Thursday, October 27, 2016

குஷ்புவும் -ஸ்ரேயாவும் (சிறுகதை)


மாலை டிஃபனுக்கு பின் அந்த நடுத்தர ஓட்டலில் இருந்து வெளியே வந்து நின்ற போது தான் அவள் எதிர்ப்பட்டாள்.

அவளை இந்த நிலையில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இரண்டே வருடங்களில் இத்தனை மாற்றமா?

அவள் அப்பா பெரிய தொழிலதிபர். கல்லூரி காலத்தில் புசுபுசுவென்று இருப்பாள்.அவளை காலையில் ட்ராப் செய்ய ஒரு காரும்.. மாலையில் பிக் அப் செய்ய ஒரு காரும் வரும்.

என்னதான் மனதில் காதல் பொங்கி வழிந்தாலும் தூக்கத்தில் கூட அதை உளறிவிடமுடியாத நடுத்தர குடும்பத்து அக்மார்க் ஹிப்பாக்ரட் நான். படித்து முடித்து அதே கல்லூரியில் லெக்சரனாக குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்.

கல்யாணம் கட்டி ஒன்னுக்கு இரண்டாய் குழந்தைகள். என் வரை திருப்தியான வாழ்க்கை தான். வருவது அவள் தானா? என்ற சந்தேகத்தில் பவர் க்ளாஸை கழட்டி துடைத்து போட்டு கொண்டேன். போன வருசம் தான்  ஷுகர்  ஆஜர் சார் சொல்லியிருக்க - வாயை கட்டா விட்டால்  மாத்திரைகளில் இருந்து சீக்கிரமே இன்சுலினுக்கு மாற வேண்டி வரும் என்று டாக்டர் பயமுறுத்தி இருக்கிறார்.

அவளே தான். ஒல்லியோ ஒல்லியாக பழைய குஷ்பு தனம் எல்லாம் ஆவியாகி ரொம்பவே இளைத்திருக்கிறாள். வசதியான இடத்தில் தானே திருமணம் கூட தகைந்தது?

குழம்பிப்போய் சிந்தித்து கொண்டிருந்த வேளை அருகில் வந்து என் தோளை தட்டி "ஏய்.. நீ டபுள்யு.ஆர் .ராஜேஷ் தானே? என்ன இது ரெண்டு வருசத்துல பவர் க்ளாஸு ,தொந்தி எல்லாம் வச்சு அங்கிள் மாதிரி ஆயிட்டிருக்கே " என்றாள்.

 கிட்டே இருந்து பார்க்கையில் லேசாக  ஸ்ரேயா போலத்தான் தெரிகிறாள்.

நான் அதிர்ந்து போய் -சமாளித்து கொண்டு "அது சரி ..நீ என்ன இப்படி இளைச்சிருக்கே? எனி ப்ராப்ளம்" என்றேன்.

அவள் "பேலியோ மேன்" என்றாள்.




Thursday, October 20, 2016

Amma Ennamma achu ungalukku