Thursday, June 30, 2011

காதலால் கில்மாவுக்கு ஆப்பு

அண்ணே வணக்கம்ணே !
இந்த படைப்புலயே உன் மனசை விட உசந்த வஸ்து கிடையாது. ஒருவேளை ஏதாச்சும் வஸ்து உன் மனசை விட உசந்ததா தோனினா உன் மனசு வீக்காயிருக்குன்னு அர்த்தம்.

மேற்படி ஸ்டேட்மெண்ட் நம்மோடது இல்லிங்ணா .விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான்னா என்ன அர்த்தம். இவன் லைஃப்ல அவளும் இருந்தாதான் இவன் லைஃப் பூரணமாகும்னு நினைக்கிறான்.

ஒரு கோணத்துல பார்த்தா இவன் லைஃப்  அரைகுறையா இருக்கு. அவள் வந்தா அது முழுசாகும்னு ஃபீல் பண்றான். அவள் உசந்த வஸ்துவா தெரியறான்னா என்ன அர்த்தம் இவன் மைண்ட் வீக்காயிருக்குனு அர்த்தம்.

லவ் பண்ற  பார்ட்டியெல்லாம் வீக் மைண்டடுன்னு சொல்லலை. ஆனால் வீக் மைண்டட் சனம் கூட லவ் பண்றாய்ங்க. இவிகளால தான் பிரச்சினையே வருது.

இவன் கடேசி வரை வீக் மைண்டடாவே இருந்துட்டா பரவால்லை. இடையில  மேற்சொன்ன விவேகானந்தர் ஸ்டேட்மெண்ட் இவனுக்குள்ள ஸ்பார்க் ஆயிருச்சுன்னு வைங்க. அப்பம் அந்த காதலி இவனோட கடந்த கால  பலகீனத்தை ஞா படுத்தி இம்சை கொடுக்க ஆரம்பிச்சுருவாள்

மேலும் லவ்ங்கறது ஆப்போசிட்ஸ் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர்ங்கற தியரிப்படி தான் உருவாகுது. கருப்பா கீறவன் - சேப்பா கீறவளுக்கு ஜொள்ளு உடுவான். ஒல்லியா கீறவன் ஹார்லிக்ஸ் பேபிக்கு நூல் விடுவான்.

இனம் இனத்தோடு சேர்ந்தா போரடிக்கும் அவ்ளதேன்.ஆனால் இமிசை இருக்காது. தவறான முனைகள் - எதிரெதிர் குணாம்சங்களுடையவர்களுக்கிடையில் ஏற்படும் காதல் ஆரம்ப காலத்துல ரெம்ப த்ரில்லா இருக்கும்.

இளமை ஊஞ்சலாடும் வரை - ங்கொய்யால எங்க போகப்போறா எல்லாம் நம்ம சைஸுக்கு கிரைண்ட் பண்ணி ஏத்திவிட்டுரமாட்டேங்கற எண்ணம் இருக்கும்.

ஆனால் இளமை ஊஞ்சலோட வேகம் குறையும் போது " இன்னாடா இது பெரி எழவாப்போச்சு. இவளோட இன்னும் எத்தீனி காலத்துக்கு மாரடிக்கனுமோ" னு தோணிரும்.

மனித உடல் எளிமையானது. அப்பாவி. அன் எஜுக்கேட்டட். இதுக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசறதெல்லாம் தெரியாது. என்னதான் கூரைக்குள்ள வசிச்சு கூடுதல் ரோமங்களை இழந்திருந்தாலும் - உடல் உழைப்பு குறைய குறைய சைஸு சின்னதா பொயிருந்தாலும்  மனித உடல் பழைய நியூஸ் பேப்பர் மாதிரி காட்டுமிராண்டி காலத்துலயே நின்னுருச்சு. நோ அப்டேஷன் 

ஆனால் மனித மனம் காம்ப்ளிக்கேட்டட்.- அடப்பாவி வேலைகளையெல்லாம் அசால்ட்டா செய்துட்டு அப்பாவி மாதிரி பில்டப் கொடுக்கும்.  நாம படிக்கிற அரைகுறை -எடக்கு மடக்கு படிப்பு -கேட்பு எல்லாமே இதுல ஃபீட் ஆகி கிடக்கு - உள்ளே ஒன்னை வச்சு -வெளிய ஒன்னை பேசறதுல அரசியல் வாதியை விட மோசமானது.

தன்னோட காட்டுமிராண்டி காலத்து பதிப்பு ஒன்னை கவருக்குள்ள போட்டு வச்சுக்கிட்டு அப்டேட்டட் பதிப்பை மட்டும் எக்சிபிட் பண்ணிக்கிட்டு ரெம்ப ஜாலாக்கா மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு வருது.

மனசுல எந்த அளவு காம்ப்ளிக்கேஷன்ஸ் அதிகமாகுதோ அந்த அளவுக்கு அது கொஞ்சம் போல அதிர்ச்சி -ஏமாற்றம் இத்யாதிக்கு இம்யூன் ஆகலாம்.

ஆனால் பாவம் இந்த அப்பாவி உடல் திருவிழாவுல காணாம போன கொயந்தை மாதிரி அல்லாடி போயிருது.

மனப்போராட்டங்கள் மனித உடலை -அதுவும் செக்ஸ் பவரை சட்டுனு பாதிச்சுருது.  அது எப்படின்னு அடுத்த பதிவுல இன்னம் கொஞ்சம் விவரமா பார்ப்போம்.