Wednesday, July 6, 2011

ஆண் பெண் வித்யாசம் : 6 ஆம் பாவம்

மொதல்ல 5 ஆம் பாவத்துக்கு ஒரு ஃபினிஷிங் டச் கொடுத்துருவம்.இது பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம், ஆகியவற்றை காட்டும். இதுல கடேசியா சொன்ன தியானத்தை கேட்ச் பண்ணி ரோசிச்சா மேற்சொன்ன ஐட்டங்கள்ள எது முக்கியம்னு படும்னும் சொல்லியிருந்தோம்.

நாம ஒன்னும் தியானியும் கிடையாது -ஞானியும் கிடையாது. ஒரு குன்ஸா நம்ம கருத்தை சொல்லி வைக்கிறோம்.

பிள்ளைகள்:
இவிகதான் உலகம்னு அஞ்சாம் பாவத்து பவர் எல்லாத்தையும் இவிகளுக்கு திருப்பி விட்டுட்டா மத்த ஐட்டங்கள் தேசலாயிரும். டிம் அண்ட் டிப் அடிக்கும். இன்னம் சொல்லப்போனா ஓவர் லோட் காரணமா பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போயிர்ரது - உதட்டு மேல லேசா கருமை படர ஆரம்பிச்சதுமே "வில் யு ஷட் அப்"ங்கற தும் நடக்க ஆரம்பிச்சுரும்.

நீங்க ஒரு வாசல். உங்க பிள்ளைகள் உங்கள் மூலம் இந்த பூமிக்கு வந்திருக்காய்ங்க. அவிக மேல உங்களுக்கு எந்த ரைட்டும் கிடையாது. (ஓஷோ)

டச் மீ நாட் கணக்கா கடமை என்று கருதி செயல்பட்டா "டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேடா "முடியறதை தவிர்க்கலாம். மத்த ஐட்டங்களுக்கும் கொஞ்சம் போல பவர் கிடைக்கும். பசங்களும் உருப்படுவாய்ங்க.

மன நிம்மதி:
நிம்மதிங்கறது ஆழ்ந்த நம்பிக்கை காரணமாகவோ (மஹா விஸ்வாசம்) - உங்க டேபிள்ள இருக்கிற ஃபேக்ட்ஸை வச்சோ, பிரச்சினைனு வந்தா சமாளிச்சிரக்கூடிய உங்க சக்தி சாமர்த்தியங்களை கொண்டோ கிடைச்சா நோ அப்ஜெக்சன் யுவர் ஆனர்.

ஆனால் அந்த நிம்மதி இக்னரன்ஸாலயோ, எஸ்கேப்பிசம் காரணமாவோ,ஓப்பனா சொன்னா மடமையாலயோ கிடைக்குதுன்னா அது கிரிமினல் வேஸ்ட்.

அந்த பொய்யான ,ஆபத்தான  நிம்மதியை விட சூட்சும புத்தியோட யதார்த்தத்தை உணர்ந்துக்கிட்டு டென்ஷன் பார்ட்டினு பேர் வாங்கினாலும் நோ பிராப்ளம்.

பெயர் புகழ்:
ங்கொய்யால ! பேர் புகழ் எதை வச்சு வருதுனு பார்க்கனும். சுயத்தை , சுதந்திரத்தை அடகு வச்சுட்டு / தனிப்பட்ட கனவுகளை புதைச்சுக்கிட்டு  "அந்த அக்காவை  பாரு .. அந்த மாமா ஃபுல் தண்ணியில பாதி ராத்திரி வீட்டுக்கு வந்தாலும் காத்திருந்து சோறு போட்டு - காலங்கார்த்தால எந்திரிச்சு துளசிமாடத்தை சுத்திக்கிட்டு இருக்கு" ரக பெயர் புகழ் கேன்சர் மாதிரி. அழிச்சுரும்.

அக்கா  கக்கூஸை என்னமா கழுவி வச்சிருக்கு. கண்ணாடி மாதிரி பளபளக்குது  - ஷோ கேஸை என்னமா அடுக்கி வச்சுருக்கு பாணி பேர் புகழ் எல்லாம் போதை மருந்து மாதிரி. பச்சையா சொன்னா நாய்க்கு போடற பிஸ்கத்து மாதிரி ..

இந்த மாதிரி வெத்து பேரு /புகழ்ங்கற போதையில வாழ்ந்துட்டு -திடீர்னு விழிச்சா மூளைகலங்கிரும். சாக்கிரதை.

அதிர்ஷ்டம்:
அதிர்ஷ்டம்ங்கறது வரதட்சிணையில 10% தள்ளுபடி கிடைக்கிறதோ - மச்சினன் பாத்ரூம் கதவு ஓட்டை வழியா பார்க்கறதில்லைங்கறதோ -கொளுத்த நினைச்சப்ப வீட்ல மண்ணென்ணை இல்லைங்கறதோ இல்லை.

இந்த அஞ்சாமிடம் தேன் புத்தியை காட்டுது. அண்ணா சொன்ன மாதிரி புத்தியை தீட்டி வச்சுக்கிட்டா அதான் அதிர்ஷ்டத்தை தரும்.

தாளி அதிர்ஷ்டமே இல்லாட்டாலும் -துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமா மாத்திக்கிறது எப்படிங்கற 'குன்ஸ்" வந்துரும்.

ஓகேவா உடுங்க ஜூட். இப்பம் ஆறாம் பாவத்துக்கு போயிரலாமா/ ஐ மீன் ஆறாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

இந்த பாவம் வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு
ஆகிய அம்சங்களை காட்டும்.

ஹவுஸ் வைவ்ஸ்:

ஹவுஸ் வைஃபை பொருத்தவரை ருண உபாதைகள் அதிகமா இருக்காதுனு நினைக்கிறேன். ஆத்துக்காரரு கிம்பளம் வாங்கி ஏசிபில மாட்டினாலோ -ஆட்குறைப்புல வீட்டுக்கு வந்துட்டாலோ இன்ன பிற காரணங்களாலயொ இவிகளுக்கும் கடன் தொல்லைகள் ஏற்படலாம்.

சத்ரு உபாதைகள்னா அது மாமியாரு, நாத்தி தேன்.இந்த மாமியாரு -மருமக பஞ்சாயத்துகளை பத்தி ஒரு காலத்துல இரண்டு பெண்கள்னுட்டு தனிப்பதிவே போட்டிருக்கன். பொறுமை உள்ளவர்கள் பாக்கியசாலிகள் அவர்கள் தேடி படிக்கக்கடவர்.

கொஞ்சம் போல சைககலஜி தெரிஞ்சா இந்த பார்ட்டிகளையெல்லாம் சாலாக்கா டேக்கிள் பண்ணிரலாம். மாமியாரு நாத்தி ஒரு ரகம் -மாமனாரு , மச்சினன் வேறு ரகம்.

அது ஆணோ பெண்ணோ செக்ஸ் லைஃபை ஒழுங்கா ப்ளான் பண்ணிக்கிட்டு வாழ்ந்தா பிரச்சினையே இல்லை - வாழ்ந்து முடிச்சிருந்தா அடுத்து வாழவர்ரவுகளுக்கும் பிரச்சினை ய்ல்லை. இதுல பிரச்சினை இருந்தாதேன் பிரச்சினையே ஸ்டார்ட் ஆகுது.

இதையெல்லாம் புரிஞ்சிக்கிட்டு நரி இடமா போனா என்ன வலமா போனா என்ன மேல விழுந்து பிடுங்கலின்னா சரின்னு வெஸ்டர்ன் ஸ்டைல்ல போயிக்கினே இருக்கனும்.

அடுத்தது ரோகம் இதை பத்தியும் அன்னையர் தினத்துனன்னைக்கு ஒரு விசேஷ பதிவே போட்டதா ஞா. இந்த 6 ஆம் பாவத்தை பொருத்தவரை ஒரு சிக்கல்.

எப்படியா கொத்த யோக ஜாதகமா இருந்தாலும் சத்ரு -ரோகம் -ருணம்ங்கற 3 உபாதையில ஏதாச்சும் ஒரு உபாதைய ஃபேஸ் பண்ணியே ஆகனும். இதுல எது பெட்டருன்னு அவிகவிக சிச்சுவேஷனை பொருத்து சூஸ் பண்ணிக்கலாம்.

உ.ம் :

பாடி காட்பாடி ஆயிருச்சு - தேர்ரது கஷ்டம். உங்க பேர்ல கடன் வாங்குங்க (அஞ்சு பத்துல்லாம் கடியாதுங்க ஆன்டி! உங்க நோயோட தீவிரத்தை  பொருத்து -ஃபிகரை டிசைட் பண்ணுங்க )
ர்
ஹஸ்பெண்ட் புதையல் எடுக்கறேன் - லட்ச ரூபா ஃபாரின் கரன்சியை மாத்தறேன் - ரைஸ் புல்லிங் விக்கறேன்னு ஷெட் ஆயிட்டாரு. கடன் தொல்லை கழுத்தை நெறிக்குது. அப்பம் மருந்து மாத்திரை டாக்டரை எல்லாம் மறந்துருங்க. சின்ன சின்ன நோய்களை ஃபேஸ் பண்ணுங்க (அவை தீவிர  நோய்களுக்கான முன்னோட்டமா இல்லாதவரை)

புனைப்பெயர் ஒன்னை வச்சுக்கிட்டு - பக்கத்து அப்பார்ட்மெண்ட் தாய்குலத்துக்கு உங்க புனைப்பெயரை சொல்லாதிங்க - லோக்கல் பிரச்சினைகளை பற்றி லெட்டர் டு எடிட்டர் எழுதுங்க. ஊரை சொன்னா பேரை சொல்லாம -பேரை சொன்னா ஊரை சொல்லாம உங்க எதிரிகளை பத்தி கதை எழுதுங்க -பத்திரிக்கைகளுக்கு மட்டும் அனுப்பாதிங்க. வேணம்னா நம்ம மெயில் ஐடிக்கு அனுப்புங்க . ரிப்பேர் பண்ணி ஒப்பேத்தி போட்டுவிட்டுருவம்.

திரும்பி வராதுன்னு தெரிஞ்சு - வராட்டாலும் பரவால்லைங்கற தொகைகளை கை மாத்தா கொடுங்க -கேளுங்க -ஆனால் நாசூக்கா -வராட்டாலும் பரவால்லைங்கற டோன்ல கேளுங்க. தோஷம் கட்டுப்படும்.
வேலைக்காரியோட குழந்தை சாவுக்கு கொடுத்த இரு நூற்று சில்லைறை ரூபாய்க்கு கயிறு கட்டாதிங்க.

நல்ல சர்க்கிள் இருந்தா பட்டிமன்றங்கள் நடத்துங்க. தலைப்பு: எந்த சீரியல்ல நிறையே பேர் கற்பிழக்கிறார்கள் மாதிரி வேணா. இதைவிட கடன் , நோய் ,எதிரிகள் தொல்லையில நாசமா போங்க. ஐ டோன்ட் கேர்.

நான் சிபாரிசு செய்யும் தலைப்புகள் ஊழலுக்கு காரணம் ஆண்களா ? பெண்களா? (தீர்ப்பு சொல்ல என்னை கூப்ட்ராதிங்க) பட்டிமன்றத்துல பேசும்போது சொந்த மேட்டரை எல்லாம் அவுத்து உடாதிங்க.

கணிணி அறிவு இருந்தால் மூஞ்சி புஸ்தவத்துல போயி விஐபி  எல்லாரையும் கிழிங்க ( ஆம்பளை பேரா வச்சுக்கிடுங்க - எவனும் சீந்தமாட்டான்)


இந்த கேட்டகிரியில வர்ர நோய்கள் விஷயத்துல ஒர்க்கிங் விமன் -ஹவுஸ் வைவ்ஸுக்கு இடையில நிறைய வேறுபாடுகள் இருக்கலாம்.( ஆண்களுக்கு வர்ர எல்லா பிரச்சினையும் ஒர்க்கிங்க வுமனுக்கு வருதுங்ணா உ.ம் ரத்தக்கொதிப்பு ,அல்சர் ,முதுகு வலி ,தோள்பட்டை வலி ,மூட்டுவலி ,ஷுகர்)


உங்க முழு முதல் எதிரிகள் வேறே. அவிக பட்டியலை தரேன். முடிஞ்சா அவிகளை கிழிங்க. ஆட்டோமெட்டிக்கா சத்ரு ரோக ருண உபாதைகள் நீங்கி தன்னிரக்கம் காரணமா நிலத்தில் கால் பாவாதா சீரியல்களுக்கு அடிமையாகாம வாழலாம்.

உங்கள் முழு முதல் எதிரிகள்:

1.மதவாதிகள் 2.வேதங்கள் 3.பிராமணர்கள் (ஐ மீன் பிராமணீயம்) 4.ஆட்சியாளர்கள் 5.ஒங்களை பத்தின எந்த அக்கறையும் இல்லாமை எக்சிபிட் பண்ணி-எக்ஸ்ப்ளாயிட் பண்ணி கல்லா கட்டிக்கிற கார்ப்பொரேட் நிறுவனங்கள் -விளம்பர நிறுவனங்கள் -மீடியா 6. உங்கள் ஹிப்பாக்கிரசி - இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் -தன்னம்பிக்கை இன்மை - மடமை -ஒற்றுமை இன்மை


உங்கள் பரிசீலனைக்கு ஒரு சில கொட்டேஷன்ஸ்/ பழமொழிகள்:

"பகைவனுக்கருள்வாய் நெஞ்சே"

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்"

கெட்டவனுக்கு கெட்டது செய்ய நாம ட்ரை பண்றதை விட அவனுக்கு நல்லதை செய்து ஆண்டவனுக்கு கெட்டவனாக்கிரனும்.

சொன்னவர்: அடியேன்