Friday, January 23, 2009

உதய சூரியனே நீ உதிர்ந்து போ !

ஏ தாழ்ந்த தமிழகமே!
தெலுங்கர் ஒருவர் வெளிநாட்டில் கொலையுண்டால் அவர் பிணம் ஆந்திரம் வந்து சேரும் வரை, கொலையாளி அங்கு கைதாகும் வரை பத்திரிக்கைகள் விடுவதில்லை. என் நினைவு தெரிந்த நாள் முதலாய் இலங்கையில் தமிழன் செத்துக்கொண்டே இருக்கிறான். தானாட வில்லையென்றாலும் சதையாடு என்பது வெள்ளை சாம்பார்களே உங்கள் விஷய்த்தில் பொய்த்துவிட்டது.

தமிழனின் தாய் என்ன 5 மாதத்திலேயே குழந்தையை பெற்றுவிடுகிறாளா? அல்லது யோனி வழியாயன்றி ஆசன வழியாய் கழித்து விடுகிறாளா? இனமானம் தன்மானம் என்று அண்டாவில் அளக்கும் தலைவன் கள் என்ன ஆனான் கள் (இவனுகளுக்கு மரியாதை ஒரு கேடா?)


அடைந்தால் திராவிட நாடு இல்லா விட்டால் சுடுகாடு என்ற அண்ணாவின் வழி வந்த தம்பிகளே ! அண்ணாவிடம் இரவலாய் கேட்டுப்பெற்ற எதையும் தாங்கும் இதயம் இதயம் இதையும் தாங்குமென்றால்
தேவையில்லை அந்த இதயம் தூக்கி எறியுங்கள்.

சொந்த இதயம் இற்று விழட்டும். நாயோ நரியோ விழுங்கட்டும். இந்தி பேசும் மக்களுக்கு ஒரு நீதி..

கிழக்கு வங்காளத்தில் அவர்கள் செத்தால் இந்திய ராணுவம் விரையும். தனி நாடு உதயமாகும். தமிழனின் வாழ்வில் மட்டும் நித்தம் நித்தம் அஸ்தமனம் தான். இந்த கையறு நிலயிலும் உதிக்காத உதய சூரியனே நீ உதிர்ந்து போ ! தமிழினம் நடிகர்களுக்கெ நலங்கு வைக்கட்டும். மானம் வேட்டி,பதவி துண்டு என்ற இனமானம் என்னவாயிற்று.. தூக்கி எறி ..அந்த மஞ்சள் சால்வையையும், மூணு பைசாவுக்கும் உதவாத முத‌ல்வர் பதவியையும். நீ என்றுமே முதல்வன் தான்.. கடலக்குடி கொண்டானே உன் சரித்திரத்தை இந்த இளைய சமுதாயம் மீண்டும் ஒருமுறை தரிசிக்கட்டும்.