Tuesday, March 29, 2011

உஜிலாதேவியும் ஒரு பாவியும்

பொதுவுடமை ஒரு அழகான கனவா?ங்கற கேள்வியை எழுப்பி ஆமாங்கறாரு யோகி ஸ்ரீராமானந்த குரு . நாம பாவிங்கறதாலயோ என்னமோ அவரோட கருத்துல உடன்பாடு ஏற்படலை.

அலெக்ஸால 20 ஆயிரத்து சில்லறை ரேங்குக்குவந்த பிற்பாடும் சில்லறைத்தனமா எழுதக்கூடாதுனுட்டு பணிவா, பதவிசா இந்த பதிவை போடறேன்.

என்னையும் மீறி எதுனா வார்த்தைகள் எக்கு தப்பா வந்து விழுந்துட்டா  சிம்மத்துக்கு வாக்குஸ்தானத்துல உள்ள சனியோட வேலைனு நினைச்சு மன்னிச்சு விட்டுரனும்.

//ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாகவே முடியாதா? அப்படி ஒரு சமூகம் உருவானால் நன்றாக இருக்குமே என்று பலர் விரும்புகிறார்கள் சிலர் அதற்காக முயற்சியும் செய்கிறார்கள் //

விரும்பறதென்னமோ நெஜம் தான். அதற்கான முயற்சியை கம்யூனிஸ்டுகளே விட்டாச்சுங்கறதுதான் உண்மை.

//சில விஷயங்களை சொல்வதினால் மன சங்கடம் ஏற்பட்டு விடும் என்பதற்காக சொல்லாமல் விடுவது பெரிய தவறுதல் ஆகும். //

அதுக்காக ஒரு தொலை தூர இலக்கை அடையவே முடியாதுனு சொல்லி இடுப்பொடிக்கனுமா?

//அரிஸ்டாடிலின் நூலை படித்தவர்கள் ஒரு விஷயத்தை நன்றாக அறிவார்கள்.//

நான் படிச்சதில்லை.ஆனா ரெண்டு பொஞ்சாதியிருந்து பெண்ணும் ஒரு பல் குறைவுனு எழுதின பார்ட்டினு தெரியும்

//இந்த உலகில் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் என்று இருவேறு சமூக கூறுகள் இருப்பதாகவும் அது உலகம் அழியும் வரை இருக்கும் என்றும் அவர் சொல்கிறார் //

உலகம் அழியத்துவங்கும் வரைனு சொல்லியிருந்தா பெட்டரா இருந்திருக்கும். ஜப்பான் சுனாமி வந்தப்ப ஏழைய மட்டுமா அடிச்சிக்கிட்டு பொச்சு/

// மனித சமுதாயம் தோன்றிய நாள் முதலாக வறுமையென்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும்//

அதுக்கான காரணங்கள் கூட தெரியும் ஆளூம் வர்கத்தின் சுரண்டல்.

//வலுவானவன், பலகீனர்களை சுரண்டுவதினாலேயே வறுமையிருக்கிறது என சொல்பவர்களும் உண்டு.
இவையெல்லாம் உண்மை தான்.  ஆனால் வறுமையை விரட்ட எடுத்துக் கொண்ட ஆயுத போராட்டங்களும் அகிம்ஸா போராட்டங்களும் இதுவரை வெற்றி பெறவேயில்லை.//

புல்லெட் வார் மட்டுமில்லை -பேலட் வார்ஸ் கூட ஜெயிச்சுருக்கு. உ.ம் பீகார்,குஜராத்.அகிம்சை போராட்டம் செயிக்கலின்னா 3ஜி ஸ்பெக்ட் ரம் மேல ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டி போட்டிருப்பாய்ங்களா? ஏதோ ஒரு மாதிரியா ஜெயிச்சுட்டுதான் வருது. ரஷ்யா ஜெயிச்சது. கார்ப்பசேவ் உலக மீடியா வெளிச்சத்துல மதி மயங்கி அதிகப்படியா திறந்து காட்டிட்டாரு. ஆப்படிச்சுட்டாய்ங்க.

//ஆண்டவன் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதனால்தான் தான் உலக இயக்கம் என்பது நடந்து கொண்டே இருக்கிறது.  //

அப்ப காட்டுல இயக்கமே இல்லியா?வெறும் திரைக்கதை தானா? புலி மானை அடிக்கலாம். வயசான புலியை சின்ன வயசு புலி அடிக்கலாம். ஆனால் ஒரு பிடிக்கு தாங்காத பெரிய இடத்து முயல்,  புலி ஆன்ட்டியை   தக்ஜம் பண்ணமுடியாதே.

//பொதுவாக நாம் வறுமை, செல்வம் என்பதை பணத்தோடு மட்டும் தான் பொறுத்தி பார்க்கிறோம்.  இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.//

பின்னே கோழிக்கறிக்கடையில எடை போட்ட மாதிரி எடை போடனுமா ? அல்லது ஜுவெல்லரில உரைச்சு பார்க்கிறாப்ல உரைச்சு பார்க்கனுமா?

//அறிவு, அறிவின்மை, திறமை, திறமையின்மை என்பவைகளும் ஏற்றத்தாழ்வுகள் தான். //

கரீட்டு தான் சாமி!  ஆனால் இதுக்கும் சத்தில்லாத உணவு, விழிப்புணர்வில்லாத நெருங்கிய சொந்தத்திலான திருமணங்கள், ஜீன்ஸ் ,பயிற்சிக்கு வாய்ப்பின்மை  இத்யாதி தானே காரணமா இருக்குது
இதெல்லாத்துக்கு அவுட்லைன்ல இருக்கிறது பொருளாதார ஏற்றத்தாழ்வுதானே. அதுக்கு காரணம் சுரண்டல் தானே.

//பணம் இல்லாதவனுக்கு கூட பணத்தை கொடுத்து செல்வந்தன் ஆக்கிவிடலாம்.  அறிவு இல்லாதவனுக்கும், திறமை இல்லாதவனுக்கும் எதை கொடுத்து சமப்படுத்த முடியும்?//

பணத்தை கொடுனு மானமுள்ளவன் கேட்கறதில்லை - ஆந்திராவுல சந்திரபாபு மாசாமாசம் உங்க பாங்க் அக்கவுண்ட்ல பணம் போடறோம்னு சொன்னாரு. ஆனாலும் செயிக்கலை. -பணத்தை சம்பாதிக்க உழைக்க தயார் - அதுக்கொரு வாய்ப்பை கொடுனு தானே மல்லாடறாய்ங்க - ஆனால் அவன் உழைச்சு சம்பாதிச்சதை கூட குப்பைகளையும் ,டாஸ்மாக்கையும் அவன் தலையில கட்டி கொள்ளையடிக்கிறது சுரண்டல் இல்லியா? அவன் ஏழ்மைக்கு இதெல்லாம் காரணமில்லியா?

பணம் இருந்தா அறிவு வேணம்னா வராம போயிரலாம். தெறமை யதேஷ்டமா வந்துருது. அஷ்ட தெலிவியும் வந்துருது. அறிவு நிதானமா வரட்டும் . அடுத்த தலைமுறையில வரட்டும் அட ஏழு தலைமுறை கழிச்சு வரட்டும். அவனுக்கு சமூகம் தரவேண்டிய வாய்ப்பு. அவனையும் சேர்த்துத்தான் சமூகம். அவனை செல்வந்தனாக்கலின்னா சமூகம் என்ற உடல்ல ஒரு விரலுக்கு ரத்தம் போகாம மாஞ்சா நூல்ல கட்டி வச்ச கணக்கா போயிரும்ல. நேரிடையாவோ மறைமுகமாகவோ இந்த சமுதாயம் அவனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணுதுல்லை. அதுக்கு உரிய நஷ்ட ஈட்டை வாய்ப்புங்கற வடிவத்துலயாவது தரனுமில்லியா?அப்படி தந்திருந்தா ஏன் பொதுவுடமை மலர்ந்திருக்காது?

//எனவே ஏற்றத் தாழ்வுகள் என்பது இயற்கையின் சமுதாய விதி, இதை மாற்றவே முடியாது. //

இயற்கையில ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மை இருக்கே தவிர - ஏற்றத்தாழ்வு இல்லே சாமி. உங்களை அம்பானி க்ரூப்ஸ் சேர்மனாக்கினா சமாளிக்கமாட்டிங்களா என்ன? அப்படியே  ஏற்ற தாழ்வுங்கறது அல்லா விசயத்துலயும் கீட்டம். ஆனால் அது  வாய்ப்புல இருக்கக்கூடாதுங்கறது தான் என் வாதம்.வாய்ப்பிருந்தும் அவன் டாஸ்மாக்ல மட்டையாகி கிடந்தா அவன் கருமம். ஆனால் அவனுக்கும் சேர்த்து ரோசிக்கிறதுதான் சமூகத்தொட தருமம். அதை வலியுறுத்தறதுதான் பொதுவுடமை.

//உலகம் சமநிலை பெற வேண்டும் என்பதுயெல்லாம் நல்ல எண்ணம் தான்.  ஆனால் அது சாத்தியப்படாது. //

சாமியோவ் சாமி ! இப்பமே இருட்டின பிறவு சம நிலை வந்துருது. பலான  பார்ட்டிய  ஊர் பேர் தெரியாத ஸ்டேஷன்ல ரயிலேத்தி விடலைன்னா ஏசி கோச்ல  பயணம் போற  தானைத்தலைவருங்களுக்கு  கக்கா கூட வராதாம்

//இந்த உலகம் எப்பொழுது சமமாகயிருக்கிறது தெரியுமா?  உறக்கத்தில் மட்டும் தான்.  உறக்கம் என்பது செயலற்ற நிலை//

மத்த நேரத்துலல்லாம் செயல்படறாய்ங்கனு சொல்றிங்களா? சனம் சொந்தமா எதையும் செய்ற காலம்லாம் போச்சு. இருக்கிறவனும் பார்க்கத்தான் செய்யறான். இல்லாதவனும் பார்க்கத்தான் செய்யறான். உறக்கம் மட்டுமில்லை - வாழ்க்கையே செயலற்ற நிலைக்கு மாறிப்போச்சு. - பார்க்கிறான் பார்க்கிறாங்கறது உலகக்கோப்பை போட்டியை மட்டுமில்லிங்க சாமி..

//அதாவது அழிவு மட்டும் தான் சமமானதே தவிர செயல் என்பது சமமாகவே இருக்காது.//

அழிவு கூட எப்படி சாமி சமமா வரும். அழிவு குறித்த பீதி வேணம்னா சமமா வரும்.

//ரஷ்யாவில் எல்லாவற்றையும் பொதுவுடமை ஆக்கிவிட்டால் வறுமை ஒழிந்து விடும் என கனவு கண்டார்கள். //

ஆங்.. வந்திங்களா மேட்டருக்கு. ரஷ்யாவுல இன்னா நடந்துதுன்னா முதலாளித்துவ செட் அப்ல முதலாளிகள் ப்ளே பண்ண ரோலை அங்கன அரசாங்கமே ப்ளே பண்ண ஆரம்பிச்சுருச்சு. மொதலாளியாச்சும் பரவால்லை. தொழிலாளியை சுரண்டி இன்னொரு ஃபேக்டரி கட்ட ஆரம்பிப்பான். ஆனா ரஷ்ய அரசு பெருமைக்கு பன்னி மேச்சு, அமெரிக்கா தோள் உசரத்துக்கு வரனும்னு எக்கி எக்கி தானம் தர்மம், போர், தளவாடம்னு வேட்டு விட்டுருச்சு.

//ஆனால் பொதுவுடமை ஆட்சியில் மக்கள் கண்டது என்ன.  ஒரே ஒரு கோழி முட்டை வாங்க ரேஷன் கடை வரிசையில் எட்டு மணி நேரம் காத்து இருக்க வேண்டும்.//

ஆனால் முட்டை நாலணா எட்டணா இருந்திருக்கும் சாமி. இன்னைக்கு ஃபோன் பண்ணா கேன் தண்ணிய வீட்டு வாசல்ல கொண்டு இறக்கறான் .அதுக்கு விலை இருக்கில்லை. அதை முடி அவுக்கனும்ல.

//இந்த விதி பொதுமக்களுக்கு தானே தவிர அதிகாரிகளுக்கு அல்ல.//

க்யூவை சொல்றிங்களா? அட ராமராஜ்ஜியத்துலயே தபஸ் பண்ற சூத்திரனை போட்டுத்தள்ளச்சொல்லி ப்ரஷர் வரலிங்களா?

//ஜன நாயகத்தில் சுரண்டுபவன் பணக்காரன் ஆவான்.  சர்வதிகாரத்தில் சுரண்டுபவன் அதிகாரியாவான்.//

ஜன நாயகத்தில் சுரண்டியவன் திகார் ஜெயிலில் 7 கம்பளங்களுடன் இருப்பான். சர்வாதிகாரத்தில் சுரண்டுபவன் சுட்டுக்கொல்லப்படுவான்னும் சொல்லலாமே. ஆமா என்ன படக்குனு ட்ராக் மாறிட்டீங்க. பொது உடமை பத்தி தானே பேச்சு. ஓகோ உங்க அகராதில பொது உடைமைன்னா அது சர்வாதிகாரம்னு அர்த்தமா?

//இப்பொழுது சொல்லுங்கள் மாற்றவே முடியாத ஏற்றத் தாழ்வு விதியை உருவாக்கிய இறைவன் எப்படி கொடுமைகாரன் ஆவான்.  //

ஹய்யோ... ஹய்யோ ..இறைவன் மன்மோகன் சிங் மாதிரி. நாமதேன் சோனியாமாதிரி . அப்ப்போ சாயந்திர நேரத்துல டீக்கு கூப்பிட்டு க்ளாஸ் எடுத்தா எல்லாம் க்ளோஸ்

//யாருக்குமே பசியில்லை என்றால், எல்லோருக்குமே அறிவு இருக்கிறது என்றால் உலகத்தின்  இயக்கம் எப்படி நடக்கும்.//

என்.டி.ஆர் ரெண்டு ரூபா அரிசி கொண்டுவர்ர வரை கிராமத்துல விவசாய கூலி தொழிலாளி நிலை நாய் மாதிரி. ஜூ ஜூன்னா நாயாச்சும் ஒரு செகண்டு  ரோசிச்சுட்டு ஓடத்துவங்கும். வி.கூ. தொ க்கு அந்த ஆப்ஷன் கூட கிடையாது.

ரெட்டியாரோ ,நாயுடுவோ :க்கும்"  னுட்டா நிலத்துல இறங்கிரனும். கூலி ,கீலில்லாம் பேச முடியாது. ரெண்டு ரூபா அரிசி வந்தப்பறம் தேன் கூலி எவ்ளோனு கேட்கிற நிலையே வந்தது.

பசியில்லைன்னா தான் உலக இயக்கம் பர்ஃபெக்டா நடக்கும். நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க.

அல்லாருக்கும் அறிவிருந்தா "இத்தீனி கல்வித்தந்தைகள்" தேவைப்படமாட்டாய்ங்க. விவசாயி வெள்ளாமையில வந்த காசு பணத்தை புள்ளை குட்டிங்க படிப்புக்காக அவிக  இரும்பு பெட்டில சிறைவச்சுட்டு கும்பி காஞ்சு சாகாம வச்சு ஒழுங்கா "பொளப்பை"பார்ப்பான், புள்ளை குட்டிக்கும் பொளப்பை கத்துத்தருவான்.

//போட்டது போட்டபடி அப்படியே கிடக்கும்//
ஓகோ இத்தீனி நாளு ஆளு படை வச்சு பின்பக்கத்தை அசைக்காம இருந்தவுக வீட்டுக்கதைய சொல்றிங்க.. ஹூம் நாலாவது நாளே குனிஞ்ச்சு நிமிர ஆரம்பிச்சுருவாய்ங்க. என்.ஆர்.ஐ களை விஜாரிங்க அங்கன வேலைக்காரிக்கு என்ன சமபளம்னு

//பசிதான் முன்னேற்றத்தின் பாதை. //

இல்லே சாமி - இளைச்சவன் ஒரு பத்து நாள் பசியை  நிறுத்தவோ ,சமாளிக்கவோ, சகிக்கவோ  கத்துக்கிட்டிருந்தா பசியும் சுரண்டலும் பாரதி ராசா சினிமால ஹீரோ ஹீரோயின் மாதிரி நாட்டை விட்டே சோடியா போயிருக்கும். அவன் இன்னமும் பசிக்கு பயப்படறான். பசிங்கறது சோத்து பிரச்சினையோ, சத்து பிரச்சினையோ இல்லை. ( எத்தீனி பேருக்கு சத்தான உணவு கிடைக்குதுங்கறிங்க)

புறக்கணிக்கப்பட உணர்வு - தள்ளி வைக்கப்பட்டுவிட்டாற்போன்ற தாபம் - தான்  பாபியோ  என்ற குழப்பம் - ம்ரண சூரியனின் முதல் கிரணமோ என்ற உதறல் - ஆன்மாவின் கதறல்

அது இருக்கிறதாலதான் -அதை நினைச்சு டர்ராகிறதால தான் முன்னேற்றம் முக்காடு போட்டு அழுதுக்கிட்டு கிடக்கு.

//தாழ்வு தான் ஏற்றத்திற்கான படிக்கட்டு//

இது மாத்திரம் அட்சர லட்சம் சாமி .. எங்க தாழ்வு அவிக ஏற்றத்திற்கான படிக்கட்டு.

//எனவே பொதுவுடைமை என்பது எப்போதுமே மனிதர்களை தொடரும் அழகான கனவு//

மனிதர்களை தொடரும் கனவில்லை சாமி.. மனிதர்களின் மாசுகளையும் மீறி மனிதர்களை காதலிப்பவர்களின் கனவு. இதுல சுய நலமில்லை ( கனவு நனவாகும்போது கலந்துரலாம் அது வேற மேட்டர்) சுய நலமில்லேங்க்ற ஒரே ஒரு காரணத்தால ஒரு நாள் இல்லே ஒரு நாள் இந்த கனவு நனவாகும். அதுவரை பசித்த மூளைகளுக்கு சத்தான உணவும் ஆகும்.

வேண்டு கோள்:
உங்களை எழுத வச்ச அதே சக்திதான் இதையும் எழுதவச்சாப்ல இருக்கு. நான் இந்த மேட்டரை எழுதனும்னு சங்கல்பிச்சுத்தான் உங்களை பதிவே போட வச்சுதோ என்னமோ? நான் பேசிக்கிறேன். நீங்களூம் பேசிப்பாருங்க.

தயவு செய்து என்னை தப்பா நினைச்சுராதிங்க.  தனிமனிதனா நான் ரெம்ப ஃப்ரெண்ட்லி. நேத்து கோவணத்தை உருவினவனை கூட வெறுக்கத்துணியாதவன்.  பேச்சு பேச்சா இருக்கனும் ஆமா சொல்ட்டன்.

மற்றபடி உங்கள் இதர கருத்துக்களில் பல எனக்கு பிடித்தவை .