Sunday, November 6, 2011

எனது டைரி ( ப்யூர்லி பர்சனல்)


அண்ணே வணக்கம்ணே !

அந்த காலத்துல பள்ளிக்கூடம் போற குழந்தைகளுக்கு திங்கள் கிழமையானா ஜுரம் வந்திரும். ரீஜன் இன்னடான்னா சனி ,ஞாயிறு லீவை நெல்லா எஞ்ஜாய் பண்ணியிருப்பாய்ங்க. ஊட்ல தாத்தா பாட்டி, அத்தை, சித்தப்பா,பெரியப்பா, ஊட்டாண்ட பசங்க இப்படி டைம் பாஸுக்கு குறைவே இருக்காது.

படக்குனு லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போவனும்னா ரெம்ப கஷ்டமா இருக்கும். அவிக சப்கான்ஷியஸ் மைண்ட்ல "கொய்யால ஜுரம் வந்துட்டா நெல்லா இருக்குமே ஸ்கூலுக்கு போகாம தப்பிச்சுக்கலாம்னு" ஒரு தாட் பலம்மா இருக்கும்.

ஹ்யூமன் பாடி ரெம்ப நொய்மையானது . ஆனால் மனசு ரெம்ப பலமானது. மனசு அதிலயும் உள் மனசு போடற உத்தரவுக்கு உடல் உடனே அடி பணியும் .

இந்த மேட்டரை சொல்றப்ப அந்த காலத்துலன்னு ஒரு வார்த்தையோட ஆரம்பிச்சேன். அப்பம் இந்த காலத்துல லீவு முடிஞ்சு வர்ர ஒர்க்கிங் டேவுல பிள்ளைகளுக்கு ஜுரம் வர்ரதில்லையான்னு கேப்பிக .

மோஸ்ட்லி வர்ரதில்லிங்ணா. ஏன்னா அவிகளுக்கு ஸ்கூலு -ஊடு ரெண்டுக்கும் பெருசா வித்யாசம் கடியாது. ரெண்டு இடமும் அவிகளோட சுதந்திரம் -கிரியேட்டிவிட்டி - கவிதை போன்ற அறியாமை எல்லாத்துக்கும் ஆப்படிக்கிற இடங்களாத்தான் இருக்கு.

அதனால பெருசா வித்யாசம் இருக்கிறதில்லை. ஸ்கூல்லயும் படி படி , தாளி வீட்லயும் படி படி..கட்டிடம்னு இருந்தா வாசப்படி ,மாடிப்படின்னு ஏதோ ஒரு இழவு இருந்துதானே தீரனும். அதை எதுக்கு "பன்னா பன்னா"னு ஞா படுத்தனும்?

போன பத்திக்கு முந்தின பத்தியை மோஸ்ட்லி வர்ரதில்லைன்னு ஆரம்பிச்சேன். இந்த காலத்துலயும் ஜூரம் வருது. அது எப்பம்னா ஸ்கூல்ல டார்ச்சர், செக்ஸ் டார்ச்சர்னு எதுனா கிராஸ் ஆனா வருது,

1967 ல பிறந்த நான் 1972 ல ஸ்கூல் போக ஆரம்பிச்சு 1987 ல படிப்பு முடிஞ்சு போச்சு. நாம ஸ்கூல் படிச்ச கதையெல்லாம் சொன்னா 1977 க்கு அப்பாறம் பிறந்த புள்ளைங்க கண்ணீர் விடுவாய்ங்க. அந்த மாதிரி ஒரு அசால்ட்டான படிப்பு. அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் வருசத்துக்கு 3 பரீட்சை தேன்.

( காலாண்டு,அரையாண்டு,ஆண்டு தேர்வுதேன்) அசைன்மென்டு ,யூனிட் டெஸ்டுன்னா என்னன்னு கூட தெரியாது.

தமிழ் புஸ்தவம் மட்டும் தமிழ் நாடு அரசு பாட நூல் நிறுவனம் வழங்கும் அதே புஸ்தவம்தேன். மத்த சப்ஜெக்டுக்கெல்லாம் புஸ்தவமும் கடியாது . ம..ரும் கிடையாது. ஆனாலும் படிச்சோம்.

நாலாங்கிளாஸ்ல மொதல் முறையா இங்கிலீஷுக்கு ஒரு புஸ்தவம். ஆப்பிள்,பேபியில ஆரம்பிச்சு கடைசி பாடமே ஹி ஈஸ் அவர் டீச்சர். ஹி டீச்சஸ் இங்கிலீஷுன்னு பத்து வரி வந்தா சாஸ்தி.நமக்கு அப்பம் இங்கிலீஷுன்னாலே அலர்ஜி.

ஆறாம் க்ளாஸ்ல ஜே.வி.நாகராஜ்னு ஒரு வாத்யாரு. என்.டி.ஆர் மாதிரி ஒரு ஃபிசிக். சூப்பர் பர்சனாலிட்டி, சினிமால கூட ஆக்டு குடுத்தாருங்கோ. அவரு நம்ம முகராசி,அங்கலட்சணம்,சாமுத்ரிகம் பார்த்து ஏமாந்து போய் அசைன்மெண்ட் பேப்பரை திருத்திக்கிட்டு வரச்சொல்லிட்டாரு.அன்னைக்குதேன் போர்கால அடிப்படையில கீ ரெடி பண்ணிக்கிட்டு ஒப்பேத்தினம்.

மேலும் ஒரு கேள்விக்கு தப்பு தப்பா சொந்த வார்த்தைகள்ள எழுதியிருந்த பதிலை படிச்சு ரெம்பவே ஸ்லாகிச்சாருங்களா இங்கிலீஷ் மேல ஒரு ஆர்வம் வந்தது.

ஆறாங்கிளாஸ் வந்தப்பாறம் தேன் அசைன்மென்டு ,யூனிட் டெஸ்டுன்னா என்னன்னு தெரியவந்தது. அதுவும் சீரியஸ் எல்லாம் கடியாது. ரேங்க் மண்ணாங்கட்டியெல்லாம் தெரியாது.

ஆறுல இருந்து பத்துவரைக்கும் கூட சமூகவியல்,அறிவியல்,கணக்குக்கெல்லாம் டெக்ஸ்ட் புக் கடியாது. ஆரோ பொளைக்க தெரியாத வாத்யாரு பன்னெடுங்காலத்துக்கு மிந்தி டப் பண்ணி டிக்டேட் பண்ண நோட்ஸு தலைமுறை தலைமுறையா செலாவணியாயிட்டிருந்தது.

இந்தி மேட்டர்லயும் நாம லேட் பிக்கப்புதேன். ஆறாங்கிளாஸ்லயே இந்தி ஆரம்பிச்சிட்டாய்ங்க.ஆனால் 6 ,7 இந்தி டீச்சர் நெல்லா படிக்கிற பிராமண பிள்ளைங்களை மட்டும் டேபிளண்டை கூப்டு வச்சிட்டு பாடம் நடத்திட்டு (?) போயிரும். இதுல கடுப்பாகி இந்தின்னாலே வெறுப்பு. இத்தனைக்கும் டீச்சர் ப்ராமின் கடியாது.

எட்டாங்கிளாஸ்ல இந்தி வாத்யாரோட குடுமியோ அ அவர் உபயோகிச்ச வசவுகளோ ஏதோ ஒன்னு நம்மை கவர - அதே நேரம் தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா கோச்சிங்கும் கை கொடுக்க இந்திலயும் பந்தி வைக்க ஆரம்பிச்சோம்.

கைவசம் இந்தி பழமொழியெல்லாம் கூட உண்டுங்கண்ணா. திருப்பதியில தனியார் ஹை ஸ்கூல்ல 4th To 10th வாத்யாரா கூட வேலை செய்திருக்கமில்லை.

கணக்குல இந்த அல்ஜீப்ரா கொஞ்சம் போல தண்ணி காட்டினாலும் தெரியாத சங்கதியை எக்ஸுன்னு வச்சுக்கிட்டு டீ கோட் பண்ற மேட்டர் கொஞ்சம் பிடிக்கும். சைன்ஸுல கெமிஸ்ட்ரி ஃபார்முலால்லாம் கொஞ்சம் கலாய்க்கும்.ஆனாலும் உன்னைப்பிடி என்னைப்பிடின்னு 72 பர்சண்டோட பாஸ் பண்ணியாச்சு. ( மீடியம் ஆஃப் இன்ஸ்ட்ரக்சன் தமிழ் தேன்)

இண்டர்ல சிவிக்ஸ்,எக்கனாமிக்ஸ்,காமர்ஸ் (இங்கிலிஷ் மீடியம்) காமர்ஸ்ல மட்டும் ஃபர்ஸ்ட் இயர்ல பேலன்ஸ் ஷீட் டாலி ஆகாம 23 மார்க் வாங்கி குண்டு. அர்ரியர்ஸ்ல எழுதி 72 வாங்கியாச்சு.

நமக்கு ரெம்ப பிடிச்ச விஷயம் தோல்வி. அது கொடுக்கிற வாக்குவம் தான் சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி. இந்த சொந்தகதையெல்லாம் இங்கன சொல்றதுக்கு காரணம் என்னடான்னா இந்த மாதிரியான அசால்ட்டான படிப்பு நம்ம பால்யத்தை சிதைக்கலைன்னு சொல்லத்தேன்.

இந்த பக்கத்து வீட்ல பூச்செண்டு சுத்தறது, தீக்குச்சி அடுக்கறது, சேவல் பிடிக்கிறது, மணியில நோன்பு தட்டு போடறது,பொம்மை கொலு வைக்கிறது பொம்பள பிள்ளைகளோட சேர்ந்து நொண்டி விளையாட்டு,அஞ்சு கல்லு ,பல்லாங்குழி, அம்மா அப்பா விளையாட்டு, இதெல்லாம் ஒரு பக்கம் நடக்கும்.

இன்னொரு பக்கம் ஏரிக்குபோய் நீஞ்சறது , மிட்டூர்ல முக்கி ரெட்டி தோப்புல உள்ள கிணத்துல (இப்பம் தோப்பும் கடியாது -கிணறும் கடியாது) நீச்சல், தோப்புல மாங்கா அடிக்கிறது , ஆத்துக்கு போய் மீன் பிடிக்கிறது(இப்பம் அது சாக்கடை) பஸ் ஸடாண்டெல்லாம் போய் தீப்பெட்டி லேபிள் பொறுக்கறதும் நடக்கும்.

துண்டு பீடி அடிக்கிறது, தெருவுல பம்பரம் , ஜவுரா பில்லை, கபடி விளையாடறது இப்படி ஒன்னு விடாம சைல் ஹுட்டை எஞ்ஜாய் பண்றதுக்கு வழி விட்டதே மேற்படி அசால்ட்டான படிப்புன்னுதான் நினைக்கிறென்.

நம்ம வீட்டுக்கு சௌத்ல ஒரு மைதானம். மைதானம் நிறைய குடிசைங்க. அவிகளோடவும் இன்டராக்ட் ஆற வாய்ப்பு கிடைச்சது. அது ஒரு உலகம்.

நாலாங்கிளாஸ் படிக்கிறச்ச உடலுறவுன்னா என்னன்னு தெரியும் (தர்ம தரிசனம்) பருவம்னு எட்டணா விலையில புஸ்தவம்லாம் படிச்சிருக்கேன்னா காலேஜ் முடியறதுக்குள்ள என்னெல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நீங்களே கெஸ் பண்ணிக்கங்க..

ஊட்ல நம்ம படிப்பை பத்தி ஆரும் கண்டுக்கிடமாட்டாய்ங்க. அப்பா கெவுர்மென்ட் உத்யோகஸ்தர் . எவனுக்கும் வளைஞ்சு கொடுக்காத ,கை சுத்தமான கேரக்டர். ஆந்திராவுல எல்லா ஜில்லாலயும் வேலை செய்துட்டாரு.

லீவுல ஊட்டுக்கு வந்தா எங்கம்மாவை கேப்பாரு "சுசி! முருகன் இப்ப எந்த கிளாஸு? . ரெண்டு அண்ணனுங்களும் படிப்பை முடிச்ச பிறவு அன் எம்ப்ளாய்டா இருக்கிற ஃப்ரஸ்ட் ரேஷன்லயோ என்னமோ கொஞ்சம் ஓவர் ஆக்சன் செய்தது உண்டு. அதுவும் கன்டின்யூ ஆகாது.

இப்படி பல விஷயங்கள் நமக்கு தோதா அமைஞ்சதால ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி ஆயிட்டம். இல்லாட்டி நாம இருக்கிற கலருக்கும் அதுக்கும் பார்ப்பான்னு நினைச்சு மாஸ் கேரக்டருங்க நம்ம கிட்டே இஷ்டா....த்துக்கு விளையாடி ட்டிருப்பாய்ங்க.

ஒரு ஃப்ரெண்டோட பையன் ( ஆறாங்கிளாஸ் படிக்கிறான்) "அங்கிள்.. அங்கே ஜனங்கல்லாம் பையோட வெய்ட் பண்றாங்களே ..அது என்ன இடம்?"னு கேட்டான்.

"ரேஷன் கடை"ன்னு சொல்லவேண்டியதாயிருக்கு. இவனெல்லாம் படிச்சு இஞ்சினீர்,டாக்டரு,கலெக்டருன்னு ஆயிட்டா என்ன கதி?