Monday, August 22, 2011

ஜோதிட பாலபாடம்: 4


அண்ணே வணக்கம்ணே !
பால பாடம் புரியலைன்னு நிறைய புகார் வருது. சனங்களுக்கு அதிகாரம் மட்டும் இருந்திருந்தா நம்மை திகாருக்கே அனுப்பியிருப்பாய்ங்க.அவிக புகார்ல முக்கிய அம்சம் என்னன்னா வரிசைப்படி இல்லை. ஜோதிடம் என்ன முருகன். நாம என்ன ஔவையாரா ஒன்று ரெண்டுன்னு வரிசைப்படுத்திப்பாட. (ச்சொம்மா நக்கல் தேன்)
ஜோதிஷத்துல உள்ளதெல்லாம் 9 கிரகம் , 12 பாவம் தேன். சொந்த சிஸ்டத்துல ப்ரவுஸ் பண்றவுக 9+12 =21 ஃபைல் ஓப்பன் பண்ணி வச்சுக்கிட்டு இந்த தொடர்ல வர்ர மேட்டரை எல்லாம் அந்தந்த கிரகம் அந்தந்த பாவம் தொடர்பான ஃபைல்ல போட்டுக்கிட்டே வந்தா ஒழுங்கான தொகுப்பு தயாராயிரும்.
பாவ வரிசை:
முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்


2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்


3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்


4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்


5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,


6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு


7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்


8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்


9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.


10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

கிரக வரிசை;
சூ ,சந், செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்
சமைத்துப்பார் புஸ்தவத்துல தாளி ஒவ்வொரு ஐட்டத்துக்கும் தேவை ,செய்முறைன்னு ஒரே முறை ரிப்பீட் ஆயிட்டே இருக்கும். ஆனால் நான் அய்யா சமையலுக்கு தேவை உப்பு,புளி,காரம். சிலதுக்கு கல்லுப்பு,சிலதுக்கு சால்ட் போடுவம் - சிலதுக்கு புளியை அப்படியே போடுவம்,சிலதுக்கு கரைச்சு விடுவம், சிலதுக்கு லெமன் ,காரம்னா சிலதுக்கு காஞ்ச மொளகா,சிலதுக்கு பச்சை மொளகா,சிலதுக்கு மிளகாய் பொடி இதான் சமையலுன்னு சொல்றேன்
வரிசையா எழுதித்தொலைச்சா நீங்க எனக்கு அடிமையாயிருவிங்க. அதே சமயம் நான் கச்சா முச்சான்னு எழுதி நீங்க உங்க சொந்த ஆர்வத்துல தொகுத்து மைண்ட்ல ஏத்திக்கிட்டா நீங்க சுதந்திரர்களா இருக்கலாம். இப்பம் புரியுதா..ஏன் வரிசைப்படி எழுதலைன்னு. (ஸ்..அப்பாடா கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா)

சரி இன்னைக்கும் பால பாடம் தொடருது
கேது கெட்டால்:
தினசரி ஒரு மணி நேரம் - வாரம் ஒரு தினம் (திங்கள்) காவி உடை உடுத்தி வினாயகரை தியானம் செய்யவும். இதர மத நூல்களையும் படிக்கலாம். ( தியானம்னா மனசுக்குள்ள எழும் சிந்தனைகளை கவனிக்கிறது - அந்த கூட்டத்துல வினாயகர் எங்கனா கிராஸ் ஆறாரா பாருங்க போதும்)
சனி காரகம் கொண்ட மனிதர்கள்;
கீழ் சாதியினர் கருப்பாக இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்
இவர்களால் தொல்லை ஏற்பட்டால் பரிகாரம்:
திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்யவும். (பன்றி முகத்துடன் விஷ்ணு) அல்லது வாராஹியையும் வணங்கலாம். ( பன்றி முகத்துடன் கூடிய அம்மன்)
செவ்வாய் கெட்டால்:
முருகனை வழிபடச்செய்யவும். செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி கஷாயம் போட்டு குடிக்க சொல்லவும். ரத்த விருத்திக்கு தேவையான ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்ற சொல்லவும். செம்பு காப்பு/வளையல் அணியவும் ஈயப்பூச்சு கொண்ட செம்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் நல்லது. குறைஞ்ச பட்சம் இப்படியா கொத்த பாத்திரத்துல வச்சு சாப்பிடுங்க.குடிங்க
சந்திர மனிதன்:
சஞ்சல சுபாவம் கொண்டவராக கற்பனை, பரபரப்பு மிக்கவராக இருந்தாலும் ஆழமான யோசனை உள்ளவராக இருப்பார். தன் கருத்துக்களை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பார். சுற்றுபயணங்கள், பயணங்கள் என்றால் விருப்பம் உள்ளவராக இருக்கலாம்/சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மீது கவர்ச்சி இருக்கும்.
ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அதை முழுமூச்சாக முடிக்கும் உறுதி இல்லாவிட்டாலும் பல்வேறு வேலைகளுக்கிடையே அனைத்து வேலைகளையும் தவணையில் சிறிது சிறிதாக முடிக்கும் தனமை இருக்கலாம்.
பரிகாரம்:
வண்ண மீன் வளர்ப்பு, கன்னியா குமாரி வழிபாடு, ஊஞ்சலாடுதல், நிலாச்சோறு, ஸ்படிக மாலை, முத்து மாலை , முத்து மோதிரம்.

4ல் ராகு:
ஜாதகருக்கு படிப்பில் தடை ஏற்படலாம். அன்னிய மொழியில்/ நடைமுறை வாழ்வில் வித்தகராவார்.இதய பகுதியில் மச்சம் இருக்கலாம்.
சூரியன் சுப பலமானால்:(பகல்ல பிறந்திருந்தா)
இவருக்கு சிறிய தந்தை , பெரிய தந்தை போன்றோரின் அன்பு, ஆதரவு கிட்டலாம்.
சனி தொடர்பான கணவர், மனைவி:
இவர் தகுதிக்கு சமமானவராக இல்லாது போகலாம். தம்பதியிடையில் சச்சரவுகளும் ஏற்படலாம். . சிறு வாகன விபத்தில் கால் தொடர்பான பிரச்சினை. பொருந்தா காதல் போன்ற விவகாரமும் தலை காட்டலாம்.
\பெண் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டால்:
பிறப்புறுப்பு கருப்பை தொடர்பான மருத்துவ பிரச்சினைகளும் வரலாம்
சுக்கிரன் கெட்டால் பரிகாரம்:
லட்சுமிக்கு சுமங்கலி பூஜை, எளிய வாழ்வு. ஃபர்னிச்சர்ஸ், ஸ்னேக்ஸ், சுவீட்ஸ், சாட்டிங், டி.வி, ஏ.சி, வாசனா திரவியங்கள்,பார்ட்டி,கெட் டு கெதர் ,சுப காரியங்களில் பங்கேற்பது லக்சரி தவிர்க்கவும்.
11 கெட்டால்:
இவருக்கு முன் பிறந்த மூத்த உடன் பிறப்புக்கு இந்த ஜாதகம் அனுகூலமல்ல.
சனி செவ்வாய் சேர்க்கை:
தனது தாயின் கருவில் இருந்த போதே தூரத்து/ நெருங்கிய உறவில் துர்மரணம் அ அகால மரணம் சம்பவித்திருக்கலாம். மேலும் ரத்தம் கெடுவதால் வரும் நோய்களும் வாட்டலாம் . உ.ம் கட்டிகள், ப்ளட் ஷுகர் ஒரு உயில் மூலமாகவோ நஷ்ட ஈடு வகையிலேயோ தனவரவு ஏற்படலாம்.
பரிகாரம் : குல தெய்வத்துக்கு பலி பூஜை. நட்பு /உறவுக்கு நான் வெஜ் டின்னர் ஜாதகரும் சாப்பிடலாம்.
இரண்டில் ராகு/கேது:
இவருக்கு பேச்சு, கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல், ஈ என் டி பிரச்சினைகள் ( காது, மூக்கு, தொண்டை) தொல்லை தரலாம். குடும்பத்திற்கு கடன் ஏற்படலாம்.
ஜாதகர் அடிக்கடி பேச்சு மாறுதல், திடீர் என்று கிசு கிசுப்பாய் பேசுதல், திடீர் என்று கத்தி பேசுதல் , மிமிக்ரி செய்தல் நடக்கலாம்.
குரு கெட்டால்:
தனக்கு மீறிய தான தருமம் அ கோர்ட்டு நடவடிக்கை அ அரசியல் நடவடிக்கை காரணமாக பொருளாதார நெருக்கடி ,கேஸ்ட்ரிக், பிரச்சினைகள் வரலாம்.
லக்ன சனி:
மேலுக்கு மந்த புத்தி உடையவராக, சோம்பல் கொண்டவராக இருப்பார். சனி லக்னத்துக்கு சுபனாகில் அதிர்ஷ்ட சாலி. டெக்னிக்கலாய் முன்னேறி குறைந்தது 8 பேருக்கு வேலை வாய்ப்பு தருவார்.
சனி தொழில்:
இரும்பு,ஆயில், க்ரானைட்ஸ், செகண்ட் ஹேண்ட் பொருட்கள், விவசாயம் தொடர்பானவை , வெட்டினரி துறை, கருப்பான பொருட்கள், துர் நாற்றம் வீசும் பொருட்களில் நல்ல லாபம் முன்னேற்றம் கிட்டும் .
சனி சுபனாக இருந்து படிக்கும் வயதில் சனி தசை :
கல்வியில் சிறு தடைகள் ,ஆர்வமின்மை, பின் தங்குதல் நடக்கலாம். என்றாலும் கல்வி தொடரும். அது தொழில் நுட்ப கல்வியாக இருந்தால் பிரச்சினை இல்லை.
செவ்வாய் கெட்டால் /முக்கியமா புத செவ் சேர்க்கை::
உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், வெ ந் நீர் , சுடும் எண்ணை , மின்சாரத்தாலும் பிரச்சினை ஏற்படலாம் எச்சரிக்கை தேவை.
சனி கெட்டால் ( முக்கியமாக எட்டாமிடத்துடன் தொடர்பு ஏற்பட்டால்) பலன் + பரிகாரம்:
ஜாதகருக்கு இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும்.
4ஆமிடம் சுபபலமானால்:
ஜாதகருக்கு சொந்த வீடு, வாகன யோகம் ஏற்படும்.
சூரியன் கெட்டால் பரிகாரம்:
பரிகாரம் : காயத்ரி மந்திர ஜபம், சூரிய நமஸ்காரம்.
சூரியன் சுபபலமானால்:
ஜாதகர் வாழ்க்கை கல்வி பயின்று ஆஷாட பூதியாக இல்லாவிட்டாலும் தமக்கென்று ஒரு ஃபிலாசஃபியுடன் வாழ்வார்.
லக்னாதிபதி விரயம் :
சதா சர்வ காலம் தங்கள் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது போன்ற குணங்கள் ஏற்படும்.
கேந்திர சுக்கிரன்:
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். காதல் ,கல்யாணம் வகையிலும் அதிருப்திகள் ஏற்படும். பொருந்தா காதல், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம்,மனைவியுடன் தகராறுகள் , பெண்களால் விவகாரம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.
சுக்கிரன் கெட்டால் பரிகாரம்:
வெண் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வெள்ளியன்று லட்சுமி பூஜை செய்க.சுமங்கலிகளுக்கு (6 பேர்) தாம்பூலம் வழங்கவும். வெள்ளி ஆபரணங்கள் அதிகம் அணியவும். வெள்ளி பாத்திரங்கள் உபயோகிக்கவும்.