Wednesday, May 23, 2012
ஆரை பிடிக்க ஆரை அணுகனும்
அண்ணே வணக்கம்ணே !
ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ்ல பாப்பா,பைசா எப்பிசோட்ல அடுத்த அத்யாயத்தை இன்னைக்காச்சும் போட்டுரலாம்னு வணக்கம் சொன்னேன். அதே செகண்ட் பவர் கட். நெல்ல சகுனம். இளையராஜா மொத பாட்டு ரிக்கார்டிங் சமயத்துல கூட பவர் கட் ஆயிருச்சாம். அவரு மேஸ்ட்ரோ ஆகலியா என்ன? ஃப்ரீயா உடுங்க தலை !
கையில வெண்ணை வச்சுக்கிட்டு எவனோ நெய்க்கு அலைஞ்சானாம். அந்த கதையா ஆட்சென்ஸுக்கு தேவை டாட் காம்ங்கற டொமைன். இங்கிலீஷ் கன்டென்ட்.
நம்ம கிட்ட ரெண்டும் இருந்தும் அந்த ரெண்டை சேர்க்கலாமேங்கற லாஜிக் உறைக்காம 15 மாசத்தை வீணாக்கிட்டம்.
அனுபவஜோதிடம் டாட்காமை வச்சு ஆட்ன்சென்ஸுக்கு அப்ளை பண்ணா அன் சப்போர்ட்டட் லேங்குவேஜ்ங்கறான். ஆங்கில ப்ளாகை வச்சு அப்ளை பண்ணா டாட் காம் இல்லேங்கறான்.அதனால அனுபவஜோதிடம் டாட்காம்ல இருந்த தமிழ் போஸ்டையெல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணிட்டு -இங்கிலீஷ் ப்ளாக்ல இருக்கிற கன்டென்டை தூக்கி போட்டுக்கிட்டிருக்கேன்.
ராகுகாலம் எமகண்டமா பார்த்து அப்ளை பண்ணிர வேண்டியதுதான். ஆருப்பா அங்கே தமிழ் துரோகிங்கறது? தமிழ் ப்ளாகுக்கு ஆட்சென்ஸ் நஹிங்கறானே ஒரு சூப்பற ஸ்டாரோ - ஒரு கட்சியோ -ஒரு வியாபார ஐஸ்காந்தமோ தமிழ் ப்ளாக்ஸுக்கு விளம்பரம் தரலாம்ல.
மொக்கை போதும் இப்ப பதிவு. மொதல்ல உங்க லைஃப் பிக்சரை பார்ப்போம்:
தாய்மாமன்னு ஆரும் இல்லை. இருந்தாலும் அவிகளால சகாயமில்லை. உங்களுக்கு தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை இருக்கு. படிப்பு ? சொல்லிக்கிறாப்ல இல்லை.அதுலயும் கணக்குன்னாலே மைண்ட் ப்ளாக் ஆயிருது. ஃபிசிக்ஸ் ,கெமிஸ்டரின்னா கண்ணை கட்டுது. ஒரு சாதாரண லெட்டர் எளுதனும்னா கூட அடிச்சு திருத்திதான் எளுத வேண்டியதா கீது.
ஐ.டி,கம்ப்யூட்டர், மெடிசின்,அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங், போஸ்டல், கூரியர்,கமிஷன் ஏஜென்ஸி,டீலர்ஷிப் ,மீடியேஷன் இப்படி எந்த லைன்ல போனாலும் முட்டு சந்துல தான் போய்விடுது. ஆரு மூலமாவாச்சும் ஆருக்காச்சும் எதுனா மெசேஜ் கொடுத்தா தப்பாவே போய் சேருது. ஆரை பிடிக்க ஆரை அணுகனுங்கற டெக்னிக்கே கைவரமாட்டேங்குது.
பைசாவை கண்ல பார்க்க முடியலை . கொடுக்க வேண்டியதை ஆருகிட்டனா கொடுத்தனுப்பினா போய் சேரமாட்டேங்குது. சரியான விலாசத்தை எழுதி அனுப்பினாலும் லெட்டர் என்ன இ மெயில் கூட டெலிவரி ஆகமாட்டேங்குது.
இந்த சிம்ப்டம்ஸ் எல்லாம் உங்களுக்கு இருந்தா நீங்க நாளைக்கும் இந்த சைட்/ப்ளாகை படிச்சே ஆகனும்.ஏன்னா இதுக்கெல்லாம் பரிகாரம் நாளைக்குத்தான் வெளிவரப்போகுது..
உடுங்க ஜூட்
எச்சரிக்கை:
திருப்பதியில சி.எம் ப்ரோக்ராம். தாளி.. மதியம் 2.40 க்கு போன கரெண்டு 5.40 க்குத்தேன் வந்தது.. என்னா பண்ணி தொலைக்கிறது.அதனாலதேன் பேர் பாதி பதிவை நாளைக்குன்னு போஸ்ட்போன் பண்ணிக்கிட்டேன்.