Sunday, August 28, 2011

அன்னா அசாரே ஒரு அரசியல் பஃபூன்


நாம ஏதோ ஒழுங்கு மரியாதையா அவன் அவள் அது , ஜோதிட பால பாடம்னு உடுப்பி ஹோட்டல் தனமா எழுதிக்கிட்டிருக்கம். ஆக்சுவலா இது சேஃப். சேஃப்டி ஜோன். நம்ம வாழ்க்கையில என்னைக்கு நாம ஒழுங்கா பொளப்பை பார்த்தோம்.

நாம எழுதறதையும் நாலு பேரு படிக்கிறாய்ங்க. அவிகளுக்கு ஆன்மீகம் - ஜோதிடத்தை தாண்டியும் ஒரு தாகம் இருக்கும். ஒரு தாக்கம் இருக்கும். நமக்கும் ஒரு பொறுப்பிருக்கு. இப்படி ஆன்மீகம் -ஜோதிடம்னு மூழ்கியிருந்தா நாளைய தலைமுறை காறி துப்பும்.

அதனாலதேன் இந்த " அன்னா ஹசாரே ஒரு அரசியல் பஃபூன் " என்ற பதிவு இவ்ளோ பீடிகை எதுக்குன்னா அன்னா ஹசாரேவை நக்கல் அடிச்சு எழுதற பார்ட்டிகளை ஒரு பிடி பிடிக்கத்தான். அப்போபாலபாடம் கோவிந்தாவான்னு டென்ஷன் ஆயிராதிங்க.அதும்பாட்டுக்கு தொடருது.அதை படிக்க இங்கே அழுத்துங்க.

அன்னா ஹசாரேவுக்கு வக்காலத்து வாங்கறோம்ன ஒடனே நமக்கு பா.ஜ.க கலரை கொடுத்துரப்போறிங்க.

ஏதோ ஒய்.எஸ் .ஆர் மாயையில விழுந்து ஒரு கட்டத்துல காங்கிரஸுக்கு வேணம்னா வக்காலத்து வாங்கியிருக்கலாமே தவிர பா.ஜ.க பக்கம் தலை வச்சு கூட படுத்தது கிடையாது.

நம்ம அரசியல் ஆசான் என்.டி.ஆர் பா.ஜ.கவுடன் கூட்டு வச்சிக்கிட்ட காலத்துல பா.ஜ.க ஒரு அப்பிராணி. சந்திரபாபு காலத்துல பார்கெய்னிங் பொசிஷனுக்கு வந்துட்டாய்ங்க. பாபர் மசூதி இடிப்புக்கு அப்பாறம் நம்ம மைண்ட்ல பா.ஜ.கவுக்கான இடம் சு..த்..தம். ஆய்ருச்சு.

இப்பம் மோடிய வச்சு மோடி வித்தை காட்டறாய்ங்க. நாம அதுக்கெல்லாம் மயங்கற மாதிரி இல்லை. அரசாங்கம்னா 24 மணி நேரம் கரண்டு கொடுத்துட்டா போதும்னு பேசறவுகளும் நாட்ல இருக்காய்ங்க. ஆனால் ஜன நாயகத்துல அதுவும் ரைட் டு ஈக்வாலிட்டிய அடிப்படை உரிமையா தந்திருக்கிற நாட்ல அரசாங்கம் மக்களுக்கு சாதி மத வேறுபாடில்லாம பாதுகாப்பா நல்வாழ்வு வாழச்செய்யனும். அதான் முக்கியம்.

ஒய்.எஸ்.ஜகன் மீதான சி.பி.ஐ வழக்கை விமர்சிச்சு பா.ஜ.க தலைவர்கள் பார்லிமெண்ட்ல பேசியிருக்காய்ங்க. இதனால ஜகன் பா.ஜ.க கூட்டுன்னு அலப்பறை பண்றாய்ங்க. அதை எல்லாம் நம்பாதிங்க. ஸ்டேட் பாலிடிக்ஸ் வேற . சென்டர் பாலிடிக்ஸ் வேற.

சென்டர் பாலிடிக்ஸ்ல காங்கிரஸும் -பா.ஜ.கவும் மார்க்கெட் லீடர்ஸ். இதுல ஒவ்வொரு கட்சி ஒவ்வொரு காலத்துல ஹார்ம்லெஸ்ஸா தோணும். அப்பம் எதிர்கட்சிங்க ஒருத்தரை மாத்தி ஒருத்தரை சப்போர்ட் பண்ணியே ஆகவேண்டிய நிலைமை.

உ.ம் காங்கிரஸ் போஃபர்ஸ் ஊழல்ல சிக்கினப்ப பா.ஜ.கவை சகிச்சுக்கவேண்டியதாயிருச்சு.
பாபர் மசூதி இடிப்புக்கப்பாறம் காங்கிரஸை சகிச்சுக்கவேண்டியதாயிருச்சு.

சரி சரி ஃப்ளாஷ் பாக் போதும். மேட்டருக்கு வந்துர்ரன்.

பதிவுலகத்துல மஸ்தா பேரு அன்னா ஹசாரே மேல கல்லெறிஞ்சிருக்காய்ங்க. எல்லாம் நம்ம கண்ல படும். அந்தமாதிரி எழுத்துக்களுக்கெல்லாம் ரேண்டம் சாம்பிளா என்வழி வலைதள எழுத்துக்களை எடுத்துக்கிட்டு நம்ம கருத்தை சொல்லிரலாம்னு ஒரு ஐடியா.

//அன்னா ஹஸாரேவை தேசப் பிதா காந்தியடிகளை விட ஒரு படி மேலே வைத்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம்//

இங்கே ஒரு கூட்டம்னு சொன்னதை நெல்லா வாட்ச் பண்ணுங்க. காந்தி தாத்தாவை கூட ஒட்டு மொத்த தேசமே தலை மேல வச்சு கொண்டாடலை. அப்பவும் ஒரு கூட்டம் தேன் தாத்தாவை சப்போர்ட் பண்ணுச்சு.

தலை மேல வச்சு கொண்டாடற கூட்டத்துல நாம இல்லை. தாளி எவனும் கண்டுக்கிடலை.கம்யூனிஸ்டெல்லாம் தூங்கறான். பா.ஜ.க பஜனை மடம் மாதிரி ஆயிருச்சு. அங்கனயே ஊழலை பங்கு போட்டுக்கறதுல பங்கு தகராறு .

இன்னம் மாயாவதி, சந்திரபாபு ,லல்லு ,முலாயம் எல்லாம் பாவம் சொந்த பஜனை ,சொந்த சோகங்கள்ள சிக்கி தவிச்சிட்டிருக்காய்ங்க.

மீடியா மீடியான்னு கிழிச்சுக்கறானுவ. இந்த மீடியா என்னத்தை கிழிச்சது . முன்னொரு காலத்துல போஃபர்ஸை வெளிகொண்டு வந்திருக்கலாம். இன்னைக்கு அதே பத்திரிக்கை ஈழத்தமிழர்கள் மேட்டர்ல எப்படியா கொத்த தப்பாட்டம் போட்டதுன்னு நாடறியும்.

இந்த மீடியா ஊழல் மேட்டர்ல என்னத்தை கிழிச்சது.தமிழ் நாட்ல தினசரி முன்னாள் மந்திரியெல்லாம் நில ஊழல்ல மாட்டி செயிலுக்கு போறானுவ. அந்த மந்திரியோட அடிப்பொடிகள் கொடுத்த முழுப்பக்க விளம்பரங்களை பொறுக்கித் தின்னுதானே இந்த மீடியா காலம் தள்ளிட்டு இருந்தது. அப்பம் தெரியாதா இவன் எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்தவன்னு. இது மீடியாவோட இழி நிலை.

Something is better than nothing. சர்க்கஸ்ல பார் விளையாட்டு நடக்குது. ஒரு ஆளு தவறி விழறான். அவனை பிடிக்க சூரர்கள் தவறும்போது அந்த வேலைய செய்ய ஒரு பஃபூன் செய்ய முன் வந்தா அவனை பாராட்டனுமே தவிர நக்கலடிக்கக்கூடாது.

//காந்தியடிகளை கேவலப்படுத்துவது என்று முடிவு செய்துவிட்ட பிறகு, என்ன சொன்னாலும் இவர்களுக்கு ‘ஏறப்போவதில்லை//

இந்த சாஃப்ட் வேர் -ஐ பாட்- கால் சென்டர் தலைமுறைக்கு காந்தியடிகளை ஞா படுத்தினதே ஹசாரே தான். இதுல கேவலப்படுத்தறது எங்க வருது தெரியலை.

//மக்களை ஏமாற்றுவதில் ஹஸாரே கைதேர்ந்தவராக திகழ்கிறார். உலகிலேயே பேரம் பேசி உண்ணாவிரதமிருந்த முதல் நபர் இந்த ஹஸாரேதான்.//

மக்கள் என்ன வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்கிற குழந்தைகளா ஹசாரே ஏமாத்திர்ரதுக்கு. கலைஞராலயே ஏமாத்த முடியலை. ஹசாரே எந்த மூலைக்கு?

இத்தீனி காலம் ஜன நாயகத்தின் நாலு தூண்களும் மக்களை ஏமாத்திக்கிட்டிருந்ததை வெளிச்சம் போட்டாரு அன்னா. அப்படி என்னதான் மக்களை மோசம் செய்துட்டாருன்னு சொல்றாய்ங்களோ புரியலை

//கிட்டத்தட்ட ஒரு பிளாக்மெயிலர் ரேஞ்சுக்கு மாறி அரசை மிரட்டிக் கொண்டிருந்த ஹஸாரேவை சூப்பர் ஹீரோவாகக் காட்டுவதில் மீடியாவுக்கு அப்படியொரு அலாதி ஆர்வம்.//

காந்தி தாத்தா அம்பேத்கரை செய்த ப்ளாக் மெயிலை விடவா அதிகம்? சுத்த பேத்தல் . அடுத்து மீடியாவோட ஆர்வம்..

மீடியாவும் ஒரு விபச்சாரி நிலைக்கு வந்து பல காலமாச்சு. அவிகளுக்கு குறிப்பிட்டசெய்தி மேல ஆர்வம் இருந்துட்டா போதாது. ஒன்னு அவிக மக்களுக்கு தர்ர ப்ரோக்ராமை ஸ்பான்ஸர் பண்ண சில்லறை பார்ட்டிங்க வேணம்.அல்லது அந்த ப்ரோக்ராம் நெஜமாலுமே மக்களால பார்க்கப்படனும். மக்களால பார்க்கப்பட்டா ஸ்பான்சரர்ஸ் கிடைப்பாய்ங்க. ஸ்பான்சரர்ஸ் கிடைச்சுட்டா மக்களால் பார்க்கப்படலின்னாலும் காட்டலாம்.

அன்னா மேட்டர்ல இன்னாடா நடந்ததுன்னா த பார்ரா இந்த தாத்தா நம்ம மனசுல வச்சு புழுங்கிக்கிட்டு இருந்த மேட்டரை இம்மாம் தில்லா ஒடைக்கிறாருன்னு சனம் ஃபீல் பண்ணாய்ங்க. அதான் ஹசாரேவோட வெற்றிக்கு காரணம். அவர் சாமானியனோட மனக் குரலை எதிரொலிச்சாரு.

அவரு தமிழ் வருசத்துக்கு மொத தினம் பொங்கலா இருக்கனும்னு உண்ணாவிரதமிருந்திருந்தா முரசொலியில வேணம்னா கலைஞர் இடம் கொடுத்திருப்பாரோ என்னவோ.மத்தபடி சனம் சீண்டியிருக்காது.

//இதன் விளைவு தன் நிலை என்ன என்பதை மறந்து இவர் இஷ்டத்துக்கும் பேச ஆரம்பித்துவிட்டார்.//

அப்படி என்ன தான் ஜன நாயகத்துக்கு விரோதமா -சட்டவிரோதமா பேசிட்டாருன்னு பார்ப்போம்

//அரசு ஹஸாரேவை ஆரம்பத்திலேயே ஒன்றுமில்லாமல் செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மன்மோகன் சிங் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளார்//

ஆரம்பத்துலன்னா அவரு சொந்த கிராமத்துல சாராயத்தை ஒழிச்சப்பயா? சனத்துக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தப்பயா? மன்மோகன் சிங்குக்கு வெற்றியாவது தோல்வியாவது . அவர் சோனியா கையில பொம்மைங்கோ. வேணம்னா சோனியான்னு சொல்லுங்க பொருத்தமா இருக்கும்.

//மீடியாக்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கிய ஒரு பலூனைப் பார்த்து மிரண்டுபோய், அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியது மக்களாட்சிக்கு நேர்ந்த அவமானம்.//

ஊதி ஊதி பெருசாக்கற மேட்டர்லாம் நடக்கனும்னா நீங்க முழுப்பக்க வண்ண விளம்பரங்களை அள்ளிக்கொடுக்கிற ஸ்டேஜுல இருக்கனும். ப்ரஸ் மீட் ஃபாலோட் பை லஞ்சுன்னு ப்ரஸ் க்ளப்புக்கு நோட் அனுப்பி நிருபர் பசங்களுக்கு கெடா வெட்டி விருந்து கொடுக்கனும். வெளி நாட்டு செல்ஃபோன் பரிசா கொடுக்கனும். அல்லது நீங்க ஆட்சியில இருக்கனும். அரசு விளம்பரங்களை அள்ளி விடனும்.மோடி கவர்மென்டு கல்கியோட ஒரு இஷ்யூவை ஸ்பான்சர் பண்ணுச்சே ..அதுதான் ஊதி பெருசாக்கிறதுன்னா.

அரசு பயந்தது ஊதி ஊதி பெரிதாக்கிய பலூனை பார்த்து இல்லிங்க. அன்னா கையிலெடுத்த இஷ்யூ அப்படி. அவர் தெரிவு செய்த மார்கம் அப்படி. அவரோட ஃப்ளாஷ் பேக் அப்படி. அவரோட அச்சீவ்மெண்ட்ஸ் அப்படி.

//சட்டத்தை மீறிய ஹஸாரேவை கைது செய்தது வரை சரியாக செயல்பட்ட அரசு, அடுத்து அவரை விடுதலை செய்ததும், இரண்டு மூன்று நாள் திகாரில் வைத்து போஷித்ததும் மகா கேவலம். அப்படியே குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியே போட்டு ஜெயில் கதவைச் சாத்தியிருக்க வேண்டும். நியாயமாக மற்றவர்களுக்கு இந்த ட்ரீட்மெண்ட்தான் திகாரில் கிடைத்திருக்கும். மீடியாவின் செல்லப்பிள்ளை என்பதால் ஹஸாரேவுக்கு இந்த சிறப்பு மரியாதை போலிருக்கிறது!//

பாஸு ! நீங்க இந்த கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை தந்தது அரசியல் சாசனம் .அது தந்திருக்கிற எழுத்துரிமை (ரைட் டு ஒப்பீனியன்) இது ஆளும் வர்கங்களுக்கு எதிராபோனா நம்மை கூட திகார்ல போட்டுருவாய்ங்க பராவால்லியா?

நாம நம்ம கருத்தை ப்ளாக்ல மட்டும் எழுதறோம். ஹசாரே தெரிவு செய்த மோட் ஆஃப் கம்யூனிகேஷன் உண்ணாவிரதம். அவரை கைது செய்தது சரின்னுட்ட பிறவு நீங்க எழுதறது ஒரு எழுத்து இதுக்கு ..என்னத்தை எதிர்வினை?

//இந்த லோக்பால் முழுவதுமாக சட்ட வடிவம் பெறப்போவதில்லை.//

பார்த்தியா தலை ! ஒங்களுக்கே தெரிஞ்சிருக்கு. இந்த அரசு எப்படியா கொத்த அர்ராக்கட்டைன்னு . இதுக்கு உறைக்கறாப்ல சொல்லனும்னு தேன் ஹசாரே ப்ளாக் மெயிலை தேர்வு செய்தாரு.

// இப்போதே அன்னா ஹஸாரே கேட்டது போல பிரதமர், நீதித்துறை, சிபிஐ எதுவும் வலுவான லோக்பாலில் இடம்பெறவும் இல்லை. அவ்வளவு ஏன், ஊழல் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனை, லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பதில் அரசுக்கு குறைந்த அளவிலான பங்கு என்ற நிபந்தனைகளைக் கூட அரசு ஏற்கவில்லை. ஆனால் இவை எதுவும் வெளியில் தெரியாமல் சமாளித்து, வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது ‘டீம் அன்னா//

அது சரி இதெல்லாம் லோக்பால்ல இடம் பெறனும்னு ஒரு ஆசை ஒங்களுக்கும் இருக்கில்லை. ஹசாரே கிழவாடி அவர் விட்டதை நீங்க தொடருங்க பார்ப்போம். டீம் அண்ணா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யலைங்ணா. கொண்டாட அனுமதி தந்திருக்கு. வேணம்னா அய்யரு கணக்கா நாளு நட்சத்திரம் குறிச்சு கொடுத்திருக்கு. மத்ததெல்லாம் தன்னிச்சையாத்தான் நடக்குது.

ஹசாரே தான் சொல்ட்டாரே ..இதுவரை நடந்தது பாதி யுத்தம் தேன் .இன்னம் ஒரு பாதி இருக்குன்னு சொல்ட்டாரே.

//உண்மையில் அரசும் தோற்று,//

இது மட்டும் 100 சதவீதம் கரீட்டு

//உண்ணாவிரதமும் தோற்றுப் போயிருக்கிறது. ஆனால் இதை யாருமே புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ போதைக்கு அடிமையானவர்களைப் போல அன்னாவுக்கு வெற்றி என்று கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.//

உண்ணாவிரதம் தோத்துப்போறதுன்னா ஹசாரே சாந்தினி சவுக்ல காம்ப்ளெக்ஸ் வாங்கிக்கினு முடிச்சுக்கினாரா? இல்லை ஒரு கோரிக்கையும் ஏற்கப்படாம செத்துப்பூட்டாரா? இன்னா கான்செப்ட்ல தோத்துப்போச்சுங்கறிங்க புரியலை.

அன்னாங்கறது மக்களோட உணர்வுகளுக்கான பிரதிபிம்பம். அதுதான் ஜெயிச்சிருக்கு. இதை அன்னாவும் சொல்லிக்கீறாரே .இது மக்கள் வெற்றின்னுட்டு.

//மீடியாக்கள் எந்த அளவு மிக ஆபத்தானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.//

மீடியாக்கள் எந்த அளவுக்கு பலகீனமானவர்கள்னு நீங்க தேன் புரிஞ்சிக்கிடலை. அன்னாவை காட்டினா சனம் பார்க்கிறாய்ங்கண்ணே .இல்லைன்னா ரெண்டாவது நாளே கடாசியிருப்பானுவ.

//சரியான நோக்கத்துக்காக இவர்கள் ஒருபோதும் குரல் கொடுப்பதே இல்லை//
இதை ஞானும் ஏத்துக்கிடறேன். அன்னா மேட்டரு ஒரு விதிவிலக்கு.

//ஒரு மனிதன் சாவதை லைவ்வாக காட்டி பரபரப்பேற்படுத்தும் இவர்கள், ஹஸாரேவை வைத்து பரபரப்பு கிளப்பியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.//

உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டரை கூட கிளப்பத்தேன் பார்ப்பாய்ங்க. கிளம்பினாத்தானே. கிளம்பலின்னா திராட்ல விட்டுருவாய்ங்க. அதான் மீடியா நேச்சர். அன்னா மேட்டர்ல " கிளம்பிருச்சுய்யா கிளம்பிருச்சு"ங்கறது தேன் மீடியாவோட அனுபவம்.

//அன்னா ஹஸாரே இவர்களின் இப்போதைய டிஆர்பி மந்திரமாக மாறிவிட்டதால், இன்னும் கொஞ்ச காலத்துக்கு அன்னா நாமத்தை பார்வையாளர்களுக்கு போடப் பார்ப்பார்கள்.//

டி.ஆர்.பி மந்திரமா எப்படி மாறினாரு? மக்களோட மனக்குரலை எதிரொலிச்சாரு அதை விட்டுட்டிங்களே

//அன்னா ஹஸாரே… ஊழலைப் போலவே இந்த நாட்டைப் பீடித்த வியாதியாகிவிட்டார். அவரது போலித்தனத்தை ஆண்டவன் வெளிச்சம்போட்டுக் காட்டுவாராக!//

எப்டி? எப்டி? - அதையும் சொல்ட்டிங்கணா நல்லாருக்கும்.

//ஹஸாரே என்பவர் எந்த அளவு ஆபத்தான அரசியல்வாதி என்பதற்கு இந்த உண்ணாவிரதத்தில் வெளிப்பட்ட அவரது நேர்மையின்மையே சான்று. முதலில் பிரதமர், சிபிஐ, நீதித்துறை மூன்றையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.

ஆனால் உண்ணாவிரதம் முடிவதற்குள் புதுப்புது கோரிக்கைகள், நிபந்தனைகளை அவர் முன்வைக்க, முந்தைய நோக்கங்கள் மறக்கடிக்கப்பட்டன. ஒரு நாள் கீழ்மட்ட அதிகாரிகளும் லோக்பாலுக்குள் வரவேண்டும் என்றார், பிறிதொரு நாள் குடிமக்கள் சாசனம் வேண்டும் என்கிறார். இவை ஏற்கப்பட்டால்தான் உண்ணாவிரதம் வாபஸ் என்று நின்றார். பிரதமரை சேர்க்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தை அவரோடு சேர்ந்து கோஷம் போட்ட மக்கள் உள்பட அனைவரும் மறந்துவிட்டார்கள்.//

அப்டின்னு நீங்க மட்டும் நினைச்சுட்டா எப்டிங்ணா? பேப்பர்ல டிவில துண்டு துண்டா வர்ரதை நம்பாதிங்க. எல்லாம் எழுத்து மூலமாத்தானே நடந்து கிட்டிருக்கு ( உங்க ஒக்காபிலரில பேரம்)

//இந்த லோக்பால் விவகாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட சமாச்சாரம்//

சோனியா அம்மா அவ்ள சீக்கிரம் முடிய விட்டுருவாய்ங்களா என்ன?

//கடந்த இரு தினங்களாக இவர் ( கிரண் பேடி) டெல்லியில் அடித்த கூத்துக்களைப் பார்த்தபோது, இந்தியாவின் அத்தனை அரசியல்வாதிகளும் இந்தப் பெண்மணியிடம் தோற்றுப் போவார்கள் போங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது! எனவே அடுத்த காட்சி மாற்றத்துக்கு அடி போட்டுள்ளனர்.//

யப்பா எவ்ளோ குட் நியூஸுங்ணா .. கிரண் பேடியும் தான் ஜெயிச்சு வரட்டுமே.. (அவிகஜெயிக்கிற மேட்டர் கூட முக்கியமில்லை அத்தனை அரசியல் வாதிகளும் தோத்துருவாய்ங்கன்னு சொன்னிங்களே அதான் செமை மேட்டரு. உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.


//தேர்தல் சீர்திருத்தம் உடனடியாக வேண்டுமாம். இப்போதைக்கு உண்ணாவிரதத்தை ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கிறாராம் ஹஸாரே. தேர்தல் சீர்திருத்தம் கோரி அடுத்த உண்ணாவிரதத்தை விரைவில் ஆரம்பிக்கப் போகிறாராம்.//

ஹும் ..நீங்க செய்தியாளரா இருந்திருந்தா இதை டாப்ல கொண்டு வந்திருப்பிங்க..


//“இப்போது பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் மோசமானவர்கள். இந்த மாதிரி யூஸ்லெஸ் எம்பிக்களை நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்காதீர்கள். இவர்களில் 150 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். நமக்கு தேவையான சட்டங்களை இயற்ற முடியாத பாராளுமன்றத்தில் இவர்கள் இருப்பதே தேவையற்றது,” என்றார். இதை அவர் பேசியபோது காலை 11.15 மணி.//

சூப்பரு.. தாத்தா ஏதோ விளக்கெண்ணையில கழுவுவாரு போலனு நினைச்சிருந்தேன்.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு அடிச்சு விட்டிருக்காரே.

//மாலையில் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஒரு கடிதத்தோடு வந்து ஹஸாரேவைச் சந்தித்தார். அடுத்த சில நிமிடங்களில் ஹஸாரே இப்படி திருவாய் மலர்ந்தருளினார்:

“பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் நல்ல புரிதலோடு செயல்பட்டுள்ளனர். இந்த சிறந்த முடிவை மேற்கொள்ள உறுதுணையாக இருந்த அத்தனைப் பேரையும் நான் மனதார பாராட்டுகிறேன். இந்திய மக்களுக்கு வெற்றிகிடைக்கச் செய்த அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”//

ஹய்யோ ஹய்யோ,,, இவ்ளதானா உங்க புரிதல். ஹசாரே எம்பிக்கள் எல்லாம் உத்தமர்கள்னு சொல்லலியே .. புரிதலோடு செயல்பட்டிருக்காய்ங்கனு தானே சொல்றாரு. இதெல்லாம் சபை நாகரிகங்க. இதைப்போயி .............

//அடேங்கப்பா… ஹஸாரே நவீன யோவான்தான் போங்கள். அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவிட்டால் அனைவரும் உத்தமர்கள். இல்லாவிட்டால் தேவையற்றவர்கள், கிரிமினல்கள், யூஸ்லெஸ்கள்…//

கடந்த பாராவே ரிப்பீட்டு. உடுங்க ஜூட்டு ..