Thursday, July 7, 2011

ஆண் பெண் வித்யாசம் : 7ஆம் பாவம்

நேற்றைய பதிவுல நம்ம தனிக்காட்டு ராசா எந்த வரிகளை கோட் பண்ணி பாராட்டியிருந்தாரோ (அது கதவை சாத்தற மேட்டருங்ணா)  அதே வரிகளை அப்ஜெக்ட் பண்ணி ஒரு  அம்மா ஃபோன் பண்ணாய்ங்க.

அவிகளுக்கு நான் சொன்ன பதில் :

மூளைய பொருத்த வரை செக்ஸ் மையத்த ஒட்டித்தான் அறிவுமையம் கூட அமைஞ்சிருக்காம். செக்ஸ் மையத்துல ஏற்படற அதிர்ச்சிகள் அடுத்துள்ள அறிவு மையத்தை தாக்கினா விஞ்ஞானி ஆயிர்ராய்ங்களாம்.

7 ஆம் பாவங்கறது ஃப்ரண்ட் , லவர் , பார்ட்னர் ,ஹஸ்பண்ட் (கணவர்) ஆகியோரை காட்டும்.  இந்த பாவத்தோட முக்கியத்துவத்தை கருதி  "மனைவி அமைவதெல்லாம்" 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ?" "ஆசை60 நாள் மோகம் 30 நாள்" "கில்மாவும் 7 ஆம் பாவமும்" ங்கற தலைப்புல எல்லாம் தொடர் பதிவும் - தனிப்பதிவுகளும் மஸ்தா எழுதி இருக்கேன்.

உங்களுக்கு எட்டு இடமும் குளிர்ந்திருக்கிற சமயம் -தின ராசி பலன்ல சுகம்னு போட்ட நாட்களிலும் தேடி -படிங்க.

இப்பம்  இந்த பதிவுல ஆண்பெண் வித்யாசத்தை மட்டும்தேன் பார்க்கப்போறோம்.

கொஞ்சம்  போல காலம் மாறியிருக்கிறதால கு.ப நண்பர்கள் என்ற விஷயத்துல பெண்களுக்கு கொஞ்சம் போல ரிலாக்சேஷன் கிடைச்சிருக்கு.(இதுவும் பெரு நகரம், மா நகரம், நகரம் ,வரைதேன்)

இந்த நண்பர்கள்ங்கற பொசிஷன் வித்யாசமானது . காதலன் என்ற போஸ்டுக்கு அப்ரண்டிஸ் மாதிரி சிலர் நினைக்கிறாய்ங்க - சிலர் தொகுப்பூதிய அடிப்படையில வேலை கிடைச்ச மாதிரியும் கூடிய சீக்கிரமே நிரந்தரமாயிரும்னும்  நினைக்கிறாய்ங்க. இந்த ஹிப்பாக்கிரசிக்கு பெண்களும் ஒரு காரணம்.

பார்க்க சுமாரா இருந்தா போதும் அவளை படுக்கப்போட ஒரு கூட்டமே வேலை செய்துக்கிட்டிருக்கும். இந்த கூட்டத்துல காதலனும் ஒரு டிக்கெட்டு.

இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டில ஒரு ஆண் எத்தீனி குட்டிகளை படுக்கப்போட்டா அந்தளவுக்கு அவன் புலி. பெண் ஒரே ஒரு தாட்டி ராங் செலக்சனுக்கு நாக்கை கடிச்சுக்கிட்டு  ஆளை மாத்தினா உடனே அவளை லோலாயின்னிர்ராய்ங்க.

இதை தங்களுக்கான வாய்ப்பா நினைச்சு தந்தை குலம் வாலை அவிழ்த்துவிட்டா என்னாகும்ங்கறதுக்கு நம்ம லைஃபே ஒரு உதாரணம்.

ஒரு ஆண்,ஒரு பெண் காதல் கொண்டோ ?  களவு நெறிகண்டோ? வெறி கொண்டோ?  இணைஞ்சா உடனே அவிக ஜாதகத்திலுள்ள கிரக பலங்கள்/பலகீனங்கள் ஒன் ப்ளஸ் ஒன் ஆகி டிவைடட் பை டூ ஆயிருதுங்ணா.

லக்னத்துல உள்ள கிரகங்கள் 7 ஐ பார்க்கும். 7 ல் உள்ள கிரகங்கள் லக்னத்தை பார்க்கும். அதாவது நீங்க உங்க பார்ட்னரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவிங்க. உங்க பார்ட்னர் உங்களை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாய்ங்க. டெல் மீ யுவர் ஃப்ரெண்ட் ஐ வில் டெல் யு வாட் யுவார்ங்கறாய்ங்கல்ல.

7 ஆம் இடத்தை ஜூம் பண்ணி பார்த்தா உங்க பார்ட்னரோட உயரம்,பருமன், நிறம்,டேஸ்ட், மென்டாலிட்டி, பிறந்த இடம், இவ்ள ஏன் அவிக பேரை கூட கெஸ் பண்ணிரலாம்.

இன்னொரு மெத்தட் இருக்குங்கோ அது என்னன்னா உங்க ஜாதகத்துல 7ஆவது ராசியை லக்னமா வச்சு கணிக்கிறது. இந்த மெத்தட்ல உங்க உட் பி அ மனைவியோட பயோடேட்டாவே வந்துரும். பலான மேட்டர்ல அவிக விருப்பம்/விருப்பமின்மை கூட .

7ஆவது இடம் ஜஸ்ட் உங்க உட் பி அ மனைவியை மட்டும் காட்டறிதில்லிங்கோ. காதலி,கள்ளக்காதலி, மனைவி,முன்னாள் மனைவி எல்லாத்தயும் காட்டுது. 

நாம வேலி தாண்டினது - கையில பிடிச்சுக்கிட்டு அலைஞ்சதுல்லாம் ( நான் லவ் லெட்டரை சொல்றேன்)  ஜஸ்ட் ரெண்டு வருசம்தேன்.

அந்த ரெண்டுவருசத்துல ( 1984 &  1985 ) போட்ட கெட்ட ஆட்டத்துக்கப்பாறம் பூர்வ புண்ணியமோ நமக்குள்ள பை பர்த் இருந்த இன்ட்யூஷனாலயோ   அந்த மேட்டர்லருந்து கழண்டுக்கிட்டோம்.

அப்பாறம்தேன் தமாசு. அப்பம் என்ன தசை என்ன புக்தி நடந்ததோ ஞா இல்லை. ஆனால் அதற்கடுத்த வருடங்கள்ள நம்ம ஜாதகத்துக்கு சம்பந்தமே இல்லாத "சம்பவங்கள்" எல்லாம் நடக்க ஆரம்பிச்சுது.

1989 பிப்ரவரியில முத ஜோசியரை சந்திச்சு - 1990 மார்ச் மாசம் ப்ராக்டிஸ் ஆரம்பிச்ச கேஸு நாம.

நம்ம ஸ்பெஷாலிட்டியே என்னன்னா  ஒரு மேட்டரு உண்மைன்னு பட்டா உலகமே எதிர்த்தாலும் எட்டுக்கு எட்டு பாம்லெட்டாச்சும் போட்டு உலகத்துக்கு சொல்லிருவம்.

நமக்கு பொய்யினு பட்டா - அந்த மேட்டர்ல என்டர் ஆகமாட்டோம். ரெம்ப சீண்டினா "வேட்டி வரிஞ்சு கட்டுதேன்"

ஜோதிடத்து மேல நம்பிக்கையோடதேன் ஆஃபீஸ் போட்டோம் - சனத்துக்கும் சொல்ல ஆரம்பிச்சோம்.

யதார்த்தத்துல பார்த்தா நம்ம ஜாதகத்துக்கு சம்பந்தமே இல்லாத "சம்பவங்கள்" எல்லாம் நடக்க ஆரம்பிச்சுது. "என்னங்கடா இது? ஐயா/அம்மா தப்பு நடந்துபோச்சு ஜாதகம்/சோசியம்லாம் டுபுக்கு போல இருக்கு- இத்தீனி நாள் நான் சொன்ன சொசியம்லாம் ரத்து  "னு பாம்லெட் போட்டுரலாமாங்கற நிலை.

அப்பத்தேன் மேற்சொன்ன ஜோதிட விதி (7+7 = எக்ஸ் டிவைடட் பை டூ) ஸ்பார்க் ஆச்சு. ஒரு காலத்துல ( அதாங்க அந்த  ரெண்டு வருசத்துல)  நாம டீல் பண்ண குட்டிங்க கண்ணாலம் கட்டி - குட்டி போட்டு மேட் ஃபார் ஈச் அதர் கணக்கா சோசியம் பார்த்துக்க ஜாதகம் கொண்டுவந்தப்பதேன் அவிக ஜாதகங்களை பார்த்தேன். பீதியில பேதியாயிருச்சு.

இந்த எஃபெக்ட் 2007 வரைக்கும் கொஞ்சமோ நஞ்சமோ  கன்டின்யூ ஆயிட்டே இருந்ததுங்ணா.

ஆட்டம் 2 வருசம். தாளி அதனோட விளைவு ? (1986 முதல் 2007 வரை). இத்தனைக்கும் ராம நாம உச்சாடனம் 1986 ஜனவரி 1 ஆம் தேதியே ஆரம்பிச்சுருச்சு.

கடா குட்டியான நமக்கே இந்த கதி. ஆனால் இந்த மேட்டர்ல எங்களுக்கும்  சுதந்திரம் வேணம்னு பாப் வச்ச மாமிகள் வுமன்ஸ் க்ளப்கள்ள தீர்மானமே போடறதா கேள்வி.

இந்த 7 ஆம் பாவத்துல எத்தீனி கிரகமிருந்தா/ இதை எத்தீனி கிரகம் பார்த்தா அத்தீனி புருசன்/அத்தீனி பொஞ்சாதின்னு நினைப்பிக. அது எந்த அளவு நிஜம்?

இங்கன லக்னாத் பாவ/சுப  கிரகங்கள் இருந்தா என்னாகும்? இந்த பாவத்துல எந்த பாவாதிபதி நின்னா என்ன எஃபெக்ட்? அந்த எஃபெக்ட் நெகட்டிவா இருந்தா அதுலருந்து எஸ்கேப் ஆக என்ன பண்ணனும்?

இந்த அம்சங்களோட  எஃபெக்ட் ஆண்களை எப்படி பாதிக்கும்? பெண்களை எப்படி பாதிக்கும்? பரிகாரம் ஆண் - பெண்களுக்கு ஒன்றேதானா? அதுலயும் வித்யாசம் உண்டா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அடுத்த பதிவில்..