Tuesday, August 2, 2011

தொழில்,உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு அடிச்சு பிடிச்சு 9 பாவம் முடிச்சு இப்பம் பத்தாம் பாவத்துக்கு வந்திருக்கம். இது ஜாதகரோட தொழில்,உத்யோகம் இத்யாதிய காட்டும் பாவம். இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு இடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

ஜாதகத்துல 9 ஆம் பாவத்தை தர்மஸ்தானம் -10 ஆம் பாவத்தை கர்மஸ்தானம்னு சொல்வாய்ங்க. இந்த ரெண்டு பாவாதிபதிகளும் சம்பந்தப்படறதை தர்ம கர்மாதிபதி யோகம்னு சொல்றாய்ங்க. தொழில்ல முழு ஈடுபாட்டை காட்டறவன் செய்யும் தொழிலே தெய்வம்னு இருந்துருவான்.இதனால கோவில் குளம் தானம் தருமம் இத்யாதி மேல எல்லாம் அவனுக்கு ஈர்ப்பு இருக்காது. ( இந்த நிலை 10 ஆம் பாவம் பலம் பெற்றா கிடைக்கும்)

அதே போல 9 ஆமிடம் பர்ஃபெக்டா இருந்தா அப்பா குண சீலரா இருப்பாரு.இவன் தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு இருப்பான். புராணம்,இதிகாசம் இத்யாதிகளை படிச்சு அவற்றின் சாரத்தை பிடிச்சுருவான். இதன் விளைவாக "வியாபாரம் த்ரோஹ சிந்தஹா"னு தோனிரும்.அதனால் தொழில்ல ஆர்வமிருக்காது.

இவிக ரெண்டு பேரும் ( தர்ம கர்மாதிபதிகள்) சம்பந்தப்படும்போது தொழிலை தர்மமா செய்வான். தர்மத்தை தொழிலா செய்வான். ஆக ரெண்டுமே தூளாயிரும். ஆனா ஒன்னுங்ணா நான் உழைக்கிறேன், சாண்டல் சோப்பா தேயறேன் (ஓடாங்கறது பழைய பிரயோகமாச்சே) வேர்வை சிந்தறேன்.ஏ.சிலருந்து மூக்கடைப்பு வந்து நான் பட்ட அவதி எனக்கு தெரியும் - இந்த மாதிரியெல்லாம் நாம பில்டப் கொடுத்தாலும் தாளி பைசான்னு வந்தா அதன் பின்னாடியே அந்த கருமமும் இலவச இணைப்பா வந்துரும், அதனாலதேன் பத்தாமிடத்தை கர்மஸ்தானம் - கேந்திரஸ்தானம் -இங்கன பாவியிருந்தாலும் பரவால்லை -பாம்பு இருந்தாலும் பரவால்லைன்னு ரிலாக்சேஷன் கொடுத்திருக்காய்ங்க.


இதெல்லாம் ஆணை பொருத்தவரை ஓகே. பெண்? மொதல்ல ஹவுஸ் வைஃபை பார்ப்போம். அவிக காலையில கண் விழிச்சதுல இருந்து கட்டில்ல/பாய்ல கட்டைய சாய்க்கிற வரை / இவ்ள எதுக்கு புருசங்காரன் சுரண்டினா அவன் பக்கம் திரும்பறது வரை தனக்காகவே - தனக்காக மட்டுமே செய்றது ஒரு மசுரும் கிடையாது.

எல்லாமே ஆத்துக்காரருக்காக /அவரோட ப்ரஸ்டிஜை காப்பாத்தறதுக்காகத்தேன். இது எப்படி கருமம் ஆகும்? காஃபி,டிஃபன்,சோறு,ராத்திரி டிஃபன் எதை சமைச்சாலும் தங்களுக்காகவே (மட்டும்) சமைக்கிறாய்ங்களா? இல்லையே. கழுவி,மெழுகி,அரைச்சி இப்படி எதை செய்தாலும் அது தனக்காக மட்டும் செய்யப்படற வேலை இல்லை. இது எப்படி கருமம் ஆகும்?

ஆணா கணவனை பாருங்க. அவன் செய்ற தொழில்/உத்யோகம் எல்லாமே முதற்கண் தனக்காக - தன் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சனுக்காக - ஐடென்டிட்டிக்காக - உத்யோகம் புருசலட்சணம்னு மேனேஜர் ஓட்டல் ரூம்ல ஸ்டெனோவோட கெட்ட காரியம் செய்துக்கிட்டிருந்தா இவன் ரிசப்ஷன்ல உட்கார்ந்து லாப்டாப்ல லெட்டர் ட்ராஃப்ட் பண்றானே எதுக்காக தனக்காக.

அந்த வேலை வெட்டி உத்யோகம் இல்லின்னா தன்னை கால் காசுக்கு மதிக்கமாட்டாய்ங்கனு அலறி புடைச்சு செய்யறான். இதனால அவனுக்கு கர்மஸ்தானமாவே ஒர்க் ஆகிற ஜீவனஸ்தானம்.. ஹவுஸ் வைஃப் விஷயத்துல மட்டும் தர்மஸ்தானமா ஒர்க் அவுட் ஆகுது.

ஆண் தொழில் செய்தா கர்மம் கூடுது (ஏன்னா அவன் தன் சுய நலத்துக்காக செய்யறான்) பெண் தொழில் செய்தா அவளோட பூர்வ கருமங்கள் குறையுது.ஒழியுது.

ஒரு விவாகரத்து வழக்குல மனைவி ஹவுஸ் வைஃப்ங்கறதுக்காக அவளுக்கு எந்த நஷ்ட ஈடும் கொடுக்க மாட்டேன்னு ஒரு புருசன் வக்கீல் மூலம் வாதம் செய்தப்ப ஜட்ஜு . ( ஹை கோர்ட்டுலயா சுப்ரீம் கோர்ட்டுலயா ஞா இல்லை) . கொய்யால ஒரு ஹவுஸ் வைஃப் செய்ற சர்வீஸுக்கு மார்க்கெட் ரேட் படி கேல்குலேட் பண்ணி கொடுரா நஷ்ட ஈடுன்னு தீர்ப்பு கொடுத்தாராம்.

கொத்தடிமை ஒழிப்பு சட்டம்னு அலப்பறை பண்றாய்ங்களே மொதல்ல அதை இல்லத்தரசிகள் விஷயத்துல அப்ளை பண்ணச்சொல்லுங்க.

ஷீர்டி சாயிபாபா வாழ்க்கையில ஒரு சம்பவம் நடக்குது. திடீர்னு ரெண்டு பேரை கூப்டு ஒரு ஏணியை தூக்கிக்கிட்டு அங்கிட்டு வா இங்கிட்டு போன்னு லொள்ளு பண்ணிட்டு தலா ரூபா கொடுக்கிறாரு. பக்தாள் " என்ன பாபா இதுல்லாம்"னு கேட்டப்போ சொல்றார். வேலை செய்தவனுக்கு அவனோட வியர்வை உலர்ரதுக்கு மிந்தி கூலி கொடுத்துரனும். இதை உபதேசிக்கத்தேன்னாராம்.

ஆனால் மனைவிங்கற கூலிக்கு நாம தர்ர கூலி என்ன? "சனியனே.. காபியா இது பூனை மூத்திரம் மாதிரி இருக்கு" "ஏண்டி! காஃபியை கொண்டாந்து வச்சயே சொல்லவேணா அறிவில்லை உனக்கு. சிகரட் முடிஞ்சு போச்சு. காஃபி ஆறிப்போச்சு"

ஒரு வேலைய - நம்ம வேலைய இன்னொரு ஆளை வச்சு செய்தாலே கருமம் கூடும். அவன் செய்த வேலைக்கு உரிய கூலி கொடுக்கலின்னா அது இரட்டிப்பாகும். தாளி கூலியும் கொடுக்காம உடையலும் விட்டா ?

இப்படி ஒரு இல்லத்தரசியின் ஜாதகத்திலான பத்தாம் பாவம் /அதிலான கிரகங்கள்/அதற்கு அதிபதியான கிரகம்/அதை பார்க்கு கிரகங்கள் எல்லாம் அவளுடைய கருமத்தை பொக்கி முக்தியை கொடுக்குது. ஆனால் ஆணின் ஜாதகத்திலான பத்தாம் பாவம் /அதிலான கிரகங்கள்/அதற்கு அதிபதியான கிரகம் /அதை பார்க்கும் கிரகங்கள் எல்லாம் அவனுடைய கருமத்தை கூட்டுகிறது.

சரி வேலைக்கு போற பெண்களோட நிலை என்ன? அவிக கைச்செலவுக்காகவோ -கால் செலவுக்காகவோ வேலைக்கு போனா அது அவிக கருமத்தை கூட்டவே செய்யும். ஆனால் பட்டா தாய்குலத்தை கேட்டா நூத்துக்கு 99.9%.. அப்பா போகச்சொன்னாரு அவர் கன்டின்யூ பண்ணச்சொன்னாருன்னுதேன் சொல்றாய்ங்க.


வருமான வரி ரெய்டுல மாட்டி வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா கேசை போட்டு மாட்டினவன் "இதெல்லாம் என் பொஞ்சாதி சம்பாரிச்சது'ன்னு சொல்லிர்ரான். கடன் காரன் வெட்ட வரேன்னா பொஞ்சாதியை விட்டு வாய்தா வாங்கறான். ஆஃபீசர் லீவு தரமாட்டேன்னா பொஞ்சாதியை விட்டு சொல்லச்சொல்றவன்லாம் இருக்கான்.

ஆக பெண்ணை ஆண் ஒரு மல்ட்டி ஸ்பானர் மாதிரி உபயோகிக்கிறான். அரசியல் வாதிங்க தப்பான முடிவுகளா எடுத்துட்டு -சரியான சமயத்துல சரியான முடிவை எடுக்காம கோட்டைவிட்டுட்டு -பிரச்சினை முத்திப்போய் கலவரம் நடந்தா உடனே ராணுவத்தை கூப்டுர்ராய்ங்க.

ஒரு கட்டட்த்துல ராணுவம் ங்கோத்தா நாம இல்லாம இவனுகளால ஆட்சியே பண்ணமுடியாது - அதுக்கு இவனுக என்ன பஞ்சாயத்து.. நாமே ஆண்டா என்னன்னு ரோசிக்க ஆரம்பிச்சுட்டா கஷ்டம். இங்கே ராணுவத்தோட இடத்துல பெண்களை வச்சு ரோச்சு பாருங்க. அவிக ரோசிக்க ஆரம்பிச்சா ரெம்ப கஷ்டம் இப்பமே ஆரம்பிச்சிட்டாய்ங்க.