Monday, November 14, 2011

உயிரை பறித்த பரிகாரம்: திகீர் அனுபவம்

ஜாதகம் இல்லாதவுக: பிரச்சினையும் தீர்வும்: 2

அண்ணே வணக்கம்ணே .. நேத்து பவர் கட்டோட டக் அஃப் வார் செய்து ஒரு பதிவு போட்டம். மேட்டரு இன்னாடான்னா ஜாதகம் இல்லாமயே நமக்கு வர்ர/வந்த பிரச்சினைகளை வச்சு மேற்படி பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கறதுதேன்.

உங்க பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கினவுங்க இங்கே கொடுத்திருக்கிற பரிகாரங்களை செய்ய ஆரம்பிங்க. நோயை விட சில நேரம் ட்ரீட்மென்டே பயங்கர லொள்ளு பண்ணிரும். அதனால பரிகாரங்களை ஸ்டார்ட் பண்றதுக்கு மிந்தி எப்போ -எப்பூடி ஸ்டார்ட் பண்றதுங்கற டிப்ஸை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிற ப்ளேயரோட ப்ளே பட்டனை அழுத்தி முழுசா கேட்டுருங்க.

சகட்டுமேனிக்கு செய்து சீன் ரிவர்ஸ் ஆயிட்டா நாம பொறுப்பு கடியாதுங்கோ

1.உங்க பிரச்சினைக்கு சூரியன் காரணம்னா :

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்/கேட்கவும் சொல்லும்போது தொப்புள் பகுதியில் இருந்து த்வனி புறப்படனும்.( அப்படி கற்பனை பண்ணுங்க)
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
7.படுக்கைக்கு முன் -டேபிள் கண்ணாடியின் கீழ் சூரியோதய காட்சி கொண்ட போஸ்டர் வைத்து அதை இமைக்காது பார்த்து மனதில் பதிக்கவும். தூங்கும் முன் தூங்கி எழுந்தபின் அக்காட்சியை மனதில் கொண்டுவரவும்.
8.காலை மாலை வெயில் உடல் மேல் படும்படி வாக் பண்ணவும்.
குறிப்பு:கிரகங்களின் காரகத்வங்களை அறிய நாளை வரை காத்திருக்கவும்.(ஸ் அப்பாடா நாளைய பதிவுக்கு இப்பமே கர்ச்சீஃப் போட்டாச்சு)
2.உங்கள் பிரச்சினைக்கு காரணம் சந்திரனானால்:

1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).ஜாலியா அப்படி நடந்துட்டும் வரலாம்

2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.

5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.

7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.

8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.

9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

11.படுக்கைக்கு முன் -டேபிள் கண்ணாடியின் கடல்+சந்திரன் இணைந்த காட்சி கொண்ட போஸ்டர் வைத்து அதை இமைக்காது பார்த்து மனதில் பதிக்கவும். தூங்கும் முன் தூங்கி எழுந்தபின் அக்காட்சியை மனதில் கொண்டுவரவும்.

உங்கள் பிரச்சினைக்கு காரணம் செவ்வாய் என்றால்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

( மற்ற கிரகங்களுக்கான பரிகாரம்+காரகத்வங்கள் அடுத்த பதிவில்)

இப்பம் ப்ளேயர் -எச்சரிக்கைகள்.உசாரய்யா உசாரு..டோட்டல் சைட்ஸ் உசாரு.