Wednesday, July 20, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம் (5)



வாழ்க்கைங்கற நாடகத்துல ஒவ்வொரு காட்சியும் மரணம்ங்கற க்ளைமேக்ஸை நோக்கித்தேன் நகர்ந்து போகுது. எவ்ள நல்ல கதையா இருந்தாலும் அதுக்கு ஒரு க்ளைமேக்ஸ் இருக்கனும். க்ளைமேக்ஸ் இல்லாத கதை ஆர்காசம் இல்லாத உடலுறவு மாதிரி.

ஜாதகத்துல எட்டாம் பாவம் மரணத்தை காட்டுதுனு சொல்லியிருக்கேன்.மரணத்தை ரத்து பண்ண முடியாதுதேன்.

ஆனால் கண்டதையும் மரணத்தோட முடிச்சு போட்டு - அதுக விரட்ட விரட்ட ( ஏழ்மை -தனிமை இருட்டு நிராகரிப்பு) மரணத்தை நோக்கி பிடி உஷா கணக்கா ஓடறது பை.தனமில்லியா?

அட வர்ரச்ச வரட்டுமே . நாம எதுக்கு லவ் சப்ஜெக்ட் சினிமாவுல க்ளைமேக்ஸ்ல ஹீரோவை நோக்கி ஓடற ஹீரோயின் மாதிரி ஓடனும்?

இது ஏதோ இந்த ஜென்மத்துல மட்டும் இப்படினு நினைக்காதிங்க. பழக்க தோஷம் காரணமா இதையேதான் எல்லா ஜென்மத்துலயும் செய்துக்கிட்டு இருக்கம்.

ஒன்னு மரணத்தை துரத்த வேண்டியது இல்லையா மரணத்தின் மறுவடிவான பெண்ணை துரத்த வேண்டியது.பெண்ணுக்காகவோ அ பெண்ணை கவரவோ அ பெண்ணை மறக்கவோ பணத்தை/பதவியை/பெயர் புகழை /ஞானத்தை ஏதோ ஒரு இழவை துரத்த வேண்டியது . இதுதான் வாழ்க்கையா?

ஏன் மரணம் நம்மை விரட்டுது? ஏன் மரணத்தை நாம விரட்டறோம்/ மரணத்தின் மறுவடிவான பெண்ணை அவளுக்காக அ அவளின் கவனம் வர அ அவளிலிருந்து விலகி ஓட ஏதோ ஒரு Etc Etc இழவை துரத்தறோம்.

பெண்ணை அடைந்தவன் அந்த பெண்ணிலிருந்து ஓடறான். அ இன்னொரு பெண்ணை நோக்கி அடையாதவன் பெண்ணுக்காக ஓடறான். அந்த பெண்ணுக்காக எதையெதையோ தேடி ஓடறான்.ஆயுளை இழக்கிறான்.

பெண்ணே மரணத்தின் மறுவடிவம்னு சொன்னேன். ( பெண்ணுக்கு ஆண் மரணத்தின் மறுவடிவம்) .ஒரு பெண்ணுடன் தன் வாழ்வை பிணைத்துக்கொண்ட ஆண் அந்த பிணைப்பு வெற்றியடைஞ்சாலும் சரி /தோத்தாலும் சரி தன்னை இழந்துர்ரான். அதுவும் ஒரு மரணம்தானே.

நம்மை இல்லாம பண்றது மரணம்னா பெண்ணும் இதே வேலையத்தான் செய்யறா. நாம இருந்தா நமக்கு எங்கே வலிக்குது?

நாம ஈகோ நிறைஞ்சு இருக்கும்போது நம்மை நம்மாலயே சகிச்சுக்க முடியறதில்லை. ஏன்னா அது பொய். பொய்யை அதை கிரியேட் பண்ணவனால கூட சகிச்சுக்க முடியறதில்லை. ஏன்னா உள்ளூற அவன் ஆன்ம வடிவா இருக்கான்.அது ஒளிமயமானது. எந்த காரிருளும் அதும் மின்னாடி நிக்கற தாக்கத் கிடையாது.கேமராவை பார்த்த ஐட்டம் நடிகையோட ஆடைகள் மாதிரி பொய் எல்லாம் உதிர்ந்து போகுது.

மரணத்தை வெல்ல ஒரே வழி அது மரணம் இல்லேங்கறதை உணர்ந்துக்கறதுதான். கரும்பு பாகா மாறுது.பாகு வெல்லமா மாறுது .வெல்லம் சர்க்கரையா மாறுது.அதைப்போல நாம ஏதோ ஒரு ஸ்டேட்டுக்கு மாறிர்ரம்.அதான் மரணம்.

மரணத்துக்கு பின்னாடி என்ன மிஞ்சும்னு ரோசிச்சா மரணத்துக்கு மிந்தி நாம என்னவா இருந்தோம்ங்கறதை கெஸ் பண்ணிரலாம்.

நாம என்னவா இருக்கோம்னு ஸ்மெல் பண்ண முடிஞ்சா மரணம்ங்கறதே இல்லேனு புரிஞ்சுரும்.
(ஒரு குன்ஸாவாச்சும்)

மரணம்ங்கறது தொடர்ச்சியை வெட்டிருதுன்னு நாம நினைக்கிறோம். அதனாலதேன் மரணத்துக்கு பயப்படறோம். ஆனால் அதுதான் உண்மையான தொடர்ச்சியை தருது.

இந்த இயற்கை/படைப்பின் மையம் நீங்கள் கிடையாது - இந்த படைப்பின் பிரிக்க முடியாத அங்கம் நீங்கனு உணர்ந்துட்டாலே பாதி வெற்றி. அப்பத்தேன் வாழ்வின் தொடர்ச்சி மரணத்துக்கு பின்னும் தொடர்ரதை உணர முடியும்.

நீங்க எதையெல்லாம் சப்கான்ஷியஸா மரணம்னு நினைச்சு பேதியாக்கிறிங்களோ அதெல்லாம் உங்களை உங்களுக்கு உணர்விப்பதை உணரமுடிஞ்சதானு ஃப்ளாஷ் பேக்குக்கு போய் ரோசிங்க.

ஒரு நிராகரிப்பு - இருள் - ஏழ்மை - இதெல்லாம் தான் உங்களை உங்களுக்கு நெருக்கமா கொண்டுவருது. உங்களுக்குள்ள உள்ளே இருக்கிற எதுவோ இயற்கையை நோக்கி திரும்புது. இயற்கை உங்களுக்கு ஆறுதலை உண்டாக்குது.

ஒரு அங்கீகாரம் / ஒரு வெளிச்சம் / கொஞ்சம் சில்லறை உங்களை இந்த மக்களோட போலியா இணைக்குது. உங்கள நீங்க மறந்துர ஆரம்பிக்கிறிங்க.

தன்னில் தான் நிலைத்திருப்பவனை - தான் இந்த படைப்பின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை அறிந்தவனை - போன்சாய்க் ட்ரீ மாதிரி தான் ஒரு மினி படைப்பு என்பதை உணர்ந்து தெளிந்தவனை எட்டாம் பாவத்து தோஷங்கள் ஒன்னும் பண்றதில்லை.

இந்த தெளிவு இல்லாதவுக தேன் மரணத்துக்கும் -மரணத்தின் நிழல்களுக்கும் சப்கான்ஷியசா டர்ராகி மரணத்தை நோக்கி ஓடறாய்ங்க.

இந்த புரிதல் இல்லாதவரை நான் அடுத்த பதிவுல எட்டுல சூரியன் இருந்தா என்ன ஆகும் -அதுக்கென்ன பரிகாரம், சந்திரன் இருந்தா, செவ் இருந்தானுட்டு சுக்கிரன் வரை வரிசையா தரப்போற பலன்கள் நடக்கலாமே தவிர அந்த துர்பலன்களை தவிர்க்க நான் தரப்போற பரிகாரங்கள் மட்டும் சமச்சீர் கல்விக்கான புஸ்தவங்க மாதிரி மக்கித்தான் போயிட்டு இருக்கும்.

ஓகே எட்டாம் பாவத்துல எந்த கிரகம் நின்றால் என்ன பலன்? எந்த பாவாதிபதி நின்னா என்ன பலன்? ஒரு வேளை துர்பலனா இருந்தா என்ன பரிகாரம்ங்கறதை பார்ப்போம்.

அதுமட்டுமில்லிங்கண்ணா.. ஜாதகம் இல்லாதவுக தங்களோட வாழ்க்கை நிலைய வச்சு தங்கள் ஜாதகத்துல எந்த கிரகம் இந்த லீலைய செய்யுதுனு கெஸ் பண்ணி உரிய பரிகாரங்களை செய்துக்கலாம்.

பஸ் ஸ்டாண்டு கக்கூஸு மாதிரி இந்த பரிகார பேக்கேஜிலும் ஆண்கள் ,பெண்கள் தனித்தனி வரிசையில் மட்டும் வரனும்.

உடு ஜூட்..