Thursday, February 13, 2014

அரசு / வங்கி ஊழியர் ஊதிய உயர்வு போராட்டம் – பொது மக்களுக்கு இழைக்கும் துரோகம். « கன்னிமரா லைப்ரரி

அரசு / வங்கி ஊழியர் ஊதிய உயர்வு போராட்டம் – பொது மக்களுக்கு இழைக்கும் துரோகம். « கன்னிமரா லைப்ரரி

தொழிலில் வெற்றி



அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடத்தை காலத்துக்கேத்தாப்ல அப்ளை பண்ணனும்ங்கறது நம்ம பாலிசி. சமீப காலமா இந்த பாலிசியை அப்ளை பண்ணி சில பதிவுகள் போட்டுக்கிட்டு வர்ரன்.
தொழில்னா இதுல விற்பனையும் ஒரு அங்கம். இன்னைக்கு விக்கிறவன் சாஸ்தி.வாங்கறவன் ரெம்ப கம்மி. ப்ரொடக்சன் ஒரு மலைன்னா சேல்ஸ் அதைவிட பெரிய மலையா இருக்கு.அதை ஏறமுடியாம அவனவன்  நாக்கு தள்ளி கிடக்கான்.
மொதல்ல சோதிடத்துக்கு சம்பந்தமில்லாத மேட்டரை சொல்லி விட்டுர்ரன். ஃபர்ஸ் அஃப் ஆல் நம்ம சரக்குல ஒர்த் இருந்து விலையும் நாணயமா இருக்கோனம். இது ரெண்டுமே இல்லாமலும் சிலருக்கு ஒர்க் அவுட் ஆகுது இல்லேங்கல. அவிகளை ஆத்தா பார்த்துக்குவா.
இந்த பதிவே சரக்குலயும் ஒர்த் இருந்து விலையும் நாணயமா இருந்தும் மூவ்மென்ட் இல்லை,சேல்ஸ் இல்லைன்னு தவிக்கிறவுகளுக்காகத்தேன்.
எச்சரிக்கை:
ரெண்டு பாரா படிச்சதுமே இதை ஏற்கெனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு நீங்க நினைச்சா அது கரெக்ட். நேத்திக்கு இந்த பதிவை அனுபவஜோதிடம் டாட் காம்ல போட்டம். அது என்ன இழவெடுத்துருச்சோ தெரியலை. சைட் ஈஸ் சஸ்பெண்டட்னு வருது.
அங்கன படிக்காதவுக படிச்சு பயன்பெறனுமேன்னு இந்த புதிய தலைப்புல - நிர்வாண உண்மைகள் ப்ளாக்ல இதைபோஸ்ட் பண்றேன். 
ஏற்கெனவே படிச்சவுக விலகிருங்க. மத்தவுக தொடரலாம்.
மொத பாய்ண்ட் நீங்களே ப்ரொடக்சன் நீங்களே சேல்ஸான்னு தெரியனும். ஜஸ்ட் சேல்ஸுதான்னா ரெம்ப சிம்பிள் ..உங்க ஜாதகத்துல லக்னாதிபதி விரயத்துல இருக்கறதோ அல்லது விரயாதிபதியோட சகவாசம் பண்றதோ இருந்தா மோதும் மெறிச்சிக்கலாம். குறைஞ்ச பட்சம்  உங்க சேல்ஸ் மேனேஜர்/கொடவுன் இன்சார்ஜ் ஆச்சும் இந்த மாதிரி ஜாதகத்துல அமைஞ்சா சூப்பரு.
என்ன ஒரு கண்டிஷனுன்னா க்ரெடி பேஸ்ட் சேல்ஸ் கூடாது. ப்ரொடக்சனும் நீங்களேன்னா மேற்படி கிரக  அமைப்பு செம  நாஸ்தியாக்கிரும். அது வேற ஸ்கூல்.
அடுத்து ஸ்டாக் வைக்கிற இடம். இது உங்க கொடவுன்லயே தென் கிழக்கு மூலை எதுன்னு பார்த்து அங்கன வைக்கனும். அதே போல அங்கன வைக்கிற சாமி படம்லாம் கொஞ்சம் டிஃப்ரன்டா இருக்கனும். உ.ம் நிக்கிற லட்சுமி,குழலூதும் கண்ணன்,தியானத்துல உள்ள ஈஸ்வரன். (இதெல்லாம் வீட்ல வைக்கவே கூடாது)
உங்க ப்ராடக்ட் எதுன்னு பார்க்கனும். அதுக்கு எந்த கிரகம் காரகம்னு பார்க்கனும். அந்த கிரகம் உங்களுக்கு அனுகூலமா பார்க்கனும் அது ரெம்ப முக்கியம். அதே நேரத்துல அவரு உங்க ஜாதகத்துல சூப்பர் மோஸ்ட் பலத்தோடவும் இருக்கக்கூடாது.
உ.ம் உங்க ஜாதகத்துல செவ் உச்சம்.  நீங்க பட்டாசு ஸ்டாக் வச்சிருக்கிங்கனு வைங்க. சரக்கு லேசுல மூவ் ஆகாது. வேற ஒரு ஜாதகருக்கு செவ் நீசம்.அவரும் இதே வேலைய செய்றாருன்னு வைங்க பிச்சுக்கிட்டு போகும் (என்ன ஒரு வில்லங்கம்னா படக்குனு தீ விபத்து கூட நடக்கும்)
ஏன்னா எந்த கிரகம் அட் மோஸ் பவர்டா இருக்கோ அந்த காரகம் உள்ள பொருட்கள் உங்களை விட்டு போகாது.
அதே நேரத்துல எந்த கிரகம் ஏற்கெனவே உங்க லைஃப்ல விளையாடிருச்சோ அந்த கிரக காரகம் கொண்ட பொருள் கூட லாபம் தரும்.
உ.ம் ஏற்கெனவே நீங்க பயங்கர தீவிபத்துல சிக்கி பிழைச்சவருன்னு வைங்க அப்பம் பட்டாசு தொழில் ஒர்க் அவுட் ஆகும்.
ஜோதிடம் 360 மொத பதிப்பு வெளியிடும் போது ஸ்கின் ப்ராப்ளம் இல்லை.அதனால குடிசை தொழில் கணக்கா டூ கலர் ரேப்பரோட போட்டம். இப்பம் ஸ்கின் ப்ராப்ளம் லந்து பண்ணிக்கிட்டிருக்கிறதால தூளான ப்ரொஃபெஷ்னல் எக்சலன்சியோட வந்திருக்கு.
விற்பனைக்கு எந்தெந்த கிரகம் எப்டில்லாம் உதவும்னு பார்த்துரலாம். இந்த கிரகங்கள் உங்க ஜாதகத்துல பல்பு வாங்கி சரக்கு முடங்கி கிடக்கா? அதுக்கெல்லாம் பரிகாரம் இருக்கும் அடுத்த பதிவுல சொல்றேன்.
1.சூரியன்:
மார்க்கெட் லீடராக்குவார். விளம்பரம்- ஃபீல்ட் கேன்வாஸ்,ஃபீல்ட் எம்ப்ளாயிஸ் அமைய உதவுவாரு. அப்பா காலத்து உற்பத்தியில புதிய இன்னிங்ஸ் துவக்க செய்வாரு. கிராமப்புற,புற நகர்
2.சந்திரன்:
உங்க உற்சாகம் உங்கள் சேல்ஸ் ரெப்ஸை தொத்திக்கும்.அவிக உற்சாகம் டீலரை தொத்தும். லாஜிக்கே இல்லாம மக்கள் மத்தியில ஒரு  குட் வில்லை ஏற்படுத்துவாரு. உதாரணமா நான் "நந்தி ப்ராண்ட்" தீப்பெட்டிகள் உபயோகிச்சப்போ ஃபுல் பந்தாவா இருந்தன். வைட் பியர் உபயோகிக்கும் போதும் பரவால்லை. பிறவு செம நாஸ்தி.இடையில லட்சுமி ப்ராண்ட் கிடைச்சது உச்சம். கொஞ்ச காலம் முன்னே கூட யானை ப்ராண்ட் .சூப்பரு. இப்படி ஏதோ ஒரு சென்டிமென்டல் காஸ் உங்க சரக்கோட விற்பனைய தூக்கிவிடும். ஆனால் காரணமே இல்லாம ஒரு 14 நாள் சரக்கு தூங்கவும் செய்யலாம்.
3.செவ்வாய்:
போட்டி உற்பத்தியாளர்களை முடக்கி உங்களை முன்னணிக்கு கொண்டு வருவாரு.
4.ராகு:
மார்க்கெட்ல ஏற்படக்கூடிய எதிர்பாரா திருப்பங்கள் உங்களுக்கு சாதகமா அமையும்.
5.குரு:
அரசு ஆதரவு,அரசு கடன்,அரசியல் ஈடுபாடு காரணமா சேல்ஸ் பிச்சிக்கும்
6.சனி:
தொழிலாளர்கள் சைட்ல கிடைக்கிற ஆதரவு விலைய குறைக்க உதவலாம். லேபர் ஏரியா,ஸ்லம் ஏரியாவுல பிச்சுக்கும்
7.புதன்:
சரியான டீலர்/ஏஜெண்டுகள் கிடைப்பாய்ங்க. மீடியா ஒத்துழைப்பு நெல்லா இருக்கும் ஆடிட்டர் வழியில ஒரு நல்ல திருப்பமே கூட ஏற்படலாம்.
8.கேது:
ஒரு புதிய தொழில் நுட்பத்துல இறக்கும். கொஞ்ச காலம் அவதிப்பட்டாலும் நிக்கலாம். நின்னு காட்டலாம்.உசந்தும் காட்டலாம்.
9.சுக்கிரன்:
பெண்கள் ஆதரவு கிடைக்கும். அப்பர் மிடில் க்ளாஸ், ஹை க்ளாஸோட ஆதரவும் கிடைக்கும்.
சரி இந்த கிரகங்களோட பலம் இல்லின்னா என்ன செய்றது பாஸ்? இதானே உங்க கேள்வி?அடுத்த பதிவுல க்ளியர் பண்றேன்.
பை தி பை  எக்கச்சக்கமா இன்வெஸ்ட் பண்ணிட்டு ப்ரிண்ட் ஆகி வந்த புக்ஸை கூரியர்ல அனுப்பக்கூட வசதியில்லாம முடங்கி கிடக்கேன் நாம பப்ளிஷ் பண்ணியிருக்கிற 4 புக்ஸையும் வாங்கி ஆதரிங்க பாஸூ..

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
swamy7867@gmail.com