Monday, September 11, 2017

மின்சார கனவுகள்

1.எங்க ஸ்டேட்ல செய்தாப்ல பவர் ஜெனரேஷனையும் -பவர் ட்ரான்ஸ்மிஷனையும் ரெண்டா பிரிச்சுரனும். ஒன்னுக்கொன்னு தொடர்பே இருக்கப்படாது. (இதுவரைக்கும் சந்திர பாபு ஃபார்முலா)
இதுக்கு மேல நம்ம ஃபார்முலா. மொத 100 நாள் வரை கிரேஸ் பீரியட். இந்த 100 நாட்கள்ள ஜெனரேஷன்லயோ -ட்ரான்ஸ்மிஷன்லயோ வெட்டு விழுந்தா மெமோ – எக்ஸ்ப்ளனேஷன்னு விட்டுரனும். இந்த 100 நாளைக்குள்ள சனம் திருந்திரனும். பிரச்சினைக்கு காரணமான விஷயங்களை அரசு பைசல் பண்ணிரனும்.
101 ஆவது நாள்ளருந்து ரெண்டு பிரிவும் 100 சதம் வேலை செய்ய ஆரம்பிச்சுரனும். அப்படியில்லின்னா எத்தனை சதவீதம் ஜெனரேஷன்லயும் -ட்ரான்ஸ்மிஷன்லயும் “வெட்டு” விழுதோ அத்தனை சதவீதம் ஓவரால் சம்பளத்துல கட்.
இந்த அபராத தொகைய எப்படி எல்லா ஊழியர்களுக்கும் பங்கிடறதுன்னு ஒரு கேள்வி வரும். அவிகவிக வாங்கற சம்பளத்தோட விகிதத்துல ஷேர் பண்ணிரனும்
2.ஈ.பிக்கு சொந்தமான எல்லா இடங்கள்ளயும் -வசதி வாய்ப்புகளை பொருத்து கல்யாண மண்டபத்துலருந்து – ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வரை கட்டிரனும். கு.ப மரங்களாவது நடனும். (பைசா வரனும் அது முக்கியம்) .பயோ கியாஸ், சோலார் பவர் யூனிட்டு ,காற்றாலை மின்சார உற்பத்தி இப்படி எதையாவது செய்து பைசா புரட்டனும். நாம பவர் ஜெனரேட் பண்றது மக்களுக்காக – நமக்காக இல்லைங்கற கான்செப்ட் ஊழியர்கள் மைண்டுல நல்லா பதியனும்.
3.நிர்வாக செலவில் கு.பட்சம் 30 சதவீதம் வெட்டு விதிக்கனும். ஆரம்பத்துல புதுசா ஆட்களை வேலைக்கு எடுக்கும் போதே டென்டர் அடிப்படையில எடுக்கனும். அது எப்பூடி? நமக்கு தேவையான தகுதி உள்ள ஆட்களில் யார் குறைந்த சம்பளத்துல வேலை பார்க்க முன்வராய்ங்களோ அவிகளுக்கு ஆர்டர் போட்டுர்ரது.
4.ஸ்டேட்ல உள்ள எல்லா விளக்கு கம்பத்துக்கும் சைன் போர்ட் ஃபிட் பண்ணிட்டு அதுல விளம்பரம் எழுதி காசு புரட்டி நிறுவனத்துக்கு மாசா மாசம் ஃபிக்சடா ஒரு அமவுண்டை கொடுக்கிற ஏற்பாடு செய்யனும். ட்ரான்ஸ்ஃபார்ம் மேடைகள் உட்பட.
5.அலுவலகங்களை நல்ல காத்து,வெளிச்சம் வர்ராப்ல ஆல்ட்டர் பண்ணிரனும். காலை 10 முதல் மாலை 5 வரைன்னு உள்ள வேலை நேரத்தை காலை 5 முதல் 9 வரை பிறகு மாலை 6 முதல் 10 மணி வரைன்னு மாத்திரனும். அலுவலகங்களை டைம் ஷேர் அடிப்படையில தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு தரலாம்.
6.இரவு நேர அரசியல் கூட்டங்களுக்கு தடை ( கரண்டு திருடாதிங்கப்பான்னா கேட்கவா போறாய்ங்க)
7.டொமஸ்டிக் -கமர்ஷியல் பவருக்கு வித்யாசத்தை மிக மிக குறைச்சே தீரனும் (மின் திருட்டுக்கு இதுவும் ஒரு காரணம்) அதிகபட்சம் 10 சதவீதத்துக்கு மேல வித்யாசமே இருக்கக்கூடாது.
8.மின் கட்டணத்தை முன் கூட்டி கட்டற வசதியை கொண்டு வரனும். 3 மாச கட்டணத்தை முன் கூட்டி கட்டினா 5 சதவீதம் தள்ளுபடி .6 மாசம்? 10 % ,ஒரு வருசம் 15% அதுக்கு மேல எவனாச்சும் கட்ட முன் வந்தா பார்த்துக்கலாம்.
9.பகல்ல மின் விளக்கு ,மார்கழி குளிர்ல ஃபேன் உபயோகிச்சே தீரனுங்கற கண்டிஷன்ல உள்ள வீடுகள்ள மின் துறை ஊழியர்கள் புகுந்து சன்னல் ,வென்டிலேட்டர்லாம் மார்க் பண்ணிட்டு வந்துரனும். ஒரு மாசத்துல வீட்டுக்காரனே வச்சா சரி.இல்லின்னா காண்ட் ராக்டர் மூலமா சன்னல் வென்டிலேட்டர் வச்சுட்டு பில்லை வீட்டுக்காரனுக்கு அனுப்பிரனும்.
10. மின் கட்டண பாக்கி வச்சிருக்கிற பெரிய தலைகளுக்கு மருவாதியா சொல்லிப்பார்க்கனும்.இல்லின்னா வங்கிகளோட பேசி டிஃபால்ட்டர் லிஸ்ட்ல போட்டு குடைச்சல் கொடுக்கனும். ( மவனுவ எந்த வங்கியிலயும் பைசா கடன் பிறக்கக்கூடாது)
இதுவரை லார்ஜ் ஸ்கேல் ஐடியாஸ். இப்பம் ஸ்மால் ஸ்கேல் :
லட்டு தின்ன ஆசையா படத்துல பவர் “இந்த பவரை பார்க்காமலே பிடிக்கும்”பார். நெஜமாலுமே நாம யாரும் பவரை பார்த்ததில்லை.ஆனால் பவரை பிடிக்காதவுக ஆருமில்லை. அரசாங்கத்துக்கும் பவர்னா ரெம்ப பிடிக்குது.அதனாலதேன் ஹை ரிஸ்க் எடுத்து அணு உலை எல்லாம் திறக்கறாய்ங்க.
லம்பா அள்ளனும்னு நினைச்சா எதுவுமே ரிஸ்குதேன். சிறு துளி பெருவெள்ளம்,அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகரும். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மென்ட் . நான் பவர் ஜெனரேஷனுக்கு தரப்போற யோசனைகளின் அடிப்படை இதான்.
படிக்க இவரு காமெடி பண்றாரு போலன்னு தோனும்ஆனால் நெஜமாலுமே சீரியசா தான் இந்த யோசனைகளை தரேன். ( சிறு துளி பெரு வெள்ளம்)
1.சுழல் கதவுகள்:
பொது நிறுவனங்கள் ,விஐபிக்களின் இல்லங்களில் சுழல் கதவுகள் வைக்கலாம். கதவை சுத்தினா கீழே உள்ள டைனமோவில் பவர் ஜெனரேட் ஆகி பேட்டரியில சேவ் ஆகனும். பிசியான சாலைகளில் நடைபாதைகள் அமைத்து இடையிடையில் சுழல் கதவுகளை வைக்கலாம்.
2.ஓவர் ஹெட் டாங்கு:
தண்ணி ஏத்தும் போது நிச்சயம் பவர் தேவை.ஆனா இறங்கும்போது புவியீர்ப்பு சக்தியில பவர் இல்லாமயே இறங்குது.மெயின் குழாயின் இடையில் ஒரு சைஃபன் வச்சு -சைஃபனுக்கு டைனமோவ கனெக்ட் பண்ணலாம். இதை அரசு நிர்மாணித்துள்ள ராட்சத மேல் நிலை குடி நீர் தேக்க தொட்டிகளில் முதற்கண் அமல் செய்ய வேண்டும்.
3.பயோ கியாஸ்:
ஓட்டல் (முக்கியமா அம்மா ஓட்டல்), மெஸ், அப்பார்ட்மென்ட்ஸ், மேன்ஷன் ஹவுஸ் ,திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர்களில் அரசு பேருந்து நிலைய பொதுக்கழிவறைகளில் சத்துணவு மையங்கள்,பிரபல புண்ணிய சேத்திரங்களில் பயோ கியாஸ்
4.உடற்பயிற்சி மையங்கள்:
உடற்பயிற்சி மையங்களில் பெரிய மனிதர்கள் சக்தியை வீண்விரயம் செய்கிறார்கள் .உ.ப கருவிகளில் சிறிய மாற்றங்களை செய்து பவர் ஜெனரேட் செய்யலாம்.
5. நடைப்பயிற்சி மையங்கள்:
வயதில் மூத்த விஐபிக்கள் நடை பயிற்சிக்கு போகும்போதுதான் போட்டு தள்ளிர்ராய்ங்க. கொலையாளிகளை பிடிக்கிறது காவல் துறைக்கு பெரிய தலைவலியாயிருது. இதனால உரிய பாதுகாப்புடன் கூடிய நடை பயிற்சி மையங்களை துவக்கலாம்.சனம் நடக்க நடக்க பவர் ஜெனரேட் ஆகிறாப்ல செய்யலாம்.
6.எடை மேடைகள்:
ஒவ்வொரு சாலையிலும் லட்சக்கணக்கான வாகனங்கள் போகுது. எடை மேடை கணக்கா கிலோ மீட்டருக்கு ஒன்னு ஏற்பாடு செய்யனும் அதன் மீது வண்டி வாகனம் கடக்கும் போதெல்லாம் பவர் ஜெனரேட் ஆறாப்ல செய்யலாம்.
Post a Comment