட்டு உபமானம்/உபமேயம் /சொந்த கதை / உபகதை /உதாரணம்லாம் களிச்சுட்டே வரலாம். எங்கயாச்சும் எதையாச்சும் திராட்டுல விட்டிருந்தா ஃபில் அப் பண்ணிரலாம்னு தான் நினைச்சேன்.



ஆனால் திடீர்னு ஒரு எண்ணம் ஸ்பார்க் ஆச்சு. ஒரு வேளை இதுவே நீ எழுதற கடைசி புஸ்தவமா இருந்தாலும் இப்படித்தான் செய்வயா?



நோ 'ன்னுட்டு நாலு திசையா தலையை அசைச்சு  பெரிய எழுத்துல  அலறி ஜெராக்ஸ் பேப்பர் ஒரு பண்டல் வாங்கி வச்சுக்கிட்டு எழுத ஆரம்பிச்சேன்.



லேப்டாப்ல அடிக்கிறதுக்கும் -எழுதறதுக்கும் உள்ள வித்யாசம் நமக்கு தெரிஞ்சதுதேன். அடிக்கடி சொல்லியும் இருக்கேன். ஆனால் எழுத எழுத அப்டியே கொட்டுது . இதுவரை டச்சு பண்ணாத கோணம்லாம் அப்டியே கர்ணன் கேமராவுல ஜோதிடலட்சுமி உள்ளாடை மாதிரி தர்ம தரிசனம்.



எழுதி எழுதி ஒரு ஃப்ளோ வந்திருச்சு. காயிதத்துல எழுதி ( நேர்மையா சொன்னா கிறுக்கி) மறுபடி அதை தட்டச்சி ஜனவரி 14 க்குள்ள புஸ்தவமா வெளிய வரனும்னா முப்பது முக்கோடி தேவர்களும் கூட்டணி போட்டாதான் வேலைக்காகும். ஏன் டைரக்டா டைப் பண்ண கூடாதுன்னு ஒரு கெட்ட எண்ணம். அதான் இந்த பதிவு .



மொதல்ல ராகு கேதுக்கள் - பிறவு பூர்வ புண்ணிய ஸ்தானம் -அடுத்து மாத்ரு பாவம் ஃபினிஷ் ஆயிருச்சு. என்னய்யா இது இப்படி ஜம்ப் ஆகுதுன்னு மெர்சலாயிராதிய. ஒரு புதிய சரடு கிடைச்சது . ஒவ்வொரு ரத்தினமா கோர்த்துக்கிட்டிருக்கன். ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கிட்டு நோண்டி நுங்கெடுத்துருக்கம்.



இப்ப ஒன்பதாம் பாவம். இதை தான் இன்னைக்கு/ நாளைக்கு  பதிவா போட உத்தேசம் (புக் ஒர்க் நடக்கும் போது லட்டா எடுத்து சேர்த்துக்கலாம்ல)

__________

ராகு கேதுக்களிடமிருந்து வம்சவிருட்சத்தின் பாசிட்டிவ் ஜெனட்டிக் ஃபேக்டர்ஸ் / ஐந்தாம்பாவத்தின் வழி தன் வாழ்வின் இறுதி இலக்கு குறித்த  உள்ளார்ந்த புரிதல் / தாயிடம் இருந்து ரெசிப்டிவ்னெஸ் ஆகியவற்றை பெறும் குழந்தை ஒன்பதாம் பாவத்தில் இருந்து ஆண் தன்மையை பெறுகிறது .

இயற்கையுடனான ஊடாடுதலில் தாயிடம் இருந்து பெற்ற  ஏற்புத்தன்மை எந்தளவுக்கு அவசியமோ - உலகத்தோடு /உலகமக்களோடு ஊடாடுதலில் தந்தையிடம் இருந்து பெறும் போராட்டகுணமும் அந்தளவுக்கு அவசியமே.









Monday, September 11, 2017

மின்சார கனவுகள்

1.எங்க ஸ்டேட்ல செய்தாப்ல பவர் ஜெனரேஷனையும் -பவர் ட்ரான்ஸ்மிஷனையும் ரெண்டா பிரிச்சுரனும். ஒன்னுக்கொன்னு தொடர்பே இருக்கப்படாது. (இதுவரைக்கும் சந்திர பாபு ஃபார்முலா)
இதுக்கு மேல நம்ம ஃபார்முலா. மொத 100 நாள் வரை கிரேஸ் பீரியட். இந்த 100 நாட்கள்ள ஜெனரேஷன்லயோ -ட்ரான்ஸ்மிஷன்லயோ வெட்டு விழுந்தா மெமோ – எக்ஸ்ப்ளனேஷன்னு விட்டுரனும். இந்த 100 நாளைக்குள்ள சனம் திருந்திரனும். பிரச்சினைக்கு காரணமான விஷயங்களை அரசு பைசல் பண்ணிரனும்.
101 ஆவது நாள்ளருந்து ரெண்டு பிரிவும் 100 சதம் வேலை செய்ய ஆரம்பிச்சுரனும். அப்படியில்லின்னா எத்தனை சதவீதம் ஜெனரேஷன்லயும் -ட்ரான்ஸ்மிஷன்லயும் “வெட்டு” விழுதோ அத்தனை சதவீதம் ஓவரால் சம்பளத்துல கட்.
இந்த அபராத தொகைய எப்படி எல்லா ஊழியர்களுக்கும் பங்கிடறதுன்னு ஒரு கேள்வி வரும். அவிகவிக வாங்கற சம்பளத்தோட விகிதத்துல ஷேர் பண்ணிரனும்
2.ஈ.பிக்கு சொந்தமான எல்லா இடங்கள்ளயும் -வசதி வாய்ப்புகளை பொருத்து கல்யாண மண்டபத்துலருந்து – ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வரை கட்டிரனும். கு.ப மரங்களாவது நடனும். (பைசா வரனும் அது முக்கியம்) .பயோ கியாஸ், சோலார் பவர் யூனிட்டு ,காற்றாலை மின்சார உற்பத்தி இப்படி எதையாவது செய்து பைசா புரட்டனும். நாம பவர் ஜெனரேட் பண்றது மக்களுக்காக – நமக்காக இல்லைங்கற கான்செப்ட் ஊழியர்கள் மைண்டுல நல்லா பதியனும்.
3.நிர்வாக செலவில் கு.பட்சம் 30 சதவீதம் வெட்டு விதிக்கனும். ஆரம்பத்துல புதுசா ஆட்களை வேலைக்கு எடுக்கும் போதே டென்டர் அடிப்படையில எடுக்கனும். அது எப்பூடி? நமக்கு தேவையான தகுதி உள்ள ஆட்களில் யார் குறைந்த சம்பளத்துல வேலை பார்க்க முன்வராய்ங்களோ அவிகளுக்கு ஆர்டர் போட்டுர்ரது.
4.ஸ்டேட்ல உள்ள எல்லா விளக்கு கம்பத்துக்கும் சைன் போர்ட் ஃபிட் பண்ணிட்டு அதுல விளம்பரம் எழுதி காசு புரட்டி நிறுவனத்துக்கு மாசா மாசம் ஃபிக்சடா ஒரு அமவுண்டை கொடுக்கிற ஏற்பாடு செய்யனும். ட்ரான்ஸ்ஃபார்ம் மேடைகள் உட்பட.
5.அலுவலகங்களை நல்ல காத்து,வெளிச்சம் வர்ராப்ல ஆல்ட்டர் பண்ணிரனும். காலை 10 முதல் மாலை 5 வரைன்னு உள்ள வேலை நேரத்தை காலை 5 முதல் 9 வரை பிறகு மாலை 6 முதல் 10 மணி வரைன்னு மாத்திரனும். அலுவலகங்களை டைம் ஷேர் அடிப்படையில தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு தரலாம்.
6.இரவு நேர அரசியல் கூட்டங்களுக்கு தடை ( கரண்டு திருடாதிங்கப்பான்னா கேட்கவா போறாய்ங்க)
7.டொமஸ்டிக் -கமர்ஷியல் பவருக்கு வித்யாசத்தை மிக மிக குறைச்சே தீரனும் (மின் திருட்டுக்கு இதுவும் ஒரு காரணம்) அதிகபட்சம் 10 சதவீதத்துக்கு மேல வித்யாசமே இருக்கக்கூடாது.
8.மின் கட்டணத்தை முன் கூட்டி கட்டற வசதியை கொண்டு வரனும். 3 மாச கட்டணத்தை முன் கூட்டி கட்டினா 5 சதவீதம் தள்ளுபடி .6 மாசம்? 10 % ,ஒரு வருசம் 15% அதுக்கு மேல எவனாச்சும் கட்ட முன் வந்தா பார்த்துக்கலாம்.
9.பகல்ல மின் விளக்கு ,மார்கழி குளிர்ல ஃபேன் உபயோகிச்சே தீரனுங்கற கண்டிஷன்ல உள்ள வீடுகள்ள மின் துறை ஊழியர்கள் புகுந்து சன்னல் ,வென்டிலேட்டர்லாம் மார்க் பண்ணிட்டு வந்துரனும். ஒரு மாசத்துல வீட்டுக்காரனே வச்சா சரி.இல்லின்னா காண்ட் ராக்டர் மூலமா சன்னல் வென்டிலேட்டர் வச்சுட்டு பில்லை வீட்டுக்காரனுக்கு அனுப்பிரனும்.
10. மின் கட்டண பாக்கி வச்சிருக்கிற பெரிய தலைகளுக்கு மருவாதியா சொல்லிப்பார்க்கனும்.இல்லின்னா வங்கிகளோட பேசி டிஃபால்ட்டர் லிஸ்ட்ல போட்டு குடைச்சல் கொடுக்கனும். ( மவனுவ எந்த வங்கியிலயும் பைசா கடன் பிறக்கக்கூடாது)
இதுவரை லார்ஜ் ஸ்கேல் ஐடியாஸ். இப்பம் ஸ்மால் ஸ்கேல் :
லட்டு தின்ன ஆசையா படத்துல பவர் “இந்த பவரை பார்க்காமலே பிடிக்கும்”பார். நெஜமாலுமே நாம யாரும் பவரை பார்த்ததில்லை.ஆனால் பவரை பிடிக்காதவுக ஆருமில்லை. அரசாங்கத்துக்கும் பவர்னா ரெம்ப பிடிக்குது.அதனாலதேன் ஹை ரிஸ்க் எடுத்து அணு உலை எல்லாம் திறக்கறாய்ங்க.
லம்பா அள்ளனும்னு நினைச்சா எதுவுமே ரிஸ்குதேன். சிறு துளி பெருவெள்ளம்,அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகரும். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மென்ட் . நான் பவர் ஜெனரேஷனுக்கு தரப்போற யோசனைகளின் அடிப்படை இதான்.
படிக்க இவரு காமெடி பண்றாரு போலன்னு தோனும்ஆனால் நெஜமாலுமே சீரியசா தான் இந்த யோசனைகளை தரேன். ( சிறு துளி பெரு வெள்ளம்)
1.சுழல் கதவுகள்:
பொது நிறுவனங்கள் ,விஐபிக்களின் இல்லங்களில் சுழல் கதவுகள் வைக்கலாம். கதவை சுத்தினா கீழே உள்ள டைனமோவில் பவர் ஜெனரேட் ஆகி பேட்டரியில சேவ் ஆகனும். பிசியான சாலைகளில் நடைபாதைகள் அமைத்து இடையிடையில் சுழல் கதவுகளை வைக்கலாம்.
2.ஓவர் ஹெட் டாங்கு:
தண்ணி ஏத்தும் போது நிச்சயம் பவர் தேவை.ஆனா இறங்கும்போது புவியீர்ப்பு சக்தியில பவர் இல்லாமயே இறங்குது.மெயின் குழாயின் இடையில் ஒரு சைஃபன் வச்சு -சைஃபனுக்கு டைனமோவ கனெக்ட் பண்ணலாம். இதை அரசு நிர்மாணித்துள்ள ராட்சத மேல் நிலை குடி நீர் தேக்க தொட்டிகளில் முதற்கண் அமல் செய்ய வேண்டும்.
3.பயோ கியாஸ்:
ஓட்டல் (முக்கியமா அம்மா ஓட்டல்), மெஸ், அப்பார்ட்மென்ட்ஸ், மேன்ஷன் ஹவுஸ் ,திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர்களில் அரசு பேருந்து நிலைய பொதுக்கழிவறைகளில் சத்துணவு மையங்கள்,பிரபல புண்ணிய சேத்திரங்களில் பயோ கியாஸ்
4.உடற்பயிற்சி மையங்கள்:
உடற்பயிற்சி மையங்களில் பெரிய மனிதர்கள் சக்தியை வீண்விரயம் செய்கிறார்கள் .உ.ப கருவிகளில் சிறிய மாற்றங்களை செய்து பவர் ஜெனரேட் செய்யலாம்.
5. நடைப்பயிற்சி மையங்கள்:
வயதில் மூத்த விஐபிக்கள் நடை பயிற்சிக்கு போகும்போதுதான் போட்டு தள்ளிர்ராய்ங்க. கொலையாளிகளை பிடிக்கிறது காவல் துறைக்கு பெரிய தலைவலியாயிருது. இதனால உரிய பாதுகாப்புடன் கூடிய நடை பயிற்சி மையங்களை துவக்கலாம்.சனம் நடக்க நடக்க பவர் ஜெனரேட் ஆகிறாப்ல செய்யலாம்.
6.எடை மேடைகள்:
ஒவ்வொரு சாலையிலும் லட்சக்கணக்கான வாகனங்கள் போகுது. எடை மேடை கணக்கா கிலோ மீட்டருக்கு ஒன்னு ஏற்பாடு செய்யனும் அதன் மீது வண்டி வாகனம் கடக்கும் போதெல்லாம் பவர் ஜெனரேட் ஆறாப்ல செய்யலாம்.

Friday, July 7, 2017

திராவிட சித்த பரம்பரை. சித்தராகிறாரா கலைஞர்? திகீரடிக்கும்-பகீர் யோக ரகச...

கலைஞர் உடலில் குண்டலி ஆக்னாவில் நிலை கொண்டு -அவர் எண்ணங்கள்



அவரது பேச்சு /எழுத்துக்களின் துணையின்றி செயல் வடிவம் பெற்றுவருவதை அன்றே சொல்லியிருக்கிறேன்.



முந்தா நாள் இந்துத்துவாவை  திராவிடம் கதற கதற அடித்ததை சேர்த்து யோசித்த படி இந்த வீடியோவை பாருங்க

Tuesday, July 4, 2017

புதிய நூல் வெளியீடு :முன்பதிவு

அண்ணே வணக்கம்ணே !
நேரமின்மை காரணமா முக நூல் பதிவை அப்படியே இங்கே தந்திருக்கேன்.
சாணக்கியர்கள் நாடாள்வதில்லை ! ஜோதிடர்கள் சொந்த வாழ்வில் வெற்றி காண்பதில்லை !
என்பதை பொய்யாக்கி .. ஏற்கெனவே முன் பதிவு திட்டத்தில்
ஒரே நேரத்தில் நான்கு நூல்களை வெற்றிகரமாக வெளியிட்டு சாதனை படைத்து
இணைய உலகின் வெற்றி நாயகனாக வலம் வரும்
அனுபவஜோதிட டாட் காம் நிறுவனர்
வலையுலக மாத்ருபூதம் -ஜோதிட ஓஷோ
சித்தூர் முருகேசன்
ஜோதிடர்கள் – ஜோதிட மாணவர்கள் -ஜோதிட ஆர்வலர்களுக்கு வழங்கும் பம்பர் ஆஃபர் !
2017,சரஸ்வதி பூசை தினம் வெளி வரவிருக்கும்
புதுமையான -எளிமையான வெற்றி சூத்திரங்களை 6 வயது சிறார் முதல் 60 வயது முதியோர் வரை அனைவருக்கும் அள்ளித்தரும் ஜோதிட ஆய்வு நூல்
“ஆறில் இருந்து அறுபதுவரை “
320 பக்க நூலுக்கு ரூ.500 முன் பணம் செலுத்தி முன் பதிவு செய்யுங்கள்
ஏற்கெனவே வெளியாகி 3 முறை மறு அச்சாகி சக்கை போடு போட்ட ரூ.500 மதிப்புள்ள 4 ஜோதிட நூல்களை பெறுங்கள் முற்றிலும் இலவசமாக !!
மேலதிக விவரங்களுக்கு : swamy7867@gmail,com
whatsap : 9397036815

Saturday, January 21, 2017

" சின்னம்மா" நடத்துங்கள் உங்கள் ராஜ்ஜியத்தை !!


அண்ணே வணக்கம்ணே !

தரை லோக்கலுக்கு இறங்கி அடிப்பம்லனு அப்பப்போ சிலும்பிக்கிட்டாலும் சில மேட்டர்ல சப்த நாடியும் ஒடுங்கி போகுது. அதுல லேட்டஸ்ட் சசிகலா அதிமுக செயலாளரா அறிவிக்கப்பட்டது .

என்னதான் எம்.ஜி.ஆரை கயிவி கயிவி ஊத்தினாலும் அவர் தன் ரெஜிம்ல தன்னையே எதிர்க்க துணிஞ்சவிகளை எல்லாம் கட்சிக்குள்ள வச்சிருந்தார்.

வாத்யார் போலவே  ஜெ மேட்டர்லயும் புரட்சித்தலைவர் /தலைவிங்கறதெல்லாம் துரித ஸ்கலிதம் மாதிரி முன் கூட்டியே தரப்பட்டிருந்தாலும் பிற்காலத்துல அவிக புரட்சி  எதிரிகளால கூட அங்கீகரிக்கப்பட்ட சமாசாரம்.

ஆனால் இந்த சசிகலா மேட்டரை மட்டும் இன்னைய தேதி வரைக்கும் என்னால ஜீரணிச்சுக்கவே மிடியல.

தப்பித்தவறி அந்தம்மா முதல்வராவும் ஆயிட்டா?? நெனச்சாலே குலை நடுங்குது .

இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள சரித்திரத்தை தான் நம்ப வேண்டியிருக்கு. இந்த மாதிரி கருப்புப்பக்கங்கள் எல்லா சரித்திரத்துலயும் இருக்கு.ஆனாலும் ஒரு முடிவும் வந்திருக்கு.

அந்த ஒரே நம்பிக்கையில தான் தூங்க வேண்டியிருக்கு. அவ்வ்வ்வ்