Tuesday, July 12, 2011

ஜாதகம் இல்லாதவுகளுக்கு கில்மா சோசியம்



களத்ர பாவத்துக்கு அதாங்க கில்மாவுக்கு ஆப்பு வச்ச கிரகத்தை பொறுத்து எஃபெக்ட் எப்படியிருக்கும்னு ஆனா கிரகங்களோட பேரை நானும் சொல்லலை. பதில் சொல்றவுகளுக்கு சோப்பு கவரை பரிசா வச்சதால ஆரும் கூட சொல்லலை.

ஜாதகம் இல்லாதவுகளும் தங்களோட தாம்பத்ய வாழ்க்கையின் நிலையை பொருத்து எந்த கிரகம் லொள்ளு பண்ணுதுனு கண்டுக்கிட வழி சொல்லியிருந்தேன். அதை இன்னைக்கும் (உங்கள் வசதிக்காக) தந்திருக்கேன்.

கீழே குறிப்பிட்ட நிலைகள் உங்க லைஃப்ல இருந்தா ( இருக்குதா பார்த்துக்கங்க) அதுக்குண்டான பரிகார பேக்கேஜையும் சேர்த்து தந்திருக்கேன். 7 ஆம் பாவம் சில ரகசியங்கள் என்ற இன்னொரு பதிவும் போட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க.

1.சூரியன்:

கணவன்/ மனைவிக்கு ஆளுமை ஓவரா இருக்கறது - தேன் நிற விழிகள் - அடர் புருவம் - சோடாபுட்டி கண்ணாடி . தூக்கமின்மை ஜாயிண்ட் பெய்ன்ஸ் - முதுகுவலி . மொட்டை மாடி மாதிரி ஓப்பன் ஏர் தக் ஜம்ல விருப்பம் இருக்கலாம்.

பரிகாரம்:

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.


2.சந்திரன்:

மனம் , நுரையீரல் சிறு நீரகம் தொடர்பான தொல்லைகள் - கற்பனை தேரினில் பறந்து செல்லும் தன்மை. ஜலகிரீடையில ஆர்வமிருக்கலாம். வெளியூர் கெஸ்ட் ஹவுஸ்,லாட்ஜுகள்ள தங்கினப்போ மூடு தூள் பறக்கலாம். ( ரகசிய காமிரால்லாம் வச்சிருக்கானுவளாம் யு ட்யூப்ல வந்துரப்போறிங்க )

பரிகாரம்:
1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

3.செவ்வாய்:

ரத்தம் எரிச்சல் கோபம் தொடர்பான வியாதிகள் - வாழ்க்கை துணையை எதிரியா பாவிக்கிறது -படக்குனு கிரோசினை தலை மேல கவுத்துக்கிட்டு தீப்பெட்டிய தேடறது - மணிக்கட்டை அறுத்துக்கறது -ப்ளக்ல கை வைக்க ஓடறது இந்த லட்சணங்கள் இருந்தா தம்பதி பிரியலாம் - செத்தே போகலாம் (தீயில் கருகி /ரத்தவெள்ளத்தில்) இவிக மேல தாக்குதல் கூட நடக்கலாம். அடி தடி - தகராறு -கலகம் இத்யாதிக்கு பிறகு மூடு கிளம்பலாம். மாதவிலக்கின் போதும் கசமுசாவுக்கு ட்ரை பண்ணலாம்.

பரிகாரம்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.


4.ராகு:

-சினிமா லாட்டரி மது கவரும். மேற்கத்திய கலாசாரத்துல ஈடுபாடு. ஃபிசிக்ல டிஃப்ரன்ஸ் இருக்கும் - ஐமீன் ஒல்லி பீச்சானா இருக்கலாம் - அல்லது நீர் உடம்பா இருக்கலாம் - ஃபுட் பாய்சன் , மெடிக்கல் அலர்ஜி , விஷம்னு எழுதின பாட்டிலை க்ளோசப்ல கேமராவுக்கு காட்டி படக்குனு வாய்ல கொட்டிக்கிறது. சட்டவிரோதமாவாச்சும் லட்சக்கணக்கா பணம் வரனும்னு துடிக்கிறது. இவிக ஒன்னு அண்டர் கிரவுண்டுக்கு போயிருவாய்ங்க அ விஷமருந்தி சாகலாம். கும்மிருட்டுலதேன் கில்மான்னு அடம்பிடிக்கலாம். வெறுமனே கட்டிக்கிட்டு இருக்கலாம்னு சொல்லலாம். அ காரியம் முடிஞ்சப்பாறமும் பிரிய அனுமதிக்காம இருக்கலாம்.

பரிகாரம்:
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.


5. குரு:

ஞா மறதி -அஜீரணம்- வாயு கோளாறு - இதயம் தொடர்பான பிரச்சினைகள் -ஏழை & செல்வாக்கில்லாத குடும்பத்து பெண்/ஆண் வாரிசா இருக்கிறது .கில்மாவை கூட குளிச்சு ப்ரேயர் பண்ண பிறவுதான்னு சொல்லலாம். ரெம்பவே சாங்கியம் பார்க்கலாம்.

பரிகாரம்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.


6.சனி:

வாழ்க்கைத்துணை நிறம் மட்டா இருக்கலாம் - ஏழையா இருப்பாய்ங்க. கல்வி இருக்காது. நாகரீகம் இல்லாத என்விரான்மென்ட்ல நாட்டுப்புறமா வளர்ந்திருப்பாய்ங்க. .ஊனம் ஏற்படலாம் - முக்கியமா கால் தொடர்பான ஊனம். நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினை வரலாம். . பார்க்க கிழவன்/கிழவி போல இருக்கிறது அ கண்ணாலமான சில காலத்துலயே அந்த பர்சனாலிட்டி வந்துர்ரது . நோயாளியா இருக்கலாம் - கஞ்ச பிசினாறியா இருக்கலாம். சோம்பேறி /சுத்த பத்தம் இல்லாத பார்ட்டியா இருக்கலாம்.க்லாஸ் ஃபோர் எம்ப்ளாயி அ யூனிஃபார்ம் போட்டாக வேண்டிய தொழில்ல இருக்கலாம். குதப்புணர்ச்சியை விரும்பலாம்.

பரிகாரம்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.

7.புதன்:

ஊர் வம்புல ஆர்வம் -தெரிஞ்சவன் தெரியாதவன்லாம் ஃபோன் போட்டு மணி கணக்கா பேசுவான். பார்க்க ஆண் பெண் போலவும் -பெண் ஆண் போலவும் தெரிவாய்ங்க. தோல் -கீல் -அண்டம் தொடர்பான வியாதிகள் இருக்கலாம் . வேலி தாண்டலாம் பெண்மேல் முறையை விரும்பலாம்

பரிகாரம்:

1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.


8.கேது:

மந்திர தந்திரங்களில் ஆர்வம் - சதா பிரமைகளில் வாழ்வது - அகாரணமா ஆர வேணம்னா எதிரியாக்கிக்கறது - புண்கள் - பாடில அப்பர் பார்ட்ல அடையாளம் தெரியாத வலி - பலகீனம் இருக்கிறது. ( டயக்னசிஸ்ல க்ளீன் ரிப்போர்ட் வரும் -ஆனா பிரச்சினை தொடரும். போலி சாமியாருக்கு சொத்தையே எழுதிக்கொடுத்துர்ர கேஸா இருக்கும். செக்ஸ் மூலம் மிஸ்டிக் பவர்ஸ் பெறமுடியும் அ அது இழக்கப்படும்ங்கற நம்பிக்கை இருக்கலாம்.



1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

9.சுக்கிரன்:

அதி காமம் இருக்கலாம் - இது சில மாசத்துலயே ஃபணால் ஆகி கில்மால ஆர்வமே இல்லாம போயிரும். கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரும். காதல் /கள்ளக்காதல் விவகாரம்லாம் வரும். கிச்சன்ல கில்மா இவிகளை கவரலாம்.

பரிகாரம்:
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை:
இந்த பதிவு 1989 முதலான என் உழைப்பின் சாரம். இது அவரவர் தனிப்பட்ட உபயோகத்துக்கு மட்டுமே. அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையேன்னு மிஸ் யூஸ் பண்ணா தோல் ,கீல்,அண்ட வியாதிகள் வரும்.