Wednesday, January 19, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

இதுவரை லக்னம், தனபாவம்,சோதரபாவம்,மாத்ரு பாவம் வரை பார்த்தோம். இன்னைக்கு புத்ரபாவம்.(சுகுமார் ஜி புண்ணியத்துல காப்பி பேஸ்ட் கிராக்கிகளுக்கு ஆப்பு வச்சிட்டதால இப்ப சீரியல் சீரியலாவே வரும் .டோன்ட் ஒர்ரி)

லக்னம் முதற்கொண்டு  அதையும் சேர்த்து க்ளாக் வைஸ் எண்ணும்போது அஞ்சாமிடம் தான் புத்ர பாவம். இது கோணஸ்தானம் இங்கன கோணஸ்தானாதிபதிகள் (1,5,9) இருந்தா விசேஷம். கேந்திரஸ்தானாதிபதிகள் இருந்தாலும் ஓகே (1,4,7,10) துஸ்தானாதிபதிகள் இல்லைன்னா பெட்டர் ( 6,8,12)

இங்கே  நைசர்கிக சுபர்கள் இருந்து( அவிக லக்னாத் பாபிகளா இருந்தா)  ஜாதகருக்கு கொஞ்சம் போல பாதிப்பு இருக்கலாமே தவிர வாரிசுகள் நல்லாவே வருவாய்ங்க.

இங்கே நைசர்கிக பாபிகள் இருந்து அவிக லக்னாத் சுபர்களா இருந்தா ஜாதகர் என்னமோ ஓஹோன்னு வருவாரு. ஆனால் வாரிசுகள் நாறிப்போக வாய்ப்பு அதிகம்.

இது ஜாதகரோட புத்தி,மன அமைதி,தியானம்,பிள்ளைகள்,அதிர்ஷ்டம் பேர்,புகழ் எல்லாத்தையும் காட்டற இடம். இதுக்கும் உடலுறவு விருப்பத்துக்கும் என்ன சம்பந்தம்னும் நிச்சயம் பார்ப்போம்.

எண்ணம் போல் மனம்.மனம் போல் வாழ்வும்பாய்ங்க. இந்த இடம் சுபபலமா இருந்தா எண்ணம் நல்லதா இருக்கும். எண்ணம் நல்லதா இருந்தா மனமும் நல்லதா இருக்கும். அது ஓகேன்னா வாழ்வும் ஓகே.

சந்திரன் - இந்த ஐந்தாமிடம் ரெண்டும் தான் ஒரு மன்சனோட மனம் புத்திய காட்டக்கூடியனவாகும்.

ஆனால் இந்த புத்திஸ்தானத்துல சந்திரன் நிக்கறது அனுபவத்துல ஒர்க் அவுட் ஆவறதில்லை. இன்னைக்கு ஸ்ரீதேவி,நாளைக்கு நமீதா நாளன்னைக்கு ஸ்ரேயான்னு ரசனை மாறிட்டே போகும்.

லக்னம் கடகமாவே இருந்தாலும் சந்திரன் லக்னாதிபதியாவே இருந்தாலும் இந்த இழவுதான். இவிக கன்னியாகுமாரி அம்மனை தியானம் பண்ணனும்.  நாத்திகர்கள்,இயற்கை  விரும்பிகள் கடற்கரையில சந்திரோதயம் ஆகற காட்சியை கண்டு ரசிக்கலாம் அ கற்பனை செய்யலாம். இல்லாட்டி படு கிட்டன்னு பேர் வாங்க வேண்டி வந்துரும்.

செக்ஸ்ல உடலை விட மனசுதான் விட்டால் ரோல் ப்ளே பண்ணுது. மறுபடி பயில்வான் ரங்கநாதன் காமெடி சீனை கற்பனை பண்ணிக்கங்க. இந்த அஞ்சாமிடம் நாறிப்போனா கில்மா எல்லாம் மெட்டாஷ்.

ராகு இருந்தா சந்தேகம் அ கள்ள உறவுகள் - கேது இருந்தா விரக்தி - சந்திரன் இருந்தா சஞ்சலம் - செவ் இருந்தா கோபம் - சனி இருந்தா தாமசம்னு கில்மாவுக்கு ஆப்புதான்.

நாலு  பையன் நின்னு பத்து பெண்களை கலாய்க்கலாம். ஆனால் ஒரே பொண்ணு இவிகளை கலாய்க்க ஆரம்பிச்சுட்டா தாளி கலாய்ப்பை பொறுத்து அவன் தற்காலிக ஆண்மையிழப்பு/ பார்ஷல் ஆண்மை இழப்புக்கு கூட ஆளாயிரலாம்.

ஆணுக்கு மனசு கெட்டியா இல்லைன்னா சின்ன விஷயம் கூட அவனை பாதிக்கலாம். மனசு பேதலிக்கலாம். அப்பாறம்  எதுவும் கெட்டியாகாது.

இந்த இடம் சுபபலமா இருந்தா பிரமைகள்,மூட நம்பிக்கைகள், உதவாக்கரை சென்டிமென்டுகள் எதுவும் இருக்காது.

இந்த இடம் கெட்டா மனசு கெடும் - பிஞ்சில பழுத்துரலாம். இந்த இடம் கெட்டா மனசு பேதலிக்கும் செக்ஸுன்னாலே ஒரு வித ரிஜிட்னெஸ் வந்துரும்.இதுவந்துட்டா ஆணுக்கு விரைக்காது - பெண்ணுக்கு  நெகிழ்வு ஏற்படாது. அப்பாறம் ஷாட் கட் பண்ணா ஹால்ல பஞ்சாயத்துதான்.

புத்திர ஸ்தானம்:

அஞ்சாமிடம் சுபபலமா இருந்தா சகாலத்துல ( இன் டைம்), லீகல்  வாரிசுகள் ஏற்படுவர். அதாவது சகாலத்துல கண்ணாலம் நடக்கும். பிறக்கிறதும் கை,கால் எல்லாம் நல்லா இருக்க பிறக்கும்.

மத்த பாவங்கள்,கிரகங்களோட பலத்தால கில்மாவுல புகுந்துவிளையாடற பார்ட்டியாவே இருந்தாலும் சப்போஸ் இந்த இடம் கெட்டு ஒன்னு ரெண்டு மிஸ்கேரி ஆச்சுன்னு வைங்க அ கருவே உருவாகலைன்னு வைங்க இதனோட இம்பாக்ட் நிச்சயம் செக்ஸ் பவர் & உடலுறவு விருப்பத்துமேல விழும்.

இதுவே இந்த இடம் சுபபலமா இருந்தா நார்மல் டெலிவரி ஆச்சு. பிள்ளை ஆரோக்கியமா இருக்குன்னு வைங்க உடலுறவு விருப்பத்துல எந்த பாதிப்பும் இருக்காது.

தெலுங்குல ஒரு பழமொழி உண்டு புண்யம் கொத்தி புருஷுடு -தானம் கொத்தி பில்லலு.

இதுக்கு " புண்ணியத்தை பொருத்து புருஷன் அமைவான் -(செய்த) தானத்தை பொருத்து பிள்ளைகள் பிறப்பாய்ங்க"ன்னு அர்த்தம்.

5ஆமிடம்  நல்லா அமைஞ்சாதான் புண்ணியம் தேடனுங்கற எண்ணம் வரும். தான தருமங்கள் எல்லாம் செய்வான். செய்த தான தருமங்களை பொருத்து பிள்ளைகள் பிறப்பாய்ங்க.

எம்.ஜி.ஆர் பண்ணாத தானமான்னு கேப்பிக. சொல்றேன். தானம் பண்றது வெறுமனே பணத்தை அள்ளிக்கொடுத்துர்ரது - ரிக்ஷா தொழிலாளிகளுக்கு ரெயின்  கோட் கொடுக்கிறதுன்னு இருக்கக்கூடாது.

அஞ்சாமிடம் கெட்டது எந்த கிரகத்தாலன்னு பார்த்து அந்த கிரகத்துடைய காரகத்வம் கொண்ட பொருட்களை அந்த கிரகத்துக்குரிய மனிதர்களுக்கு தானமா தரனும். அப்போ நம்ம கருமம் ஒழிஞ்சு பிள்ளைகள் பிறக்க லைன் க்ளியராகும்.

இந்த இடம் சுபபலமா இருந்தா வாரிசுகள் குறித்த கனவு இருக்கும். கனவு நனவாகும்.

பூர்வ புண்ணியஸ்தானம்:

இந்த அஞ்சாமிடம் பூர்வ புண்ணியஸ்தானமாவும் இருக்கு. அதாவது கடந்த பிறவியில  நீங்க செய்த எம்.ஜி.ஆர் வேலைகள் காரணமா ஒரு சில நெக் ஆஃப் தி மூவ்மெண்ட்ஸ்ல ஒரு சில ஐடியா ஸ்ட்ரைக் ஆகும்,சம்பந்தா சம்பந்தமில்லாத பார்ட்டி கிராஸ் ஆகி உதவுவார்.

இதுமாதிரி சந்தர்ப்பத்துல ஆட்டோமேட்டிக்கா உங்க மனசு பாசிட்டிவா மாறும். ஹார்ட் பீட்ஸ்,பல்ஸ் ரேட் எல்லாமே மாறும். ஹெல்த் இம்ப்ரூவ் ஆகும். பை தி பை செக்ஸ் பவர் மற்றும் உடலுறவு விருப்பமும் அதிகரிக்கும்.

இதே இடம் கெட்டிருந்தா...கடந்த பிறவியில  நீங்க செய்த வில்லன்  வேலைகள் காரணமா நல்லா போயிட்டிருக்கிற சமயம் ஒரு சில பாடாவதி  ஐடியா ஸ்ட்ரைக் ஆகும்,சம்பந்தா சம்பந்தமில்லாத பார்ட்டி கிராஸ் ஆகி ஆப்பு வச்சிருவாரு.எல்லாமே தலை கீழா மாறும். நெகட்டிவ் திங்கிங், ஹார்ட் பீட்ஸ்ல மாற்றம் ,பல்ஸ் ரேட்லமாற்றம் ஏன் பயோ கெமிஸ்ட் ரியே மாறிரும். ஹெல்த் நாறிரும்.பை தி பை செக்ஸ் பவரும் டமால். உடலுறவு விருப்பமும் கோவிந்தா..

பெயர் புகழ்:

யார் மக்களோட கட்டளைக்கு அடிபணிஞ்சு எல்லாத்துலயும் முன்னே நின்னு மாலையோ செருப்படியோஎது கிடைச்சாலும் சமமா பாவிச்சு ஏத்துக்கறாய்ங்களோ அவிகளுக்கு பெயர் புகழ் எல்லாம் கியாரண்டி. இவிகளுக்கு மன அமைதியும் கிடைக்கும். வாரிசுகளும் ஏற்படுவாய்ங்க.

யாரெல்லாம் தங்களோட தகுதியை பத்தியோ ,மக்கள் கருத்தை பத்தியோ கவலைப்படாம  தங்களை முன்னிறுத்திக்க துடிக்கிறாய்ங்களோ அவிக ஜாதகத்துல அஞ்சாமிடம் அரைகுறைன்னு அர்த்தம்.

இதர கிரகங்கள்,பாவங்களோட பலத்தால ஓரளவு பெயர் புகழை அடையலாம். ஆனால் மத்த மேட்டர் ( வாரிசுகள் -மன அமைதி ) எல்லாம் ஊத்திக்கும்.

பெயர் புகழ்னா என்ன? எக்ஸ்பேன்ஷன். உங்களை பத்தி சித்தூர்ல பேசிக்கறாய்ங்கன்னா என்ன ? நீங்க எக்ஸ்பேண்ட் ஆயிட்டிங்க.  உயிரோட அடிப்படை விருப்பம் எக்ஸ்பேன்ஷன். இனப்பெருக்கத்தோட தாத்பரியம் இதான். இதுக்கு உடலுறவு ஒரு வழி.

வருசத்துக்கு ஒன்னா பெத்தாலும் மிஞ்சிப்போனா ஒன்பது ஏரியா கவர் ஆகும். (வேற வேற ஸ்கூல்ல சேர்க்கனும்) பெயர் புகழ் கிடைச்சா.. உங்களோட சாயல்கள் அல்ல ,உங்களோட நிழல்கள் அல்ல நீங்களே பரவிர்ரிங்க. இதனால் ஆட்டோமெட்டிக்கா உடலுறவு விருப்பம் குறைஞ்சுரும்.

ஒரு வேளை உங்க ஜாதகத்துல இந்த அஞ்சாம் பாவம் 90 முதல்95 சதவீதம் சுபபலமா இருந்தா.. பெயர் புகழுக்கு பிறகும் வாரிசுகள், மன அமைதி, எல்லாமே கிட்டலாம்.

ஒரு வேளை அப்படி  இல்லைன்னா எதோ ஒன்னு பிடுங்கிக்கும்.  ஓகே ..அடுத்த பதிவுல ஆறாமிடம் எப்படி இருக்கனும்னு பார்க்கலாம்.
Post a Comment