Friday, October 26, 2012

அம்மன் சத நாமாவளி இலவச டவுன்லோட்

அண்ணே வணக்கம்ணே !
ஸ்ரீ அம்மன் சத நாமாவளி கையடக்க பதிப்பு ஆட்டோமேஷன்ல நடக்கிற வேலைல்லாம் வேகமா நடந்துருச்சு. மேன்யுவலா நடக்கவேண்டிய வேலை நடந்துக்கிட்டிருக்கு.லேபர் பிராப்ளமுங்கோ..அதுக்குள்ள நம்ம வினோத்ஜீ ஒரு ஐடியா கொடுத்தார். மின் நூலா கொடுங்க. புத்தகம் ரெடியான பிறகு ப்ரின்ட் எடிஷன் கொடுங்கன்னாரு.

இந்த மின் நூல் உங்கள் சொந்த உபயோகத்துக்கு மட்டுமில்லை. நீங்க விரும்பினா ப்ரிண்ட் அவுட் எடுத்து ஜெராக்ஸ் போட்டு உங்க சர்க்கிள்/ ஏரியா மொத்தம்  இலவசமா வினியோகிக்கலாம். அல்லது ப்ரிண்ட் எடிஷன் இலவச பிரதி வேணம்னா கூரியர்/தபால் கட்டணம் அனுப்பி  நம்ம கிட்டருந்து தருவிச்சும் வினியோகிக்கலாம்.

மின் நூலை டவுன் லோட் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்..(2.45 எம்.பி தான்)

Wednesday, October 17, 2012

இலவசம்: அம்மன் சத நாமாவளி (பக்கம்:32)

அண்ணே வணக்கம்ணே !

லோக்கல்ல நாம விளம்பரமே உள்ளடக்கமா ஒரு மல்ட்டி கலர் பத்திரிக்கை நடத்திக்கிட்டு வர்ரது தெரியும். இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப்.  இந்த பத்திரிக்கை சார்பில் தான் அம்மன் சத நாமாவளி (பக்கம்:32) கையடக்க நூலை இலவசமா தரப்போறோம்.

ஆக்சுவலா இதை தெலுங்குல மட்டும் பண்றாப்ல தான் ப்ளான். இந்த மேட்டரை ரொட்டீனா ஃபேஸ்புக்ல அப்டேட் செய்ய நண்பர் திரு.விமலாதித்தன்  என்ன ஏதுன்னு விஜாரிக்காம ரூ.1000 ஐ அனுப்பி இது நம்ம கான்ட் ரிப்யூஷனுன்னு சொல்ட்டாரு.

அவருக்கு ஜிலேபி ஜிலேபியா தெலுங்குல அடிச்சு சத நாமாவளியை கூரியர்ல அனுப்பினால் நல்லாருக்காது.

அதனால துணிஞ்சு இறங்கிட்டன். தமிழ்லயும் போடறோம். இதை படிக்கிற நல்ல உள்ளங்கள் கை கொடுத்தாலும் சரி -கொடுக்கலின்னாலும் சரி உள்ளூர் தமிழ் சனங்க கிட்டே கை ஏந்தியாச்சும் போட்டுரலாம்னு முடிவு பண்ணியிருக்கன்.

ஏன்னா  இந்த பத்திரிக்கை சார்பில் 3 வருசமா மெகா சைஸ்ல மல்ட்டி கலர் காலண்டர் எல்லாம் போட்டு இலவசமா வினியோகம் செய்துக்கிட்டிருக்கம்.( பட்ஜெட்: ரூ13x5000=ரூ.65 ஆயிரம் ரூவா)

செலவு? எல்லாம் ஸ்பான்சர் ஷிப்புதேன்.முக்கியமா சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபுவோட ஆதரவாளர்கள் பக்கம் பக்கமா ஸ்பான்சர் பண்ணிருவாய்ங்க. காலியிடத்துக்கு கமர்ஷியல்ஸ் பீராய்ஞ்சு போட்டுக்கிட்டு வர்ரம்.

கூகுல்ல போயி அம்மன் சத நாமாவளின்னு அடிச்சா பொல பொலன்னு கொட்டுது. இல்லேங்கலை.ஆனால் அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து அதை பாக்கெட் சைஸு  புஸ்தவமாக்கி வச்சுக்கிட்டா தான் படிக்க வசதி -பாக்கெட்ல வச்சுக்க வசதியாயிருக்கும்.
( அவசரத்துக்கு ஃபோன் நெம்பர் இத்யாதி கூட கிறுக்கிக்கலாம்).

இதை செய்யனும்னா மேட்டரை வோர்ட்ல காப்பி பண்ணி காலம் வச்சு சினிமா ரீல் மாதிரி வெட்டிக்கனும். ஒரு ஏ3 பேப்பரை எட்டா மடிச்சு -மடிப்புக்குள்ளாறல்லாம் போயி 1,2,3ன்னு பக்கம் போட்டுக்கனும். அதுக்கு ஒரு அட்டை தேடனும். அட்டைக்குள்ள வச்சு ஸ்டாப்பில் அடிச்சு ஓரம்லாம் வெட்டனும்.  இதுக்கு எப்படியும் ஒரு இருவத்தஞ்சு  ரூவாயாச்சும் செலவாயிரும். சுருக்கமா சொன்னா ஆன்லைன்ல உள்ளதை பாக்கெட் புக் ஆக்க  உங்களுக்கு புக் மேக்கிங் தெரியனும். காயிதமா வச்சுக்கலாம்னா நிக்காது.லாமினேட் பண்ணனும்.அதுக்கும் இந்த செலவு தான் ஆகும்.

இதுவே நீங்க இந்த நெல்ல காரியத்துல பங்கெடுக்க உங்களால முடிஞ்ச தொகைய நம்ம அக்கவுண்ட்ல போட்டிங்கனு வைங்க . பள பள வண்ண அட்டையோட பக்கா பாக்கெட் புக் - நீங்க கேட்கிறதை பொருத்து கொரியர் சார்ஜ் ரூ.25 க்குள்ள விழற எடைக்கு புஸ்தவம் அனுப்பி வைப்போம். ( அக்கவுண்ட்ல காசு போட்ட கையோட உங்க தபால் முகவரியை மறக்காம மெயிலுக்கு அனுப்புங்க -மெயில் swamy7867@gmail.com.

இதையடுத்து வர்ர ரெண்டு பாரா லேகியம் விக்கிறவன் கணக்கா இருந்தா அதுக்கு நாம பொறுப்பு கடியாது.

மொத மொதலா ஒரு தசராவுக்கு சித்தூர் துர்கா ஸ்வீட்ஸ் உரிமையாளரை கன்வின்ஸ் பண்ணி அவரோட ஸ்பான்சர் ஷிப்ல டம்மி சைஸுல இந்த சத நாமாவளிய போட்டோம்.
அடுத்த தசராவுக்கு டாப் டு பாட்டம் ப்ளாக் அண்ட் வைட்ல கையடக்க பதிப்பா போட்டு பேப்பர்+ புக் கொடுத்தம்.

இந்த வேலைய (சத நாமாவளி பிரசுரம்)ஆரம்பிச்சப்போ நாம ப்ரெட் ஹன்டர். 3 மாசத்துக்கொரு தரம் வேலைய விட்டுர்ரது - துட்டு துக்காணி இல்லாத வேலைய வருச கணக்கா செய்யறது( ஆந்திரபிரபா) - 3 மாசத்துக்கொருக்கா வீடு மாத்திர்ரது (வாடகை -அதுவும் ரூ500 க்குள்ளத்தேன் -ஒழுங்கா கொடுக்கலின்னா எவன் விடுவான் பாஸு) .
இன்னைக்கு புரவலர் -நாளைக்கு இரவலர்னு வாழ்ந்துக்கிட்டிருந்தம்.

ஆனால் இன்னைக்கு? ஒரு தனி மனிதன்ங்கற ரேஞ்சு போயி -ஒரு நிறுவனமா வளர்ந்து நிக்கிறோம். இத்தனைக்கும் இந்த ப்ராசஸ்ல நாம கொடுத்தது வெறும் உடல் உழைப்பைத்தான். (காசெல்லாம் தயிருதேன்)

இந்த அனுபவத்தை படிச்சுட்டு இடையில ஒரு லண்டன் நண்பர்  ஒரு ஆயிரம் பிரதி அச்சிட சொன்னாரு (பிரச்சினை: திருமண தாமதம் - இன்னைக்கு கண்ணாலமாகி ஆண்குழந்தை)

இந்த அனுபவத்தை கேட்டுட்டு தலைமறைவா இருந்த  தெலுங்கு தயாரிப்பாளர் ஒருத்தர் ஒரு ஆயிரம் பிரதி போட சொன்னாரு. இன்னைக்கு அவிக நிலம் பக்கத்துல மந்திரியோட ஃபேக்டரி வர்ரதால  ஜாதி அபிமானத்துல வங்கிகடனை பைசல் பண்ணி கையிலயும் லம்பா ஒரு அமவுண்டு கொடுத்தாய்ங்க. இப்பம் தலீவரு பழக்கூழ் ,ரியல் எஸ்டேட்டுன்னு புகுந்து விளையாடறாரு..

லேகியம் வித்தது போதும் மேட்டருக்கு வந்துர்ரன். இந்த சத நாமாவளி நம்ம சொந்த தொகுப்பு. கிபி.2000 லருந்து இதைத்தேன் ஜெபிச்சிக்கிட்டிருக்கம் .ஆல்ஃபபடிக்கலா அரேஞ்ச் பண்ணியிருக்கம்.மண்டையில சீக்கிரமா ஏறும்.

அம்மன் சத நாமாவளியின் சக்தி:
(இது கையடக்க பதிப்புல வெளி வர்ரதால நம்ம ஸ்லாங்கை முடிஞ்ச மட்டும் குறைச்சிருக்கன்)

ஸ்ரீகிருஷ்ணர் தம் மீது விழுந்த வீண்பழியை  துடைக்க - ஸ்யமந்தகமணியை மீட்டு வர ஜாம்பவானின் குகைக்குள் நுழைந்தார் . குகை கதவா பெரிய பாறையால் மூடப்பட்டுவிட்டது. உள்ளிருந்து ரத்தம் ஆறாய் பெருகி ஓடிவருகிறது. அவருடன் சென்று பாதுகாப்புக்காக வெளியே  நின்றவர்கள் மூலம் தகவல் துவாரகையை சேர்ந்தது .

பலராமர் உள்ளிட்டோர் என்னவோ ஏதோ என்று பீதியுற்றனர்.   கிருஷ்ணர் நலமாக திரும்பி வர யாகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஜோதிடர்களை வரவழைத்து யாகத்துக்கு  தேதி குறிக்க சொன்னார்கள். அவர்களோ யாகம் நடத்தை தோதான நாள் கிட்டத்தில் இல்லை என்று சொல்லிவிட்டனர். அந்த சமயம்  நாரதர் அங்கே வந்தார்.

"மற்ற தெய்வங்களை -தேவதைகளுக்கான பூஜைகள் -யாகங்கள் நடத்தத்தான் முகூர்த்தங்கள்  நிர்ணயித்தாக வேண்டும். நியம நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். உயிர்களுக்கெல்லாம் தாயாகிய அந்த ஜகன் மாதாவை வழிபட -பூஜிக்க நியமங்கள் ஏதும் பின்பற்ற தேவையில்லை.  குழந்தை தாயை அழைக்க எந்த விதமான நிபந்தனைகளும் கிடையாது. எனவே புவனேசிக்கான யாகங்களை துவங்குங்கள்" என்றார். அவ்வாறே யாகங்கள் நடந்தன. கண்ணனும் பத்திரமாக திரும்பி வந்தான்.

பெயரும் -பெயருக்குடையோரும்: ( நாமா - நாமி)

பெயருக்கும் அப்பெயரை கொண்ட நபருக்கும் இடையில் எந்த வித்யாசமும் இருக்காது. ஒரு மனிதரின் பெயர் அம்மனிதரின் மூளையிலான  ஒவ்வொரு  நியூரானையும் -உடலிலான ஒவ்வொரு செல்லையும் ஒரே மைக்ரோ செகண்டில் உசுப்பி விட வல்லது ( பஜார்ல ஆருனா திடீர்னு  உங்க பேரை சொல்லி கூவினா   என்னாகுது?) 

மனிதர்களின் பெயர்கள் மட்டுமே  அவர்களை பிரதி நிதித்வ படுத்தி விடுகின்றன. மனிதன் தன்னை தன் பெயராகவே உணர்கிறான். ஆக பெயர் -பெயருக்குடையவர் ரெண்டும் சமம் என்றே தோன்றுகிறது.

சாதாரண மனிதர்களின் பெயர்களுக்கே இந்த பவர். ஆஃப்டர் ஆல் 60 -70 வருசம் கேட்ட பெயரே மனிதனை உசுப்புகிறது என்றால் "அவள்" இல்லாத யுகமே இல்லை. ஒவ்வொரு யுகத்தின் முடிவுலும் உலகை படைப்பதாய் சொல்லப்படும்  பிரம்மனையே  அவள் தான் ரீ ப்ளேஸ் செய்து புதிய பிரம்மனை படைக்கிறாள்.  அவளது பெயர்கள் ஒலிக்காத யுகம் இல்லை .கல்ப்பம் இல்லை. என்னா மாதிரி எஃபெக்ட் இருக்கும்னு ரோசிங்க.

சில நேரம் பெயர் -பெயருக்குடையவரையே ஜெயிச்சுருது. ( ராமாங்கற பேர்  -ராமனை செயிச்ச வரலாறு தெரியும்ல)  அதனாலதேன் ஆன்மீகத்துல -அதுவும் பக்தியோகத்துல  நாமாவளிக்கு  இவ்ளோ முக்கியத்துவம். ஆக இந்த   நாமாவளியில் வரும் அம்மனின் 100  பெயர்களும்  சாட்சாத் அம்மன்களே !ஆகவே புரிந்தோ புரியாமலோ படிச்சுட்டு வந்தா கூட ஒவ்வொரு " நாமாவும்" ஆத்தா போலவே  அருள் புரிய வல்லது.


பஞ்ச தசாக்ஷரி:

இந்த சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.  *பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!  ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌குழாயின் முடிவான‌ஆச‌ன‌ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் அதற்கு 2 அங்குலங்கள் மேலே இருக்கும்  மூலாதார‌ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி என்ற  யோக‌ ச‌க்தியில் சலனம் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜெபித்தால் தான்  அடுத்த பிறவியில் ராம நாமம் ஜெபிக்கும் தகுதி ஏற்படுமாம். இரண்டாவது பிறவி முழுக்க ராம நாமம் ஜெபித்தால் தான் சாக்தேயம். கொஞ்சம் போல வில்பவர் கூட்டிக்கிட்டு இந்த சத நாமாவளியை படிங்க. மூன்று பிறவிகளின் ப்ராசஸ் ஒரே பிறவியில முடியவும் வாய்ப்பிருக்கு.

எச்சரிக்கை:
இந்த நாமாவளியில சர்வ ஸ்வதந்த்ராயை நமஹான்னு ஒரு நாமா வருது. அப்பம் பாக்கெட் புக் எல்லாம் போடாத காலம். காயிதம் எங்கனயோ மிஸ் ஆய்ருச்சு. மேட்டர் இன்னாடா ஆச்சுன்னா ரூ.945 மாச சம்பளத்துக்கு இலை எடுக்கவேண்டியதாயிருச்சுங்கோ..

மறுபடி ஞாபகத்துலருந்து மீட்டு எடுத்த பிறவுதேன் "தினத்தந்தி" "வலையுலக வெற்றி"  "ஆன்லைன் ஜோதிட ஆலோசனை"யில காசு புரள்றதுல்லாம் நடந்துக்கிட்டிருக்கு.

இப்படி ஒவ்வொரு நாமாவுக்கு ஒவ்வொரு உபகதை இருக்கு. நேரம் கிடைக்கிறப்ப எல்லாத்தையும் சொல்லாம விடுவனா?
முக்கிய தகவல்:
கான்ட்ரிப்யூட் பண்ணாதவிகளுக்கு புஸ்தவம் இல்லையான்னு கேப்பிக சொல்றேன். கூரியர் சார்ஜுக்கு ரூ.25 மட்டும் அனுப்பினா போதும். அந்த சார்ஜுல எத்தனை பிரதி அனுப்ப முடியுமோ அத்தனை பிரதி அனுப்புவம்ல.
காசோடயே விலாசத்தையும் அனுப்பிருங்ணா. இப்பமே மண்டை காயுது..

கான்ட்ரிப்யூட்  செய்ய விரும்புபவர்க்ள்/ இலவச பிரதிகளுக்கு கூரியர் சார்ஜ் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு க்ளிக் செய்யவும்.




Tuesday, October 9, 2012

வதேராவுக்கு ப்ரியாங்காவ மட்டும் தான் விட்டிருக்கு

அண்ணே வணக்கம்ணே !
நமுக்கு 45 வயசாகுது. எமர்ஜென்சி காலத்துலருந்து நியூஸ் பேப்பர்ஸ் ஃபாலோ பண்றோம். எத்தனை எத்தனையோ ஊழலைபத்தி எல்லாம் படிச்சிருக்கம். ஆனால் சோனியாவோட மருமகன் வதேராவோட ஊழலை படிச்சதும் நம்ம மைண்ட்ல வந்த கேள்வி ஒன்னு தான்"இவனுக்கு ப்ரியாங்காவ மட்டும் தானே விட்டிருக்கு. பாரதமாதாவையே விட்டுட்டமா?"

ஹரியானால அரசு மருத்துவமனைக்கு சொந்தமான நிலம் 200+ ஏக்கர்ஸ் இருக்கு. அதுல தொழிற்பேட்டை அமைக்க டி.எல்.எஃப் ங்கற நிறுவனத்துக்கு அந்த நிலத்தை ஒதுக்கறாய்ங்க. டி.எல்.எஃப்ல நம்மாளுக்கு 50 சதவீத ஷேர் இருக்கு. நிலம் ஒதுக்கினதுமே டி.எல்.எஃப் நிறுவனம் 50 சதவீத ஷேரை வதேராவுக்கு பணம் கொடுத்து தானே வாங்கிக்குது.

என்னங்கடா இது? ஏதோ ஊழல்னா 5 பர்சன்ட் 10 பர்சன்ட் வாங்குவாய்ங்க. இப்பம் அது கூட ஏறிப்போயிட்டாப்ல இருக்கு. அம்பது பர்சென்ட்.

அம்பது பர்சென்டை இந்த தாயோளிக்கு கொடுத்துட்டு அப்பாறம் அந்த நிறுவனம் என்னாத்த தொழிற்பேட்டை அமைச்சு -என்னாத்த தொழிலை வளர்க்கிறது.

இதுல ஹரியான அரசாங்கமே ப்ரோக்கர் வேலை செய்திருக்கு. மக்கள் வரிப்பணத்துல நடக்கிற அரசாங்கம் ஆருக்கு சர்வீஸ் பண்ணுது பார்த்திங்களா?

சோனியாம்மா தயவு செய்து உங்க மாப்பிள்ளைக்கு ஞா படுத்துங்க. அவருக்கு ப்ரியாங்காவ மட்டும் தான் கொடுத்திருக்கு..

Saturday, October 6, 2012

பட்டையை கிளப்பும் புதிய தொழில் வாய்ப்புகள்

அண்ணே வணக்கம்ணே !

மக்கள் சந்தை டாட் காம் - தொழிற்களம் வலை தளத்தில் பணம் பணம் பணம் தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கோம் .( ஹி ஹி நாலஞ்சு நாளா  நோ அப்டேஷன்  )

அதுல மாறி வரும் குடும்ப, சமூக ,  அரசியல்,பொருளாதார  நிலவரங்களை உத்து கவனிச்சா புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறியலாம்னு போற போக்குல குறிப்பிட்டிருந்தேன்.

ஊருக்குத்தான் உபதேசமா  நீ கவனிக்கலியான்னு கேப்பிக.கவனிச்சேன். கவனிச்சதுல புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிஞ்சிருக்கேன். அதுல சிலதை நாமே துவக்கி செய்யலாம்னும் திட்டம் இருக்கு.

அந்த பட்டியலை இங்கே தரேன். கூடவே எந்த தொழில் எந்த கிரக காரகம்னும் குறிப்பிட்டிருக்கேன். உங்க ஜாதகத்துல குறிப்பிட்ட கிரகம் பெட்டர் பொசிஷன்ல இருந்தா நீங்களும் கலக்கலாம்.

ஓகேவா உடுங்க ஜூட்டு..