Saturday, September 29, 2018
Sunday, September 23, 2018
Thursday, September 20, 2018
Wednesday, September 19, 2018
குருப்பெயர்ச்சி பலன் ( 2018-2019) : மேஷம் முதல் மீனம் வரை
அண்ணே வணக்கம்ணே !
இந்த ப்ளாக்ல டைரக்ட் போஸ்ட் போட்டு பல காலம் ஆச்சு.ஆனாலும் தினம் தினம் 500 க்கு குறையாம ஹிட்ஸ் தரும் ப்ளாக் இது. நன்னிக்கடனா நம்ம வெப்சைட்ல பார்ட் பார்ட்டா போட்ட இந்த குரு பெயர்ச்சி பலனை இங்கே ஹோல்சேலா போட்டிருக்கன். என் சாய் !
தற்போது துலா ராசியில் சஞ்சரிக்கும் குரு 2018, அக் 12 முதல் விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளார்.துலாம் என்பது உலகியல் சுகங்களை சுட்டும் சுக்கிரனுடைய ராசி. குரு என்பது அரசை காட்டும். இது நாள் வரை விருந்து -விழா -புதிய வண்டி வாகனம் என்று சுகித்திருந்த ஆட்சியாளர்களுக்கு ஆப்பு ஆரம்பம் என்று சொல்லலாம்.
குரு கிரகம் யுத்த காரகனாகிய செவ்வாயின் ராசியான விருச்சிகத்துக்கு வருவது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நல்லதல்ல.
மேலும் நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம் வேறு ஆகிறார். இது அரசுகள் உள்ளூர் தலைவர்களை பெரிதும் நம்பியாக வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தூங்க முடியாத காலம் இது.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம். அரசின் செயல்பாடுகளில் தலைகீழ் மாற்றம் ஏற்படும்.
நிற்க இந்த குரு பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கும் என்ன விதமான பலன் தரும் என்று பார்த்துவிடலாம்.
மேஷம்:
இவர்களுக்கு குரு 9/12 க்குடையவர் கடந்த காலத்தில் 7 ல் இருந்து வந்ததால் வாழ்க்கை துணையால் சில விரயங்கள்
ஏற்பட்டாலும் அவராலேயே சொத்து/முதலீடுகள்
/அல்லது அவற்றால் கிடைக்க வேண்டிய பலன் /வட்டி/வாடகை இத்யாதி காப்பாற்றப்பட்டிருக்கும்.
இவர் 2018, அக் 12 முதல் 8 க்கு வருவதால்- இவர் 9 க்குடையவர் என்ற வகையில் மிச்சம் மீதி இருக்கும் சேமிப்பு/கையிருப்பு கரையும்.
கடன் வாங்கியும் சுப காரியம் செய்யவேண்டி வரலாம். கோவில் குளம் என்று செல்கையில் சிறு விபத்து /பொருள் இழப்பு நடக்கலாம்.
இவர் 12 க்குரியவராகவும் இருப்பதால் செலவுகள்/தூக்கம்/உணவு
/ வீண் விரயங்கள் குறையும்.
நவ.12 முதல் டிச.11 வரையிலான
குரு அஸ்தமன
காலத்தில் வாரிசுகளுக்கு கண்டம் /தங்களுக்கு அவப்பேர் / அதிர்ஷ்டகுறைவு /தற்கொலை நினைவுகளுக்கும்
வாய்ப்புண்டு.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்
ஆவதால் ஆரம்பத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சொன்ன பலன் தலைகீழாய் மாறுவதோடு வயிறு
இதயம் தொடர்பான சிக்கல்களும் ஏற்படலாம் டேக் கேர்.
ரிஷபம்:
குரு உங்களுக்கு 8/11 க்குடையவர் .இவர் 6 ல் இருந்து 7 க்கு மாறுவதால் வாழ்க்கை துணையுடன்
சச்சரவுகள் பிரிவுகள் தோன்றலாம். அதே நேரம் அவரிடம் இருந்து பரிசுகள் இன்ப அதிர்ச்சிகளையும்
எதிர்ப்பார்க்கலாம்.
கடந்த காலத்தில் தீராமல் இருந்த கடன் தீரலாம். அடகு வைத்திருந்த
நகை மீட்கப்படும்.உங்கள் பிடிவாதம் குறைந்து இறங்கி போய் சமாதானம் பேசலாம். ஒரு ஆண்டு
காலமாய் அடங்கி இருந்த நோய் குறிகள் மீண்டும் தோன்றலாம்.
நவ.12 முதல் டிச.11 வரையிலான குரு அஸ்தமன
காலத்தில் (4- 7) உங்கள் வாழ்க்கை துணையிடம் மதர்லி ரிசீவிங் –ஃபாதர்லி கண்டிப்புகள்
வெளிப்படும்.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்
ஆவதால் ஆரம்பத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சொன்ன பலன் தலைகீழாய் மாறுவதோடு வயிறு
இதயம் தொடர்பான சிக்கல்களும் ஏற்படலாம் டேக் கேர்.
மிதுனம்:
உங்களுக்கு குரு 7/10 க்குடையவர். இவர் கடந்த காலத்தில் 5 ல்
இருந்து ஃப்ரண்ட்/லவர்/பார்ட்னர் வகையில் /தொழில் உத்யோகம் வியாபாரம் வகையறாவில் சில
நன்மைகளை செய்திருப்பார். இவர் 2018, அக் 12 முதல் 6 க்கு வருவது நல்லதில்லை.
இதனால் காதல்/கல்யாணம்/மணவாழ்வில்
சிக்கல் வரலாம். தொப்புள் பகுதியில் வலி /வாயு கோளாறுகள் படுத்தும். கடன் வாங்க வேண்டி
வரலாம். தங்கம் அடகு வைக்க வேண்டி வரலாம்.
நவ.12 முதல் டிச.11 வரையிலான குரு அஸ்தமன
காலத்தில் சகோதர வகையில் / குறைந்த தூர பயணங்களில் பொருள் இழப்பு .அல்லல் அலைச்சல்
ஏற்படலாம்.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்
ஆகும். இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும்
பலன் தலைகீழாக மாறும்.
கடகம்:
குரு உங்கள் ராசிக்கு 6/9 க்குடையவர் கடந்த காலத்தில் 4 ல் இருந்து ஆரம்பத்தில் தாய்,வீடு,வாகனம்,கல்வி
ஆகிய விஷயங்களில் பிரச்சினையை தந்திருந்தாலும்/படிப்படியாக அதே விஷயங்களில் அனுகூலத்தையும்
தந்திருப்பார். வீடே உலகமாக காலம் கழித்தது அந்த காலம்.
இந்த வருடம் அக்.12 ஆம் தேதி 5 க்கு வருவது ஆரம்பத்தில் உங்கள் புகழ் வேட்டையில்
/அதிர்ஷ்டத்தை தேடும் முயற்சியில் நெகட்டிவ் ரிசல்ட்டை கொடுத்தாலும் படிப்படியா அனுகூலமாகும்.
நீங்கள் கொஞ்சம் புத்தி சாலித்தனமாக நடந்து கொண்டால் உங்கள் புத்தி கூர்மை உங்களுக்கு
ஒரு சொத்தையே கூட சொந்தமாக்கும். உங்கள் முதலீட்டையும்/சேமிப்பையும் பெருக்கும் வாய்ப்பும்
கிடைக்கும்.
நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமன காலம் வாக் பலிதத்தை தரும். உங்கள் பேச்சுக்க்கு மதிப்பு
கூடும். அஸ்தமன காலம் புதிய வருவாய் வழிகளையும்
காட்டித்தரும்.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்.
இந்த கால கட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும்
பலன் தலைகீழாக மாறும்.
சிம்மம்:
இவர்களுக்கு குரு 5/8 க்குடையவர் இவர் 3 ல் இருந்து சற்றே பயம்-பீதி ,சகோதர நாசம் ,சிறு
விபத்து /காது-தோள் பட்டை தொடர்பான பிரச்சினைகளை தந்திருப்பார். இவர் அக்.12 முதல் 4 க்கு வருவதால் பூர்வ புண்ணியங்களின் காரணமாக தாய்,வீடு,வாகனம்,கல்வி
வகையறாவில் அனுகூலம் ஏற்படும். அதே சமயம் இந்த
விஷயங்களில்/விஷயங்களால் அல்லல் அலைச்சல்/விரயங்கள் ஏற்படும்.
நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம் ஆவதால் (1+5/8) மேற்சொன்ன விஷயங்களில் ஈடுபாடு கூடும்.
செலவுகளும் கூடும். ஜாதகப்படி நல்ல தசா புக்தி நடை பெறுவோருக்கு சொந்த வீடும் அமையலாம்./
சொந்த வீட்டை சற்றே விரிவாக்கம் செய்யவும்
வாய்ப்புண்டு.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்.இந்த
கால கட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும் பலன்
தலைகீழாக மாறும்.
கன்னி:
இவர்களுக்கு குரு 4/7 க்குடையவர். இவர் 2 ல் இருந்து 3 க்கு வருகிறார். கடந்த காலத்தில்
தாய், வீடு,வாகனம் ,கல்வி வகையறாவில்/மனைவி –மனைவி வழி உறவுகளால் சிறிதளவு லாபம் ஏற்பட்டது . ஆனால் இனி மேற்சொன்ன விஷயங்களில்
/விஷயங்களுக்கு/விஷயங்களால் ஆப்பு வரலாம். டேக் கேர். அல்லல் அலைச்சல் கூடலாம். இதனால் மனதில்
தைரியம் குறையலாம்.
நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம் ஆவது மேற்சொன்ன கெடு பலனை கூட்டலாம். மேற்சொன்ன
விஷயங்களில் அதீத செலவுகள் ஏற்படும். தாய் மனைவி இருவரின் தூக்கமும் கெடலாம். பொன்
பொருள் விரயமாகலாம்.இடமாற்றத்துக்கும் வாய்ப்புண்டு.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்.இந்த
கால கட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும் பலன்
தலைகீழாக மாறும்.
துலா:
குரு உங்களுக்கு 3/6 க்குடையவர் இவர் ஜன்மத்தில் இருந்து இனம் புரியாத அச்சத்தையும் –
அல்லல் அலைச்சலையும் கொடுத்து வந்தார். இவர் 2 க்கு வருவதால்
உங்கள் பேச்சிலும் அச்சம் வெளிப்படலாம். கொடுக்கல் வாங்கலில் துணிந்து இறங்குவதாலும்
(குறிப்பாக பின் சொல்லியிருக்கும் அஸ்தமன காலத்தில் ) அச்சத்தால் பின் வாங்குவதாலும்
பொருளாதாரம் பாதிக்கும்..வாய் பேச்சால் சிக்கல் ,குடும்பத்தில் கலகம் ,பண நட்டம் ஏற்பட்டு
தங்க நகைகளை அடகு வைக்க வேண்டி வரலாம்.
நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம் . அதாவது 3/6 க்குடைய குருவுடன் 11 க்குடைய சூரியன் சேர்க்கை.
இந்த கால கட்டத்தில் மனோதைரியம் கூடலாம். இளைய சகோதரத்தால் அனுகூலம் உண்டு.
ஆனால் கடன் கூடலாம். எதிர்ப்புகள் அதிகரிக்கலாம். ஆனாலும் சமாளித்து
விடுவீர்கள்.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்.இந்த
கால கட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும் பலன்
தலைகீழாக மாறும்.
விருச்சிகம்:
இவர்களுக்கு குரு 2/5 க்குடையவர். இவர் இத்தனை காலம் 12 ல் இருந்ததால் பேச்சுக்கு மதிப்பில்லாது / பண முடை /குடும்பத்தில் கலகம்/கண் -வாய்-தொண்டை தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டிருப்பார்கள் .
குரு ஜன்மத்துக்கு வருவதால் பொருளாதார நெருக்கடி முற்றும். அதே சமயம் வெளியூரில் இருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். பூர்வீக சொத்து /நிலுவைகளில் இருந்த வில்லங்கம் தீர்ந்து பணம் கைக்கு வந்து கற்பூரமாய் கரையும். வயிறு -இதயம் தொடர்பான பிரச்சினைகளால் உடல் நலம் பாதிக்கலாம். வாரிசுகளை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு அனுகூலமான சமயம்.
நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம். இந்த கால கட்டத்தில் ( 2/5+11 ) பேச்சை குறைத்து / தொழில்-உத்யோகம்-வியாபாரத்தில்
கவனம் செலுத்துவது நலம். பிள்ளைகள் வழியில் அனுகூலம் ஏற்படும். அதாவது அவர்களின் தொழில்
/திருமண முயற்சிகள் வெற்றி காணும். இவ்வகையில் அவர்களை பிரியவும் நேரலாம்.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்.இந்த
கால கட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும் பலன்
தலைகீழாக மாறும்.
தனுசு :
உங்களுக்கு குரு ¼ க்குடையவர்.இவர் கடந்த காலத்தில் 11 ல் இருந்ததால் இரு மனப்போக்கு
இருந்தாலும் தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையில் நல்ல முன்னேற்றம் கிடைத்திருக்கும்.
நல்ல
தசா புக்தி நடந்தவர்களுக்கு இரு வாசல் கொண்ட
வீடு /உபரியாய் ஒரு வாகனம் கூட அமைந்திருக்கலாம். ஆனால் இவர் அக் 12 முதல்
12 க்கு வருவதால் ,வீடு,வாகனம்,கல்வி வகையில் விரயங்கள் /அல்லல் அலைச்சல் ஏற்படும்.
உங்கள் “சகலமும்” பிறருக்கு தான் பயன்படுமே தவிர உங்களுக்கு?
ஊஹூம்.
இயல்புக்கு மாறாக செயல்பட்டு நட்டமைடைவீர்கள். காசு எந்தளவுக்கு கரைந்தால் அந்தளவுக்கு
சேஃப். மிச்சம் பிடிக்க பார்த்தா ரெட்டிப்பா கரையுமுங்கோ .
நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம் .அதாவது ¼+ 9 என்ற காம்பினேஷன் ஏற்படும். இதனால் செலவுகளை –சில்லறை
பிரச்சினைகளை தீர்க்க முதலீடு சேமிப்பிலும் கை வைக்க வேண்டி வரலாம். அல்லது அதில் கை
வைக்க மறுத்து நிம்மதியை கெடுத்து கொண்டு,தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையறாவில் டென்ஷனை
அனுபவிப்பீர்கள்.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்.
இந்த கால கட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும்
பலன் தலைகீழாக மாறும்.
மகரம்:
உங்களுக்கு குரு 12/3 க்குடையவர் 10 ல் இருந்து தொழில் வகையில்
முதலீடு /விற்பனை துறையில் இருந்தால் சாதனை /அதிகமான பயணங்கள் இத்யாதியை தந்தார்.
தற்போது 11 க்கு வருவதால்
கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடு / அதிகமான பயணங்களால் இப்போது லாபம் அடைவீர்கள்.
லாபத்தில் நட்டம் என்ற வகையில் ஏதேனும் குறையலாமே தவிர பெரிதாய் விரயங்கள் இருக்காது..
இளைய சகோதரத்தின் உதவி கிட்டும்.ஆனாலும் மனசுக்குள்ள கன்னுக்குட்டி உதைச்சுக்கிட்டே
இருக்கும்.
நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம் . இது 12/3+8 என்ற காம்பினேஷனை தரும்.இந்த கால கட்டத்தில் செலவுகள்
குறையும் /அதே சமயம் காது /தோள் பட்டை தொடர்பான பிரச்சினை வரலாம். சூதானமா இருந்துக்கோங்க.
மரண செய்தி ஒன்றும் வரலாம்.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்.
இந்த கால கட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும்
பலன் தலைகீழாக மாறும்.
கும்பம்:
உங்களுக்கு குரு 11/2 க்குடையவர்.இவர்கடந்த காலத்தில் 9 ல் இருந்து சேமிப்பு,முதலீடு,சொத்து வகையில் அனுகூலத்தை
தந்தார். ரெவின்யூ இன் கம் – முதலீடா மாறுவதும் /முதலீடு அவசர செலவுக்கு உதவுவதுமாய்
நிலை சரளமாய் இருந்திருக்கும்.
அக்.12 க்கு பிறகு இவர் 10 க்கு வருகிறார். குரு பத்தில் வந்தால் பதவி பறிபோகும்
என்பார்கள். பொன்,பொருள் டாக்கிள் பண்ணும் போது கேர்ஃபுல்லா இருங்க. தொழில்ல கவனம்
செலுத்துங்க.ஜாய்ன்ட் ஷ்யூரிட்டி வேண்டாம். உபரியா ஒரு தொழில் ஆரம்பிக்க வாய்ப்பு வரும்
.ஆனாலும் அவாய்ட் பண்ணுங்க. (பிறவு உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணான்னு ஆயிரும்) உங்க
தொழில்ல மட்டும் முதலீடு செய்ங்க. சேஃப்.
நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம்.அதாவது 2/11+7 ங்கற காம்பினேஷன் வரும். இதனால உங்க
கொடுக்கல் வாங்கல் /லாபம் கருதிய செயல்களில் மனைவியின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகரிக்கும்.
இதனால டென்ஸ் ஆவீங்க. அவிக கை அப்பர் ஹேன்ட் ஆகும்.சகிச்சுக்கோங்க.(ஒரு மாசம் தானே)
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்.
இந்த கால கட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும்
பலன் தலைகீழாக மாறும்.
மீனம்:
உங்களுக்கு குரு 10/1 க்குடையவர் இவர் 8ல் இருந்து உடல் நல பாதிப்பு (வாயு கோளாறு,அஜீரணம்)
மறதி ,வீண் பழி –தொழில் தொடர்பான டென்ஸ் இத்யாதியை தந்துக்கிட்டிருந்தார்.(ஹவுஸ் வைஃப்னா
பரவால்ல ) இப்போ அக்.12 ஆம் தேதி இவர் 9க்கு
வரது நல்லது தான்.
தொழிலில் கிடைக்கும் வருவாயை சேமிப்பு,முதலீடாக மாற்ற திட்டமிடுவீர்கள்.
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
பிரபல சிவ சேத்திரம் ஒன்றுக்கு சென்று வருவீர்கள். தரும குணம் மேலோங்கும். ஆன்மீக நடவடிக்கைகள்
கூடும்.
நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம் . இது 1/10+6 என்ற காம்பினேஷனை கொடுக்கும். இதனால நோய் பாதிப்பு
(பல் –தலை –எலும்பு –முதுகெலும்பு ) கடன் ,எதிரிகள் தொல்லையை தரலாம். தொழிலிலும் போட்டி
கடுமையாகலாம்/தொழில் கடன் வாங்க வேண்டி வரலாம்.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம்.
இந்த கால கட்டத்தில் குரு பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சொல்லியிருக்கும்
பலன் தலைகீழாக மாறும்.
எச்சரிக்கை:
இந்த கு.பெ.பலனில் சிக்கல் வரும் என்று சொல்லப்பட்ட ராசிக்காரவிகளுக்கு பெசல் டிப்ஸ் கீழ் காணும் வீடியோவில்
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/f0LPdGVUJG8" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
Subscribe to:
Posts (Atom)