Saturday, July 5, 2014

கிரகங்கள் நின்ற பலன்: சந்திரன் (தொடர்ச்சி)

கிரகங்கள் நின்ற பலன்: சந்திரன் (தொடர்ச்சி)

மோடிக்கு ஒரு ஆன்லைன் ஆப்பு

அண்ணே வணக்கம்ணே !
மோடிய மெசய்யா ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாய்ங்க. ஒரு ராட்சத பலூன் கணக்கா ஊதினாய்ங்க. இப்பமே காத்து இறங்கிக்கிட்டுதான் இருக்கு.
பஞ்சர் பண்ணா எப்படி இருக்கும்னு ரோசிச்சன்.

சமீபத்துல நான் பிரதமரானால்ங்கற டேக் லைனோட பல நிலைச்செய்திகள் போட்டேன்.

அதை எல்லாம் தொகுத்து நண்பர் திருமுருகன் கார்த்திகேயனுக்கு அனுப்ப அவரு இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி அனுப்பினாரு.

அதை அப்படியே நம்ம இங்கிலீஷ் ப்ளாக்ல போட்டு அதனோட லிங்கை மத்திய அரசாங்கத்தோட ஆன்லைன் மனு பைசல் மையத்துக்கு அனுப்பினன்.
அவிக என்னமோ ஒரு ரெஃபரன்ஸ் நெம்பர் மெயில் பண்ணாய்ங்க (ஆட்டோமேட்டட் தான்)  நேத்திக்கு  போது போகாம மனு என்னதான் ஆச்சுன்னு நோண்டினேன்.



பலான ஆஃபீசர் பார்க்கிறாய்ங்க.அவிக டீட்டெய்ல்ஸ் இதுன்னு வந்தது. ஒடனே அந்த கன்செர்ன் ஆஃபீசருக்கும் ஒரு பொட்டலம் அனுப்பிட்டன். (ராமர் கோவில் சுண்டல் மாதிரி)

பார்ப்போம் தப்பித்தவறி அது மோடி டேபிளுக்கு போகனும். (அதுல நிறைய உள் குத்தெல்லாம் இருக்குங்கோ)  அப்பாறம் இருக்கு கூத்து..

இதுவரை நான் பிரதமரானால் நிலை செய்திகளை நீங்க படிக்கலின்னா இங்கே அழுத்தி படிக்கலாம். தமிழ் ஆங்கிலம் ரெண்டுலயும் தந்திருக்கம்.