Thursday, August 25, 2016

இருமை என்ற இருண்மை

அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:
பல காலத்துக்கு பிறகு  தமிழ் எழுத்தாளர்களின் சராசரி நடையில எழுத ட்ரை பண்ணியிருக்கன்.

நடை எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா "மகிழ்ச்சி"


ஒவ்வொரு வாழ்விலும் இருமை தன்மை -அதாவது இரு வித போக்கு ,இருண்மை -அதாவது ஒரு வித மர்மம் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு யோகியின் சுயசரிதை படித்து கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது முறை. முதல் முறை படிக்கும் போது தெலுங்கில் இத்தனை ஃப்ளூயன்ஸி இருந்திருக்க வாய்ப்பே இல்லை . அடுத்து அது இரவல் புத்தகம் என்பதால் புரட்டி விட்டு திருப்பி கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது .

இந்த முறை படித்த போது இந்த ஆளு நல்லா "விடறான்யா" என்ற எண்ணம் தான் தோன்றியது, காரணம் தர்கமே இல்லாத பல விஷயங்கள்.
இவற்றை  நண்பர் ஒருவரிடம் பட்டியலிட்டு கொண்டிருந்த போது அதில்  சுய சரிதரின்  அப்பாவும் -இவர் தேடியலைந்து பிடித்த குருவும் ஒரே குருவின் சீடர்கள் என்ற கான்செப்ட்டையும் எடுத்து விட்டேன்.

அதற்கு அவர் இதே விஷயம் தன் வாழ்விலும் நடந்ததாய் கூறினார்.  தான் பல்லாண்டுகள் தேடியலைந்து பிடித்து தீட்சை பெற்ற  குருவிடமே தன் தந்தையும் தீட்சை பெற்ற கதை பின்னாளில் தெரிந்தது தான்  விஷயம்.
ஓஷோ போகிற போக்கில் அள்ளி விடும்  விதிகள் மேல் எனக்கு  நம்பிக்கை உண்டு.காரணம் அவை அச்சாக அப்ளை ஆவது தான். அவரது விதிகளுள் ஒன்று "எது உன்னை வெறுப்புக்கு உள்ளாக்குகிறதோ அதுவே உன் சாய்ஸ்/உன் இலக்கு இத்யாதி"

இதில் தூங்காத யோகி ஒருவரை பற்றி வருகிறது .அவர் சொல்வதாய் சரிதம் சொல்லும் விஷயங்கள் இரண்டு .

1.முக்தியை தருவது மலைகள் அல்ல
2.இறைவனை தன்னில் கண்டவன்/காணதுடிப்பவன் புறத்திலும் காணவேண்டும்

மேற்படி விஷயங்களின் அடர்த்தி புரிய வேண்டுமானால் சுய சரிதையில் இருந்து இரண்டு ஃப்ளாஷ் பேக்குகளை சொல்லியாக வேண்டும்.

1.சுயசரிதர் இள வயதிலிருந்தே இமயம் மீது தீராக்காதல் கொண்டவர்.அங்கு தங்கி "தவம்" செய்ய வேண்டும் என்பது அவர் வாழ் நாள் லட்சியம். யுக்தேஸ்வர் என்ற தமது குருவுடன் 6 மாத ஆசிரம வாசம் செய்த பின்னும் அவர் தடுத்த பின்னும் இமய மலைக்கு சென்றாக வேண்டும் என்று கிளம்புகிறார்.

2.தூங்காத யோகியை சந்திக்கும் முன் தாரகேஸ்வர கோவிலில் சிவலிங்கத்தை வணங்க மறுக்கிறார்.

இந்த தூங்கா யோகி எனும் கான்செப்ட் மற்றும் அவர் கூறும் இரண்டு விஷயங்கள் ரெம்பவே டச்சு பண்ணிருச்சுங்கோ.  ஒரு வேளை மேற்படி தூங்கா யோகியின் மறுபிறவி தான் நாமளோங்கற ரேஞ்சுக்கு கற்பனை விங் சிறகடிச்சிங்..

இந்த தியானம் இத்யாதில்லாம் முயற்சிங்கற அளவுல இருக்கே கண்டி -எப்பவோ ஒன்னு ரெண்டு தாட்டி ஒரு ஸ்பார்க் அடிச்சிருக்கே கண்டி நம்ம ரூட் என்னமோ நாம ஜெபம் தான்.அதும்பாட்டுக்கு ஒரு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும்.

ராப்பூரா கண்விழிக்கும் போது "பொளப்பை " நினைச்சா கொஞ்சம் உதறுமே தவிர மத்ததெல்லாம் பக்காவா தான் இருக்கும். (என்ன மறு நாள் வெய்யில் ஏற ஏற கடுக்கும்) இந்த எனர்ஜிக்கு காரணம் நம்ம  நாம ஜெபம் தான்னு ஒரு ஹன்ச்.

இருமை -இருண்மை ரெண்டும் டாலி ஆய்ருச்சா?

இது இந்த யோகியின் சுயசரிதை மேட்டர்லயே இல்லிங்ணா நம்ம வாழ்க்கையில ஆதி முதல் இந்த நொடி வரை ஒர்க் அவுட் ஆயிட்டே இருக்கு .
ரெம்ப டீப்பா போனா சொந்த கதை ஆயிரும் .ஆகவே நாம ஒரு சுய சரிதை எழுதற ரேஞ்சுக்கு வரும்போது பார்த்துக்கலாம்னு அம்பேலாயிர்ரன்.

Wednesday, August 17, 2016

என்ன செய்யலாம் திமுக ?

அண்ணே வணக்கம்ணே !

வெற்றிய தவற விட்டோமே தவிர தோத்துப்போகல,ஜஸ்ட் 23 தான் வித்யாசம் . 1% தான் வித்யாசம்னு கெத்தா போயி அலப்பறை கொடுத்தாய்ங்க.
அந்தம்மா க்ளவரா சட்டசபைக்கு வராமலே செயலகத்துல உட்கார்ந்துக்கிட்டே "தூக்கி வீசிருச்சு"கலைஞர் என்னடான்னா ஆற அமர 22 ஆம் தேதி பொதுக்கூட்டம்ங்கறாரு .

பொதுக்கூட்டத்துக்கு ஆரு வரப்போறா? 90% கட்சிக்காரன் தான் வருவான். இதனால என்ன புண்ணியம்?

1.கலைஞரும் -ஸ்டாலினும் நினைச்சிருந்தா அந்த மவராசிய பேதியாக்கியிருக்கலாம். கலைஞருக்கு இட வசதி மேட்டர்லயே தலைமை செயலக கேட் வாசல்ல போய் தாத்தா உட்கார்ந்து அழிச்சாட்டியம் பண்ணியிருந்தா நேஷ்னல் சேனல்லாம் பதறி அடிச்சு ஓடி வந்திருக்கும்.

2.மாக் பட்ஜெட் போட்டிருக்கலாம். சனங்க மேல பாரம் சுமத்தாம அரசு வருவாயை கூட்டிக்க யோசனைகளை அள்ளி விட்டிருக்கலாம். இந்த காரியத்தை தனி ஒருவனா நானே செய்திருக்கன்.சபா நாயகருக்கு 234 காப்பி அனுப்பி மாமாங்கமாச்சு. இந்த மேட்டரை எல்லாம் தாத்தாவுக்கும் அனுப்பியாச்சு -ஸ்டாலினுக்கும் அனுப்பியாச்சு .கண்டுக்கத்தான் ஆளில்லை

3.சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யனும்னு நேஷ்னல் வைட் நாஸ்தி பண்ணியிருக்கலாம். சுப்ரீம் கோர்ட்ல அவசர மனு போட்டிருக்கலாம். கொய்யால காசில்லன்னா விலகு எங்க செலவுல பண்றம்னு சீன் போட்டிருக்கலாம். ஒன்னும் பண்ணல

4.நமக்கு நாமே டூர்ல ஸ்டாலினுக்கு 4 லட்சம் மனுக்கள் தரப்பட்டதா சொல்றாய்ங்க. எல்லாத்தையும் ஒரு டெம்போல போட்டு த.செயலகம் கொண்டு போய் கொட்டி ரசீது கொடுங்கடான்னு லந்து பண்ணியிருக்கலாம்.

5.செரி தூக்கி விசிட்டாய்ங்க. வேட்டிய உதறிக்கட்டிக்கிட்டு வீட்டுக்கு போயிட்டா ஆச்சா? ஏன் சன் நியூஸ்லயோ -கலைஞர் செய்திகள்ளயோ ஒரு மாடல் அசெம்ப்ளி நடத்தலாமே?

6.சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பை ஒத்தி வச்சானுவளா? இல்லை ஒத்திக்கு விட்டுட்டானுவளா தெரியல. இதுக்கு ஒரு கேசை போட்டு பேதியாக்கியிருக்கலாம்.

7.ஒரு 23 பேர் தான் வித்யாசம்னு வாயால சொல்லிக்கிட்டிருந்தா ஆச்சா? ஒரு 46 பேர் மேல ஃபைல் ரெடி பண்ணி மருவாதியா ராஜினாமா பண்ணனும்.இல்லின்னா மக்கள் மன்றத்துல வைப்போம்னு அனல் காட்டலாம்ல? ஒரு 23 பேராச்சும் பிச்சுக்கிட்டு வந்திருப்பான்ல?

8.சசி கலா புஷ்பா தில்லியில பம்மியிருக்கு . நீ வா தாயி நாங்க செக்யூரிட்டி தர்ரோம்னு ஊருக்குள்ள விட்டிருந்தாலே பித்தம் தலைக்கேறி பாயை பிறாண்டியிருக்கும் அந்தம்மா.

9.பேசிக்கலா சட்டமன்றத்துல திமுக உறுப்பினர்களை அதிமுக தான் ஆப்பரேட் பண்ணியிருக்காய்ங்க. ரேக்கி விட்டு வெளி நடப்பு செய்ய வைக்கிறது முதல் தூக்கி வீசறது வரை .

கலைஞரை வஞ்சா வஞ்சுட்டு போங்கடான்னு "மேட்டரை" மட்டும் பேசியிருக்கனும்.ஸ்டாலினை வஞ்சா வஞ்சுட்டு போங்கடான்னு "மேட்டரை" மட்டும் பேசியிருக்கனும்.

10.இதை விட ஒரு ஹிடன் கேமரா அரேஞ்சு பண்ணி  ஆளுங்கட்சி பவிசை   பதிவு பண்ணி லீக் பண்ணியிருக்கலாம் .

11.அந்த நாள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் எல்லாரும் சஸ்பென்ட் ஆனப்போ ஜெ - பரபரன்னு பேப்பரை திருப்பி ஏத்த இறக்கத்தோட வாசிக்கல. அந்த வேலையை கலைஞர் செய்ய முடியாதா என்ன?

எதிர்கட்சியா இருக்கும் போதே - இந்த ஆட்சியை ஊதித்தள்ளி ஆட்சியை கைப்பத்தற மோமென்ட்லயே இப்படி தூங்கி வழிஞ்சா ..எப்பூடி?