Wednesday, April 6, 2011

அசத்தல் அமீர்கானும் சவ சவ ரஜினிகாந்தும்

அமீர்கானை பத்தி நான் சொல்ல ஆரம்பிச்சா தம்பி மாருங்களுக்கெல்லாம் கோபம் வரும். என்னாட்டம் கிழவாடிகளுக்கு புரியனும்னு அவரோட சில சூப்பர் ஹிட்+ மெசேஜ் நிறைந்த படங்களின் பெயர்கள்
ரங் தே பசந்தி , தாரே ஜமீன் பர் .

பத்மபூசன் விருது பெற்ற பிரபல சமூக சேவகரும் முதியவருமான  (பிறப்பு: ஜூன் 15, 1938) பரவலாக அன்னா அசாரே என்று அறியப்படும் கிசான் பாபுராவ் அசாரே (Kisan Baburao Hazare)  லஞ்ச ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டமாக்கலுக்காக தில்லியில் துவக்கியுள்ள சாகும் வரை உண்ணாவிரத  போராட்டத்துக்கு அமீர்கான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நம்ம சவ சவ ( பக்கத்துல ' ம் ' சேர்த்து படிச்சுரப்போறிங்க ) ரஜினி காந்த் இதை பத்தி வாயை திறக்க காணோம்.நாட் நாட்லயே விஞ்ஞான முறையில் ஊழல் செய்த கலைஞரை இந்திரன் சந்திரன் என்று புகழும் ரஜினி காந்த் - இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக (?) சிறப்பு கோர்ட்டு அமைக்கிற அளவுக்கு ஊழல் செய்த ஜெயலலிதாவை "வீரலட்சுமி"னு  புகழ்ந்த ரஜினி காந்த் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காம இருந்தாலே நல்லது.

சந்தடி சாக்குல "அவாளுக்கு வந்த விபரீத ஆசை"னுட்டு ஒரு பரபர பதிவு ஒன்னும் போட்டிருக்கேன். கலைஞர் பூணூலை பத்தி பேசினா வாஞ்சி நாதனா மாறி போட்டுத்தள்ளிருவாய்ங்களாம்.

ங்கொய்யால நாட்ல உள்ள ஊழல்வாதிக்கெல்லாம் ஸ்கெட்ச் கொடுக்கிறதே அவாள் தான். வருமான வரி ஏய்ப்புக்கு ரூட் போட்டுக்கொடுக்கிறதே அவாள் தான். இந்தமேட்டர் எல்லாம் ஹசாரேவுக்கு தெரியாது போல.பாவம் அவர் மத்திய அரசுக்கு எதிரா மட்டும்  போராடிக்கிட்டிருக்காரு.

சரி மேட்டருக்கு வந்துர்ரன்:

மொதல்ல அன்னா அசாரே பத்தி விக்கீபீடியா என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.

இவர் ஒரு இந்திய சமூக சேவகர். மகாராட்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ஓர் மாதிரி சிற்றூராக திகழ்ந்த,ராலேகாவ் சித்தி என்ற சிற்றூரின் மேம்பாட்டிற்காக இவராற்றிய பணிக்காக அறியப்பட்டார். இவரது பணிகளுக்கு அங்கீகாரமாக 1992ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது.

நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டமாக்கலுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறப்புற பணியாற்றினார். தற்போது ஊழலுக்கு எதிராகப்  ஜன் லோக்பால் சட்டமாக்கலுக்காக தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளார்.

பாருங்க இங்கே  ஒரு தாத்தா ஊழலின் ஊற்றுக்கண்ணா இருக்காரு. இன்னொரு தாத்தா அங்கே ஊழலுக்கு எதிரா போராடறாரு.

2011ஆம் ஆண்டு அன்னா அசாரே வலுவான ஊழலெதிர்ப்புக்கான லோக்பால் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட வேண்டும் என்று போராடி வருகிறார்.

இது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர்.

இது அரசு பிரேரித்துள்ள லோக்பால் சட்டவரைவினை விட வலுமிக்கதாகவும் அம்புட்ஸ்மன் எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்தும் இயற்றப்பட்டுள்ளது.

 இந்த சட்டவரைவை  ஏற்க இந்தியப் பிரதமர்  மறுத்து விட்டார்.

ஊழல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் நடுவண் "லோக்பால்" மற்றும் மாநில "லோக் ஆயுக்த்" நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டவரைவினை இயற்ற அரசு பிரதிநிதிகளும் குடிமக்கள் பிரதிநிதிகளும் இணைந்த கூட்டுக்குழு ஒன்றினை அமைக்கக் கோரி ஏப்ரல் 5, 2011 அன்று தில்லியிலுள்ள ஜன்தர் மந்தரில் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டத்தை துவக்கியிருக்கிறார்.

உண்ணாவிரதம்னா ஒரு சில மணி நேரங்கள் இல்லிங்கண்ணா சாகும் வரை.. உண்ணாவிரதம்.

லஞ்சம்னா அது ஏதோ ஒரு அரசியல் வாதியோட சொந்த விவகாரம்னு  நினைச்சுராதிங்க. ஒரு ரூபா காண்ட்ராக்ட் சமாசாரத்தை எடுத்துக்குவம்.  ஒரு அரசியல் வாதி ஜஸ்ட் 10% க்கு கைய  நீட்டிட்டாருனு வைங்க.பர்சண்டேஜ் கொடுத்து காண்ட்ராக்ட்  வாங்கின பார்ட்டி தான் செய்யற வேலையில பத்து பர்சண்ட் க்வாலிட்டிய குறைச்சுரும்.

இது காண்ட்ராக்ட் வாங்கி தானே சுயமா செய்யற பார்ட்டிக்கு தான் பொருந்தும். ஒரு வேளை காண்ட்ராக்ட்
வாங்கின பார்ட்டி இன்னொரு அரசியல் வாதி அ பவர் ப்ரோக்கர் அ பினாமினு வைங்க இவன் ஒரு பத்துபர்சன்ட் லாபம் வச்சு அதை காமாத்திவிட்டுருவான்.

வேலை ஆரம்பமாகுதுனு வைங்க நிச்சயம் குவாலிட்டி சரியிருக்காது, குவாலிட்டி கண்ட்ரோலுக்குனு  கையெழுத்து காலெழுத்து போட மூட்டை அவுக்கனும் , ஆஃபிசர் முரண்டு பிடிச்சா  நாலு தட்டு தட்ட ஆளு வேணம் அதுக்கு செலவழிக்கனும் - ரெம்பவே முரண்டு பிடிச்சா போட்டு தள்ள ஸ்பெஷல் பார்ட்டிகள் தேவை.அதுக்கும் செலவழிக்கனும். இந்த செலவையெல்லாம் சமாளிக்க குவாலிட்டிய குறைக்கனும்.  தப்பித்தவறி வேலை முடிஞ்சதுன்னா அப்பாறம் பில் வாங்கற வேலை ஆரம்பம். இதுக்கும் அலையனும், அல்லாடனும், குளிப்பாட்டனும், மூட்டை அவுக்கனும்.இதெல்லாம் போக மிச்சம் மீதியில கட்டறதாலதான் பாலங்கள் பல்லிளிக்குது, ரோடெல்லாம் இந்த கதியா கிடக்கு.

ஒரு ரூபா காண்ட்ராக்டிலான இந்த 10 பைசா  லஞ்சம் ப்ராஜக்டையே  டோட்டலா நாஸ்தி பண்ணிருது. இப்பல்லாம் மூட்டை அவுத்து அவுத்து மூட்டை காலியாகி கட்டாத பாலத்தை கட்டினதா கணக்கு பண்ணி பில் வாங்கினாதான் கட்டுப்படியாகும்ங்கற ரேஞ்சுக்கு வந்துருச்சு.

சிவில் வேலையிலான காண்ட்ராக்ட்னாலும் பரவால்ல. இதுவே தேச பாதுகாப்பு தொடர்பான காண்ட்ராக்டா இருந்தா என்னாகும்?  லஞ்சம்னா காண்ட்ராக்ட்லதான் லஞ்சம்னுல்ல ஒரு வேலைய செய்ய லஞ்சம், செய்யாம இருக்க லஞ்சம் , சீக்கிரமா செய்ய லஞ்சம், லேட்டா செய்ய லஞ்சம், பில் பாஸ் பண்ண லஞ்சம், பில்லை செக்ஸ்லிப் போட லஞ்சம்.

காலேஜ்ல சீட்டுக்கு லஞ்சம் , வேலை கிடைக்க லஞ்சம், ப்ரமோஷனுக்கு லஞ்சம், அரியர்ஸ் பில் வாங்க லஞ்சம், லோன் வாங்க லஞ்சம், லஞ்சம் ...............லஞ்சம்........ தாளி தூண்லயும் துரும்புலயும் கடவுள் இருக்காரோ இல்லியோ தெரியாது லஞ்சம் இருக்கு.

விலை வாசி உயர்வு பத்தி பேசறாய்ங்க.  விலைவாசி  உயரக்கூட லஞ்சம் தான் காரணம். 

சரக்கோட பாதையில எத்தனை செக் போஸ்ட் இருந்தா அத்தீனி லஞ்சம். வியாபாரி என்னை இதையெல்லாம் கைய உட்டா கொடுப்பான். அல்லாத்தையும் தூக்கி சரக்கு மேல போடறான்.விலை ஏறுது.

விலையேற்றத்தை பார்த்து பெருவாரியான சனம் வாங்காம ஒதுங்கினா யாவாரி விலைய குறைக்க பார்ப்பான். ஆனால் "சொம்மா வந்த பணம்தானேன்னு அள்ளி வீசுது ஒரு கும்பல். அட இன்னா விலை வச்சாலும் சரக்கு நிக்கரதில்லைப்பானு யாவாரி ஏத்திக்கிட்டே போறான்.

நெல்லுக்கு பொழியும் மழை புல்லுக்கும் பொசியுமாம்ங்கறாப்ல லஞ்சப்பணம்  சுத்தி வர்ர சர்க்கிள்ள பணம் சாக்கடையா பொங்குது. இவிகளை அண்டி பிழைக்க ( ஆடிட்டர் , லாயர் , டாக்டர் ) ஒரு கூட்டமே ப்ரிப்பேர் ஆயிருது.

லஞ்ச சர்க்கிளோட பணம் மட்டுமில்லை ,மாறிப்போன அவிக குணமும்,பணம் பற்றிய பார்வையும் சமூகத்துல அபான வாயுவா பரவுது. நாறிப்போகுது.


இந்த பதிவை மஸ்தா பேரு படிக்கனும் ரோசிக்கனும் பத்து பேருக்கு பரப்பனும்னு தான் எப்படி எபபடியோ  மேக்கப் பண்ணியிருக்கேன்.  நீங்க மட்டும் படிச்சா போதாது. பத்து பேருக்கு ஷேர் பண்ணுங்க ப்ளீஸ்..