Monday, March 28, 2016

முரசொலிக்கு ஒரு ஃபேக்ஸ்

அண்ணே வணக்கம்ணே !
இந்த ப்ளாக்ல நேரடி பதிவு போட்டு மாமாங்கமாச்சு.ஒரு அவசரத்துக்கு இங்கே இந்த பதிவை போடறேன். இந்த கன்டென்ட் முழுக்க முரசொலிக்கு இன்னைக்கு  அனுப்பிய ஃபேக்ஸ் தான்.

மத்தபடி நம்ம ஜோதிட பதிவுகள் அனுபவஜோதிடம் வலைதளத்துல தொடர்ந்து பப்ளிஷ் ஆயிட்டு தான் இருக்கு .உடுங்க ஜூட்டு .

________________

ஐயா !
ஜெயா ஆட்சியின் அவலங்கள் விலகி நின்ற திமுகவினரையும்,அனுதாபிகளையும் ,ஏன் நடு  நிலையாளர்களையும் கட்சியின் பால் சற்றே திரும்பிப்பார்க்க செய்திருக்கிறது . என்னை பொருத்தவரை கடந்த திமுக ஆட்சிகாலத்தை கடுமையாக விமர்சித்தவன் நான்.

ஆனாலும் இன்றைக்கிருக்கும் நிலையில் கலைஞர் தலைமையிலான ஆட்சியும் அவர் அனுபவமுமே தமிழகத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன்.  திமுக தன்னை அப்டேட் செய்து கொண்டு  வரும் தேர்தலில் பெரிய வெற்றியை பெற என் சிற்றறிவுக்கு எட்டிய யோசனைகளை   கடந்த பிப் 22 ஆம் தேதி தலைவர்  கலைஞருக்கும்  -பொருளாளர் ஸ்டாலினுக்கும் தபால் வழியாக அனுப்பியுள்ளேன்.

மேற்படி யோசனைகள்  இங்கு  உள்ளன. கழக நலன் கருதி .தமிழக நலன் கருதி இந்த யோசனைகள் கலைஞர் அ ஸ்டாலின் பார்வைக்கு செல்ல உதவுங்கள்.

Wednesday, March 23, 2016

TASMAC M.D RULES TAMILNADU?