Showing posts with label Free gifts. Show all posts
Showing posts with label Free gifts. Show all posts

Saturday, September 4, 2010

ஓசிக்கு அலைஞ்சா டர்ரு தான்

அண்ணே வணக்கம்ணே, என்னடா இது ஒரு பக்கம் இலவச ஜோதிட ஆலோசனை அறிவிக்கிறாரு. மறுபக்கம் இப்படி ஒரு பதிவை போடறாருன்னு தப்பா நினைச்சுர போறிங்க.

நான் தர்ர இ.ஜோ. ஆலோசனை மனமுவந்து, ஒரு சந்தோசத்துல  தர்ரது. யாருக்கு புதன் நல்ல இடத்துல  சுபபலமா  இருக்காரோ  அவிக கண்லதான் இந்த அறிவிப்பு படும்.அவிகளாலதான் போஸ்ட் ஆஃபீஸ்வரை போக முடியும். லெட்டர் போட்டு இ.ஜோ.ஆலோசனை பெற முடியும்.

ஆனா நம்ம சனத்தோட மென்டாலிட்டியே வேறயாச்சே.எவனுக்கு எந்த கிரகம் வீக்கா இருக்கோ அந்த கிரகத்தோட காரகத்வம் உள்ள விஷயங்க  மேலதான் அவனுக்கு  ஜொள்ளே வரும்.

உ.ம் சுக்கிரன் வீக்காயிருக்கிறவனுக்கு பெண்கள் மேல , செவ்வாய் வீக்கா இருக்கிறவனுக்கு ரியல் எஸ்டேட் மேல

இந்த உலகத்துல உள்ள எல்லா பொருளையும், மனிதர்களையும் 9 க்ரூப்பா பிரிக்கலாம். ( பெண்களை பிரிச்சாப்ல)  .ஒவ்வொரு க்ரூப்புக்கு ஒவ்வொரு ப்ளானெட் இன் சார்ஜு. உ.ம் இரும்புக்கு சனி, தங்கத்துக்கு குரு. இதைத்தான் காரகத்வம்னு சொல்றோம்.

நம்ம ஜாதகத்துல குறிப்பிட்ட பொருளுக்கு காரகத்வம் வகிக்கிற கிரகம் பலமா இருந்து அந்த பொருள் நமக்கு இலவசமா கிடைச்சா  நோ ப்ராப்ளம். அப்படியில்லாம  குறிப்பிட்ட பொருளுக்கு காரகத்வம் வகிக்கிற கிரகம் பலவீனமா இருந்து அந்த பொருள் நமக்கு ஓசில  கிடைச்சதுன்னு வைங்க. வில்லங்கம் தான்.

சனத்தோட மென்டாலிட்டி என்னடான்னா  ஃப்ரீயா கிடைக்குதுன்னா  ஃபினைல் கூட வாங்கி குடிச்சுர்ராய்ங்க.(பத்திரிக்கைக்காரவுக கொடுக்கிற இலவசம்லா இலவசத்துல சேர்த்தி இல்லிங்கண்ணா. அதுக்கும் சேர்த்துத்தான் காசு . சோப்பு,ஷாம்பூ கொடுத்தா அதை கொடுக்கிறது கம்பெனிகாரன். அவனோட விளம்பரத்தை பத்திரிக்கை ஃப்ரீயா போட்டிருக்கும் . காசுக்கு பதில் இவன்  பொருளைத்தரான்)  அதனோட விளைவு எப்படியிருக்கும்னு  இந்த பதிவுல ஆதாரப்பூர்வமா பார்ப்போம்.

ஜாதகத்துல அஞ்சாமிடம் தான் வாரிசுகள் மற்றும் ஜாதகரின் பெயர் புகழை காட்டற இடம். எம்.ஜி. ஆர் ஸ்தூலமா என்ன பண்ணி கிழிச்சாருங்கறது அப்பாறம் கதை. எப்படியோ பப்ளிக்ல சூப்பர் பேரு வந்துருச்சு. ஆனா பேர் சொல்ல பிள்ளையில்லாம  போயிருச்சு.

கலைஞரு மேட்டர்ல அஞ்சாமிடம் புத்ர ஸ்தானமா ஒர்க் அவுட் ஆயிருச்சு. ஆனால் அவர் அத்தோட திருப்தி அடையாம  இலவசமா  தர்ராய்ங்கன்னு புதுசு புதுசா பட்டங்களை வாங்கி வாங்கி வச்சு(க்கிட்டிருந்தாரு) க்கறாரு. என்ன ஆச்சு முக முத்து  சோடை போயிட்டாரு.

இவ்ள ஏன் ஜெயலலிதா அம்மா மேட்டரையே எடுத்துக்கங்க.வளர்ப்பு மகன் இல்லாதவரை எப்படியோ வண்டி ஓடிக்கிட்டிருந்தது. வ.மகனை சீனுக்கு கொண்டு வந்ததும்  ஷெட் ஆயிருச்சு.

எங்க ஒய்.எஸ்.ஆர் கதையையே எடுத்துக்கங்க. அவர் ஜாதகத்துல அஞ்சாமிடம் பெயர்,புகழை அள்ளி அள்ளி கொடுத்துருச்சு. ஆனால் அவர் மகன் ? சிங்கியடிக்கிறாரு.
கக்கன் சாரோட மகன் பைத்தியமானதுக்கு காரணம் கூட இதான்.

இதுலருந்து என்ன தெரியுது ? பேருக்கும் புகழுக்கும் அலையக்கூடாது. இலவசமா கிடைக்குதுன்னு பட்டங்களை வாங்கி வாங்கி வச்சுக்கிர கூடாது.  எனக்கு வலையுலகத்துல ஜோதிட ஓஷோ, வலையுல மாத்ருபூதம்னெல்லாம் பட்டம் கொடுத்து வச்சிருக்காய்ங்க. 15 மாசத்துல ரெண்டு லட்சத்து 15 ஆயிரம் ஹிட்ஸ் வந்திருக்கு. (அஞ்சாமிடம் பேர் புகழை தருது)

ஆனா என்ன புண்ணியம்? என் 18 வயது மகள்  நம்ம மென்டாலிட்டிக்கு கொய்ட் ஆப்போசிட்.இலக்கியமா? இடியாப்பமா? பேராவது இன்னொன்னாவது.. ஆளை விடுப்பாங்கறா.

இப்ப புரிஞ்சுதுங்களா அஞ்சாமிடத்துக்கும் பேர் புகழ் மற்றும் வாரிசுகளுக்குமிடையிலான லிங்க் ?

ஏன் அஞ்சாமிடம் ரெண்டும் தரக்கூடாதான்னு கேப்பிக. தேவையான ஓல்டேஜ் இருந்தா எல்லா லைட்டும் எரியும். லோ ஓல்டேஜ் இருந்தா என்ன ஆகும்? இந்த உலகத்துலயே எவனோட ஜாதகத்துலயும் எந்த பாவமும் , எந்த கிரகமும் 100 சதம் ஃப்ரூட் ஃபுல் கிடையாது. அதனால ஒன்னை பெறனும்னா ஒன்னை இழந்துதான் ஆகனும்.

கடிகாரம்,காலண்டர் ஓசி வாங்கினா :   பல் ,எலும்பு, முதுகெலும்பு, வலது கண் ரிப்பேர் ஆகலாம்

தண்ணீர்,கூல் ட்ரிங் ஓசி வாங்கினா : அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம்,  ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.

பீடி சிகரட்,பெட் ரோல், டீசல், எலக்ட் ரிக் சாமான் ஓசி வாங்கினா:
ரத்தக்கொதிப்பு, அல்சர். உஷ்ண ரோகங்கள் பாதிக்கலாம். உம் கட்டிகள், பைல்ஸ்.
நிலம்,சகோதரம், எதிரிகள் தொடர்பாக விவகாரங்கள் வரலாம்.

சினிமா டிக்கெட், டிவிடி ,கேமரா ஓசி வாங்கினா:
திருடு போகலாம், வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படலாம்

வட்டி இல்லாம கை மாத்து  வாங்கினா:
தங்கம் தொலையலாம், பணம் களவு போகலாம், வாரிசுகள் உருப்படாது போகலாம்.

இரும்பு,ஸ்டீல் ,ஆயில், கிரானைட்  ஓசி வாங்கினா:
மலச்சிக்கல்லருந்து, பைல்ஸ் வரை வரலாம்

பேப்பர்,பத்திரிக்கை, மருந்து  ஓசி வாங்கினா:
தோல் வியாதி வரலாம், டெஸ்டிக்கல்ஸ்க்கு பிரச்சினை வரலாம்

எந்த பொருளானாலும் சரி வேறு மதத்தை சேர்ந்தவுக கிட்ட ஓசி வாங்கினா:
சீலைப்பேன் வரலாம்,  நம்பினவுகளே கழுத்தறுக்கலாம்.

ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ், ஆடை,அணிகள், வெள்ளி உருப்படிகள் ஓசி வாங்கினா
லவ் ஃபெயிலியர் ஆயிரலாம், பேட்டரி வீக் ஆயிரலாம், பெண்டாட்டி கோச்சுக்கிட்டு ஆத்தா வீட்டுக்கு போயிரலாம்.

எனவே ஓசி வாங்காதிங்க. வாங்கினாலும் அதுக்கு ரெட்டிபப ரிட்டர்ன் பண்ணுங்க.
இல்லாட்டி பல்புதான்.