Thursday, February 14, 2019

ரூ.1000 சேமியுங்கள் !


அண்ணே வணக்கம்ணே !

 நிர்வாண உண்மைகள் படித்து பயன் பெற்று வரும் ஜோதிட ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் வேண்டுகோள் !

 இந்த வலைப்பூவில் நான் 2000 முதல் 2009 வரை எழுதி வந்தபோது ஆதரவு அளித்த நீங்கள் சமீபகாலமாக / எட்டு வருடமாக நான் எழுதிவரும் என் சொந்த வலைதளத்துக்கும் ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 8 வருடங்களாக ஜோதிடம் தொடர்பாகவும் அரசியல் மற்றும் நாட்டு நடப்பு குறித்து அனேக பதிவுகளை என்  வலைத்தளத்தில் எழுதி வருகிறேன்.

 ஆனால் இந்த வலைப்பூவின் வாசகரான நீங்கள் வலை தளத்தில் எழுதி வரும் தொடர்கள் பதிவுகளை படிக்கிறீர்களா இல்லையா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது

இத்தனை காலம் எழுதி வந்த தொடர்களின்  கதை வேறு . தற்போது ஜோதிஷ சர்வஸ்வம் என்ற தலைப்பில் ஒரு நீண்ட தொடரை ஆரம்பித்து எழுதி வருகிறேன்.

 ஜோதிடத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் ஒரே நூலாக வெளியிட வேண்டும் என்பது என் நோக்கம்.  எழுதியவற்றை கணினியில் வைத்து பூஜை போடுவதை விட பொது தளத்தில் பதிவிட்டால் உடனடியாக  பலருக்கும் பயன்தரும் என்ற எண்ணத்தில் வலை தளத்தில் வெளியிட்டு வருகிறேன்.

 இந்த பதிவுகள் நூலாக வெளிவரும் போது அதன் விலை குறைந்தபட்சமாக ரூபாய் 1000 ஆக இருக்கும் . நீங்கள் தவறாமல் தொடரைப் படித்து கணினியில் சேமித்து வைத்துக் கொண்டால் நூல் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. என்ன கிளம்பிட்டீங்களா அனுபவஜோதிடம் டாட் காம் வந்துருங்க பேசிக்கலாம்

உங்கள் பார்வைக்கு 3 ஆம் அத்யாயம் இங்கேயே 

ஜேஷ்டா பலம் : சினாப்சிஸ்

ஸ்தான பலம் 
ஒரு கிரகம் ஆட்சி ,உச்சம் ,மூலதிரிகோணம் ,நட்பு ,வர்கோத்தமம் நீச வீட்டிலில் இருந்து உச்ச வீடு செல்லும் வழியில் இருக்கிறது  ,கேந்திர திரி கோணத்தில் இருக்கிறது போன்ற நிலைகள் அந்த கிரகத்துக்கு பலத்தை தரும். இன்னம் நீச பங்கம்ங்கற கான்செப்டையும் இதுல சேர்த்துக்கலாம். நீசபங்கம்னா ஒரு கிரகம் தன் நீச வீட்டில் இருப்பது. ப்ளஸ் அந்த வீட்டு அதிபதி ஆட்சி //உச்சம் பெறுவது .

இதே போல இன்னொரு அமைப்ப்பு “ ஒரு கிரகம் நீச வீட்டில் இருக்க- அந்த வீட்டுக்குடையோனும் நீசம் பெறுவது

(அல்ஜீப்ரா போல)
  
திருஷ்டி பலம் (பார்வை)

கிரங்கள்  பாப கிரங்களின்  பார்வை இன்றி சுப கிரகங்களின்  பார்வை பெற்றால் திருஷ்டி பலம் பெரும். சுபகிரகங்கள் என்றால் லக்னாத் சுபகிரகங்களை கணக்கில் கொள்ள வேண்டும் .(இதற்குன்டான டேட்டா வரும் அத்யாயங்களில் விரிவாக தரப்படும் .டென்ஷன் ஆவாதிங்க)

திக் பலம்

திக் என்றால் திசை என்று பொருள் .லக்னம் முதலாக பன்னிரண்டு ராசிகளில்  கிரகங்கள் எத்தனையாவது பாவத்தில் அமர்கின்றன என்பதை கொண்டு திக் பலம் நிர்ணயிக்கப்படும். 

புதன் ,குரு கிரகங்கள்-- கிழக்கே அதாவது லக்னத்தில்  நிற்பதால்  திக் பலம் பெறும். 

சந்திரன் -சுக்கரன் --வடக்கே அதாவது லக்னத்தில் இருந்து நான்காம் வீட்டில்
  நிற்பதால்  திக் பலம் பெறும். 

சனி --மேற்கில் அதாவது ஏழாம் வீட்டில் திக் பலம் பெறும்.

சூரியன் ,செவ்வாய் --தெற்கில் அதாவது பத்தாம் வீட்டில் திக் பலம்  பெறும்.

(இந்த விதியில நிறைய பஞ்சாயத்து உண்டு.  பிறவு விரிவாக பார்ப்போம்)

ஜேஷ்டா பலம் 

உத்தராயன காலம் – தட்சிணாயன காலம்னு கேள்வி பட்டிருப்பிங்க. புராணங்கள்ள புகுந்து வரவிக பீஷ்மர் அம்பு படுக்கையில படுத்துக்கிட்டு தட்சிணாயன காலம் போற வரை டிக்கெட் போட வெய்ட் பண்ணாருன்னு படிச்சிருப்பிங்க.

சூரியன் மகரத்தில் பிரவேசித்த நாள் முதல் ( தை முதல் தேதி) ஆறு மாத காலம் உத்தராயண காலம்.

இதே போல சூரியன் கடகத்தில் பிரவேசித்த நாள் முதலான 6 மாத காலம் தட்சிணாயன காலம்.

.சூரியன் ,சந்திரன் உத்திராயண காலத்திலும் ,மற்ற கிரங்கள் வக்கிரம் பெரும் காலங்களிலும் ,கிரக யுத்தத்தில் வெற்றி பெரும் பொழுதும் ,சந்திரனுடன் கூடும் பொழுதும் ,சுப கிரங்களுடன் கூடும் பொழுதும்  ஜேஷ்டா பலம் பெரும் .

கால பலம்  
.
சூரியன் ,குரு ,சுக்கிரனுக்கு பகலில் பலம். 
சனி ,செவ்வாய் ,சந்திரனுக்கு இரவில் பலம் . புதனுக்கு இரு வேளைகளிலும் பலம் . 

நைசர்கிக  பலம் 
 நைசர்கிகம்னா என்ன ? நைஜம் = இயல்பு , நைசர்கிகம் இயல்பானன்னு அர்த்தம்.

ப்ரோட்டக்கால்னா தெரியும் தானே? அரசு விழா இன்விட்டேஷன்ல வி ஐ பிக்களின் பெயர் எந்த வரிசையில் அச்சாகனும்னு விதி உண்டு. ஆருக்கு மொத மரியாதை /ஆருக்கு ரெண்டாவது மரியாதைன்னு இருக்குல்ல. அதான் இந்த நைசர்கிக பலம்ங்கறது .

தரவரிசை பட்டியல்னு வச்சுக்குவமே. இதுல டாப் ரேங்கர் கேது . அதற்கடுத்து ராகு பலம் வாய்ந்தவர்.

ராகுவை அடுத்து சூரியன், சூரியனை அடுத்து சந்திரன், சந்திரனை அடுத்து சுக்கிரன், இவரையடுத்து குரு , இவருக்கு பிறகு புதன் ,புதனுக்கு பிறகு சனி பலம் வாய்ந்த கிரகங்கள் என்பது பாடம்.

(ஏன் எதுக்குங்கறதை எல்லாம் பிற்பாடு டீட்டெய்லா சொல்றேன்.)