Showing posts with label நக்கல். Show all posts
Showing posts with label நக்கல். Show all posts

Thursday, July 14, 2011

கல்கி வார இதழில் நம் பதிவை பற்றி நக்கல்


அலெக்ஸால கல்கி -தமிழ் வாரா சாரி வார இதழின் ரேங்க் என்ன? நம்ம ரேங்க் என்னனு ஆல்ரெடி ஒரு தாட்டி சொல்லியிருக்கன். இன்னைய தேதிக்கு கல்கி : 1,91, 813 ( ஒரு லட்சத்து 91 ஆயிரத்து எண்ணூற்று பதி மூனு )
அனுபவஜோதிடம்.காம்: 22, 878 (22 ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து எட்டு)

மறுபடி இந்த பஞ்சாயத்துக்கு காரணம் என்னனு கேப்பிக சொல்றேன்.கல்கி பத்திரிக்கையில நம்ம பதிவு ஒன்னை நக்கல் அடிச்சிருக்காய்ங்க.

நாம சில நாட்களுக்கு முந்தி நவகிரகங்களை ஆக்டிவேட் டிஆக்டிவேட் செய்வது எப்படினு ஒரு பதிவு போட்டிருந்தோம்.

கல்கியிலயும் ஆரோ ஒரு தாத்தா சனங்களோட சோதிட கேள்விகளுக்கு பதில் சொல்றாரு.பரிகாரங்கற பேர்ல கோவில்களுக்கு கான்வாஸ் பண்றாரு -
(அவாளுக்குள்ள ஆயிரம் அண்டர் ஸ்டாண்டிங்)

தன்னால முடிஞ்சவரை ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி வேதகாலத்தை கொண்டு வர ட்ரை பண்றாரு.

ஆரோ ஒரு வாசகர் என் ஜாதகத்துல ... கிரகத்தை ஆக்டிவேஷன் பண்றது எப்படினு கேட்கிறார்.அதுக்கு தாத்தா கிரகமென்ன சிம் கார்டா ஆக்டிவேட் பண்ணனு பதிலுக்கு கேட்கிறாரு.

இதுல கேள்வி கேட்டவர் - பதில் சொன்னவர் ரெண்டு பேரும் நம்ம பதிவை படிச்சிருக்கனும். அ சொன்னவரே பொய்யா ஒரு கேள்விய கேட்டு தன் கடுப்பை காட்டியிருக்கனும்.

அல்லது ஆசிரியர் குழுவோ /ஆசிரியரோ பொய்யா ஒரு கேள்விய தயார் பண்ணி தந்திருக்கனும். நவகிரகங்களை ஆக்டிவேட் -டீயாக்டிவேட் செய்யமுடியுமா? இல்லியாங்கறதை மேலே குறிப்பிட்ட நம்ம பதிவை இங்கே அழுத்தி படிச்சுட்டு முடிவு பண்ணுங்கண்ணா..