Showing posts with label அழகிரி. Show all posts
Showing posts with label அழகிரி. Show all posts

Monday, February 7, 2011

மதுரை மகராசாவுக்கு ஓலை !






மதுரை மகராசான்னா ஒடனே அழகிரி தேன் ஞா வருவாரு போல. இந்த பதிவு அழகிரிக்கு சம்பந்தப்பட்டதில்லிங்கண்ணா. ஆனாலும் அவரே அவருக்கு ஒரே ஒரு பேச்சை சொல்ட்டு சீரியஸ் மேட்டருக்கு வந்துர்ரன்.

அழகிரிய பத்தி எத்தனையோ விமர்சனங்கள் இருக்கு. அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றது என் வேலை இல்லை. ராசா மேட்டர்ல அவர் எடுத்த ஸ்டாண்ட் சூப்பர். ஆனால் கலைஞர் மட்டும் இன்னம் கண்ணே மணியேனுட்டு கடிதம் எழுதிக்கிட்டிருக்காரு.

பைபிள்ள ஏசு நாதர் சொல்வாரு உங்க டோட்டல் பாடியும் நரக நெருப்புல விழறத காட்டிலும் தப்பு செய்த பார்ட்டை மட்டும் வெட்டி போடுங்க. அப்படியாக ராசா, கனி,ராசாத்தி அம்மான்னுட்டு ஆரெல்லாம் தப்பு செய்தாய்ங்களோ ( தாத்தா பாய்ண்ட் ஆஃப் வ்யூல வீண் பழிக்கு ஆளானாய்ங்களோ) அவிகளை கழட்டி விடறது நல்லது.

தாத்தாவுக்காச்சும் ரெம்பவே வயசாயிருச்சு. அழகிரிக்கு இளமை பாக்கியிருக்குனு நினைக்கிறேன் (60?) மாத்தி ரோசனை பண்ணி ஜெயலலிதா அம்மாவோட ஒரு புரிதலுக்கு வந்து நாங்க காங்கிரஸ கழட்டி விட்டா அவிகளை நானும் சேர்த்துக்கமாட்டேனு அறிவிக்க வைக்கனும்.

லோக்கல்ல அடிச்சுக்குவம். அதுக்குனு தில்லி , இத்தாலி பார்ட்டிங்களை அனுமதிக்கமாட்டோங்கற ஸ்டாண்டை ரெண்டு கழகமும் எடுத்தாச்சுன்னா சரித்திரத்துல ஒரு 30 க்கு 40 சைட் கியாரண்டிங்கோ.

ஓகே ஓகே.இப்ப சீரியஸ்.

ஏற்கெனவே ஒரு நாள் மதுரையை சேர்ந்த மன நிலை சரியில்லாத / மூளை வளர்ச்சி குறைவாக உள்ள 15 வயசு பையன் ஒருத்தன் சித்தூர் பழைய பஸ் ஸ்டாண்டுல சுத்தி சுத்தி வர்ரான் . மதுரைக்காரவுக இந்த தகவலை ரீ ட்வீட் பண்ணுங்க - லோக்கல்ல விஜாரிங்க - கு.ப மாவட்ட போலீஸுக்காச்சும் ரிலே பண்ணுங்கனு ட்வீட்டியிருந்தேன்.

ஆரும் கண்டுக்கிடலை. இன்னைக்கு அந்த பையனோட ஃபோட்டோஸ் கிடைச்சது. அதையும் பதிவுல வச்சிருக்கேன். விஜாரிச்சா " பறட்டை !காசு கொடு! வீட்டுக்கு போனம்! ஆத்தா வையும்"ங்கற ரேஞ்சுல

"பேரு குமாரு -ஊரு மதுரை -அப்பா அடிச்சாய்ங்க" தவிர ஒன்னும் பேரமாட்டேங்குது

எந்த நடிகை எந்த ப்ராண்டு பேட் யூஸ் பண்றாங்கறதை விட இது முக்கியமான மேட்டருனு தான் நினைக்கிறேன். குறைஞ்ச பட்சம் மதுரைய சேர்ந்த நிருபர்களுக்கு தகவல் தரலாம். அவிக இதை பிட்டா அடிச்சு விடலாம். நீங்க நானே வெளியூர்ல மாட்டினா நாறிருவம். இதுல அந்த பையன் நிலை எப்படி இருக்கும்னு ரோசிச்சு பாருங்க ராசா.

ஆக்சன் ப்ளீஸ் ! மேலதிக தகவல்களுக்கு 08572 -234275 க்கு கால் பண்ண சொல்லுங்க