Thursday, September 20, 2012

நச் பரிகாரம்: 6 ஆம் பாவம்

அண்ணே வணக்கம்ணே !
எச்சரிக்கை:
இந்த ஒரு அத்யாயம் மட்டும் இங்கே வெளிவருது.பழைய -நாளைய அத்யாங்களை படிக்க நீங்க கீழே குறிப்பிட்ட வலை தளத்துக்கு தான் வரனும்.


ப்ளாகர் காரன் டாட் காம்னு இருந்ததை டாட் இன் என்று மாத்தின பிறவு அலெக்ஸா ரேங்க் படுத்துக்கிச்சு. அதனாலதேன் இந்த அலைக்கழிப்பு.


அனுபவஜோதிடம் வலை தளத்துல நச் பரிகாரங்கள் வரிசையில தொடர் ஆரம்பிச்ச பிறகு அலெக்ஸா ரேங்க்ல கூட  நல்ல முன்னேற்றம். இந்திய அளவிலான ரேங்கல 25 ஆயிரத்துல இருந்து ஜோதிடம் 360 நூல் வெளியீடு சமயத்து பாராமுகத்தால ஒரு லட்சத்து 48 ஆயிரத்துக்கு போன ரேங்கு இப்பம் 73 ஆயிரத்தை எட்டி பிடிச்சிருக்கு.


ஒரு தாட்டி மேற்படி வலைதளத்துக்கு போனிங்கன்னா இந்த தொடர்ல இதுவரை போட்ட பழைய அத்யாயங்கலை ஒரு தாட்டி ஓட்டிப்பார்த்துரலாம்.

பதிவுகள் போட்டதாலதான் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை சூடு பிடிச்சது இல்லேங்கல. ஆனால் இன்னைக்கு நிலைமை என்னடான்னா வித் அவுட் அப்டேஷன் வலைப்பூ-வலைதளம் ரெண்டுக்கும் சேர்த்து 1000 ஹிட்ஸ் கியாரண்டி. ஆன்லைன் ஜோதிட ஆலோசனை தொடர்பா தினசரி விசாரிப்புகள், பைசா எல்லாம் வந்துட்டே இருக்கு. கொசுறுக்கு  ஜோதிடம் 360 நூல் விற்பனை மூலமும் பைசா வருது.

இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா எந்த வித பிரதி பலனும் எதிர்ப்பார்க்காம -ஒரு தொழில்முறை ஜோதிடனாக இருந்தாலும் -தொழில் ரகசியம்னு எதையும் மறைச்சு வைக்காம உள்ளது உள்ளபடி எழுதிக்கிட்டு வரேன்.

நாம எழுதின பதிவுகள்ள உள்ள விஷயங்களை ஃபாலோ பண்ணி க்ளிக் ஆனவுக மஸ்தா பேரு கீறாங்க. இதை படிக்கிற உங்களுக்கும் - க்ளிக் ஆன அவிகளுக்கும் நான் சொல்றது ஒரே மேட்டருதான். இந்த வலைதளத்தை பத்து பேருக்கு அறிமுகப்படுத்துங்க. டிவிட்ட,ஃபேஸ்புக் இப்படி எத்தனை வழி இருக்கோ அத்தனை வழியில அறிமுகப்படுத்துங்க.

ஒரு சின்ன சூட்சுமம் தெரியாம தற்கொலை பண்றவுக இருப்பாய்ங்க, வாழ்க்கையையே இழந்தவுக இருப்பாய்ங்க. அவிக நம்ம சைட்டை பார்த்தா -படிச்சா தற்கொலை எண்ணம் மாறலாம்.இழந்த வாழ்க்கைய திரும்ப பெறலாம். எத்தனையோ நன்மைகளை அடையலாம். இதுல எது நடந்தாலும்  பதிவெழுதின என்னை விட இந்த தளத்தை அறிமுகப்படுத்தின உங்களுக்குத்தான் புண்ணியம் சாஸ்தி. சஸ்தாவா புண்ணியம் கிடைக்கிறச்ச ஷேர் பட்டன் மேல  ஒரு க்ளிக் .. பண்றது போயி கஷ்டமா என்ன? நிச்சயம் ஷேர் பண்ணுவிங்கல்ல.

பதிவுக்கு போயிரலாமா?

இந்த ஆறாம் பாவம் இருக்கே.. இது கெட்டு குட்டிச்சுவரா போகனும். அப்பத்தேன் சத்ரு,ரோக,ருண உபாதைகள் இல்லாம வாழ முடியும். இங்கன எட்டுக்கதிபதி,விரயாதிபதி அல்லது சூ,செவ்,ராகு,சனி,கேது போன்ற பாவ கிரகங்கள் நிக்கனும். இதே கிரகங்கள் லக்னாத்தும் பாவியா இருந்தா ஸ்ரேஷ்டம். இந்த பாவாதிபதியும் எட்டு/12ல் இருந்தா இன்னம் நல்லது.

ஒரு சில லக்னங்களுக்கு  ஒரே கிரக்ம்  கிரகம் லக்னாதிபதியாவும்  6 க்கு அதிபதியாவும் இருக்கும். அவிக பாடுதான் இம்சை. இந்த கிரகம் கெட்டாலும் ஆப்பு ,பலம் பெற்றாலும் ஆப்பு. உ.ம் ரிஷபலக்னத்துக்கு சுக்கிரன் ரோகாதிபதி. இவர் பலம் பெற்றாலும் ஆபத்து . முழுக்க பலகீனப்பட்டாலும் ஆபத்து ஏன்னா லக்னாதிபதியும் சுக்கிரன் தானே.

இந்த பாவம் பலம் பெற கூடாது.  அப்படி பலம் தருவது எந்த கிரகமானால் என்ன பலன்னு சொல்ல ஆரம்பிச்சா பரிகாரம் சொல்றதுக்குள்ள பவர் கட் ஆயிரும்.அதனால நேரடியா பரிகாரத்தை மட்டும்  ஷார்ட்டா சொல்லிர்ரன்

1.சூரியன்:
அப்பா இருந்தா அவரோட கொடுக்கல் வாங்கல் செய்ங்க. (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்) அவர் உசுரோட இல்லியா உங்களுக்கு தேவையில்லின்னாலும் அவரோட சொத்துக்கள் பேர்ல கடன் வாங்குங்க. கடன் வாங்கி ரிமோட் வில்லேஜஸ், மலை பிரதேசங்களுக்கு போய் வாங்க.பல்,தலை,எலும்பு,முதுகெலும்பு இத்யாதி நோய்கள் வராம இருக்க டேக் ப்ரிக்காஷன்ஸ். லாஸ் ஆஃப் கால்ஷியம் இருக்கா பாருங்க. கால்ஷியம் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளவும்.

2.சந்திரன்:
அம்மா  இருந்தா அவிகளோட  கொடுக்கல் வாங்கல் செய்ங்க. (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்) அவிக உசுரோட இல்லியா உங்களுக்கு தேவையில்லின்னாலும் அவிகளொட  சொத்துக்கள் பேர்ல கடன் வாங்குங்க. கடன் வாங்கி பிரபல தீர்த்தங்கள் உள்ள ஊர்களுக்கு போய் வாங்க. மனம் - நுரையீரல் - சிறு நீரகம் தொடர்பான பாதிப்பு இருக்கான்னு செக் பண்ணிக்கங்க. இவை வராம இருக்க டேக் ப்ரிக்காஷன்ஸ்.

3.செவ்வாய்:
உடன் பிறப்புகளோட கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்) . பாகப்பிரிவினையில விட்டு கொடுங்க. கடன் வாங்கி மலைமேல் இருக்கிற முருகன் கோவிலுக்கு போய் வாங்க. ரத்தம், எரிச்சல் , கோபம் தொடர்பான நோய்கள் இருந்தா உடனே ட்ரீட்மென்ட் எடுங்க. (மறுபடி) வராம  இருக்க டேக் ப்ரிக்காஷன்ஸ். வீட்டு மனை வாங்கறச்ச வங்கியில கடன் வாங்கி கேஷுக்கு வாங்கிருங்க. தவணை வேண்டாம்.

4.ராகு:
பிறமொழியினரோட கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்) . தந்தை வழி தாத்தா,பாட்டி இருந்தா தினசரி 15  நிமிஷமாச்சும் அவிகளோட சண்டை போடுங்க (செல்லமா தான்) கடன் வாங்கின காசுல மூக்குப்பொடி,வெத்திலைபாக்கு ,மருந்து மாத்திரை வாங்கி கொடுங்க.இடுப்புக்கு கீழ் பாகத்துல வீக்கம் ,வலி,கட்டி வந்தா உடனே ட்ரீட்மென்ட் பாருங்க.

5.குரு:
புனைப்பெயர் வச்சுக்கிட்டு அரசியல் வாதிகளை,வங்கிகளை , சேவை நிறுவனங்களை கிழிங்க. பிராமண நண்பர்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்). உங்க ஆரம்பபள்ளி,ஹை ஸ்கூல் வாத்யாருங்க இருந்தா வீக்லி ஒன்ஸாச்சும் அவிகளை சந்திங்க. கை செலவுக்கு கடன் வாங்கின காசை கொண்டு போங்க. பல் சொத்தை , உள்ளங்கையில எரிச்சல் ,உள்ளங்கால்ல எரிச்சல்,இதயபடபடப்பு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தா உடனே ட்ரீட்மென்ட் எடுங்க.

6.சனி:
கட்ன் வாங்கின காசுல ஒரு டூல் பாக்ஸ் வாங்கி வச்சுக்கிட்டு தினசரி அரைமணி நேரமாச்சும் ஜி.டி.நாயுடு வேலைங்க செய்ங்க. தலித் நண்பர்கள் இருந்தா அவிக கிட்டே கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்). வேலைக்காரவுகளுக்கு கடன் வாங்கின காசுல பிரியமா எதுனா வாங்கி கொடுங்க. போனஸ் கொடுங்க. கால், நரம்பு,ஆசனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தா உடனே ட்ரீட்மென்ட் எடுங்க.

7.புதன்:
தாய் மாமன், வைசிய நண்பர்களிடன் கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்).  தோல்,கீல்,அண்டம் சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தா உடனே ட்ரீட்மென்ட் எடுங்க. ஸ்டேஷ்னரி ஐட்டம் வாங்கும்போது கடன் வாங்கின காசுல வாங்குங்க.

8.கேது:
இடுப்புக்கு மேல்  பாகத்துல வீக்கம் ,வலி,கட்டி வந்தா உடனே ட்ரீட்மென்ட் பாருங்க . பிற பதத்தை சேர்ந்தவர்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்). தாய் வழி தாத்தா,பாட்டி இருந்தா தினசரி 15  நிமிஷமாச்சும் அவிகளோட சண்டை போடுங்க (செல்லமா தான்) கடன் வாங்கின காசுல மூக்குப்பொடி,வெத்திலைபாக்கு ,மருந்து மாத்திரை வாங்கி கொடுங்க.

9.சுக்கிரன்:
காதலி, மனைவியிடம் கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்).கைனகாலஜிக்கல் பிரச்சினைகளை ஏற்படுத்தற காரியங்களை கட்டி வச்சுருங்க. பிரச்சினைன்னு வந்தா உடனே கைனகாலஜிஸ்டை பாருங்க.

Friday, September 14, 2012

நச் பரிகாரம்: 4 ஆம் பாவம்



அண்ணே வணக்கம்ணே !
நீங்க முக நூல் வழி வந்த புதிய வாசகரா இருந்தா ஒரு மேட்டரை சொல்லியே ஆகனும்.

நமக்கு இந்த வலைப்பூ அல்லாது அனுபவஜோதிடம்னு ஒரு சைட்டும் இருக்கு. 2011 பிப்ரவரியில இருந்து அதை தான் ரெகுலரா அப்டேட் பண்ணிக்கிட்டிருக்கன்.

சமீப காலமா நச் பரிகாரம்னு ஒரு தொடர் பதிவை ஆரம்பிச்சு 9 கிரகங்களுக்கான பரிகாரங்கள் கொடுத்துட்டு 12 பாவங்களுக்கான பரிகாரங்களை எழுத ஆரம்பிச்சு இன்னைக்கு 4 ஆம் பாவத்துக்கு பரிகாரம் தந்திருக்கேன். மெயின் ஸ்ட்ரீம்ல வந்து கலக்க - தொடரை மிஸ் பண்ணாம படிக்க இங்கே அழுத்துங்க.