எனது திரையுலக நண்பர் ஒருவர் பற்றிய குறிப்பு. பிராமணரான இவர் சித்தூரை சேர்ந்தவர். டிகிரி படிக்கும் காலத்தில் தமிழில் புதுசு என்ற பத்திரிக்கை ஆரம்பித்திருந்த காலத்தில் நவதா என்ற பெயரில் தெலுங்கிலும் துவக்க வைத்து வீண் சக்தி விரயத்துக்காளாக்கி புதுசு நின்று போக காரணமானவர். நவதாவில் அவர் துவங்கிய இந்த புண்ணிய பூமியில் பிறந்தது எங்கள் தப்பா என்ற தொடர் கதையும் அல்பாயுசில் நின்று போனது.
இங்கே ஷாட் கட் செய்தால் எல்.ஐ.சி.யில் வேலை வருகிறது. இவர் நான் கே.விஸ்வ நாத்திடம் சேரப்போகிறேன் என்று சொல்ல அவரது அப்பாவும் ஓகெ. கே.விஸ்வ நாத்திடம் சேர ரூட் க்ளியரன்ஸுக்காக தணிக்கள்ள பரணியிடம் இலை எடுக்கிறார். சில்லறை புரள ஆரம்பிக்க விஸ்வனாத் கனவு காலி. செங்கல்வ பூ தண்டா என்ற படம் இயக்குகிறார். தன் வலி யறிந்து கதாசிரியராகிறார்.
வீடு ,பங்களா எல்லாம் கட்டுகிறார். திடீர் என்று சரித்திரத்தில் இடம் பிடிக்கும் எண்ணம் பிறக்கிறது.(அடங்கொப்புராண சரித்திரம்னா சத்திரமாடா). சினிமாவுக்கு எழுதுவதை விட்டு விடுகிறார். (எவனும் கேக்கலை) கோயில்
என்ற பெயரில் ஒரு கதை எழுதுகிறார். இது 100 வருடங்களுக்கு நிற்குமாம். வயாக்ரா போட்டவன்...போலவா?
தாளி ! இந்தியாவுல எழுத்தறிவு சதவீதம் என்ன? இதுல ஆங்கிலம் மட்டும் பீசும் ரகம் எத்தனை? இந்தியாவில் 18 மொழியிருக்கு. தமிழே என்றாலும் ஜோதிடம்,கொக்கோகம் ,சமையல், நீச்சலடிப்பது எப்படி யோடு நின்று போகும் ஜனம் எத்தனை? இதுல இலக்கியம் வரை வர்ரவன் எத்தனை பேரு.
சரி ஒழியட்டும் சுதந்திர பாரதத்தில் கனவு காண்பதுஅவரவர் பிறப்புரிமை. இதெல்லாம் ஜுஜுபி. க்ளைமேக்ஸே இப்பதான் ஆரம்பம்:
ரெண்டு பெண் குழந்தைகள். காலை 4 மணீக்கு தியானம், 5 மணிக்கு யோகா 6 மணீக்கு குச்சி புடி(குச்சி பிடிச்சுகிட்டே ஆடறதா ..பாட்டிகள் நடனமா?) 7 மணிக்கு தாளி..இவரு அதுகளுக்கு கவிதை எழுத கத்து தருவாராம் ஆண்டவா !
கவிதைய ரசிக்க கத்து தரவே சரஸ்வதி வரனும் கிட்டார் எடுத்துக்கிட்டு..இவர் கவிதை எ...ழு...த........வே கத்து தர்ராராஆஆஆஆஆஆஆஆம்