Showing posts with label U. Show all posts
Showing posts with label U. Show all posts

Friday, October 16, 2009

சாதா ஜோக்குகள்+துளிப்பாக்கள்

சாதா ஜோக்குகள்
1."அவர் ஏங்க சைக்கிளை படுக்க வச்சு காத்து புடிக்கிறாரு?"
"அவர் இதுக்கு முன்னாடி மாட்டுக்கு லாடம் அடிச்சிட்டிருந்தவ‌ருப்பா"

.2."டைரக்டர் ஏன் கார் கீழ படுத்துக்கிட்டு டிஸ்கஷன் பண்றார்?"
"அவர் இதுக்கு முன்னாடி கார் மெக்கானிக்கா இருந்தவராம்"
3.பல்லிருந்தும் கடிக்காது அது என்ன ?
சீப்பு
4.காதிருந்தும் கேட்காது அது என்ன ?
செருப்பு
5.இறக்கை இருந்தும் பறக்காது அது என்ன ?
ஃபேன்
6.கால் இருக்கும் நடக்காது அது என்ன ?
நாற்காலி

7.நாய் எப்படி லவ் யூ சொல்லும் ?
ஐ வவ் யூ

8.நீங்க கிட்னி டாக்டராதானே இருந்திங்க ..ஏன் பல் டாக்டராயிட்டிங்க?
கிட்னி ரெண்டுதான் பல்லு 32 ஆச்சே
9."அந்த ஜோசியர் சொன்னதெல்லாம் நிச்சயம் நடக்கும் "
"எப்படி சொல்றே !"
"அவர் நாய், நரி,புலி ,சிங்கம்னு நடக்கிற விஷயத்தை தான் சொல்வார்"

துளிப்பாக்கள்

1.வாய்
சில நேரம் பல்லிடை சிக்கிய உணவு துகளாலும்
சதா பயனற்ற பேச்சுக்களாலும்
நாற்றமுறும் அங்கம்
2.கித்தார்
கலைவாணியின் கைகளில் கித்தார்
மாறவில்லையே கவிஞர்கள்
3.மாஸ்டர்
நான் ஸ்ட்ராங்கா வீக்கா
எனக்கே தெரியவில்லை
பார்த்ததும் போட்டு தரும் டீ மாஸ்டர்
4.மண்
நாளை அது தன்னை தின்னப்போவதை அறியாது
மண் தின்னும் பாலகன்
5.கவிதை
அமுதாய் பெருகும் கவிதை
விஷமாய் பெருகும் இன்டர் நெட் கட்டணம்

6.மழலை
புது மொழி கற்பவன் மீண்டும் குழந்தையாகிறான்
சிந்தும் மழலை

கம்ப்யூட்டர் பழமொழிகள்:
ஹார்ட் டிஸ்கிலிருந்தாதானே சி.டி.ல வரும்
பி2 க்கே கதியில்லயாம் ..லேப்டாப்புக்கு இன்டர் நெட் கனெக்ஷனுக்கு போயிட்டான்