Sunday, July 3, 2011

காதல் Vs காமம்


1940 ல திருலோகசீதாராம் ( சுஜாதாவோட மொத கதைய தன் சிவாஜி பத்திரிக்கையில வெளியிட்டவர் கூட இவர் தான்னு ஞா) ஆசிரியத்துல வெளிவந்த கிராம ஊழியன் பத்திரிக்கையில அதனோட பேருக்கு பொருத்தமே இல்லாத உன்னத படைப்புகள் எல்லாம் வெளி வந்ததை போல 2000,ஜூலை,31 ஆம் தேதி துவங்கின என் கவிதை07 வலைப்பூவில் கவிதை தவிர "சகலமும்"வெளிவந்தது.

ஒரு பதிவுல வாக்குஸ்தானத்து சுக்கிரனை பத்தியும் என் கவிதா மோகத்தையும் விவரிச்சதா ஞா . கவிதையை விட்டபிறவுதான் ப்ரெட் ஹன்டிங்கே ஒரு முடிவுக்கு வந்தது .( நம்ம கடக லக்னத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதியாச்சே.)

இருந்தாலும் கவிதைன்னா ஒரு குன்ஸ் அப்படியே மைண்ட்ல நின்னுருச்சுங்ணா. கடந்த சில நாட்களா எழுதிக்கிட்டிருந்த காதலித்தால் செக்ஸ் பவர் ஃபணால் தொடர்ல காதல் Vs காமம்னு ஒரு உப தலைப்பை அடிச்சு கூட வச்சிருக்கேன்.

இருந்தாலும் 3 ஆம் நாள் உயிர்த்தெழுந்த தேவகுமாரன் மாதிரி மைண்டுக்குள்ள என்னைக்கோ ஏரைக்கட்டி வச்சிருந்த பாட்டெல்லாம் கியாபகம் வர ஆரம்பிச்சுருச்சு.

இன்னாங்கடா இது .." அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் " சானல் மாறி சொரியுதுன்னு நினைச்சேன். அப்பாறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு.

காதல்ங்கறது கவிதை மாதிரி. காமம்ங்கறது உரை நடை மாதிரி. கவிதையை புரியற மாதிரியும் எழுதலாம். புரியவே புரியாத மாதிரியும் எழுதலாம்.

காதல் கூட இப்படியாக்கொத்ததுதான் புரியாத கவிதை பிரமிப்பை கொடுக்கிறாப்ல - காதலும் புரியாத வரைக்கும் பிரமிப்பை கொடுக்கும்.

ஆனா காதலை டிசக்சன் பண்ணா அசலான மேட்டர் எல்லாம் வெளிய வந்துரும். வெளிய வந்த மேட்டரை பார்த்தா வாழ்க்கையே வெறுத்துரும். அவ்ளோ அக்வார்டா இருக்கும். அல்லது வெகு சாதாரணமானதா இருக்கும். அதுவும் பெண்கள் மேட்டர்ல இது மஸ்ட்.

//இந்து வதன குந்தரதன மந்தகமன மதுரவசன ககன ஜகன சொகசு லலனவே //

இந்த வரிகளை கொஞ்சம் வேகமா படிச்சா ஒரு கட்டிங் போட்ட கணக்கா இருக்கும். ஆனால் தமிழ்ல இதனோட அர்த்தத்தை சொன்ன "அட அவ்ளதானா" னு ஆயிரும்.

காதலும் அப்படித்தான்.பரபாஷையில சொல்லப்பட்ட ஆடம்பரமான வார்த்தை விளையாட்டு. பரபாஷை கவிதைய தமிழ்ல டப் பண்ண மாதிரி காதல்களை சைக்காலஜிப்படி டிசக்சன் பண்ணா 'த்து போ"ன்னு ஆயிரும்.

காதல் & கவிதை பற்றிய விளக்கம் இது.

காமம்ங்கறது உரையாடல் மாதிரி. சாதாரணமானது. ஆனால் சில நேரங்கள்ள உரையாட்லே அற்புதமான கவிதையா மாறிரும். அது கவிதையா மாறுவதும் உரையாடலா முடிஞ்சு போறதும் உரையாடற பார்ட்டிக்கையில இருக்கு.

எப்பயோ கோசாரத்துல சந்திர சுக்கிர சேர்க்கை ஏற்ப்பட்டப்பயோ அ சுக்கிரன்/புதன் இத்யாதி கிரகங்கள் அனுகூலமா சஞ்சரிச்சப்பயோ நாம கிறுக்கின வரிகளை பாருங்க..

புதுமொழி கற்பவன்
மீண்டும் குழந்தையாகிறான்.
சிந்தும் மழலை

* * *

சிக்னலில் நின்றபோது குயிலின் கூ .. கூ
அட சட் ! ரிங் டோன்

* * *

காதலும் கவிதையும் ஒன்னு. காதல் காதலிக்கிறவனுக்கு சினிமா ஸ்கோப்ல தெரியுது. தேர்ட் பார்ட்டிக்கு 35 எம்.எமல தெரியுது.

காதலிக்கிறவனுக்கே காதலிக்கிறச்ச சினிமா ஸ்கோப்ல தெரியுது. கண்ணாலத்துக்கு அப்புறம் 35 எம்.எமல தெரியுது.

ஏன்னா அது உருவாகிறது மனசுல. மனசு மாறக்கூடியது. அஸ்ட் ராலஜிக்கல் ரெஃபரன்ஸ் தரனும்னா சந்திரன் மனோ காரகன் .6 மணி நேரத்துக்கொரு தாட்டி நட்சத்திர பாதம் மாறிர்ராரு. சில நேரத்துல ராசியே மாறிர்ராரு.

உரையாடலும் காமமும் ஒன்னு.அல்லாருக்கும் புரியுது. ( புரியாத மாதிரி காட்டிக்கிறாய்ங்க அது ஹிப்பாக்கிரசி) .

அது உடலில் உருவாகுது. உடலை சுடலையில வச்சு எரிக்கிற வரை அதனோட வெப்பம் இருந்துக்கிட்டே இருக்கு.

புரியாத கவிதைய வச்சு மாரடிக்கிறதை விட புரியற உரையாடலை எப்படி கவிதையா மாத்தறதுங்கற "தில்லாலங்கடி வேலை" தெரிஞ்சா பெட்டருங்ணா.

அதுக்குன்னு காதலை இந்த தொடர்ல இருந்து கழட்டி விட்டுரலிங்ணா. அதுவும் ஒரு ட்ராக்ல போய்க்கினே இருக்கும்.டோன்ட் ஒர்ரி.


1987 முதல் 1991 வரை தெலுங்கு சினிமா பாட்டுகளோட ட்யூனுக்கு நான் எழுதின சில பாட்டுக்களை/பல்லவி/ சரணங்களை கியாபகத்துலருந்து தந்திருக்கேன். ப்ராக்கெட்ல உள்ளது இன்னைய தேதிக்கு போட்ட கமெண்ட்.


அமுதமே புது வாசம் வீசும் குமுதமே
வானிலே பிறந்து வந்த நாதமே
மதனன் வரைந்த லிகிதமே
பூவில் பாரிஜாதமே (அமுதமே

குறிப்பு:
பாரிஜாதம்னு ஒரு பூவே இல்லை. இந்த மரம் சொர்கத்துல இருக்கிறதா ரெஃபரன்ஸ் இருக்கு. ஆக காதலி - காதல் எல்லாம் வெறும் கற்பனையிலதான் சாத்தியமானு கேட்டுராதிங்க)

கன்னம் கண்டு வந்த வண்டு அமரும் கண்ணே தாகம் கொண்டு
காதல் தாகம் தந்த மோகம் சொன்னேன் பாட்டு ராகம் போட்டு
காக‌ம் போன்ற‌ என்னிலே துள்ளி வ‌ந்த‌ ராக‌மே
மானே ம‌தியே ம‌தியின் ஒளியே (அமுத‌மே

குறிப்பு:
தன்னை காகம்னு தாழ்த்திக்கிறான். ஏன்?
ஆன்மா படைப்போட இணைந்திருக்கு. ஆனா அதை ஈகோ கவர் பண்ணி படைப்புலருந்து தனிமைப்படுத்திருச்சு. ஈகோவை தொலைச்சாத்தான் தனக்கு ஆன்ம தரிசனம் ஏற்படுங்கற இன்ஸ்டிங்ட் அவனுக்குள்ள இருக்கு. அதுக்கு காதலி -காதல் எல்லாம் சாக்கு.பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதிநிதி . அவளோட ஈகோ இல்லாம உறவாடுவதன் மூலம் இயற்கையோட ரீ கனெக்ட் ஆகமுடியும்னு சப்கான்ஷியஸா நம்பறான் போல.


* * *

ராக‌ங்க‌ள் ர‌த‌மாகும் சிவிகை ஏந்திடும்
சோகங்க‌ள் ம‌லையேறும் மாலை வ‌ந்திடும்
மேகங்கள் தூவாதோ பன்னீர் மழையே

காலமே மாறிடும் ஞாலமே என்னை பேசிடும்
ஆலாலம் அது கூட அமுதாய் மாறிடும்

கமெண்ட்:
//பன்னீர் மழையே // ங்கொயயால இருக்கிற பொல்யூஷனுக்கு அமில மழைதேன் பொழியும்.


***

பாச‌மில்லே ப‌ரிவுமில்லே என்ன‌ பெண்டாட்டி
பக்குவமா பார்த்துக்கிட்டேன் தன்னால் ஒரு வப்பாட்டி

தாலி க‌ட்டி போயிருப்பேன் உன்னோட‌ நான் திண்டாடி
சாவி கொடுத்த‌ பொம்மை போலே வ‌ந்திருக்கேண்டி முன்னாடி

கமெண்ட்:
என்ன கலைஞருன்னு நினைப்பா? பல தார சட்டத்துல உள்ள போட்டுருவாய்ங்க.

* * *

ஜாடிக்கேத்த மூடி போல ஏழு பொருத்தம் ஓகே..

கமெண்ட்:
அவா கிட்டே பொருத்தம் பார்த்தே போலிருக்கு. இந்த தசவித பொருத்தம்லாம் ஜுஜுபி நைனா ஜாதகம் பொருந்தனும். அதான் இம்பார்ட்டன்ட்

* * *
இந்த பாட்டுக்கு மட்டும் சிச்சுவேஷன் சொன்னாத்தான் சரியா வரும். ஹீரோயின் ஹீரோவை கலாய்க்க அவன் குளிக்கப்போறச்ச - அவனோட ட்ரஸ் எல்லாத்தையும் - பாத்ரூம் கதவு மேல கழட்டி போட்ட ட்ரஸ் உட்பட - தூக்கினு போயிர்ரா.

அப்ப ஹீரோ டர்க்கி டவலையும் உதறிப்போட்டுட்டு பாடற குத்துப்பாட்டு - ஹீரோ ஆரு தெரியுமா? நம்ம சிரஞ்சீவிதேன்


ஹே வெட்கம் விட்டுக்கடி வேணுமுன்னா தொட்டுக்கடி
மாமனோட பட்டுக்கடி வா வா

அட மந்திரம் தந்திரம் கற்றவன் சுந்தரன் நானே
பத்திரம் பத்திரம் சிதறிடும் கற்புத்தானே

கமெண்ட்:
கற்பு என்ன சூறைத்தேங்காயா.. போடா பொங்கி !

செடி கொடி மரம் எல்லாம் ஆடை கட்டுதா

கமெண்ட்:
பால் கூட ஆடை கட்டுது தெரியும்ல

பிறக்கும் போது யாருக்கும் தான் ஆடை இருந்துதா
கோட்டைக்குள்ளே கண்ணை பொத்தி பார்க்கவில்லையே

ஒரு நாளு ஸ்ரீ கிருஷ்ணந்தான் ஆடைகள் கொண்டு போனான்
இ ந் நாளு பாமாமணி என்னாடை கொண்டு போனாள்

* * *

நீ அறிந்த ரகசியம் தான் எனக்கு ஒரு அதிசயம் தான்
நீ காட்டு நீ காட்டு நானும் பரிசம் போடுறேன்
உன் மனசை திறந்து காட்டு மாலை போடுறேன்

(இது மூலப்பாடலோட ஆசிரியரின் வரிக்கான மொழிப்பெயர்ப்பு)

கமெண்ட்:
த பார்ரா பாட்டுல கூட சடன் ட்விஸ்ட் ?

* * *