Saturday, July 23, 2011

வாய் விட்டு சிரிங்க !


டாப்: 5
*தெலுங்கானா எம்.எல்.ஏக்களோட ராஜினாமாவ ஸ்பீக்கர் ரெஃப்யூஸ் பண்ணிட்டாரு. உ.வ பட்டு பண்ணிட்டாய்ங்களாம்?

*திமுக பொதுக்குழுவுல என்னதான் நடந்தது? அப்டேட்ஸே காணோமே. அப்ப நம்ம சனம் பேப்பரை படிச்ச கையோட தேன் டிவிட்டறாய்ங்களோ?

*மதுரை ட்ராஃபிக் பிரச்சினையை அம்மா இன்னா மேரி க்ளியர் பண்ணிக்கிறாங்க பார்த்திங்களா? - திமுக அடிப்பொடிகளோட வாகன ஊர்வலத்தை காணமுடியாதே

*ஆ.வில ரஜினி ரசிகன் - கண்ணீர் கதைய படிச்ச பிறகாச்சும் ரஜினி சார் "அவாளோட" சைக்காலஜிய புரிஞ்சி தெளிஞ்சி தன்னவர்கள் ஆருனு தெரிஞ்சிக்கிடனும்.

*தமிழ் நாட்ல நில அபகரிப்பு ஸ்பெஷல் விங் வந்த பிறகு நெறய போலீஸ்காரவுக ஸ்லிம் ஆயிட்டாய்ங்களாமே ? தொப்பைல்லாம் போச்?
ஒரு காலத்துல அப்பால்லாம் வெளிய கிளம்பறதாயிருந்தா கையில பையோட போவாய்ங்க.திரும்பி வர்ரச்ச அம்மாவோட மொத வேலை அந்த பைய வாங்கி ஆணியில மாட்டறதுதேன். இப்பம் ? போறச்ச எந்த அப்பனும் பையோட போறதில்லை. திரும்பி வரும்போது புது ஷாப்பரோட வர்ராய்ங்க. அம்மாவுக்காக குரல் கொடுக்கறதில்லை. நேர ஃபரிட்ஜுக்கு போய் வாங்கியாந்ததை அடுக்கறாய்ங்க

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல எங்க பாட்டி காலையில 4 மணிக்கு எந்திரிச்சுரும். அம்மா 6 மணிக்கு எந்திரிக்க ஆரம்பிச்சாய்ங்க. அண்ணி 7 மணிக்கு எந்திரிக்கும். பொஞ்சாதி 9 மணிக்கு எந்திரிக்கிறா. நாளைக்கு பொண்ணு?

காலம் மாறிப்போச்சு


ஒரு காலத்துல குடிகாரன்னா அவன் கூலிக்காரனாவோ - தலித்தாவோ -வன்னியனாவோ தான் இருப்பான். இப்பம்? பார்ப்பான்லாம் குடிக்கான்.பொம்பளைல்லாம் குடிக்கு.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல என்.டி.ஆர் வர்ராருன்னா அவனவன் கிராமத்துலயே சித்திரான்னம் செய்து அன்னக்கூடையில போட்டு ட்ராக்டர் ஏத்திக்கிட்டு வந்து நடைபாதையில வச்சு திம்பான்.இப்பம் கையில நூறு,பிரியாணி கூட ஒரு குவார்ட்டர்.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல எங்கயோ நடந்த ரயில் விபத்துக்கு (அரியலூர்) ரயில்வே மந்திரி ராஜினாமா பண்ணுவார். இப்பம் பிரதமர் விபத்து நடந்த ஸ்பாட்டுக்கு போப்பான்னா ரயில் மந்திரி போடாங்கொய்யாலங்க்றாரு.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல நம்ம ஊரு ஆத்துல அய்யரு குளிச்சுட்டு கோவிலுக்கு வருவாராம். இப்பம்? குடிச்சுட்டு மட்டையானவன் கூட ஆத்தோரம் போறச்ச மூக்கை பொத்திக்கினு போறான்.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல லவ்வர்ஸ்னா சந்து திருப்பத்துல நகராட்சி விளக்கு எரியாத சமயம் ரெண்டு செகண்டு பேசுவாய்ங்க. இப்பம் உம்.. உம் ..உம்னுக்கிட்டே அப்பா அம்மா முன்னாடியே மணிக்கணக்குல பேசுதுங்க. செல்லு ஃபோன்ல.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல 1985ல நான் டிகிரி படிக்கிறச்ச எங்கப்பன் ரெண்டு ரூபா பிள்ளையார் மனை கீழ வச்சிருப்பாரு. அதை எடுத்துக்கிட்டு போய் டவுன் பஸ்ஸு, டீ,சிகரட்டுல்லாம் சமாளிக்கனும். இப்பம் கான்வென்ட் படிக்கிற பையனுக்கு மம்மி டாடி பத்து ரூவா கொடுத்தா முகத்தை சுளிக்கிறான்.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல காரியம் நடக்கனும்னா நான் எவ்ளோ நெல்லவன் தெரீமானுட்டு மாய்ஞ்சு மாய்ஞ்சு சொல்லோனம். இப்ப என்னடான்னா நான் எவ்ளோ கெட்டவன் தெரீமா? எனக்கு எத்தீனி கொலைகாரன் தெரியும் தெரியுமா? ரேஞ்சுல பேசவேண்டியதா கீது.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல எவன் நெல்லா படிக்கானோ எவன் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டில பரிசெல்லாம் வாங்கறானோ அவனை தான் குட்டிங்க ஜொள்ளும். இப்பம் எவனெல்லாம் மாவா போடறானோ -கஞ்சா அடிக்கானோ அவனைத்தான் ஜொள்ளுதுங்கோ

காலம் மாறிப்போச்சு


ஒரு காலத்துல சித்தப்பா பெரியப்பா பையனை கூட எங்க அண்ணன் /எங்க தம்பினு அறிமுகப்படுத்துவாய்ங்க. இப்பம் என்னடான்னா சொந்த அண்ணன் தம்பியை ப்ரதர்ங்கறாய்ங்க

காலம் மாறிப்போச்சு


( ஹய்யா முருகேசன் கூட கிழவாடியாயிட்டாருன்னு துள்ளி குதிக்காதிங்க பாஸ். அடுத்த பதிவுல காலமாற்றம் கொண்டு வந்த முன்னேற்றத்தையும் டச் பண்ணுவமில்லை )

துன்பம் வருகையிலே சிரிங்கம்பாய்ங்களே அப்படி வேலை அழுத்தம் - ஒரு நாதாரி பண்ற அலப்பறைல்லாம் கடுப்பாக்கினாலும் நான் சிரிக்க ஒரு சில ஜோக்ஸ் எழுதினேன் அது உங்க பார்வைக்கு:

ஜோக்ஸ் டு டே

நாம பொயக்கற பொயப்புக்கு ஜோக்கு கூட ஸ்பார்க் ஆகுதுன்னா அது ஆச்சரியம் தேன். நம்முது கடகலக்னம். அதிபதி சந்திரன். சந்திரன் எப்டி சூரியனோட ஒளியை வாங்கி பிரதிபலிக்கிறாரோ அப்படி நாமும் எங்கருந்தோ கிடைச்சதைதேன் ப்ராசஸ் பண்ணி தர்ரோம்.

ஜோக் கூட இப்டிதேன். ஒரு ஜோக் படிக்கிறச்ச ..அட இதை இப்படி கூட எழுதியிருக்கலாமேனு நமக்கு தோனும். சுஜாதா சொலவடையில சொல்லனும்னா எட்டு இடமும் குளிர்ந்திருக்கிற நேரத்துல எழுதியும் வைப்பொம்ல.

இப்ப ஜோக்ஸ் டுடேக்கு போயிரலாமா/

* * *

அவன்: நமீதா எந்த மெயிலை உபயோகிப்பாய்ங்க?

இவன் : ஹாட் மெயில்

* * *


".தலைவரோட மகளை கட்சி பத்திரிக்கையில ஆட்டோபயாகிரஃபி எழுத சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டாய்ங்க"

"ஏன்?"

"என் ரேஞ்சுக்கு ஆட்டோ பயாகிரஃபியெல்லாம் எழுதனுமா? ஃப்ளைட்டோ கிரஃபி வேணம்னா ட்ரை பண்றேன்னாங்க


* * *


ஆசிரியர்: கி.மு ன்னா என்ன?

மாணவன்: ஈமு மாதிரி ஒரு பறவை சார்


* * *

அவன்: நம்ம கணேஷ் கதை க்ளோஸ்

இவன்: கொலையா? தற்கொலையா?

அவன்: தற்கொலைதான். லவ் மேரேஜு தாம்பா


* * *

அவன்: பில் கேட்ஸ் மார்ல நாய்கள் ஜாக்கிரதை போர்டு மாட்டனுமா? ஏன் ?

இவன்: அவர் தான் பில் 'கேட்' ஆச்சே


* * *