Wednesday, August 24, 2011

ஜோதிட பாலபாடம்: 6


ஜோதிட பாடம் - ஆன் லைன் ஜோதிட ஆலோசனைன்னு பிசியா இருந்தாலும் - இடையில கொஞ்சம் போல காற்று திசை மாறி அடிச்சா கவிதைல்லாம் எழுதுவோம்ணே.

நம்ம எழுத்துக்களை வலையேற்றம் செய்ய நம்ம ஊரு பார்ட்டி ஒருத்தரு முன் வந்ததா முன்னொரு பதிவுல சொன்னது ஞா இருக்கலாம்.
அவருது கடகலக்னம் இல்லேங்கறதால இன்னைக்கும் மழைங்கற தலைப்புல நாம எழுதின கவிதைய தன்னோட கன்னிமரா லைப்ரரி வலைதளத்துல வலையேற்றியிருக்காரு. இங்கே அழுத்தி அதையும் படிச்சு பாருங்க.
இன்னைக்கும் ஜோதிட பால பாடம் இந்த பதிவிலயே தொடருது.

இடையில விட்டுப்போன அவன் அவள் அது தொடரும் தொடருது. ஆத்தாளை கண்டுக்க விரும்பறவுக இங்கே அழுத்துங்க.

அடுத்து என்ன ஜோதிட பால பாடம் தேன். ஜூட்..

செவ் கேது சேர்க்கை: ( 1-4-7-10-12 பாவங்களில்)
செவ்வாயுடன் கேது சேருவது பரிகாரம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடை முறையில் பார்க்கும்போது நிலம்,சகோதரம், எதிரிகள் தொடர்பாக விவகாரங்கள் வரலாம். தீரலாம். மேலுக்கு சமாதானமாய் போனாலும் உள்ளுக்குள் விரோதம் கனன்று கொண்டே இருக்கும். எச்சரிக்கை தேவை. நேரடி எதிரிகள் மட்டுமன்றி ரகசிய எதிரிகளாலும், துரோகிகள் சதிகாரர்களாலும் தொல்லைகள் ஏற்படும். நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து சந்தேக காரராக கூட தயாராகிவிடலாம். சில நேரம் தாங்களும் சதி திட்டம் தீட்ட முனைந்துவிடுவீர்கள். இவையாவும் தங்கள் உடல் நலனையும், மனைவியார் உடல் நலனையும்( 1-7 ல் என்றால்) பாதிக்க கூடியனவாகும்.

செவ் கெட்டால் பரிகாரம்:
போட்டிகள் வேண்டாம்.(ப்ளட் ஷுகர் கூட வரலாம்) , அஜீரணம், மலச்சிக்கல் தவிர்க்கவும் இன்றேல் பைல்ஸ் கியாரண்டி. பவழக்கல் வைத்த மோதிரம் ,முருகனை வழிபடவும்.
வைத்தியத்திற்கு அடங்காத வலி, பலகீனம் இருப்பின் :
காலை வெறும் வயிற்றில் வேப்பந்துளிர் சாப்பிடவும். அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
மேற்படி பரிகாரங்களை கட்டாயம் செய்து வந்தால் தோஷங்கள் கட்டுப்பட்டு முருகப்பெருமான் அருளால்
சனி பிடித்த காலத்தில்:
சம்பளத்துக்கு வேலை செய்வதே நல்லது. க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயிஸிடம் பி கேர்ஃபுல். எஸ்.சி வகுப்பினராலும், உடல் ஊனமுற்றோராலும் (முக்கியமா கால் தொடர்பான ஊனம்) பிரச்சினை வரலாம்.
யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹ்யாண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் நஷ்டம் தரலாம். மேற்கு திசை பயணம், முயற்சி தவிர்க்கவும்.

லக்னாதிபதி 4 ல் அமைந்த பலன்:
லக்னாதிபதி என்பவர் ஜாதகரின் உடல்,உள்ள நலனை காட்டுபவர். அந்த லக்னாதிபதி சுகஸ்தானமாகி தாய்,தாய்வழி உறவு ,வீடு,வாகனம்,கல்வி இத்யாதியை காட்டும் 4 ஆம் இடத்தில் அமைவது மேற்படி விசயங்களுக்கு நல்லதே. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுல்லயா. அதனால ஜாதகர் சோம்பேறியாக ,வீட்டோட மாப்பிள்ளையா மாறவும் வாய்ப்பிருக்கு.
லக்னம் துலா/ரிஷபமாகி அங்கன ஆட்சி பெற்றால்:
ஜாதகரை காட்டற கிரகம் சுக போகங்களை காட்டற சுக்கிரனாகி ,சுகஸ்தானமாகிய 4ல் அமைவது சுக போகங்கள், ஓய்வு, செக்ஸ், பண்டிகைகள்,விருந்து, பார்ட்டிகள் மீது ஆர்வத்தை அதிகரிக்கலாம் .இதனால் முன்னேற்றம் பாதிக்கப்படலாம். கலை,இலக்கியம்,சங்கீதம் இத்யாதியிலும் ஆர்வத்தை ஊட்டலாம். இது அளவுடன் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் பிரச்சினை இல்லை.
ராகு கேது கெட்டால்:
உடல் நலம் பாதித்தால் முடிந்தவரை இங்கிலீஷ் வைத்தியம் வேண்டாம். தங்களுக்கு மெடிக்கல் ரியாக்ஷன் நடக்க வாய்ப்புள்ளது. முடியாத பட்சம் ஸ்பெஷலிஸ்டையே அணுகவும். ஜெனரல் ப்ராக்டிஷ்னர் வேண்டவே வேண்டாம். சொந்தமாய் மருந்து மாத்திரை வாங்கி விழுங்க வேண்டாம். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
எட்டு ,பனிரண்டில் செவ்வாய்:
சம்பந்தமே இல்லாது ஒரு முறை காவல் நிலையத்துக்கு செல்லவேண்டி வரலாம். விபத்து , எலக் ட்ரிக் ஷாக் கூட நடக்கலாம்.கொதி நீர்/கொதி எண்ணெய் கால் கையில் தவறி ஊற்றிக்கொள்ளுதல் கூட நடக்கலாம்.

சுக்கிர செவ் சேர்க்கை:
மனைவியாரின் உடல் நலனில் பாதிப்பு சிறிதளவேனும் தொடர்ந்து கொண்டே இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். இது போன்ற அமைப்பு திருமண தடை, பெரியோர் விருப்பத்துக்கு மாறான திருமணங்கள், தம்பதிகளிடையில் பிரச்சினைகளையும் தரலாம்.
7ல் செவ் அ 7 க்கு அதிபதியுடன் செவ்வாய் சேர்ந்து இருப்பது:
மனைவி விசயத்தில் அதீத ரத்தப்போக்கு /கணவர் விஷயத்தில் ரத்தசோகை போன்ற பிரச்சினைகளை தரலாம். தம்பதியிடையில் முணுக் கென்றால் சண்டை கிளம்பும் நிலமையையும் தரலாம்.

குரு + புத சேர்க்கை:
சாதாரணமாக எந்த லக்னத்தை எடுத்தாலும் இந்த இருவரில் யாரோ ஒருவர் பாவியாக இருப்பார். ஒரு சிம்ம லக்னத்துக்கு மட்டுமே இந்த இருவரும் நன்மை செய்பவர்களாக இருக்கின்றனர். எனவே சிம்ம லக்னகாரர்கள் தவிர மற்றவர்களுக்கு இந்த சேர்க்கை நல்லதல்ல.
இது ஐந்தில் ஏற்பட்டிருந்தால்:
ஐந்து என்பது நினைவுகள், ஞாபக சக்தி, புத்தி கூர்மை,தியானம், வாரிசுகள் . அதிர்ஷ்டம் இத்யாதியை குறிப்பதால் ஆண் வாரிசின்றி போகலாம். எல்லாத்துக்கும் கணக்கு பார்க்கிற குணம் கொலிக்சுக்கு எரிச்சலை தரலாம்
6+12 சேர்க்கை:
கடன் தீருதல், வரவேண்டிய கடன் வசூல், விவகார ஜெயம், கோர்ட்டு வழக்கில் வெற்றி, நோய்கள் குணமாதல், விவாதத்தில் வெற்றி, சத்ரு நாசம் ஆகிய பலனை தரும்.
3+12 அல்லது 3+6 சேர்க்கை:
சகோதர நாசம் அவர்கள் நஷ்டப்படுதல் , அவர்களால் ஜாதகர் நஷ்டப்படுதல் ,சகோதர வர்கம் நோய்வாய்படுதல், கோர்ட்டு வழக்கில் சிக்குதல் ஆகியவை நடக்கலாம்.
9+12 சேர்க்கை:
இதன் காரணத்தால் தந்தை வழி சொத்தில், நீண்ட கால சேமிப்பில் ஒரு பகுதி வீண் விரயமாகும். தூர பிரயணங்களால் நஷ்டமேற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காரணமாக சுப செலவுகளும் ஏற்படும்.
9+3 சேர்க்கை:
சொத்து வாங்குவதில் அ விற்பதில் அல்லல் அலைச்சல் அதிகரிக்கும். வெளி நாடு செல்வதாலும் ,வெளி நாட்டு காரர்களுடன் வியாபாரம் செய்வதாலும் நஷ்டமேற்படும். ஒரு கட்டத்தில் உடன் பிறப்புகளுடன் சொத்து விவாதமேற்பட்டு ஜாதகருக்கு லாபகரமாகவே விவகாரம் முடியலாம்.
9+6 சேர்க்கை:
தந்தை நோய்வாய்படலாம். தந்தை வழி சொத்து காரணமாய் கடன் வழக்கு ஏற்படலாம்.
9+6 சேர்க்கைக்கு பரிகாரம்:
சொத்து வாங்குகையில் கையில் பணமிருந்தாலும் சிறு தொகையாவது கடன் வாங்கி வாங்கவும்.
6ல் சூரியன்:
பொதுவாக இது பாவகிரகம் என்பதால் 6ல் நின்றது நலமே. சத்ருஜயம்,ரோக நிவர்த்தி ,ருண விமுக்தி ஏற்படும்.ஆனால் தலை,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகளும் வரலாமுங்கோ.

எச்சரிக்கை:
பாடத்துக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டுறாதிங்க. கேட்கிறவுகளுக்கு ஒரு கேள்வி படத்துல உள்ள பெண் தன் பேனாவால் சுட்டிக்காட்டும் இடம் ஜாதகத்துல எத்தனையாவது பாவம்?

குறிப்பு:
படத்தை மட்டும் பார்க்கிறவுகனால இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாதுங்கோ?

பாடத்தை பார்க்கிறாய்ங்களா? படத்தை பார்க்கிறாய்ங்களா? தெரிஞ்சுக்க இதெல்லாம் ஒரு டெக்னிக் (உஸ் ..அப்பாடா படத்தை ஜஸ்டிஃபை பண்ணியாச்சு)