Sunday, July 24, 2011

ஆண்கள் X பெண்கள் : ஆன்மீக போக்கு


அண்ணே வணக்கம்ணே !

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும்னு ஒரு வேலைய எடுத்தாச்சு. அதை முடிச்சே தீரனும்னு "ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்பதிவை தொடர்ந்துக்கிட்டிருக்கோம். சாமி,பூதம்,பெரியாரு, நித்யானந்த பாபா (இவர் வேற பார்ட்டி-பெரியார்+ நித்யானந்த பாபா படம் தேன் நம்ம டெஸ்க் டாப்ல இன்னைக்கும் இருக்கு ) ஆரானாலும் சரி நமக்கு கொஞ்சம் போல பீஸ் ஆஃப் மைண்டை கொடுத்து இந்த தொடரை முடிக்க வச்சா கோடி புண்ணியம். வேற ஆருக்கு? நமக்குத்தேன். ஆண் பெண்கள் ஒரே யுத்தத்தை ஒரே அணியிலிருந்து நடத்தவேண்டிய நிலையில ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டுக்கிட்டு -டார்ச்சர் பண்ணிக்கிட்டு அல்பாயுசா போயிர்ராய்ங்கப்பா.

அனானி கமெண்ட் போடற நாதாரிய கூட சாகனும்னு நான் நினைக்கமாட்டேன். நம்ம எதிரி செத்தா அவன் இத்தீனி நாளு நமக்குள்ள ஒரு அங்கமா இருந்ததால நமக்குள்ளயும் ஏதோ செத்துப்போயிரும். அதனால ஆரும் சாகக்கூடாது. கொய்யால விதி வந்து செத்தா சாகட்டும். சாவை எதிர் நோக்கி போய் வரவேற்கிற பிசினஸ் இருக்கக்கூடாதுங்கறதுதேன் நம்மளோட முக்கிய நோக்கம்.

கடந்த அத்யாயத்துல (9) ஒன்பதாம் பாவ காரகத்வத்துல அப்பாவை பொறுத்தவரை ஆண் பெண் இடையில் என்ன வித்யாசம்னு பார்த்தோம். இப்பம் மதம் - தெய்வம் - குரு -குரு உபதேசம் -புண்யக்ஷேத்திர தரிசனம்- ஆன்மீகம் ஆகிய விசயங்கள்ள ஆண் பெண்ணுக்குள்ள என்ன வித்யாசம்னு பார்த்துருவம்.

ஆன்மீகத்தோட முக்கிய நோக்கமே நம்மை நாம இல்லாம ஆக்கிக்கறதுதேன். இந்த அனானி கமெண்டெல்லாம் பார்க்கிறச்ச பார்த்தாப்லயே கியாபகம் வச்சுக்கறதில்லை. யாரோ காத்துவாக்குல மெசேஜ் கொடுத்தாப்ல நினைச்சுக்கறது.

"அடடே நாம இந்த ஆப்ரிக்கதீவுல வந்து மாட்டிக்கிட்டமே இங்கன கம்ப்யூட்டர் இல்லை இன்டர் நெட் இல்லை. இது நிஜமா பொய்யானு கூட தெரியலை .சரி ஊருக்கு போனபிற்பாடு பார்ப்போம்னு அடுத்த வேலைய பார்க்க ஆரம்பிச்சுர்ரது.

நம்மை நாம இல்லாம ஆக்கிக்க துணியனும்னா நாம நமக்கு சுமக்க முடியாத பாரமாயிருக்கனும். (அதாவது ஆளுமை - அகந்தை - சக்தி எல்லாம் உச்சத்துல இருக்கனும்.) நம்மை நாம இல்லாம ஆக்கிக்கிட்டா அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு ஆண் ஒவ்வொரு உடலுறவுலயும் ஃபீல் பண்றான். உச்சம் பெறுகிறான்.

அவனோட சாகும் இச்சை அதாவது தன்னைத்தான் இல்லாம ஆக்கிக்கிற கோரிக்கை ப்ளாக் அவுட் மூலம் நிறைவேறுது. (இங்கன நாம குறிப்பிடறது உட்டாலக்கடி உறவை பத்தித்தேன் - நாம ஒரு காலத்துல பொட்ட அஜால் குஜால் டெக்னிக்கை எல்லாம் உபயோகிச்சு " நின்னு விளையாடினா" அதனோட எஃபெக்டே வேற)

வீர்ய ஸ்கலிதத்துக்கு மிந்தி அவனோட கொல்லும் இச்சையும் /வீ.ஸ்கலிதத்த்துக்கு பின் சாகும் இச்சையும் ஒரு சேர நிறைவேறுது. இதனால அவனுள்ளான "எதுவோ" அண்டை வெளியுடன் ஒரு கணமேனும் தொடர்பு கொள்ள முடிகிறது. அவன் மனம் அந்த தொடர்பை நீட்டிக்க துடிக்கிறது.

ஆனால் பெண்ணை பொறுத்தவரை உச்சமென்பது ஒரு கனவாகவே இருக்கு. இதனால அவளோட சாகும் இச்சை முழுக்க நிறைவேர்ரதில்லை. அவனோட ஸ்கலிதத்துக்கு மிந்தி ஓரளவு சேம்பிள் பார்த்தாலும் அடைதல் என்பது இல்லை.

இந்த கடுப்புல அவளுக்குள்ள கொல்லும் இச்சையும் -சாகும் இச்சையும் திரளுது. . அவன் ஸ்கலிதத்துக்கு பின் ஒரு நொடி பிணமாய் மாறும் போது இவளோட கொல்லும் இச்சை ஒரு நொடி நிறைவேறுது. ஒரு நொடிதேன் சாஸ்தி இல்லை. கொல்லப்படும் இச்சை? அதுக்கு ஃபோர் ப்ளே ரெம்ப முக்கியம். நம்மாளுங்க14 ரீல் படத்தையே ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ணி பார்க்கிற கேசுங்களாச்சே. அதனால அதுவும் ஃபணால்.

ஆக ஆன்மீகம் என்பது " நான்" சாவதற்கான வழி. பெண்ணிலான " நான்" ரெம்ப பூஞ்சை. வீக்கு. அப்பன்,அண்ணன் தம்பி ,ஆத்துக்காரர் பண்ற டார்ச்சர்ல அவளோட ஈகோ /அதாவது நான் என்ற எண்ணம் நிலத்தடி நீரா ஆழத்துக்கு போயிருது.

அதனால அதை ஜஸ்ட் லைக் தட் bear பண்ண முடியுது. அதனோடயே வாழ்ந்துர முடியுது. அதனாலதேன் பெண்ணை தியானம் /யோகம் இத்யாதி பெருசா கவர்ரதில்லை.

ஆனால் ஆணோட நிலை இதற்கு டிஃப்ரண்டா இருக்கு. அவன் தியானம் யோகம்னு ஓடறான். ஏற்கெனவே எட்டாம் பாவத்துல சொன்னாப்ல பெண் படைப்பின் சக்தியா -படைப்பின் உச்சத்துல இருக்கா. அவளை மரணம் பெருசா கவர்ரதில்லை. உண்மையான தியானம் யோகத்துக்கும் மரணத்துக்கு வித்யாசமில்லிங்கோ.

இதனால பெண் ச்சொம்மா மேம்போக்கான பூசை ,புனஸ்காரம் ,மங்கல வாத்திய ஓசை ,சங்கீதம், நடனம்னு பின் தங்கிர்ரா.

ஒரு குழந்தைக்கு ஆதி குரு தந்தை. அந்த பார்ட்டி சரியானவனா அமைஞ்சிருந்தா "குருக்கள்" பற்றிய தெளிவு இருக்கும். இல்லின்னா கண்டவனையும் குருனு ஏமாந்துர்ரதோ அ அப்பனை "சோப் போட்டு மேனேஜ் பண்ணாப்ல" குருவையும் கவர் பண்ண பார்க்கிறதும் நடக்க ஆரம்பிச்சுருது.

குரு ஒரு காட்டாற்று வெள்ளம் கரையோரமா நின்னு பார்க்கவும் செய்யலாம். புடவை கொசுவத்தை காலிடுக்குல செருகிக்க்ட்டு குனிஞ்சு நாலே நாலு சொட்டு தண்ணிய எடுத்து தலையில தெளிச்சுக்கிட்டும் வந்துரலாம்.

அல்லது அந்த காட்டாற்றின் இசைக்கு நம்ம மனம் தலையசைக்க துவங்கினா "முக்தி" மோட்சம்லாம் கூரியர் பாய் மாதிரி நம்மை தேடிவரும்.

பெண்ணுக்கு சமூகம்/சமூகத்து பெரிய மனிதர்கள்/ மத குருக்கள் மேல எல்லாம் ஒரு ஊமைக்கோபம் இருக்கு. தன்னோட அடிமைத்தனத்துக்கு இவிகதான் காரணம்ங்கற சப்கான்ஷியல் தாட் இருக்கு. ரஞ்சிதா மேட்டரை நான் அப்படித்தேன் பார்க்கிறேன். நித்யானந்தாவுக்கு வெடிவைக்கவே அந்த நடிகை கில்மாவுக்கு சம்மதிச்சிருக்கலாம்.

பெண் தான் சிக்கியிருக்கும் அடிமை வலையை உணர்ந்தவளா இருக்கா. சக பெண்ணையே நம்பாதவ ஒரு குருவை ஆணை எப்படி நம்புவா?

அட கடவுளாவே இருந்தாலும் எந்த கடவுளாச்சும் அட்லீஸ்ட் தன் பொஞ்சாதிக்கு ஜஸ்டிஸ் பண்னியிருக்கா? நோ..

ரிவர்ஸ் எஃபெக்ட்:

ஆனால் பாருங்க மனம் ஒரு விசித்திரமான கருவி. உங்கள் அனுபவம் என்னவோ நோக்கம் என்னவோ இலக்கு எதுவோ அதுக்கு சம்பந்தமே இல்லாத ரூட்ல உங்களை இழுக்கும். தள்ளிக்கிட்டு போகும். அல்லாம் கொஞ்ச நாளுதேன். அப்பாறம் தன்னோட இயற்கை வழிக்கே திரும்பிரும்.

உ.ம் கண்ணாலமான புதுசுல அல்லா புருசன் மாரும் சோடியா கோவிலுக்கு போயிருப்பிங்க . கண்ணாலமான புதுசுல அல்லா மனைவி மாரும் ஒரு கட்டத்துல புருசன் இன்ஃப்ளுயன்ஸ்ல தியானத்தை ட்ரை பண்ணியிருப்பிங்க. அது உங்க இயற்கைக்கு விரோதமானது. அதனால கொஞ்ச நாள்ளயே மாயை விலகிரும்.

அவரு மெடிட்டேஷனுக்கும் நீங்க கோவில் குளத்துக்கும் திரும்பிருவிங்க..