Thursday, January 27, 2011

ஒன்பதாம் பாவமும் -கில்மாவும்

நேத்து ராசிச்சக்கரத்தை வெட்டி படுக்க போட்டு நிமிர்த்தி பக்கத்துல ஒரு மனிதனோட படத்தையும் வச்சுப்பார்க்க சொன்னேன். இந்த வகையில பார்த்தா 9 ஆம் பாவம் முழங்காலை காட்டுது. முழங்காலுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்? படங்களை பாருங்க..(ஹி ஹி.. மேட்டர் இத்தோட முடிஞ்சுராதுங்கன்னா)அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். இங்கன சுபர்கள்,சுபபலமா இருந்தா அப்பாங்கிறவர் எப்படி இருப்பாருனு சொல்லிர்ரன்."ஏன் நைனா! ஏதோ கண்ணாலத்துக்கு மிந்திதான் ராத்திரி வீடு திரும்ப பத்து பதினொன்னு ஆச்சு. இப்ப கண்ணாலமாகி ஒரு உசுரு உனக்காக காத்துக்கினு கீதுனு தெரியாது.. ராத்திரி எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேரப்பாருப்பா ...இன்னாது ஓவர் டைமா? நைனா! கடவுள் புண்ணியத்துல சொத்து சுகமிருக்கு, அப்பன் நானும் ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சு வச்சிருக்கேன். ஏதோ உத்யோகம் புருச லட்சணம்னு வேலைக்கு போனமா வந்தமான்னு இல்லாமா ..எதுக்குப்பா இதெல்லாம். கால் கடுதாசிய வீசியெறி.. நான் சின்னதா ஒரு வியாபாரம் வச்சுத்தரேன். காத்தால 9 மணிக்கு போனமா மதியம் வீட்டுக்கு வந்து சாப்டு கொஞ்ச நாழி தூங்கனமா அஞ்சுமணி வாக்குல போனமா ராத்திரி 9க்கெல்லாம் வந்தமான்னு இருக்கனும்பா"


ஓகே கோணஸ்தானமா இங்கே பாபகிரகம் இருக்குதுனு வைங்க ஐ மீன் கேந்திராதிபதிகள் ஆராவது.


"இன்னாடா டைம் இன்னா ஆவுது பார்த்தியா பத்து ஆகுது. ஒரு ஆம்பளை இன்னம் ஊடு திரும்பலைன்னா ஒரு பொம்பளை இன்னா நினைக்கும். சின்ன ஊடு வச்சிக்கினு கீறானு நினைச்சுட்டா .. அட அவன் அப்பனுக்கு ஃபோனை போட்டு புலம்பினா.. நான் பழைய படி அரிவாளை தூக்கனுமா இன்னா தெரிலை. இன்னையோட இதெல்லாம் ஸ்டாப்பு.. ஒழுங்கு மரியாதையா நாளைலருந்து ஏழு எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேர்ர வழியப்பாரு. இல்லைன்னா மருவாதி இருக்காது"


இந்த மாதிரி ஒரு அப்பன் இருந்தா தாளி ஊர்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமே தவிர மைண்ட்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமா ? ஊஹூம். கில்மாவுல விளையாட இதைவிட பெட்டர் என்விரான்மென்ட் என்ன வேணும்.

இதுவே 9 ஆமிடத்துல 6,8,12 அதிபதி யாராவது மாட்டினா என்ன ஆகும்?

ஆறுக்கதிபதி மாட்டினா அப்பன் பேஷண்ட்/கடன் காரன்/கோர்ட்டு கேஸுனு அலைஞ்சிக்கிட்டிருப்பான். அவனுக்கு பிறந்த நீங்க வேற எப்படி இருப்பிங்க? விரையென்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்ன? எட்டுக்கதிபதி மாட்டினா அப்பன் காலி அ அண்டர் கிரவுண்ட் அ அவரோட குத்துப்பழி கொலைப்பழி. 12க்கு அதிபதி மாட்டினா தாத்தா சொத்தெல்லாம் அப்பா ரெஜிம்லயே காலி. இந்த மாதிரி சிச்சுவேஷன்ல உங்க ஜீன்ஸ் எப்படி இருக்கும்? உங்க கேரக்டர் எப்படி இருக்கும்? உங்க எக்கனாமிக்கல் கண்டிஷன் எப்படியிருக்கும்? உங்க ஹெல்த் எப்படி இருக்கும்? உங்க முழங்கால் எப்படி இருக்கும்?

9ங்கறது பித்ருஸ்தானம், சூரியன் பித்ருகாரகன். சூரியந்தேன் எலும்புக்கெல்லாம் இன் சார்ஜு.இவர் தேன் கால்ஷியத்தை பாடி க்ராஸ்ப் பண்ணிக்க உதவுற பார்ட்டி. 9ஆம்பாவம்+ சூரியன் ரெண்டு பேரும் கெட்டாய்ங்கனு வைங்க பேக் கிரவுண்ட் காலி. கைய ஊனி கரணம் போடவேண்டியதுதான்.கூனி குறுகி காரியத்தை முடிக்கனும். இப்படி குனிஞ்சு குனிஞ்சு முதுகெலும்பே பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சுரும்னா முழங்காலை பத்தி தனியே சொல்லனுமா என்ன?


நான் வெறும் அப்பாவ பத்தி மட்டும் தேன் அனலைஸ் பண்ணேன். மத்த ஐட்டத்தையெல்லாம் நீங்களே ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க. அப்பாறம் முருகேசு ஜல்லியடிக்கிறாருப்பான்னிருவாய்ங்க.

நாளைக்ககு பத்தாம் பாவத்தை பத்தி பீராஞ்சுருவம். படம் தானே கீழே ஒரு மேட்டர் இருக்கு அதை படிச்சுருங்க அதுக்கு கீழே படம்..


ஆமாங்கண்ணா ஆனந்த விகடன்ல நம்ம இனத்தை (வலைப்பதிவர்கள் -ப்ளாகர்ஸ்) வாரு வாரு்னு வாரியிருக்காய்ங்களே.. அதைஎல்லாம் கிழிச்சு ஒரு பதிவ போட்டிருக்கேனே ..உங்க கருத்தை தெரிவிச்சுட்டிங்களா?


என்ன? இல்லியா.. இது நம்ம வீட்டு கல்யாணம் பாஸு.. இந்த பதிவுக்கு எத்தீனி கமெண்ட் விழுதோ அத்தீனி டிகிரி ஜுரம் விகடனுக்கு வரும். மத்த பத்திரிக்கைக்காரனுக்கும் பரவும். இல்லாட்டி நம்ம தன்மானத்தை சீண்டி கிட்டே கிடப்பாய்ங்க. தூசு விழறப்பயே தட்டி விட்டுரனும். இல்லாட்டி தூண் விழும். என்ன பதிவுக்கான லிங்கா? இதோ இங்கன அழுத்துங்க

Post a Comment