Wednesday, July 27, 2011

ரஜினியும் ஆனந்த விகடனும்



ரஜினிக்கு ஆனந்த விகடன் என்னவோ? ஆ.விக்கு ரஜினி என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் ரஜினி நமக்கு ஆசான்.

ஆமாங்னா ரஜினி என்னோட ஆசான். ( பாஸு /குரு /தலை இப்படி என்ன வார்த்தைய போட்டுக்கிட்டாலும் பரவால்லை). அவரு ரெட்டை ஹீரோ -மல்ட்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்டுகள்ள நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலருந்தே நமக்கு ரஜினி மேல ஒரு லவ் வந்துருச்சு. இதுக்கு என் அண்ணனும் காரணம். காரணம் அவன் ரஜினி ரசிகன். ரஜினி நமக்கு ஒரு ஆசான்ங்கற மாதிரி ஃபீலிங் வந்தது "தம்பிக்கு எந்த ஊரு" படத்துல.

அதுக்கு காரணம் இருக்கு. அந்த காலக்கட்டத்துல நாம படத்துல அறிமுக காட்சி ரஜினி மாதிரி இருந்தம். ரஜினி எப்படியெல்லாம் மோல்ட் ஆகிறாருங்கற பில்டப் ரெம்ப பிடிச்சிருந்தது. ( என் ஃபேவரிட் காட்சி ரஜினி செக்ஸ் புக் படிக்கிற காட்சிதேன்)

நாம வகுத்து வச்சிருக்கிற/கண்டுபிடிச்சு வச்சிருக்கிற தியரி பிரகாரம் உலக ஆண்களையெல்லாம் ரஜினி அ கமல் கேட்டகிரியில அடைச்சுரலாம். இதுல நாம கமல் கேட்டகிரி. ஆனால் ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ்ங்கற மாதிரியோ /ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாவோ நமக்கு ரஜினி மேலதேன் ஆர்வம் வந்தது.

(அதென்னமோ எம்ஜியார் ரசிகரா இருந்தவுகல்லாம் ரஜினி ரசிகர்களா மாறிட்டாய்ங்க -என் அண்ணன் உட்பட. சிவாஜி ரசிகர்கள்? கமல் ரசிகர்களா? )

கமல் படத்துல பண்ணிக்கிட்டிருந்த "உணர்ச்சிகள்" மேட்டரையெல்லாம் நாம பிராக்டிக்கலாவே பண்ணிக்கிட்டிருந்தம் . இன்னம் பெட்டரா. மனித மனம் தன்னில் இல்லாததை /தனக்கு கிட்டாததைத்தான் கனவு காணும். அப்படி நாம ரஜினிக்கூட்டத்துல சேர்ந்துட்டம்.

நம்ம வெள்ளை தோலு/ ஜாதி காரணமாவோ .ஜீன்ஸ் காரணமாவோ மாஸுன்னாலே ஒரு உதறல் உண்டு. ஆனா ரஜினி படங்கள் -அதுல அவர் ஏற்ற பாத்திரங்கள் எல்லாமே என்னை அடுத்த இருண்ட காலத்தை சந்திக்க சைக்காலஜிக்கலா ப்ரிப்பேர் பண்ணுச்சுனு சொல்லலாம்.

ரஜினிய இன்ஸ்பிரேஷனா வச்சுக்கிட்டு கஷ்ட காலத்துல அ ஒரு த்ரில்லுக்காக கல்யாண மண்டபத்துல பூவலங்காரம் பண்ணியிருக்கன் - அட்டெண்டரா ஒர்க் பண்ணியிருக்கேன் -பஸ் செக்கிங்கா பண்ணியிருக்கேன். ரஜினி மேலான அட்மைரேஷன் இல்லாம நம்ம ஃபேமிலி பேக் கிரவுண்டு /ஜாதகம் இத்யாதிப்படி மேற்படி அட்வென்சர் எல்லாம் செய்திருக்கவே முடியாது.

ரஜினியோட ஒவ்வொரு படம் .அவர் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும் விலாசம் சரியில்லாத தபால் கார்டுல போஸ்ட் மேன் மாதிரி கச்சா முச்சான்னு முத்திரை போட்டதென்னவோ வாஸ்தவம்.

ரஜினி பக்தர்கள் சொல்ற கண்டக்டர் டு சூப்பர்ஸ்டார் சித்தாந்தம் என்னை பெருசா கவரலை. என்னை கவர்ந்தது அவரோட வேகம் - அண்டர் ப்ளே - அவர் ஏற்ற பாத்திரங்களில் இருந்த ப்ராக்டிக்காலிட்டி. (இதெல்லாம் நம்ம கேரக்டர்ல கடியாது)

மிஸ்டர் பாரத் வரைக்கும் இந்த அட்மைரேஷன் கன்டின்யூ ஆயிட்டிருந்தது. அதுல ஏதோ ஒரு காட்சியில டீப்பாய்க்கு காங்கிரஸ் பார்டர்/ காமராஜர்/ராஜீவ் கணக்கா கெட்டப்பு இத்யாதி பார்த்து

தள்ளிக்கிட்டு போன குட்டிக்கு எய்ட்ஸுன்னு பலான நேரத்துல தெரிஞ்ச கணக்கா நொந்து பூட்டன்.

நம்ம காங்கிரஸ் எதிர்ப்புக்கும் நம்ம ஃபேமிலி பேக் கிரவுண்டுதேன் காரணம். நம்ம சித்தப்பா ஒருத்தர் கலைஞர் கருணா நிதியோட ஆளு. சின்ன அண்ணன் தேன் நமக்கு ஒரு வகையில ரோல் மாடல் மாதிரி. அந்த பாவியும் Anty congress தேன். எப்படி சகிக்கும்?

அப்பத்துலருந்து ரஜினிய கொஞ்சம் எட்டி நின்னே -சந்தேகத்தோடயே ரசிக்க ஆரம்பிச்சேன். நம்ம சந்தேகங்கள் உறுதியாகவே விலகிட்டம். இங்கன சம்பந்தா சம்பந்தமில்லாம ஒரு கதை.

ஒரு குரு ஒரு சிஷ்யன். எந்த ஊரு போனாலும் ஒரு ராவுக்கு மேல தங்க மாட்டாய்ங்க.ஒரு ஊருக்கு போனப்ப ஒரு செல்வந்தர் வீட்ல தங்கறாய்ங்க. மேற்படி செல்வந்தருக்கு ஒரு பெண். நின்னு விளையாடுது. குரு ஜொள்ளிட்டாரு. செல்வந்தரும் சக்தி வாய்ந்த பேரன் பிறப்பான்னுட்டு சம்மதிச்சிட்டாரு. கண்ணாலமாச்சு. குருவுக்கு ஒரு கொளந்தையும் பிறந்துருச்சு.

சிஷ்யன் தன் குருவுக்கு அவர் சன்னியாசத்துல இருந்தப்ப எப்படி சர்வீஸ் பண்ணுவானோ அதே மாதிரி சர்வீஸ் பண்ணிக்கிட்டிருந்தான். ஒரு நா குழந்தை படுக்கையிலயே கக்கா போயிட்டு அழுதுக்கிட்டிருக்கு. குரு சிஷ்யனை பார்த்து "சிஷ்யா! என் ஆடைகளை எப்படி சுத்தம் செய்வாயோ அப்படி இந்த குழந்தைய சுத்தம் பண்ணி கொண்டா"ன்னாரு.

சிஷ்யன் குழந்தைய தலை கீழா பிடிச்சு துணிதுவைக்கிற கல்லுல துணிய அடிச்சு துவைக்கிறாப்ல அடிக்க அது ரத்தம் கக்கி செத்துப்போச்சு.

என்னடா கொல்லைப்பக்கம் போன சிஷ்யனை காணோமேன்னு குரு வந்தாரு. சீனை பார்த்து பேஸ்தடிச்சு போய் நின்னுட்டாரு. அவருக்குள்ள பூர்வ ஞானம் வேக் அப் ஆய்ருச்சு. எடுரா தண்டத்தை /எடுரா கமண்டலத்தைன்னு தேசாடனம் புறப்பட்டுட்டாரு.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்னு நான் கவிதை எழுதினாலும் கடகம் எண்ணற்ற பன்முக பரிமாணங்களை கொண்டதுன்னு சனம் சொன்னாலும் நமக்குள்ள மேஜரா இருக்கிற இன்ஃப்ளுயன்ஸ் என்.டி.ஆர் அண்ட் ரஜினிதேன்.

வெற்றி வரிச்சதா என்.டி.ஆர் கணக்கா டிசிப்ளின் -பன்ச்சுவாலிட்டி - ராஜசம் - எட்செட் ரா. கொய்யால அங்கீகாரம் கிடைக்கலை அதுக்காவ போராடறமா? ரஜினி ஸ்டைலுதேன்.

என்னடா பிரச்சினைன்னா கதையில வர்ர குரு மாதிரி ரஜினியே தான் உபதேசிச்சிட்டிருந்த ரூட்டை விட்டுட்டு "பொயப்ப " பார்க்க ஆரம்பிச்சுட்டாரு.

நாம நகலுதேன். ஆனால் ரூட்டை மாத்த முடியாம கொஞ்சம் போல தவிச்சம். கடேசியில மாத்தவேண்டிய அவசியமில்லைன்னு முடிவு பண்ணிட்டம்.

ஒரு காலத்துல நம்மை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண ரஜினியோட பிற்கால "பொயப்பு" ஃபார்முலாவும் எங்கே நம்மை கவர்ந்துருமோங்கற பயத்துலதேன் ரஜினியை கிழி கிழின்னு கிழிக்கிறது.

கதையில வர்ர சிஷ்யனுக்குள்ளே ஊசலாட்டமில்லை. குரு தனக்கு தந்ததை குரு இழந்துட்டதை -அவருக்கு தர ட்ரை பண்றான்.

ஆனால் நமக்குள்ள ஊசலாட்டம் இருந்தது. (இப்பவும் இருக்கலாம்) அதை அவாய்ட் பண்ணத்தேன் ரஜினியிடமிருந்து பெற்ற அந்த வார்த்தைக்கடங்காத உணர்வை அவரில் தூண்ட முயற்சி பண்றோம்.

அது சரி இத்தீனி நாளு ரஜினியை திட்டின திட்டு திட்டாம கொத்து பரோட்டா போட்டுட்டு இன்னைக்கு என்ன இந்த வழியல்னு கேப்பிக. சொல்றேன்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களை முக்கியமா ரசிகைகளை நக்கலடிச்சு ஜெயகாந்தன் எழுதின "சினிமாவுக்கு போன சித்தாளு" கதைய உல்ட்டா அடிச்சு ரஜினி ரசிகன் -கண்ணீர் கதைங்கற தலைப்புல ஒரு கதை ஆனந்த விகடன்ல வந்ததுங்ணா அதைபடிச்சேன்.

சிவசங்கரி மதுவால் சீரழியறவன் கதைய " ஒரு மனிதனின் கதை"யா எழுதினாப்ல ரஜினி மேல அபிமானத்தால ஒரு ரசிகன் சீரழியற கதை இது. இதைப்படிச்ச ஒடனே கண்ணில் நீர் வராத குறை.

பிராமண இனத்தோட ஸ்பெஷாலிட்டியே இதுதான். அவிகளோட அஜீஸ் ஆனாலும் பொலி போடற நேரத்துல போட்டே தீருவாய்ங்க. இதுல டபுள் கேம் வேற சிங்கப்பூர்ல ரஜினி எக்ஸ்க்ளூசிவும் இதே இதழ்ல வந்திருக்கு. நடு நிலை வகிக்கிறதுன்னா இதான் போல. கற்பழிச்சுட்டு -கர்பம் கலைச்சுக்க மாத்திரையும் தராப்ல இருக்கு.

அந்த கதைய படிச்ச உடனே பதிவு போட்டா ரெம்ப உ.வ பட்டுருவம்னு அடக்கி வாசிச்சு இன்னைக்கு போடறேன்.

ஒரு ஆளுமைங்கறது சூப்பர் பஜார் மாதிரி.அதுல ஆயிரம் கொட்டிக்கிடக்கும். உன்னை அது கூப்பிடறதில்லை. நீயாதான் கவரப்பட்டு போறே . போறவன் நல்லதா நச்சுன்னு நாலு ஐட்டத்தை தள்ளிக்கிட்டு வெளிய வரனும்.

அதை விட்டுட்டு கக்கூஸு பயிட்டு, டூத் பேஸ்ட் மூடிகளை பொறுக்கிக்கிட்டு வந்துட்டா அதுக்கு அந்தசூப்பர் பஜாரா பொறுப்பு.

ஆனந்த விகடன்ல போடற பொம்பள படங்கள் கூட சில சமயம் வயாக்ராவ விட பயங்கரமா வேலை செய்யுது. அதை பார்த்துட்டு கண்டவ கைய புடிச்சு இழுத்துட்டா ஆனந்த விகடன் ஆசிரியரா வந்து ஜாமீன்ல எடுப்பாரு?