Sunday, January 4, 2009
நீங்க கொல்ட்டிங்கன்னிட்டு கேவலமா பேசறிங்களே அந்த தெலுங்கு சகோதரர்களுடைய பதிலடி
எனது தெலுங்கு வலை தளம் : ஒரு அறிமுகம்
தமிழில் தேன்கூடு,தமிழ்மணம் போல தெலுங்கில் ப்ளாகு.காம் உள்ளது. இதில் ஸ்வாமி7867 என்ற பெயரில் ஒரு வலை தளத்தை துவக்கினேன்.(கடந்த மாதம்)
பெயர் விளக்கம்:
ஸ்வாமி என்பது இந்து மதம் தொடர்பான பெயர். இதற்கு எஜமானர் என்று பொருள். எவனொருவன் (ஜெயேந்திரர் போன்ற ஜொள் பார்ட்டிகள் அல்ல) தனக்கு தானே எஜமானனாக உள்ளானோ அவனை ஸ்வாமி என்பார்கள்.
(நம்ம கதை எப்படின்னு எதிர்காலம் தான் நிர்ணயிக்கனும்)
786:
இது முஸ்லீம்களுக்கு புனிதமான எண் என்று கூறப்படுகிறது. நாத்திகர்கள் இதை அல்லாவின் போன் நெம்பரா என்று கிண்டலடித்ததும் உண்டு. ஆனால் இது என் பிறந்த தேதி. இந்த தேதியில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு இஸ்லாம் மீது ஆழ்ந்த அக்கறை உண்டு. வாணியம்பாடியில் டுபாகூர் டாக்டர் அக்பர் கவுசரின் தெய்வீக மருத்துவம் பத்திரிக்கைக்கு உதவி ஆசிரியனாக குப்பை கொட்டிய சமயம் ,அவரது கம்ப்யூட்டர் பிரிவி ஆலோசகர் திப்புசுல்தான் கூறினார்.
"Islam is the best religion & the muslims are the worst followers"
ஔரங்கசீப்,திப்பு சுல்தான்,பாபர் முதலிய சரித்திர நாயகர்கள் பற்றிய பல உண்மைகளை திப்பு மூலம் தான் அறிந்தேன் .
உ.ம்: ஔரங்கசீப் இந்து கோவில்களை மட்டும் இடித்துத்தள்ளவில்லை. இவர் செல்லும் தர்காவில் அடக்கமாகியிள்ள சாதுவுக்கு சலாம் செய்வார். அந்த சாதுவிடமிருந்து பிரதி சலாம் வந்தால் சரி. இல்லாவிடில் அந்த தர்காவும் காலி. இடிக்கப்பட்டுவிடும்.
நிற்க தெலுங்கு வலைதள வீச்சு பற்றி:
எனது முடிவான லட்சியம்
"Hardy baody,windy mind,holy soul"
இதனை இந்திய அளவில் சாத்தியமாக்கத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 . இதன் முக்கிய நோக்கம் 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைத்து நதிகளை இணைத்தல். எங்கள் முதல்வர் ராஜ சேகர ரெட்டி பல லட்சம் கோடிகள் செலவில் புதிய அணைகளை கட்டி வருகிறார். மேலு பல நல திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறார்.
தேர்தல் நெருங்கி வரும் சமயம் எனது ஐடியாலஜிக்கு சற்று அருகே வந்து (விவசாயம்,நீர்பாசனம்)அதனை அமல் படுத்தும் எங்கள் முதல்வர் ராஜ சேகர ரெட்டிக்கு உதவுவதை என் கடமையாக கருதுகிறேன்.
தேர்தல் நடந்து முடியும் வரை ஆப்பரேஷன் இந்தியா 2000க்கு லீவு. (காரணம் இது உடனடியே அமல்படுத்தப்படும் சூழல் இல்லை. ஆனால் எங்கள் முதல்வர் ராஜ சேகர ரெட்டி மீண்டும் முதல்வரானால் குறைந்த பட்சம் அணைகளாவது கட்டி முடிக்கப்படும்.
அதில் ஊழல் என்று ஓட்டை சொல்லும் கூட்டத்துக்கு தெரியும். ஊழல் என்பது புதிதல்ல. ஒரு எம்.எல்.ஏ தான் வெற்றி பெற குறைந்தது 1 கோடி ரூ. செலவழிக்கணும். 4 எம்.எல்.ஏ தொகுதி சேர்ந்தது எம்.பி. தொகுதி ,மொத்தம் எத்தனை தொகுதி,ஒரு தொகுதிக்கு மூன்று பேர் போட்டின்னு வைங்க மொத்தம் எத்தனை லட்சம் கோடி தேர்தல்ல செலவாகுது.
இதெல்லாம் நம் அமைப்பிலே உள்ள குறைபாடு. வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்கும் முறை அமலுக்கு வரட்டும், முதலில் மக்கள் காசு வாங்காது ஓட்டு போடட்டும்
இவ்ள எதுக்கு பிரஸ் க்ளப்புகள் கட்டணம் வாங்காது ப்ரஸ் மீட் நடத்தட்டும் அப்புறம் ஊழலை பற்றி பேசுவோம்.
ஆக நம்ம வலை தளத்தோட முக்கிய நோக்கம் ஆந்திரத்தில் காங்கிரஸ் ஆட்சி அமல் படுத்திய வளர்ச்சி நல திட்டங்களை பிரச்சாரம் செய்வதே ..
குறிப்பு: என்ன ஒன்னுனா.. நீங்க கொல்ட்டிங்கன்னிட்டு கேவலமா பேசறிங்களே அந்த தெலுங்கு சகோதரர்களுடைய பதிலடி இருக்கே ..உங்க வீட்டு அடியா எங்க வீட்டு அடியா. தமிழ் மகாஜனங்களே !
உங்களுக்கு தெலுங்கர் தான் முதல்வர். கன்னடர் தான் சூப்பர்ஸ்டார். வாழ்க வளர்க. நல்லா தூங்குங்க.. (ஹும் இந்த பவர் கட்டுல அந்த இழவும் முடியாது அப்படித்தானே)