அண்ணே வணக்கம்ணே!
குறிப்பிட்ட சில கிரகஸ்திதிகளை -கிரக சேர்க்கைகளை யோகங்கள்னு சொல்றாய்ங்க. இந்த யோகம் இருந்தா அது வரும், இந்த யோகம் இருந்தா இது வரும்னு ஊத்தறாய்ங்க. ஆக்சுவலா யோகம்னா கலப்பு/சேர்க்கைன்னு பொருள் சொல்லலாம். இதை கவனிங்க.
சம்யோகம் = உடலுறவு
ரெண்டு அ டூ ப்ளஸ் கிரகங்கள் சேர்ரதுக்கு யோகம்னு பேரு. ஆனால் அசலான பொருளே மறந்து போற அளவுக்கு எங்காளுங்க ( நான் உட்பட) செய்துட்டம்.
கிரகம்லாம் அரசு அதிகாரி மாதிரி. உங்களுக்கு பலன் தராம கழட்டிவிடறதுக்கு என்னெல்லாம் வழி இருக்குன்னு தேன் பார்க்கும்.
உங்க அப்ளிகேஷன்ல குண்டூசி குத்தி வச்சிருந்து அதை எடுக்கிற அதிகாரிக்கு அது சரக்குன்னு ஏறினா போதும் உங்க மனு கு.தொட்டிக்கு போயிரும். அந்த மாதிரி தான் கிரகங்களும்.
உங்களுக்கு யோகத்தை தரவேண்டிய கிரகம் அம்மா மாதிரி ஸ்ட்ராங்கா உட்கார்ந்திருக்கனும். சூரியன்ல அஸ்தங்கதம், ராகு கேது சேர்க்கை, 6,8,12 ல மாட்டிக்கிறது அ மேற்படி அதிபதிகளோட சேர்ந்துர்ரது இப்படியெல்லாம் மொக்கை ஆகியிருக்கக்கூடாது. முக்கியமா உங்க ஜாதகத்துக்கு பாவியா இருக்கக்கூடாது.
அவரோட தசை உங்களுக்கு உரிய வயதில் வரனும். ( இல்லாட்டி திவாரி மாதிரி அகாலமா அஜால் குஜால் வேலை செய்து மாட்டிப்போம்).
அந்த கிரக காரகத்வமுள்ள கல்வி, உத்யோகம் உங்களுக்கு வாய்ச்சிருக்கனும்.வாய்ச்சாலும் நீங்க எட்டி உதைக்காம இருந்திருக்கனும். இப்படி எத்தனையோ இஃப்ஸ் அண்ட் பட்ஸ்.
இந்த பதிவுல பஞ்சமகா புருஷ யோகங்கள்ள சிலதை பார்ப்போம்.
1.செவ்வாய்:
இவரு உச்சம் -ஆட்சி பெற்றால் ( மகரம் - மேஷம் /விருச்சிகம்) ருசக யோகம்னு சொல்றாய்ங்க. இந்த யோகம் ரிஷபம், மிதுனம்,கன்னி,துலா,மகரம்,கும்ப லக்னங்களுக்கு ஒர்க் அவுட் ஆகுமா ரோசிங்க. அட மேஷம்,விருச்சிக லக்னங்களுக்கு இவரு லக்னாதிபதி. அவிகளுக்கு உடல்,உள்ள நலனை தர்ரதுக்குள்ளயே நாக்கு தள்ளிரும். அப்பாறம் என்னத்த பூமி லாபத்தை தர்ரது? மகரலக்னத்துல செவ் உச்சம் பெற்றால் ஆசனத்துல கட்டிதான் வரும் ( நம்மாளு ஒருத்தனுக்கு ப்ளட் ஷுகரே வந்துருச்சு)
2.புதன்:
இவரு உச்சம் ஆட்சி பெற்றால் ( கன்னி - மிதுனம்) பத்ரயோகம்னு சொல்றாய்ங்க. இது மேஷம்,கடகம்,விருச்சிகம்,தனுசு, மீன லக்னங்களுக்கு ஒர்க் அவுட் ஆகுமா? கன்னி மிதுனம்னு பார்த்தா புதன் லக்னாதிபதி .அவிகளுக்கு உடல்,உள்ள நலனை தர்ரதுக்குள்ளயே நாக்கு தள்ளிரும். அப்பாறம் என்னத்த யோகத்தை தர்ரது?
(கோடு போட்டாச்சு ..ரோடு போட ஆரு தயாரு - மத்த யோகங்களை எல்லாம் ஆரு கிழிக்கப்போறிங்க? சுகுமார்ஜீ ,டவுசர் , வினோத்ஜீ )
இன்னைக்கு ஒரு பிரபலத்தோட ஜாதகத்தை ஆடியோல அனலைஸ் பண்ணியிருக்கேன். (ஆரோ கேட்டாய்ங்க.. காசா பணமா ..அதான் போட்டாச்சு) இதுல உள்ள யோகங்கள் எல்லாம் ஏன் ஒர்க் அவுட் ஆகாதுன்னும் விளக்கியிருக்கேன். கேட்டுட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்க மறந்துராதிங்கண்ணா.
வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.
யோக -அவயோக விளக்கம் கீழ்காணும் ப்ளேய்ர்லயும் தொடருது. ப்ளே பட்டனை அழுத்தி கேளுங்க.
4 comments:
///ஆரோ கேட்டாய்ங்க.. காசா பணமா ..அதான் போட்டாச்சு///
அண்ணே! என்னன்ணே இப்படி சொல்லிபுட்டீங்க. அதுக்குள்ள நம்ம பேரு மறந்துபுடுச்சா இல்ல நாம வாதாடுதனால ஏதுனா கோவமா?
இன்னும் பதிவை கேட்கலை. வீட்டுக்கு போய் கேட்டுட்டு அப்புறம் நம்ம கமெண்டை விபரமா போடுறேன்.
அண்ணே,
நமக்கு இப்பம் இன்னா வயசுங்கறிங்க 44. பசி,பட்டினி,சொறி,சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு.
நம்மை இன்னைக்கும் மிரட்டறது ரெண்டு விஷயம் தேன். ஒன்னு தப்பு பண்ணிருவமோங்கற பயம்.
அடுத்தது ஆருனா அவமானப்படுத்திருவாய்ங்களோங்கற பயம்.
இது எதுனா கிராஸ் ஆகும்னு நினைச்சாதேன் நாம அலார்ட் ஆறுமுகம்.
இல்லினா படித்துறை பாண்டிதேன்.
மேலும் நமக்கு புஸ்தவத்துல படிக்கறதுதேன் மனசுல நிக்கும். (அப்படி பழக்கமாயிருச்சு)
ப்ரவுசிங்னா என்ன ச்சொம்மா மேயறதுதானே.
பேரை சொல்லாததுக்கு இப்படியா கொத்த காரணங்கள் தான் இருக்கே தவிர கோவம் கீவம்லாம் இல்லிங்கண்ணே.
Pancha Mahapurusha happens only if they are in kendra to lagna or moon.
பஞ்சமகாபுருஷ யோகம் தொடர்பாக:
ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் லக்னாத் அ சந்திரலக்னாத் கேந்திரத்துல இருந்துட்டா மட்டும் போதாது..
அந்த கிரகம் லக்னாத் சுபனாகவும் இருக்கனும்.
Post a Comment