Saturday, July 16, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம்


இந்த தலைப்புல 1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை இன உறுப்பை காட்டற இடம்.

"தலை ! வசம்மா மாட்டிக்கிட்டிங்களா ..இதெல்லாம் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுதானே. இதுல எல்லாம் ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம் கிடக்கு".ன்னுட்டு ஆருப்பா அது குரல் கொடுக்கறது.

மொத பாரால முக்கியமான மேட்டர் விட்டுப்போச்சு எது இன்னாடன்னா ''அடிமைப்படுதல்".இன்னைக்கு தாய்க்குலம் கலெக்டரா இருந்தாலும் எஸ்பியா இருந்தாலும் - தாளி மத்திய மந்திரி அக்கா மகளாவே இருந்தாலும் அடிமையாதான் வாழ்ந்துக்கிட்டிருக்கா. எதிர்த்து கேள்வி கேட்கப்படும்போது கொல்லப்படறா.
( அல்லது புதுசா பிறக்கிறா)

வாத்யாரு . "அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு"ன்னு பாடி வச்சாலும் அடிமையா கிடக்கிறதுல நிறைய லாபம் இருக்குங்ணா.

ரோச்சிக்க தேவையில்லை - முடிவெடுக்க வேண்டியதில்லை - தாளி மண்டை சூடாகாது - ராஜ கிரகங்களோட எஃபெக்ட் பெருசா இருக்காது. சாஸ்தி பேச வேண்டியிருக்காது -வாக்கு வாதமா? மூச் ! - தைரியம்? தேவையே இல்லை. மிஞ்சிப்போனா எஜமானருக்கு கில்மா தேவைப்படும்போது லூப்ரிக்கேட்டிங் பிரச்சினை இல்லாம இருந்தா பிரச்சினை ஓவர்.

அடிமையா வாழற பெண்ணுக்கு எந்தெந்த பாவம் தொடர்பான ப்ரஷர் குறையுதுன்னு பாருங்க.

அண்ணன் தம்பி ? ஊஹூம்.. என்னக்கா மாமா நல்லபடியா பார்த்துக்கறாரானு கேட்கறச்ச பார்வைய திருப்பி ( அவிக கண்ணை பார்த்து பொய் சொல்லமுடியாதே) அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்லனு கழ்ட்டிவிட்டுரலாம்.


அம்மா பேன் பார்த்து , தலை பின்னி விஜாரிச்சாலும் இதே இழவுதேன். புத்திக்கு அவசியமே இருக்காது.

எதிரி? ஆருமில்லை. எதிர்க்கவேண்டியவனுக்குத்தேன் அடிமையா கிடக்காளே. அப்படியே சுத்துவட்டாரத்துல எவனா எதிரியா இருந்தா எஜமானருக்கு போட்டு கொடுத்துட்டா தீர்ந்தது கதை . சேமிப்பு? ஆஃபீஸ் போக பஸ் டிக்கெட்டுக்கு கொடுத்த காசுல மிச்சம் பிடிக்கனும்னா நடந்துதேன் போகனும்.அப்படியே சேமிச்சாலும் அதுக்கும் எஜமானன் புருசன் தானே.

தொழில்? ஆஃபீஸ்ல அதிகாரம் தூள் பறந்தாலும் வீட்ல மூச். அக்கா அண்ணன் மேட்டரும் லைஃப்ல பெருசா என்ட்ரி ஆவாது .

"ஏங்க அக்கா பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்.."

"போன மாசம் தானே பெரிய அக்கா பையன் கல்யாணத்துக்கு போய் வந்தே. இது வெறும் நிச்சயம்தானே.கல்யாணத்துக்கு போலாம் விடு "

"சரிங்க"

(இதுவரை சொல்லிட்டு வந்த சீக்வென்ஸஸ் எல்லாம் துவாதச பாவ வரிசையில அமைஞ்சிருக்கிறத கண்டுபிடிச்சவுக பாக்கியசாலிகள் அவிகளுக்கு காத்திருக்கு ஜோதிட கலைமாமணி பட்டம்.

கட்ட கடைசியா வர்ரது விரய பாவம். இது தூக்கம் ,செக்ஸ், காசு பணத்தை செலவழிக்கிற முறையை காட்டும் இடம்.

காட்சி: 1

"ஏய்.."
"ம் ம்ம் "
"ஏய் உன்னைத்தான்"
"ம்ம்.. டயர்டா இருக்குங்க"
"ஏன் பகல்ல எவனா வந்து டூட்டி பார்க்கிறானா?"

காட்சி: 2

"ஏங்க.."

" ..........."

"ஏங்க தூங்கிட்டிங்களா?"

"கொர் கொர் கொர்"

இதுக்கு மேலயும் காட்சிகள் இருக்கு. அதையெல்லாம் போட்டு தொலைச்சா வம்பாயிரும். ( ஏங்க அதுக்குள்ள ஆயிருச்சானு ஆருப்பா கேட்கிறது -இது அவிக டயலாக்)

இது மெஜாரிட்டி தாய்குலத்தோட செக்ஸ் லைஃப்.. தூக்கம் காலி.செக்ஸ் காலி. காசு பணம்? அதான் முன்னாடியே சொல்ட்டனே பஸ்ஸுக்கு சில்லறை வாங்கிட்டு போற இழவை .

ஒரு பெண்ணுக்கு கண்ணாலமாயி தொலைச்சாலே ( எட்டாம் பாவம் ஆக்டிவேட் ஆகி - இதான் மாங்கல்ய ஸ்தானங்கோ) அவளோட ஜாதகத்துல உள்ள 11 பாவங்களும் சுத்தமா ஃப்யூஸ் போயிருது. ஒரு மண்ணு பலனையும் அவள் அனுபவிக்கிறதில்லை இந்த பாவங்கள்ள . எத்தீனி தோஷமிருந்தாலும் அதெல்லாம் ஃபணால் தேன்.

காரணம் அடிமைத்தனம். அடிமையா இருக்கிற பெண் விஷயத்துல ராஜ கிரகங்கள் -லக்னாதிபதி - சனி - ஏன் நவகிரகங்கள் - துவாதசபாவங்களும் வேலை செய்யறதில்லை. இதான் எட்டாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்களுக்கிடையில் உள்ள வித்யாசம் .

ஒரே ஒரு அடிமைத்தனமே இவ்ளோ பெரிய வித்யாசத்தை ஏற்படுத்திருது.


கடடம் கட்டமா உள்ள ராசி சக்கரத்தை பாருங்க. 12 டப்பா இருக்கு.இதை இதை அப்படியே ரைட் டாப்ல ஒரு டப்பாவை விட்டுட்டு கட் பண்ணி படுக்கப்போடுங்க. படுக்கப்போட்டதை அப்படியே நிமிர்த்துங்க. பக்கத்துல ஒரு மனிதனை நிற்க வைங்க. 12 டப்பாக்களுக்கு நேர மனிதனோட எந்த அங்கம் வருது பாருங்க. இந்த கணக்குல பார்த்தா எட்டாம் பாவம் "பலான" பார்ட்டை காட்டும்.

இன்னாங்கடா இது ஒரே பாவம் லுல்லாவையும் காட்டுது, ஆயுளையும் காட்டுது. இது ரெண்டுத்துக்கும் இன்னா சம்பந்தம் ஒரு வேளை கில்மாவால அல்பாயுசாயிருவமோ? பொட்டுன்னு போயிருவமோனு டர்ராயிராதிங்க.

பிரம்மச்சாரிகளை விட குடும்பிகள் தான் சாஸ்தி நாள் வாழறாய்ங்க. செக்ஸ் நீண்ட ஆயுளையும் -ஆரோக்கியத்தையும் தர்ரதா லேட்டஸ்ட் ஆய்வுகள் உறுதியா சொல்லுது.

இன உறுப்புக்கும் -ஆயுளுக்கும் உள்ள தொடர்பு என்னன்னா நீண்ட ஆயுள் உள்ளவன் "அளவோடு ரசிப்பவனா " இருப்பான். அவனோட கில்மா ப்ராஜெக்டும் நீண்டதா இருக்கும்.

அற்பாயுள் கொண்டவன்" மீனா ரீனா சீதா கீதா ராதா வேதா"ன்னு அலைவான்.அல்பாயுசுல போயிருவான்.

ஒரே வேலையை தொடர்ந்து செய்தா முட்டாளுக்கும் அதுல பர்ஃபெக்சன் வந்துரும். ச்சொம்மா ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு இருந்தா கிழிஞ்சுரும்.

எட்டுங்கறது கடுமையான உடல் உழைப்பை காட்டும் இடம். பலான மேட்டர்ல பல நூறு கலோரி செலவழியற அளவுக்கு உழைப்பு இருக்குன்னு செக்ஸாலஜிஸ்டுங்க சொல்றாய்ங்க.

இந்த மேட்டர்ல கூட உழைக்காத சோம்பேறி வாழ்க்கையில எங்கே உழைக்கப்போறான். உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் பலவீனமாயிரும். அதேபோல ஹ்யூமன் பாடியும் பீடியாயிரும். செத்துப்போயிருவான்.

இந்த மேட்டர்ல இன உறுப்புக்கு முக்கிய ரோல் இருக்கு. காந்தியோட மூணு குரங்கு பொம்மைகளுக்கு ஃபோஸ் கொடுத்த கமல் நாலாவதா ஒரு ஃபோசை சேர்த்தாரு. ஞா இருக்கா?

வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க"ன்னாரு. ( நா - நாக்கு) நாக்கை மட்டுமே இல்லிங்கண்ணா எல்லாத்தையும் காக்க வேண்டியதுதான்.

இப்படி காக்க காக்கன்னா 108 மேட்டர் இருக்கு. கில்மா கூடாதுங்கறது மட்டும் பாதுகாப்பு முறை கிடையாது. அணை நிரம்பினா ஒன்னு சானலை திறந்துவிடனும். இல்லாட்டி அதுவே வழிஞ்சுரும்.

இது ஆணுக்கு இயல்பாவே நிகழ்ந்துருது. சமுதாயமும் அதை அங்கீகரிக்குது. கல்யாணமானா எல்லாம் சரியா போயிரும்னு சால்ஜாப்பு வேற . அதனால மனிதர்களுக்குள் இருப்பதாக சொல்லப்படும் கொலை -தற்கொலை இச்சை ஆண்களுக்குள்ளே பெருசா - நிரந்தரமா தங்கறதில்லை. ( செக்ஸ் - வன்முறை -பணம்லாம் ஸ்தூலமாதான் வேற மனிதனோட உணர்வுகளை பொருத்தவரை ஒன்னுதேன்)

ஆனா ஒரு பெண் விஷயத்துல மட்டும் டாட்டா விண்வெளி ஆராய்ச்சி மையம் கணக்கா ஒரு பைனாகுலரை வச்சு பார்க்குது சமுதாயம்.

மனிதபிறவியா அவளுக்குள்ளயும் கொல்லும் இச்சை இருக்கு ஆனால் சமூக சூழல் அதை அனுமதிக்கிறதில்லை.ஆல்ட்டர்னேட்டிவா தற்கொலைய ச்சூஸ் பண்ணிக்கிறா. அதான் குடும்ப வாழ்க்கை. ஐ மீன் அடிமை வாழ்க்கை.

ஆண் மனதில் உள்ள கொல்லும் இச்சை நிறைவேறினா அதனோட எக்கோவா இவன் எதிரி மைண்ட்லயும் கொல்லும் இச்சை கிளம்புது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் இவனை அவன் போட்டுத்தள்ளிர்ரான்.( இதனால ஆண்களுக்கு லைஃப் ரிஸ்க் அதிகம்)

ஆனால் பெண் மனதில் உள்ள கொல்லும் இச்சை கொல்லப்படும் இச்சையா கன்வெர்ட் ஆகி நிறைவேறுது. இதுக்கு எக்கோ ஏதும் கிடையாது. ரிஸ்க் குறைவு. ( இதனால லாஞ்சிவிட்டி அதிகம்)

ஒரு த்ரில்லிங் ட்ரூத் என்னன்னா கணவனோட பொசிஷன் வீக் ஆகும்போது கொல்லப்படும் இச்சையா
கன்வெர்ட் ஆன கொல்லும் இச்சை தன் சுயரூபத்துல வெளிப்பட்டுருது. அது வேற விஷயம்.

ஆணாகட்டும் பெண் ஆகட்டும் சிலருக்கு பை பர்த் இன உறுப்புகள் குறித்த புரிதல் விழிப்புணர்வுல்லாம் செல்ஃப் கண்ட்ரோல் வந்துருது. அல்லாரும் அப்டமன் கார்ட் போட்டுக்கிட்டா வெளிய வராய்ங்க.யாருக்கு எட்டாமிடம் வீக்கோ அவிகளுக்கு மட்டும் பல்பு பெருசாயிருது. ராசா,கனி,தயா கைகள் மாதிரி கண்ட இடத்துல நீண்டு தர்ம அடி வாங்கிதந்துருது.

ஆக எல்லா பார்ர்ட்டையும் போல ஜனனேந்திரியத்தையும் காக்கவேண்டிய அவசியம் இருக்கு. காக்க காக்கன்னா அஜால் குஜால் வேலையில இறங்காம இருக்கிறதே இல்லை. சுத்தம்,சுகாதாரம்,காண்டம் எல்லாமே வருது.

பெண்குட்டிகள் மேட்டர்ல (மலையாள பாஷைங்கோ) இது ரெம்ப முக்கியம்.(பேட் உபயோகிக்கிறது - அல்ப சங்கியைக்கு பிறகு கழுவறது - கால் கழுவறச்ச கீழ் நோக்கி கழுவறது -உபயம்: ஆ.வி.ல ஞானி சார்.

ஒரு பையன் ரெம்ப உத்தமன். குளிக்கிறச்ச சாஸ்திரப்படி இடது கையால கூட தொட மாட்டான். ( எட்டாம்பு படிக்கிற சமயம் நடந்தசம்பவம் இது)

திடீர்னு கின்னஸ் சாதனைக்கு போல ஒரு வாரமா தொடர்ந்து கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சான். "தத் என்னடா இது"ன்னா பயங்கர நமைச்சல் வலி வீக்கம்னான். படக்குனு டாக்டர்(?) பண்டரிக்கிட்ட கூட்டிப்போனோம். அவர் தோரகா பண்ணி உறிச்சு (பிரசவ அலறல்) வென்னீர்ல அலம்ப சொன்னாரு.

செக்ஸ்ல ஈடுபட்ட ஆணுக்கு எண்டார்ஃபின் என்ற இரசாயனம் சுரந்து அடிச்சு போட்டாப்ல ஒரு சூப்பர் தூக்கம் வருதாம். இதனால மறு நாள் வண்டி ஜோரா ஓடும்.

இந்த எண்டார்ஃபின் உச்சம் பெற்ற பின்னாடி தான் சுரக்கும் போல. இல்லின்னா நிறைய வீட்டம்மாவுக காலங்கார்த்தலயே ஏன் பயங்கரமா கடுப்படிக்கிறாய்ங்க. இதை நானே நிறைய கேஸ்ல பார்த்திருக்கேன்.

ஏன்னா அவிகளுக்கு உச்சம்லாம் நை நை. உழைப்புன்னு பார்த்தா கில்மா மேட்டர்ல ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். காம்ப்ளெக்ஸ் இல்லாத புருசன் அமைஞ்சு - அவன் பெண் மேல் முறைய ஊக்குவித்தா இது சாத்தியமாகலாம்.

இதுவரை சொன்ன விஷயங்களோட சுருக்கம்:

எட்டாமிடம் அடிமைத்தனம் , இன உறுப்பு, ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயில் ,ஐபி போடறது இத்யாதியை காட்டற இடம்.

இதுல பெண் விஷயத்துல இந்த எட்டாமிடம் ரெண்டு விதமான ஆப்ஷனை கொடுக்குது .ஒன்னு அடிமையா வாழனும் அ செத்துப்போகனும். அடிமையா வாழறதுக்கும் - செத்துப்போறதுக்கு பெரிய வித்யாசமில்லை. அடிமை இறந்தவனோட சமம். பிணம் மறுபடி இறக்குமா?

அடிமைத்தனத்தை கேள்வி கேட்காம ஏத்துக்கிட்டு வாழ்ந்தா ஆயுள் கூடும். தனக்குள்ளயே கேள்விகள் கேட்டுக்கிட்டிருந்தா அது மனம் உடல் ரெண்டையும் பாதிக்கும் ஆயுள் குறையும்.மன நலம் பாதிக்கும்.

பெண்ணிலான கொலை விருப்பம் தற்கொலை விருப்பமா மாறுது. தற்கொலை விருப்பம் நிறைவேறும்போது எதிராளியின் கொல்லும் விருப்பமும் நிறைவேறுவதால் அங்கே ரிஸ்க் குறைவு.
இதனாலயும் ஆயுள் கூடுது.

ஆனால் ஒன்னு கேள்வியே கேட்காம புருசங்காரனோட கொலை விருப்பத்தை நிறைவேத்திக்கிட்டிருந்தா "பெருசா அடிச்சிட்டதா பீத்திக்காத .. நீ அடிச்சது எனக்கு வலிக்கவே இல்லை . நல்ல டாக்டரா பாரு"னு வடிவேலு சொல்ற மாதிரி புருசன் ஃபீல் ஆயிட்டா நாஸ்தி.

கொஞ்சமா வலிச்சாலும் நிறையவே வலிச்ச மாதிரி ஃபிலிம் காட்டினா இந்த மெத்தட்ல லாபம் சாஸ்தி. இல்லின்னா உனக்கு எப்படி அடிச்சா வலிக்கும்னு கண்டுபிடிக்கிறேண்டின்னுட்டு அவன் சாடிஸ்டாவே மாறிருவான்.

பெண் கடுமையான உழைப்பை குடும்பத்துக்கு தர்ரதாலயும் அவளோட ஆயுள் கூடுது. அடிமைத்தனம் நிறைய தோஷங்களுக்கு பரிகாரமாயிருது. ஒரு கட்டத்துல புருசன் பொசிஷன் வீக்கானா கொலை விருப்பமாவும் மாறுது. இந்த ஸ்டேஜுல திடீர்னு சொந்தமா ரோசிக்க ஆரம்பிக்கிறதால பழக்கமில்லாத பழக்கம்ங்கறதால இவள் அவனை கொல்லப்போடற் திட்டம் உட்கார்ந்திருக்கிற கிளைய வெட்டின கதையா போயிருது.

இவள் வாழ்க்கையே சிறையா இருக்கிறதால சிறை செல்லும் வாய்ப்பு குறையுது. பல பெண்கள் விசயத்துல திருமணமே ஒரு கொடுமையான விபத்துங்கறதால விபத்துகள் நடக்க இருக்கும் வாய்ப்பும் குறையுது.

ஐபிங்கறிங்களா? (இன்சால்வென்ட் பெட்டிஷன்) திருமணங்கற கம்பெனியே ஃபேக். இதுல அந்த கம்பெனியோட எம்.டி பிக்காலியா இருந்தா சொல்லவே தேவையில்லை. அதுல போட்ட முதல் எல்லாம்
வீண் தான். அதனால திருமணமான ஒவ்வொரு பெண்ணும் ஐ.பி கேஸ் தான்.

அதனாலதான் இந்தியாவுல சராசரியா ஆண்களை விட பெண்கள் நீண்ட நெடுங்காலம் வாழறாய்ங்க
( கண்டிஷன்: அடிமைத்தனத்தை கேள்வி கேட்க கூடாது. கேள்வி கேட்டா கதி மோட்சம்தேன் )

மரணங்கறது இன உறுப்பு வழியா வரும்ங்கறது பெண்கள் விஷயத்துலயும் கரீட்டுதேன். ( ஆண்கள் விஷயத்துல இது நோய்களாவும் - பெண்ணோட மாமன்/ப்ருசன் இத்யாதி போட்டு தள்ளிர்ரதாவும் அமையுது.

பெண்கள் விஷயத்துல ஃபெல்விக் போன்ல வர்ர கேன்சர்,கருப்பையில வர்ர கேன்சருக்கெல்லாம் இன உறுப்பு தேன் வாசல்.

பெண்களுக்கு இன்னொரு வரபிரசாதம் பிரசவம். அதும் அவள் ஏழையாவும் இருந்தா நெஜமாலுமே செத்துப்பிழைக்கிறாள்.இதனாலயும் கண்டம் கிண்டம் இருந்தாலும் கழிஞ்சு போயிருது.

மேலோட்டமா பார்த்தா "த பார்ரா அடிமைத்தனத்துல இத்தீனி லாபமிருக்கா. விட்டா 120 வருசம் பூர்ணாயுசா வாழ்ந்துரலாம் போலிருக்கேன்னு தோனும்.

ஆனா அடிமைத்தனத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கு இது அந்த பெண்ணை மட்டுமில்லை -அவிக புருசன் மாரை (ஆமா புருசனுக்கு ஏது மாரு) குடும்பத்தை - பிள்ளை குட்டிகளை - அந்த சாதியை -மதத்தை - நாட்டை ஏன் உலகத்தையே அழிச்சுரும் . அது . எப்படிங்கறதை அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.


(வித்யாசங்கள் அடுத்த பதிவுலயும் தொடரும்)