அண்ணே வணக்கம்ணே !
தரை லோக்கலுக்கு இறங்கி அடிப்பம்லனு அப்பப்போ சிலும்பிக்கிட்டாலும் சில மேட்டர்ல சப்த நாடியும் ஒடுங்கி போகுது. அதுல லேட்டஸ்ட் சசிகலா அதிமுக செயலாளரா அறிவிக்கப்பட்டது .
என்னதான் எம்.ஜி.ஆரை கயிவி கயிவி ஊத்தினாலும் அவர் தன் ரெஜிம்ல தன்னையே எதிர்க்க துணிஞ்சவிகளை எல்லாம் கட்சிக்குள்ள வச்சிருந்தார்.
வாத்யார் போலவே ஜெ மேட்டர்லயும் புரட்சித்தலைவர் /தலைவிங்கறதெல்லாம் துரித ஸ்கலிதம் மாதிரி முன் கூட்டியே தரப்பட்டிருந்தாலும் பிற்காலத்துல அவிக புரட்சி எதிரிகளால கூட அங்கீகரிக்கப்பட்ட சமாசாரம்.
ஆனால் இந்த சசிகலா மேட்டரை மட்டும் இன்னைய தேதி வரைக்கும் என்னால ஜீரணிச்சுக்கவே மிடியல.
தப்பித்தவறி அந்தம்மா முதல்வராவும் ஆயிட்டா?? நெனச்சாலே குலை நடுங்குது .
இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள சரித்திரத்தை தான் நம்ப வேண்டியிருக்கு. இந்த மாதிரி கருப்புப்பக்கங்கள் எல்லா சரித்திரத்துலயும் இருக்கு.ஆனாலும் ஒரு முடிவும் வந்திருக்கு.
அந்த ஒரே நம்பிக்கையில தான் தூங்க வேண்டியிருக்கு. அவ்வ்வ்வ்